வியாழன், 24 மே, 2012

மிதுன லக்கினத்திற்கு லக்கினாதிபதி நின்ற இட பலன்கள் !

( கிழ்காணும் பலன்கள் இலக்கின பாவக பாகைக்குள் உட்பட்டு, சம்பந்த பட்ட வீடுகளின் பகைகளில்  அமரும்பொழுது தரும் பலன்கள் ஆகும் என்பதை கவனத்தில் கொள்க )

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மிதுன ராசி மூன்றாம் வீடாக வருகின்றது இந்த ராசியை சுய ஜாதக அமைப்பில் லக்கினமாக கொண்டவர்களுக்கு ராசி அதிபதியான புத பகவான் கிழ்கண்டவாறு இரு வித நிலைகளில் , இரண்டு வித பலன்களை தருகிறார் .

மிதுன லக்கினம் இந்த ராசிக்கு அதிபதியான புதன் இரண்டுவித தன்மை கொண்டவராக பலனை தருகிறார், ஒன்று சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் பொழுது அசுபர் என்ற நிலையிலும் , சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும்பொழுது சுபர் என்ற  நிலையிலும் லக்கினத்திற்கு அமரும் இடத்திற்கு தகுந்தார் போல் பலனை தருகிறார் . 


 கவனத்தில் கொள்க :

1 ) சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும்பொழுது சுபர்
2 ) சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் பொழுது அசுபர்

மிதுன லக்கினத்திற்கு புதன் லக்கினத்தில் நின்றால் தரும் பலன் :

சுபர் :
          

ஜாதகர் லக்கினபாவாக வழியில் அனைத்து நன்மையையும் பெறுவார் , லக்கினம் 100 சதவிகிதம் நன்மையை மட்டும் தரும் , ஜாதகருக்கு சிறந்த கல்வி அறிவு , அடிப்படை கல்வியில் தடையில்லா நிலை , துவங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி , தனது அறிவு வழியில் சிறப்பான எதிர்காலத்தை தானும் , மற்றவர்களுக்கும் ஏற்படுத்தி கொள்ளும் தன்மை , நீண்ட ஆயுள் , கலைகளில் நிகரற்ற புலமை மற்றும் திறமை , சிறந்த விளையாட்டு வீரர் என்ற நிலை என ஜாதகர் மிகவும் சிறந்து விளங்குவார் .

அசுபர் :
            

 ஜாதகர் தானே தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வார் , இலக்கின வழியில் 100 சதவிகித தீமையான பலனையே ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும், மற்றவரை சார்ந்து வாழும் நிலைக்கு ஜாதகர் தள்ள படுவார் . இந்த நிலை ஜாதகரை மிகவும் துன்பத்திற்கு ஆளாக்கும் .

 
மிதுன லக்கினத்திற்கு புதன் 2 ம் வீடு கடகத்தில்  நின்றால் தரும் பலன் :

சுபர் & அசுபர் :
            

நல்ல பலனை ஜாதகருக்கு நிச்சயம் வழங்க வாய்ப்பு இல்லை , மேலும் தனது வாயாலேயே வம்புகளில் மாட்டிக்கொள்ளும் நிலை ஜாதகருக்கு ஏற்படும் , நல்ல வருமானம் பெற இயலாது , குடும்பவாழ்க்கையில் மிகவும் சிரமப்பட வேண்டி வரும் , தனது பேச்சால் மாற்ரவர்களின் மனைதை அதிகம் நோகடிக்கும் தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும், இதனால் இவருடடைய மன நிலையம் பாதிக்கும், இது அவ்வளவு  சிறப்பானது அல்ல ஜாதகருக்கு இலக்கின அமைப்பிற்கு .

 

மிதுன லக்கினத்திற்கு புதன் 3 ம் வீடு சிம்மத்தில்  நின்றால் தரும் பலன் :

சுபர் & அசுபர் :
           
மிக சிறந்த அதிர்ஷ்டசாலி , நல்ல திறமைகள் ஜாதகருக்கு இயற்கையிலேயே அமைந்து இருக்கும் , முன்னேற்றாம் என்பது ஜாதகருக் நிலையானதாக இருக்கும் , எழுத்தின் மூலம் நல்ல வருமான பெரும் தன்மை ஜாதகருக்கு நிச்சயம் ஏற்ப்படும் , கலைத்துறையில் சிறந்து விளங்கும் புத்திசாலித்தனமும் , அதிர்ஷ்டமும் கொண்டவர்கள் ,இவர்கள் 60 சதவிகிதத்தினர் காதல் மனம் புரிந்துகொண்ட மற்றவர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு மிக சிறப்பாக வாழ்க்கை நடத்துகின்றனர் . இந்த நிலை ஜாதகருக்கு மிகசிறந்த நன்மைகளையே தரும் .

