Saturday, May 19, 2012

ஜோதிட ஆலோசனை, தீர்வு .

பிறந்த தேதி:20.08.2009
   
பிறந்த நேரம்:11.40 A.M

பிறந்த ஊர்:திருப்பத்தூர்.சிவகங்கை(அ)காரைக்குடி,அட்சரேகை,தீர்க்கரேகைக்குப் போதுமானது.

     என் சகோதரியின் மகன் ஜாதகம் இவனது 1 வயதில் இவனது தாயார் தவறான முடிவெடுத்து இறந்துவிட்டார்.தாயில்லாப் பிள்ளையாக எங்களது அரவணைப்பில் வளர்கிறான்.இவனது தந்தையார் பிள்ளையைத் தான் வளர்க்கவேண்டுமென பிரச்சினை செய்கிறார்.ஆனால் அங்கு பிள்ளை வளர்க்க நல்ல சூழல் இல்லை.

   எனது தாயார் மகளை இழந்த வேதனையிலும்,தற்போது இந்த வேதனை வேறு நிம்மதியின்றி தவிக்கிறார்.அவன் தாயில்லாமல் நின்று தடுமாறுகிறான்.தம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் நிற்கிறான்.நல்ல வழிகாட்டுங்கள். நன்கு படிப்பானா?

   அவனது எதிர்காலம் எப்படியிருக்கும்.எனது ஆசை அவனைத் தாயில்லாத குறைதெரியாமல் வளர்க்கவேண்டும் என்பது தான்.அவனை நாங்கள் வளர்த்தால் எனது மனைவி அவனை தன்பிள்ளையாக கவனிப்பாரா.சில வீடுகளில் நடப்பதுபோல் நடக்கக்கூடாது என ஆண்டவனை அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.இது தான் நீங்கள் கவனிக்கவேண்டிய  முக்கியமான ஜாதகம்.

  மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் அவனது தகப்பனார் வறட்டுக்கவுரவத்தால் எதையும் விட்டுக்கொடுத்துச் செல்லும் மனநிலை அவருக்கு இல்லை.அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்பாரேயொழிய தனது மனைவி குடும்பத்தின‌ர்கள் கூறுவதை செவிகொடுத்துக் கேட்கமாட்டார்.தனது மகன் எங்கிருந்தாலும் நல்லபடியாக இருக்கட்டும் எனும் நிலையில் இல்லை.எனது தாயாருக்கோ தன்மகள் பட்ட வேதனைகளே போதும் இவனை அங்குவிட்டால் நல்ல ஒழுக்கமாக இவர்கள் வளரவிடமாட்டார்கள் என எண்ணிப் போராடுகிறார்.திருமணமான 22 மாதங்களில் மகளை இழந்த பரிதவிப்பு சொல்ல வார்த்தைகளேயில்லை. 29 ஆண்டுகள் கணவனின்றி வாழ்ந்தவர்.

 இவன் எங்கு வளர்வான்?தந்தையிடமா அல்லது எங்களிடமா?.

   பணம் அனுப்பிய பில் இணைத்துள்ளேன்(இது அண்டாவை அடகுவைச்ச ரசீது இல்ல ஹி.ஹி).இது உறுதிப்ப்டுத்திக் கொள்வதற்கு விளக்கங்களை pdf பைலாக அனுப்புங்கள்.
ஜோதிட தீபம் தரும் ஆலோசனை , மற்றும் தீர்வு .

இந்த குழந்தையின் ஜாதக அமைப்பில் , தனது தகப்பானருடன் வளரும் சூழ்நிலை ஏற்ப்பட வாய்ப்பு குறைவு , மேலும் தங்களிடமே குழந்தை வளருவான், கோட்சார ரீதியாக இன்னும் 18 மாதங்கள் இந்த குழந்தையின் ஜாதகத்தில் அதிக நன்மை நடைபெற வாய்ப்பில்லை , அதுவரை நீங்கள் அனைவரும் பொறுமை காப்பது அவசியம் .

