Thursday, May 3, 2012

தம்பி நான் சொல்றேன் தயவு செஞ்சு கேளு !
வணக்கம்,
செவ்வாய் தோஷத்திற்கான தங்கள் பதிவை படித்தேன்.இதைவிட உண்மையாக யார் தான்
கூறமுடியும்.பாராட்டா வார்த்தைகள் போதாது.மிக்க நன்றி.

சரி.தாங்கள் ஏதாவது ஜோதிட புத்தகம் எழுதியுள்ளீர்களா?எனில் அதன் விபரத்தை

தங்கள் ப்ளாக்கில் தெரிவிக்கவும்.இல்லை எனில் இனிமேலாவது எழுதுங்கள்
சார்.இவ்ளோ நாளா எப்படி நீங்க என் கண்ல படாம போயிட்டிங்க?அது உங்கள்
அதிஷ்டமா?என் துர்அதிஷ்டமா?(சார் வாள் ஆஃப் த ரெக்காடா ஒன்னு சொல்றேன்.இத எங்கேயும் பப்ளிக்கா
போட்டுடாதிங்க. சரி ஒருவர்  9கிரகங்களுக்கும் மார்க்
போட்டு எது கம்மி மார்க்கோ அதுக்கு பரிகாரம் சொல்றாரே.அவரோட டெக்னிக்
என்ன?அஷ்டவர்க பரல்கள வச்சி சொல்றாரா?அல்லது வேறு வழியா?சார் இந்த
கேள்விய ப்ளாக்ல போடாதிங்க.பதில வேனா போடுங்க
)


பதில் :

நண்பருக்கு எனது  நன்றிகள் , ஜோதிடம் என்றாலே உண்மை , இதில்
 யாருக்காகவும் நாம் பயப்பட தேவையில்லை , உண்மையை யாரும் 
மறைக்க முடியாது, எந்த ஒரு வடிவத்திலும் அது சரியான நேரத்தில் தோன்றி
 நீதியை நிச்சயம் காப்பாற்றும்.

நீங்கள் கேட்டது போல் நான் எந்த ஜோதிட புத்தகமும் எழுதவில்லை , காரணம் ஜோதிட கலையை குரு முகமாக நின்று கற்று கொள்வதே
சிறந்தது ,

இப்படி பல புத்தகங்களை படித்து விட்டுதான் ஜோதிடமும் தெரியாமல் , கிரக 
நிலைகளை பற்றியும் தெரியாமல் , தானும் குழம்பி , மற்றவர்களையும் 
குழப்பி,  புனிதமான ஜோதிட கலைக்கே குந்தகம் விளைவித்துக்கொண்டு  நிறைய பேர் , தமிழகத்தில் உள்ளனர் , இவர்களிடம் ஜோதிடம் படும் பாடு 
பாத்தாதா , நாங்கள் வேறு மக்களை குழப்ப வேண்டுமா ?

ஒரு வேலை நாங்கள் ஜோதிட புத்தகம் எழுதுவதாக இருந்தால் , இன்னும் 
நிறைய காலங்கள் ஆகலாம் , ஜோதிடத்தில் நான் கற்றுக்கொள்ள இன்னும் 
நிறைய இருக்கிறது , அப்படி ஜோதிட புத்தகம் நாங்கள் எழுதும் பொழுது 
நிச்சயம் மக்களுக்கு சரியான ஜோதிடம் போய் சேர்ந்திருக்கும் , ஜோதிடத்தில் மக்கள்  அனைவரும் நல்ல விழிப்பு நிலையை பெற்றிருப்பர் .

  உங்களின் வேண்டுகோளை நாங்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்கிறோம் .

உங்களின் கண்ணில் நாங்கள் படாமல் போகவில்லை , உங்களின் 
குல தெய்வமே  எங்களை அணுக சொல்லி அருள் புரிந்து இருக்க 
வாய்ப்பு உண்டு. எனவே உங்களின் குல தெய்வத்தினை நன்றாக வழிபாடு 
செய்யுங்கள்  நிச்சயம் இது போல்  பல நன்மைகள் நீங்கள் பெறவாய்ப்பு 
உண்டு .

 வாள் ஆஃப் த ரெக்காடா நாங்களும் ஒன்று  சொல்கிறோம் தயவு 
செய்து கேளுங்கள் . 

 அண்ணன் :
தம்பி நான்  சொல்றேன் தயவு செஞ்சு கேளு ! 

தம்பி :
முடியாதன்னே ?


நீங்கள்  சொன்ன நபர் நவ கிரகங்களுடன் , ஒரு ஒப்பந்தம் போட்டு, முறையாக  வானவெளிக்கு சென்று காப்புரிமை பெற்று நவக்கிரக சக்தியை தன்னுள் 
பெற்று கொண்டு மக்களுக்காவும் நவ கிரக சக்தியை ஒரு கோணி பையில் ,
பெற்றுகொண்டு வந்து இருக்கிறார்.