 

மிதுன லக்கினத்திற்கு புதன் 4 ம் வீடு கன்னியில்  நின்றால் தரும் பலன் :

 சுபர் :
         

 தாய் வழி , வீடு  வண்டி வாகனம் , சொத்து , சுக அமைப்புகளில் ஜாதகர் 100 சதவிகிதம் தீமையான பலனையே அனுபவிக்க வேண்டி வரும் , இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

அசுபர் :
        

தாய் வழி , வீடு  வண்டி வாகனம் , சொத்து , சுக அமைப்புகளில் ஜாதகர் 100 சதவிகிதம் நன்மையான பலன்களும் , தனது அறிவு வழியில் சொத்து சுக செக்கையும் கொண்டவர்கள் , மிகசிறந்த யோக நிலையை ஜாதகருக்கு லக்கினவழியில் தரும் , ட்ரவல்ஸ் , டிக்கட் முன்பதிவு அலுவலகம் , கமிசன் துறை , புரோக்கர் , என்ற அமைப்புகளில் ஜாதகருக்கு மிகசிறந்த நன்மையே தரும் இந்த நிலையில் புதன் இங்கு அமர்வது யோகமே .

மிதுன லக்கினத்திற்கு புதன் 5 ம் வீடு துலாம் ராசியில் நின்றால் தரும் பலன் :

 சுபர் :
         

 இறைஅருள் இயற்கையாக ஜாதகருக்கு துணை புரியும் , சொல்லும் நல் வாக்கு நிச்சயம் பலிதமாகும் , தெய்வீக தரிசனங்கள் & அனுபவங்கள் ஜாதகருக்கு  ஏற்ப்படும் , பின்னால் வருபவைகளை முன்கூட்டியே தெரிவிக்கும் ஆற்றல் மிக சிறப்பாக அமைந்திருக்கும் , மிகசிறந்த தெய்வீக சக்தி ஜாதகரின் உடலில்  குடிகொண்டு  இருக்கும் . இவரால் மக்கள் அனைவரும் நலம் பெறுவார்கள் , இவர்களின் கை விரல் பட்டால் பல நோய்கள் குணமடையும் , ஜாதகர் இந்த நிலையை தனது தவ வழிமையால் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் . இது மிகவும் சிறப்பான பலனை தரும் அமைப்பு .

அசுபர் :
             

 மேற்கண்ட அமைப்புக்கு நேர்மாறாக ஜாதகர் காணப்படுவார் தனது பூர்விக்கத்தை விட்டு வெகு தொலைவு பாரதேச ஜீவனம் நடத்த வேண்டி வரும் , மீறி பூர்வீகத்தில் இருந்தால் மனநிம்மதி , பூர்வீக சொத்துகள் அனைத்தையும் இழக்க வேண்டி வரும் , இத்துடன் பூர்வீகமும் பாதிக்க படுமாயின் ஆண் குழந்தை பேரு கிடைக்க வாய்ப்பு மிக குறைவு . இது ஒரு சிறப்பற்ற நிலை .

மிதுன லக்கினத்திற்கு புதன் 6 ம் வீடு விருச்சக  ராசியில் நின்றால் தரும் பலன் :

சுபர் & அசுபர் :
                      

அனைத்து விதத்திலும் ஜாதகர் தொல்லை அனுபவிக்க வேண்டி வரும் , புராதன பொருட்களால் லாபம் ஆனால் அது நிலைக்காது , உடல்நிலையில் அதிக கவனம் ஜாதகர் செலுத்த வேண்டி வரும் , கடன் வாங்குவதும், கொடுப்பதும் அவ்வளவு நன்மைதருவதில்லை , ஆனால் எதிரியை வெல்லும் ஆற்றால் ஜாதகருக்கு ஏற்ப்படும் , உடல் பலம் அதிகம் இல்லை என்றாலும் , மனோ பலம் மிகுந்து காணப்படும் , அறிவை நல்வழியில் செலுத்துவது நல்லது இல்லையெனில் ஜாதகர் பாடு திண்டாட்டம் தான் . இந்த நிலை ஜாதகருக்கு அவ்வளவு  நன்மை தருவதில்லை .

