Wednesday, May 16, 2012

மேஷ லக்கினம் மற்றும் லக்கினாதிபதி அமரும் இடத்திற்கு உண்டான பலன்கள் !





சுய ஜாதகத்தில் மேஷலக்கின ஜாதகருக்கு லக்கினாதி , செவ்வாய் எங்கு அமர்ந்தால் நன்மை தருவார் என்பதை பற்றி இனி பார்ப்போம்

 ( கிழ்காணும் பலன்கள் இலக்கின பாவக பாகைக்குள் உட்பட்டு, சம்பந்த பட்ட வீடுகளின் பகைகளில்  அமரும்பொழுது தரும் பலன்கள் ஆகும் என்பதை கவனத்தில் கொள்க ) :

மேஷலக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி   செவ்வாய் லக்கினத்தில் அமர்ந்தால், ஜாதகர் சுய கட்டுப்பாடு அற்றவராகவும் , தன்னம்பிக்கை இல்லாதவராகவும் , முரட்டு சுபாவமும் , தீயவர்    சவாசமும் , உடல்நிலையில் பாதிப்பும் , வெப்பம் மற்றும் பித்த சம்பந்தபட்ட நோய்களால் பாதிக்க படக்கூடிய நிலை ஏற்ப்படும் , மேலும் ஜாதகரே தன்னை கெடுத்து கொள்ளும் தன்மை ஏற்ப்படும் , வளரும் சூழ்நிலையும் சிறப்பாக இருக்காது .ஆக இந்த அமைப்பை பெற்ற மேஷ லக்கினத்தினர் தீமையான பலன்களையே  பெறுவார்கள் லக்கினத்திற்கு .

மேஷலக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி   செவ்வாய் ரிஷபத்தில் 2 ம் வீட்டில் அமர்ந்தால், அதிகம் உடல் நிலை பாதிப்பும் , பொருளாதார இழப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் , மேலும் முன்பின் யோசிக்காமல் செய்யும் காரியங்களாலும் , பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும் , சொல்லு வார்த்தையை காப்பாற்ற இயலாது , மனைவியுடன் அடிக்கடி பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும் , வருமானத்தை சேமிக்க இயலாது, நல்ல வருவாயினை பெறுவதற்காக அதிகம் போராட வேண்டி இருக்கும் . கொடுத்த பணம் காசு திரும்பி வர வாய்ப்பு மிக குறைவு .ஆக இந்த அமைப்பை பெற்ற மேஷ லக்கினத்தினர் தீமையான பலன்களையே  பெறுவார்கள்
லக்கினத்திற்கு .

மேஷலக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி   செவ்வாய் மிதுனத்தில் 3 ம் வீட்டில் அமர்வது ஜாதகருக்கு மிகுந்த நன்மை தரும் ( சிலர் காரக பாவ நாஸ்த்தி என்பர் இந்த அமைப்பு ஜாதகத்தில் செயல் பட வாய்ப்பு 100 சதவிகிதம் இல்லை ) எடுக்கும் அனைத்து முயற்ச்சிகளும் ஜாதகருக்கு இலக்கின அமைப்பில் 100 சதவிகித வெற்றியை தரும் , எழுத்தாற்றலால் நிறை வருவாயினையும் ,சமுதாயத்தை முன்னேற்ற பாதைக்கு தனி நபராக எடுத்து செல்லும் தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும் , முற்போக்கு சிந்தனையாளாராக ஜாதகர் காணப்படுவார் .மேலும் பொது ஜானங்களுக்காக செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றியடையும். ஆக இந்த அமைப்பை பெற்ற மேஷ லக்கினத்தினர் நன்மையான பலன்களை பெறுவார்கள் லக்கினத்திற்கு .

 மேஷலக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி   செவ்வாய் கடகத்தில் 4 ம் வீட்டில் அமர்வது வண்டி வாகன யோகத்தியும் , தாய்வழியில் நன்மையான பலன்களையும் , சொத்து சுக சேர்க்கயினையும் 100 சதவிகிதம் தவறாமல் தரும் . மேலும் மண் மனை வண்டி வாகன யோகத்தையும் , நில புலன்களால் லாபத்தையும் நிச்சயம் தரும் . மிக சிறந்த ஓட்டுனர்கள் , அரசுத்துறையில் வாகன ஓட்டுனர்களாக அதிகம் பணி புரிபவர்கள் இவர்களே . ஆக இந்த அமைப்பை பெற்ற மேஷ லக்கினத்தினர்  நன்மையான பலன்களை பெறுவார்கள் லக்கினத்திற்கு .