 அவரிடம் நாடி வருபவர்களுக்கு 
தேவையான அளவு தந்து அருள் புரியும் தன்மை அவரிடம் இருக்கிறது, எனவே  அனைவரும் சென்று பயனடையுங்கள்தவற விட்டால் 
மறுபடியும் வாய்ப்பு  கிடைக்காது ( காரணம் கொஞ்சம் நாளில் பஞ்சாமிர்தம்
 தயாரிக்க பயன் படுத்த போகின்றனர் ) மேலும் அவர்  எப்படி
நவகிரகங்களுக்கு மார்க் போடுகிறார் என்றால் தினமும் அவரிடம் டுசன் படிக்க 
மாலை 6 மணி ஆனா உடன் நவகிரகங்கள் வரிசையாக வந்து 
பாடம் படித்து செல்கின்றனர் , இதன் காரணமாகவே அவரால் 
நவ கிரகங்களுக்கு  மதிப்பெண் போட முடிகிறது.

(அவர் பயன் படுத்தும் இந்த ஜோதிட மென் பொருள்  சனி சந்தையில் ஒரு 
ரூபாய்க்கு மூன்று என்ற விகிதத்தில்  விற்பனை செய்கின்றனர்  என்பது
 வேறு விசயம் )     

அஷ்ட வர்க்க பரல் பயன் படுத்தி நாம் ஒரு பாவகத்தின் 
பலனை நிர்ணயம் செய்ய மட்டும் முடியும் அந்த பாவக பலனை எந்த திசை 
நடத்துகிறது என்று தெரிந்து கொள்ள இயலாது . இதற்க்கு வேறு கணிதம் 
உண்டு .

வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


4 comments:

 1. //அஷ்ட வர்க்க பரல் பயன் படுத்தி நாம் ஒரு பாவகத்தின்
  பலனை நிர்ணயம் செய்ய மட்டும் முடியும் அந்த பாவக பலனை எந்த திசை
  நடத்துகிறது என்று தெரிந்து கொள்ள இயலாது . இதற்க்கு வேறு கணிதம்
  உண்டு .//

  அஷ்ட வர்க்க பரல் பயன் படுத்தி உள்ளேன் ... நீங்கள் சொல்வது போல எந்த திசை என்பது சொல்வது கடினம்

  ReplyDelete
 2. //(அவர் பயன் படுத்தும் இந்த ஜோதிட மென் பொருள் சனி சந்தையில் ஒரு
  ரூபாய்க்கு மூன்று என்ற விகிதத்தில் விற்பனை செய்கின்றனர் என்பது
  வேறு விசயம் ) //

  இன்டர்நெட் ல ப்ரீ ஆ கிடைகிறது .. சத்பால போன்ற முறையைத்தான் அவர் பயன் படுத்துகின்றார்

  ReplyDelete
 3. //நீங்கள் சொன்ன நபர் நவ கிரகங்களுடன் , ஒரு ஒப்பந்தம் போட்டு, முறையாக வானவெளிக்கு சென்று காப்புரிமை பெற்று நவக்கிரக சக்தியை தன்னுள்
  பெற்று கொண்டு மக்களுக்காவும் நவ கிரக சக்தியை ஒரு கோணி பையில் ,
  பெற்றுகொண்டு வந்து இருக்கிறார்.

  அவரிடம் நாடி வருபவர்களுக்கு
  தேவையான அளவு தந்து அருள் புரியும் தன்மை அவரிடம் இருக்கிறது, எனவே அனைவரும் சென்று பயனடையுங்கள்தவற விட்டால்
  மறுபடியும் வாய்ப்பு கிடைக்காது ( காரணம் கொஞ்சம் நாளில் பஞ்சாமிர்தம்
  தயாரிக்க பயன் படுத்த போகின்றனர் ) மேலும் அவர் எப்படி
  நவகிரகங்களுக்கு மார்க் போடுகிறார் என்றால் தினமும் அவரிடம் டுசன் படிக்க
  மாலை 6 மணி ஆனா உடன் நவகிரகங்கள் வரிசையாக வந்து
  பாடம் படித்து செல்கின்றனர் , இதன் காரணமாகவே அவரால்
  நவ கிரகங்களுக்கு மதிப்பெண் போட முடிகிறது.

  //

  எனக்கு பழனி சென்று வாங்கி வரும் பஞ்சாமிர்தம் தான் பிடிக்கும். டியூஷன் ஆறு மணிக்கு இல்லை 6.30 க்கு

  ReplyDelete
 4. enakku mithuna lakkunam lakkanathil guru ippa gurhthasai guruputhi enna pannum

  ReplyDelete