Wednesday, May 9, 2012

கலி முத்தி விட்டதா ? கல்கி அவதாரம் தொடங்கி விட்டதா ?


 பகவன் கிருஷ்ணர் , நான் கல்கி அவதாரம் எடுப்பது கலியுகம் முத்திய பிறகே தர்மத்தை காப்பதற்காக அமையும் என்றார் , எப்பொழுது கலியுகம் துவங்கும் என்ற கேள்விக்கு பகவானின் அருளுரை இதுவாக இருந்தது " என்று தீபம் தலை கீழாக எரிகிறதோ அன்று கலியின் ஆரம்பம் " என்றார் , கலியுகம் ஆரம்பிக்கும் பொழுது பகவானின் அவதார நிலை கீழ்கண்ட வாறு அமையும் . குதிரை வாகனத்தில் முழு சத்திரிய அமைப்புடன் , கோபம் பொங்கும் கண்களுடன் ஏந்திய வாளுடன் , போர்கோலம் பூண்டு வருவதாக அமையும் .
 
 " என்று தீபம் தலை கீழாக எரிகிறதோ அன்று கலியின் ஆரம்பம் "

என்ற பகவானின் அருளுரை இன்று பலித்து விட்டது , ஆம் மின் விளக்கு என்று கண்டு பிடித்து ஒளிர வைக்க பட்டதோ அன்றிலிருந்து (1878 ) , தர்மம் தலைகீழாக மாறிவிட்டது , மனிதனின் அமைதியான வாழ்க்கை மாறி விலங்குகளின் குணமே மனிதனை ஆட்கொண்டு விட்டது.


இந்த குணங்களில் இருந்து நம்மை மீட்டெடுத்து நல்ல குணம் கொண்ட மனிதராகவும் , சகல நலன்களையும் வாரி வழங்கி , மனிதர்களுக்கு ஏற்ப்படும் துன்பங்கள் அனைத்தையும் போக்கி நல வாழ்வினை வழங்கும் கண்கண்ட கலியுக காவல் ( கல்கி அவதார ) தெய்வம் , கருப்பனார் , முனியப்பன் , போன்று வெண்புரவி ஏறிவரும் காவல் தெய்வங்களை வழிபட்டு நலம் பெறுவோமாக


கலியுகம் முடிய இன்னும் 4,26,896 ஆண்டுகள் உள்ளன. அப்போது உலகம் முழுமையாக இருக்காதாம். இப்போது கலியுகத்தின் 5104ம் ஆண்டு தான் நடக்கிறது. மொத்தம் 4,32,000 ஆண்டுகள். இப்போதே கலியுகத்தின் கொடுமை எல்லை மீறி போய் விட்டது. இனி காட்டுவாசிகள் போல நாகரீகமற்று போய் விடும் அந்த பழைய காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த யுகத்தின் முடிவில் தர்மத்தை நிலைநாட்ட திருமால் கல்கி அவதாரம் எடுப்பாரென்று புராணங்கள் கூறுகின்றன. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.
 
  பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்

பலராம அவதாரம் , கல்கி அவதாரம், கூர்ம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மச்ச அவதாரம், நரசிம அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், வாமன் அவதாரம், வராக அவதாரம்.


புண்ணிய பூமியான நமது பாரத பூமி அந்நியர்களால் அடைமை படுத்தபட்டு, அவர்களின் கல்விமுறை நமக்குள் திணிக்கப்பட்டு , பணம் ஒன்றே முக்கியம் என்ற எண்ணம் விதைக்க பட்டு, நம்மை நிரந்த அடிமை மனோபாவத்தை பசுமர ஆணியாக  மனதில் அடித்துவிட்டனர்.

நமது பாரம்பரிய  குருகுல கல்விமுறையில் இருந்து, அவர்களின் கல்வி முறையை நமக்கு என்று  அறிமுகமானதோ அன்றிலிருந்தே நம் அனைத்தையும் இழந்து விட்டோம் , காரணம் நமது குடும்ப கட்டமைப்பையே அது அசைத்து விட்டது என்பது நம்மால் மறுக்க முடியாத உண்மை .


கூட்டு குடும்பமாக இருந்த நாம் என்று தனித்தனியாக பிரிந்தோமோ அன்றிலிருந்தே அன்பு , பாசம், பற்று, பரிவு என்ற விசயங்களை நாம் மறந்துவிட்டோம் , நமது பாரம்பரிய வாழ்க்கை மீண்டும் நாம் மீட்டு எடுக்க வேண்டும் என்பதே எனது ஆவல் .


வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்
9443355696
   

No comments:

Post a Comment