 மேஷலக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி   செவ்வாய் சிம்மத்தில் 5 ம் வீட்டில்  அமர்வது , ஜாதகருக்கு வளரும் சூழ்நிலையில் ஒரு நல்ல அமைப்பை நிச்சயம் தார் வாய்ப்பே இல்லை , மற்றவரை சார்ந்தே ஜீவனம் நடத்த வேண்டி இருக்கும் , தனது பூர்வீகம் எதுவோ அந்த இடத்தை வீட்டு வெகு தொலைவிற்கு அப்பால் சென்று வாழும் சூழ்நிலை ஏற்ப்படும் ( பரதேச ஜீவனம் ) தனது குல தெய்வத்தின் அருளை பெற ஜாதகர் கடுமையான முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டி வரும் . தமது குழந்தைகளால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி வரும் , வயதான காலத்தில் அவர்களின் ஆதரவு கிடைப்பது அரிதான அமைப்பாகவே காணப்படுகிறது , மேலும் ரத்த சம்பந்த பட்ட நோய்களால் பாதிப்பு ஏற்ப்படும் . ஆக இந்த அமைப்பை பெற்ற மேஷ லக்கினத்தினர் தீமையான பலன்களையே  பெறுவார்கள் லக்கினத்திற்கு .

 மேஷலக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி   செவ்வாய் கன்னியில் 6 ம் வீட்டில்  அமர்வது , ஜாதகரை தேவையில்லாத வம்பு வழக்குகளில் சிக்க வைத்து துன்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளிவிடும் , இவர்கள் அனைவரும் சற்று முன் எச்சிரிக்கையுடன் இருப்பது நலம் , அல்லது வயிறு சம்பந்தபட்ட இடங்களில் அறுவை சிகிச்சை பெற வேண்டி இருக்கும் , போகும் இடத்திலெல்லாம் அனைவரையும் பகைத்துகொள்ளும் சூழல் ஏற்ப்படும் , கடன் வாங்குவது ஜாதகரை படு குழியில் தள்ளி விடும் , இதனால் உயிர் இழப்பு வரை செல்ல வேண்டிவரும் , அல்லது தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார் . இவர்கள் கொஞ்சம் உசாராக இல்லை எனில் தனது சொத்து சுகங்களை எல்லாம் எதிரிகளிடம் இழக்க வேண்டி வரும் . ஆக இந்த அமைப்பை பெற்ற மேஷ லக்கினத்தினர் தீமையான பலன்களையே  பெறுவார்கள் லக்கினத்திற்கு .

 மேஷலக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி   செவ்வாய் துலாம் ராசியில் 7 ம் வீட்டில்  அமர்வது , கொடுத்து வைத்த ஜாதகர்கள் , பெண்கள் ஆண்களிடமும் , ஆண்கள் பெண்களிடமும் , அதிகம் விரும்பப்படும் தன்மை ஏற்ப்படும் , மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன் போன்ற தன்மையை பெற்றவர்கள் , அனைவரையும் கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டவர்கள் , நினைத்ததை சாதிக்கும் தன்மை உடையவர்கள் , மிக சிறந்த போர் வீரர்கள் , மிகச்சிறந்த ஓட்டுனர்கள் , மற்றவர்களை காக்கும் தன்மை பெற்றவர்கள் , சிறந்த காவலர்கள் , சிறந்த ராணுவ அதிகாரிகள் , உடல் பலமும் , அறிவு திறனும் அதிகம் கொண்டவர்கள் . எந்த பிரச்சனைக்கும் சரியான தீர்வினை தரும் மேன்மக்கள் இவர்களே , தர்மகர்த்த ,நாட்டாமை , போன்ற பாதவிகளை நீதி நேர்மையுடன் அலங்கரிக்கும் தன்மை கொண்டவர்கள் . லக்கினாதிபதி   செவ்வாய் துலாம் ராசியில் 7 ம் வீட்டில்  அமர்வது மிக சிறந்த யோக பலனையே தரும் .ஆக இந்த அமைப்பை பெற்ற மேஷ லக்கினத்தினர் நன்மையான பலன்களை பெறுவார்கள் லக்கினத்திற்கு .

மேஷலக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி   செவ்வாய் விருச்சக  ராசியில் 8 ம் வீட்டில்  அமர்வது, அதிக மன உளைச்சலையும் , மன போராட்டத்தையும் , மற்றவர்களால் துன்பத்தையும் அடையும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் , மேலும் மன நிம்மதி இல்லாத நிலை , திடீர் என நிகழும் அசம்பாவிதம் என ஜாதகரை துவைத்து எடுத்து விடும் , மன நோயால் அதிகம் பாதிக்க படும் தன்மை இந்த ஜாதக அமைப்பை பெற்றவர்களுக்கு ஏற்ப்படும் . தன்னம்பிக்கை அற்ற நிலை , நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் , மேலும் தீடிர் இழப்புகளை அதிகம் சந்திக்க வேண்டி வரும் ,ஆக இந்த அமைப்பை பெற்ற மேஷ லக்கினத்தினர் தீமையான பலன்களையே  பெறுவார்கள் லக்கினத்திற்கு .