உங்களுடன் அல்லது உங்களின் குடும்பத்துடன் இந்த குழந்தை வளருவதில் எவ்வித சிக்கலும் வர வாய்ப்பு இல்லை , எனவே கவலை கொள்ள வேண்டாம் , அடுத்து வரும் சுக்கிரன் திசை மிக சிறந்த யோகங்களை , இந்த குழந்தைக்கும் , குழந்தையை சார்ந்தவருக்கும் வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜாதகனுக்கு , 1 ,5 ,7 ,11 , வீடுகள் பாதக ஸ்தானமான 11 ம் வீட்டுடன் தொடர்பு எனவே ஜாதகன் பூர்வீகம் எதுவோ , அந்த இடத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சென்று குழந்தை  இருந்தால் குழந்தையின் வாழ்க்கை 100 சதவிகிதம் நன்றாக இருக்கும் , அல்லது குல தெய்வ வழிபாட்டினை முறையாக செய்து வருவது அனைத்து நன்மைகளையும் வாரி வழங்கும்.

தனது தகப்பன் , மற்றும் தாய் ஸ்தானங்களை குறிக்கும் 4 , மற்றும் 10 ஆகிய வீடுகள் குழந்தை பிறந்ததிலிருந்தே கோட்சார ரீதியாக கடுமையாக பாதிக்க பட்டுக்கொண்டு இருக்கிறது இதுவரை ,  இந்த நிலை வரும் ராகு கேது பெயர்ச்சிக்கு பின் மாறும் அதன் பிறகு ஜாதகனுக்கு தொடர்ந்து 37 வருட காலங்கள் யோகம் நிறைந்தத காலங்களாகவே அமையும் கவலை கொள்ள தேவையில்லை , இருப்பினும் தனது பூர்வீகத்தை விட்டு வெளியே வந்து வாழ்க்கை நடத்துவது அனைத்து நன்மையையும் வழங்கும் .

குழந்தைக்கு சிறு வயது முதலே நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுப்பது அவசியம் , மிகசிறந்த கல்விநிறுவனங்களில் படித்தால் ஜாதகன் , வாழ்க்கையில் அனைத்து அதிர்ஷ்டங்களையும் பெறுவான் , அதற்க்கு உங்களின் கவனமும் உதவியும் தேவை , உங்களுக்கும் அவனுக்கும் நல்ல உறவுமுறை தொடரும் , அதனால் இருவருக்கும் யோகமே ! குழந்தையின் ஜாதக அமைப்பில் நீங்கள் செய்ய வேண்டியது வருடம் தவறாமல் ஆவணி மாதம் வளர்பிறை திங்களன்று , திருப்பதி சென்று ஸ்ரீ வாரி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து , ஏழுமலையானை  தரிசனம் செய்து வருவது அவசியம் இதை கவனத்தில் கொள்ளுங்கள் .

தனது தகப்பன் , தாய் இருவரை தவிர இந்த ஜாதகன் மிக சிறந்த யோகசாலியே, கல்வியில் 14 வயதுக்கு மேல் அபரிவிதமான முன்னேற்றத்தை பெரும் ஜாதக அமைப்பு இது எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்தி படிக்க வையுங்கள் அன்பரே !

குறிப்பு :

மேலும் கேள்விகள் இருப்பின் மின் அஞ்சலில் அனுப்பி வையுங்கள் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696 

 

2 comments:

 1. அண்ணா ,

  02,04,08,10/10 பாவகங்கள் பத்தாம் பாவ பலனை தானே நடத்துகின்றன .அப்படி இருக்கும் போது குழந்தை தகப்பன் வழி வளருவது போன்ற சூழ்நிலை தானே உண்டாகும்?

  அது மட்டும் அல்லாமல் 04,10/10 .பாவகங்கள் பாதிக்க படவில்லை எனினும் ஜாதகனுக்கு ஏன் அப்பா அம்மா உடன் வளரும் பாக்கியம் இல்லை .

  என்னுடைய சின்ன அறிவுக்கு புரிய வில்லை. தயவு செய்து விளக்கவும்.

  ReplyDelete
 2. தம்பி கோட்சார ரீதியாக பாதக ஸ்தான பலனை தருவதும், ஜாதகத்தில் பூர்வீகம் கெட்டு பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெறுவதும் , ஜாதகரை பெற்றோரின் அரவணைப்பில் இருந்து விளக்கி வைக்கிறது.

  ReplyDelete