மிதுன லக்கினத்திற்கு புதன் 7 ம் வீடு தனுசு  ராசியில் நின்றால் தரும் பலன் :
 
சுபர் :
         

 100 சதவிகித தீமை லக்கினத்திற்கு தீமையான பலனையே ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும், மற்றவரை சார்ந்து வாழும் நிலைக்கு ஜாதகர் தள்ள படுவார் . இந்த நிலை ஜாதகரை மிகவும் துன்பத்திற்கு ஆளாக்கும் . ஜாதகர் தானே தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வார், மற்றவர் பேச்சை கேட்க்கவும் மாட்டார் தான் பிடித்த முயலுக்கு 3 கால் என்ற பிடிவாத குணத்தை தந்துவிடும் , இது நல்லதல்ல நண்பர்கள் வழியில் அதிக தீமையான பலன் நடைபெறும் .

அசுபர் :
            

ஜாதகர் லக்கினபாவாக வழியில் அனைத்து நன்மையையும் பெறுவார் , லக்கினம் 100 சதவிகிதம் நன்மையை மட்டும் தரும் , ஜாதகருக்கு சிறந்த கல்வி அறிவு , அடிப்படை கல்வியில் தடையில்லா நிலை , துவங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி , தனது அறிவு வழியில் சிறப்பான எதிர்காலத்தை தானும் , மற்றவர்களுக்கும் ஏற்படுத்தி கொள்ளும் தன்மை , நீண்ட ஆயுள் , கலைகளில் நிகரற்ற புலமை மற்றும் திறமை , என மிகவும் சிறந்து விளங்கும் தன்மை ஏற்ப்படும் , நபர்கள் மற்றும் மனைவியால் அதிக நன்மையை ஜாதகர் அடைவார் .

மிதுன லக்கினத்திற்கு புதன் 8 ம் வீடு மகர   ராசியில் நின்றால் தரும் பலன்:

சுபர் & அசுபர் :

ஜாதகர் உடல் நிலை அதிகமாக பாதிக்க படகூடும் , அல்லது வண்டி வாகன விபத்துகளில் திடீர் இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் , பண இழப்பு திடீர் என நிகழ அதிக வாய்ப்பு உள்ளாது , மேலும் ஜாதகர் அவசரபட்டு எடுக்கும் காரியங்களால் அதிக பதிப்புகளை அடைவார் , ஜாதகர் பண விவகாரங்களில் அதிகம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியம் . இந்த நிலை ஜாதகருக்கு அவ்வளவு நன்மையை செய்வதில்லை லக்கினத்திற்கு . இழப்புகள் எதிர்பாராத நேரங்களில் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் .

மிதுன லக்கினத்திற்கு புதன் 9 ம் வீடு கும்ப ராசியில் நின்றால் தரும் பலன்:

சுபர் :
          ஜாதகர் மிகசிறந்த நன்மைகளை பெரும் அமைப்பை பெறுவார் ,செல்லும்  இடங்களில் எல்லாம் நல்ல பெயர் ஏற்ப்படும் , மக்களிடம் நன்மதிப்பு பெயரும் புகழும் கிடைக்கும் , மிகசிறந்த ஆன்மிக வாதி , பெரியமனிதர்கள் என்ற தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும் , தனது அறிவு திறமையால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும் , மிகசிறந்த வழக்கறிஞர்கள் இந்த அமைப்பை பெற்றவர்களே . இது 100 சதவிகித நன்மையை தரும் .

அசுபர் :
              மேற்கண்டவற்றிற்கு நேர் எதிராக ஜாதகர் காணப்படுவார் , மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்குவது என்பது நிச்சயம் இயலாது , தனது அறிவாற்றலை விரையம் செய்யும் நிலைக்கு ஜாதகர் தள்ள படுவார் , இது 100 சதவிகிதம் தீமையான பலனை தரும் அமைப்பு .