மேஷலக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி   செவ்வாய் தனுசு  ராசியில் 9 ம் வீட்டில்  அமர்வது,  எவரிடமும் நல்ல பெயர் எடுக்க இயலாது , முகத்திற்கு முன் நன்றாக பேசுபவர்கள் கூட முன்விட்டு பின்னால் ஏளனம் செய்வார்கள் , மற்றவர்கள் விசயங்களில் ஜாதகர் தலையிடுவது அவ்வளவு நல்லதல்ல, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது சகல நலனும் தரும் , அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரை படி நடப்பது நலம் தரும் , தான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தவறானதாகவே இருக்கும் . ஆக இந்த அமைப்பை பெற்ற மேஷ லக்கினத்தினர் தீமையான பலன்களையே  பெறுவார்கள் லக்கினத்திற்கு .

மேஷலக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி   செவ்வாய் மகர  ராசியில் 10 ம் வீட்டில்  அமர்வது, சகல யோகங்களையும் அனுபவிக்க பிறந்தவர்கள் , அதிகம் அரசு துறையில் பணியாற்றும் மேலதிகாரிகள் இவர்களே , சிறந்த நிர்வாக திறன் , எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி , காவலர் பணி , சிறந்த மருத்துவ நிபுணர்கள் , தொழில் அதிபர்கள் , சிறந்த சினிமா நடிகர்கள் , சிறந்த நிர்வாக திறன் உள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் என சகல துறைகளிலும் சிறந்து விளங்கும் நபர்கள் இவர்களே . ஆக இந்த அமைப்பை பெற்ற மேஷ லக்கினத்தினர் நன்மையான பலன்களை பெறுவார்கள் லக்கினத்திற்கு .

மேஷலக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி   செவ்வாய் கும்ப  ராசியில் 11 ம் வீட்டில்  அமர்வது , வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் , தொடர்ந்து தனது அறிவின் வழியில் அதிர்ஷ்ட வாழ்க்கையை அனுபவிப்பவர்கள் , லாட்டரி யோகம் , சூதாட்டத்தில் லாபம் , பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் என ஜாதகர் ஏதாவது ஒரு வழியில் நன்மையை தொடர்ந்து அனுபவித்து கொண்டு இருப்பார்கள் , மிகசிறந்த அறிவாற்றல் நிறைந்தவர்கள் , கல்வி நிறுவனம் , கல்லூரிகள் , பேராசிரியர்கள் , வக்கீல் தொழில் சிறந்து விளங்குபவர்கள் , என ஜாதகர் தனது அறிவை மூலதனமாக கொண்டு வெற்றி அடைபவர்களாக இருப்பார்கள் .ஆக இந்த அமைப்பை பெற்ற மேஷ லக்கினத்தினர் நன்மையான பலன்களை பெறுவார்கள் லக்கினத்திற்கு .

மேஷலக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி   செவ்வாய் மீன   ராசியில் 12 ம் வீட்டில்  அமர்வது, மன நிம்மதி அற்ற நிலை , நிம்மதியான தூக்கம் இன்மை , மக்கள் ஆதரவு அற்றவர்கள் , குறுகிய உள்ளம் கொண்டவர்கள் , சமுதாயத்திற்கு புறம்பாக வாழ்க்கை நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலை, என ஜாதகர் ஒருவித குழப்பமான சூழ்நிலையிலே இருக்க வேண்டிவரும் , போதை வஸ்துகளை அதிகம் உட்கொண்டு அதனால் உடல் நிலை பாதிப்பு ஏற்ப்படும் நிலைக்கு ஜாதகர் தள்ள படுவார் , இவர்களுக்கு மன நிம்மதிகிடைக்க இறைஅருளின் துணையை நாடுவது அவசியம் . ஆக இந்த அமைப்பை பெற்ற மேஷ லக்கினத்தினர் தீமையான பலன்களையே  பெறுவார்கள் லக்கினத்திற்கு .

குறிப்பு :

மேற்கண்ட பலன்கள் சுய ஜாதக ரீதியாக இலக்கின பலனை நடக்கும் திசைகள் புத்திகள் . அந்தரம் , சூட்சமம் ஆகியவைகள்  நடத்தினால் மட்டுமே நடைபெறும் என்பதை கவனத்தில் கொள்க .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
     

No comments:

Post a Comment