Sunday, May 6, 2012

வேலை அல்லது தொழில் சிறப்பாக அமைய ஒருவர் செய்ய வேண்டிய வழிபாடு !பொதுவாக ஒரு ஜாதகருக்கு , கால புருஷ தத்துவத்தின் அடிப்படையில் தொழில் , ஜீவன ஸ்தானமாக வருவது சனிபகவானின் வீடான மகரம் , இது சர ராசியாகவும் , மண் தத்துவமாகவும் வருகின்றது, ஒரு நபருக்கு  சுய ஜாதக அமைப்பின் படி லக்கினத்திற்கு பத்தாம் வீட்டுக்கு அதிபதியாக எந்த கிரகம் வந்தாலும் அவரின் ஜாதகத்தில் சனி பகவான் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகரின் வேலை , அல்லது சுய தொழில் சிறப்பாக அமையும் .
 
மேலும்  லக்கினத்திற்கு பத்தாம் வீட்டுக்கு அதிபதியாக எந்த கிரகம் வருகிறதோ அந்த கிரகத்தின் வலுவையும் , தொழில் ஸ்தான காரகத்துவத்தையும் , சனிபகவானே முன் நின்று அனைத்து பலனையும் நடத்துவார் . எனவே சுய ஜாதகத்தில் பத்தாம் வீட்டுக்கு உண்டான பலனை நடத்துவதில் அதிக பங்கு வகிப்பது சனிபகவான் மட்டுமே , லக்கினத்திற்கு பத்தாம் வீட்டுக்கு அதிபதி பாதிக்க பட்டு இருந்தாலும் , சனிபகவான் அல்லது சனிபகவானின் வீடு,  ஒரு ஜாதகத்தில் நன்றாக இருக்கும் அமைப்பை பெற்றவர்களுக்கு, தொழில் அல்லது வேலை சிறப்பாக அமையும் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  
 ஆனால் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு பத்தாம் வீடு, பத்தாம் வீட்டு அதிபதி மட்டும் வலுபெற்று , சனிபகவானும் , சனிபாகவனின் இரு வீடுகளும் பாதிக்க பட்டு இருப்பின் ஜாதகருக்கு,  தொழில் வேலை ஆகிய அமைப்புகளில் தொடர்ந்து மாற்றமும் , விருப்பம் இல்லாத தொழில் அல்லது வேலையில் பாணியார்ற வேண்டிய நிர்பந்தமும் ஏற்ப்படும் .

பொதுவாக  மேற்காணும் அமைப்பை பெற்ற ஜாதகருக்கும், அவரது தகப்பானாருக்கும் நித்திய கண்டம் பூர்ண ஆயுசாகவே, வாழ்க்கை வாழவேண்டியிருக்கும், இருவருக்கும் கருத்து வேறுபாடு என்பது இயற்கையிலேயே அமைந்து இருவருக்கும், தகப்பன் மகன் என்ற ஒரு நல்ல உறவுமுறை அதிகம் பாதிக்க படும் .


இந்த அமைப்பை பெற்று ஒரு நல்ல வேலை அல்லது தொழில் அமையாத அன்பர்கள் அனைவரும் நாங்கள் கூறும் சில வழிபாடுகளை , முறையாக செய்து வந்தால் வாழ்க்கையில் விரைவான முன்னேற்றம் பெற இயலும் .


வேலை அல்லது  தொழில் சிறப்பாக அமைய :


சம்பந்தபட்ட ஜாதகர் தினமும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து சூரிய உதயத்திற்கு  முன் எழுந்து முறையான சூரிய நமஸ்காரம் செய்து வருவது நிச்சயம் நல்ல வேலை, தொழில் அமைய வழிவகுக்கும்.


சுய ஜாதகத்தில் சனிபகவான் எந்த வகையிலாவது பாதிக்க பட்டு இருப்பின் சனி பீரிதி செய்து கொள்வது, விரைவான நன்மையை தரும் சிறந்த வேலை , தொழில் நிச்சயம் அமையும் .

 

அல்லது மாற்று திறனாளிகளுக்கு ஜாதகரால் முடிந்த அளவு உதவிகளை எந்த வகையிலாவது செய்து வருவது விரைவான ஜீவன மேன்மையை தரும் .  செய்தொழில் வளர்ச்சி பெற முடியாமல் இருப்பவர்கள் , தனக்கு கீழ் பணியாற்றும் தொழிலார்களிடம், கண்ணியமாகவும் அவர்களின்  தேவைகளை பூர்த்தி செய்யும் தன்மையுடன்,  நடந்து கொள்வார்களே ஆயின் அந்த தொழில் விரைவில் முனேற்றம் பெரும்.

தனது தகப்பானார் மூலம் எவ்வித துன்பங்களை ஜாதகர் அனுபவித்தாலும், அதை ஏற்று கொள்வாரே ஆயின்,  ஜாதகர் செய்யும் தொழில் நிச்சயம் 100 சதவிகித வெற்றி பெரும், ஏனெனில் ஒருவகையில் ஜீவன ஸ்தானத்துடன், தகப்பானர் ஆதிபதியமும் சம்பந்தம் பெறுவதால், அதன் காரகதுவ வழியில் ஜாதகர் கர்ம வினை பதிவை தீர்த்துக்கொள்ள கிடைத்த ஒரு வழி, மேலும் ஜீவன வழியில் அதிக நன்மையை ஜாதகர் பெறுவார் இது உறுதி .


ஒன்றுமே இயலாத நிலையில் உள்ளவர்கள் கூட, கன்று குட்டியுடன் உள்ள ஒரு பசுவிற்கு ஒன்பது சனிக்கிழமைகளில் தொடர்ந்து ஒரு வாழை பழம் கொடுத்துக்கொண்டு வருவாரே ஆயின் , சில நாட்களில் ஜாதகருக்கு நிச்சயம் நல்ல வேலை அல்லது தொழில் அமையும் .


செய்து ஜீவன வழியில் அனைத்து நன்மைகளையும் பெறுங்கள் .


வாழ்க வளமுடன்

 

ஜோதிடன் வர்ஷன் 
9443355696
 

3 comments:

 1. என் பெயர்
  ரா. ராஜேஷ்
  ராசி:தனுசு
  லக்னம் :கன்னி
  நட்சத்திரம் :பூராடம்
  பி.தே :1 .12 .1989
  நேரம் :5 மணிக்குள் இருக்கும் ..,
  நான் பி .ஏ படித்தேன் ..,பின் மல்டிமீடியா முடித்தேன் ..,இப்பொழுது கணினி பயிற்சி மையத்தில் வேலைபர்கிறேன் ..
  எனக்கு கிராபிக்ஸில் 3 வருடமாக நல்ல பழக்கம் ....,என்னால சொந்தமா ஒரு கிராபிக்ஸ் ஸ்டுடியோ வைக்கமுடயுமா
  சுய தொழில் எனக்கு பொருந்தும்னு சொல்ல முடியுமா ?

  ReplyDelete
 2. Name kris
  Rasi Meenam
  Lagana Tulam
  Niachitram uthiratadhi
  Date of birth 22/02/1985
  Time of Birth 10:43 AM USA time
  My son is out of work for two years. When he will get a job. Does he have a kala sarpa dosha? How is his future. He has a masters in economics degree and looking for a career in economic field.
  thanks

  ReplyDelete
 3. name : nelsanselvaraj
  rasi : viruchagam
  nachathiram : kettai
  laknam : kumbam
  d.o.b 23/02/1995
  time : 07:45 india tme

  enaku bank job ketaikuma ...how many % have a chance

  ReplyDelete