மிதுன லக்கினத்திற்கு புதன் 10 ம் வீடு மீன  ராசியில் நின்றால் தரும் பலன்:

சுபர் :
 ஜாதகர் தொழில் முறையில் அதிக சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும் , தொழில் சிப்பாக அமையாது , அதிக போராட்டங்களை ஜாதகர் வாழ்க்கையில் சந்திக்க வேண்டி வரும் , தனது தகப்பனார் அமைப்பில் இருந்து எவ்வித நன்மையையும் பெற இயலாது , அவர் வழியில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிவரும் , ஜாதகரின் ஜீவன வாழ்க்கை அதிகம் பாதிக்க படும்
இது லக்கினத்திற்கு 100 சதவிகிதம் தீமையான பலனை தரும் அமைப்பு .

அசுபர் :
செய்யும் தோழிகளில் எல்லாம் நல்ல முன்னேற்றம் பெறுவார் ஜாதகர் , ஜீவன வழியில் அதிக நன்மை தகப்பானார் சொத்துக்களை ஜாதகர் அனுபவிக்கும் யோகம் , செய்தொழில் நல்ல முன்னேற்றம் . கூட்டு தொழில் செய்வதால் அதிக லாபம் , சிறப்பான எதிர்காலம் நல்ல வருமானம் , வண்டி வாகனங்களை வைத்து வியாபாரம் செய்வதால் அதிக லாபம் என
இது லக்கினத்திற்கு 100 சதவிகிதம் நன்மையான பலனை தரும் அமைப்பு .

மிதுன லக்கினத்திற்கு புதன் 11 ம் வீடு மேஷ  ராசியில் நின்றால் தரும் பலன் :

சுபர் & அசுபர் :
ஜாதகர் மிகசிறந்த யோகசாலி , அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கையினை ஜாதகர் வாழ்நாள் முழுவது அனுபவிக்கும் தன்மை ஏற்ப்படும் , செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிமேல் வெற்றியை தரும் , இரு தார அமைப்பை ஜாதகர் பெறக்கூடும் , திருமண வாழ்க்கையினால் அதிரடி முன்னேற்றங்களை ஜாதகர் பெறுவார் , அதிர்ஷ்ட தேவதையின்  பரிபூரண ஆசி ஜாதகருக்கு எப்பொழுதும் நிறைந்து நிற்கும் . வாழ்க்கையில் திடீர் என பணம் , பட்டம், புகழ் , என குறுகிய காலங்களில் முன்னேற்றத்தை பெரும் ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் இவர்கள் 
இது லக்கினத்திற்கு 100 சதவிகிதம் நன்மையான பலனை தரும் அமைப்பு .

மிதுன லக்கினத்திற்கு புதன் 12  ம் வீடு ரிஷப ராசியில் நின்றால் தரும் பலன் :

சுபர் & அசுபர் :
அனைத்திற்கும் கெடுதல் , அனைவராலும் மனநிம்மதி இழப்பு , உடல் நிலைபாதிப்பு , தேவையற்ற விரையம் என ஜாதகரை வாட்டி வதைத்து விடும் , குறிப்பாக உடல்நிலையிலும் , மன நிலையிலும் ஜாதகர் கவனம் செலுத்துவது அவசியம் , இல்லையெனில் அதிக துன்பப்பட வேண்டி வரும் ஜாதகரும் ஜாதகரை சார்ந்தவர்களும் , அதிக முதலீடு செய்யும் தொழில்களில் ஜாதகர் இறங்குவது அவ்வளவு நல்லதல்ல , மற்றவர்களிடம் அதிக எச்சரிக்கையுடன் பழகுவது நன்மைதரும் ,
இது லக்கினத்திற்கு 100 சதவிகிதம் தீமையான பலனை தரும் அமைப்பு .

குறிப்பு :



மேற்கண்ட பலன்கள் சுய ஜாதக ரீதியாக லக்கினம் எனும் முதல் பாவக  பலனை  திசைகள் புத்திகள் . அந்தரம் , சூட்சமம் ஆகியவைகள்  நடத்தினால் மட்டுமே பலன் நடைமுறைக்கு வரும்  என்பதை கவனத்தில் கொள்க .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக