Friday, May 4, 2012

ஆறாம் வீடும்! பாதக ஸ்தானமும்?கடந்த சில நாட்களில் ஜோதிட ஆலோசனை பெற வந்தவர்களின் சுய ஜாதக அமைப்பில் ரண , ருணம் எனும் ஆறாம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பலனை நடத்தி கொண்டு இருந்தது , இவர்களின் வாழ்க்கை நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியவை காரணம் :


ஆறாம் வீடு
பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் என்பது கடன் , இதனால் ஏற்ப்படும் மன உளைச்சல் , உடல் நிலை பாதிப்பு , தன்னிடம் உள்ளவற்றை இழக்கும் சூழ்நிலை , மன வாழ்க்கையில் ஏற்ப்படும் சிரமங்கள் , என எண்ணிலடங்க துன்பங்களை மட்டுமே அனுபவிக்க வேண்டி வரும் , அதை அவர்கள் அனுபவித்துக்கொண்டு தான்  இருக்கிறார்கள்,

மேலும் இந்த பாதக ஸ்தானம் சர ராசியாக அமைந்து விட்டால் ஜாதகருக்கு ஏற்ப்படும் துன்பத்திற்கு அளவேயில்லை , மேலும் மண் தத்துவ ராசியாக இருப்பின் உடலில் ஒருபக்கம் இல்லாமல் மருத்துவர்கள் அறுவை சகிச்சை என்ற பெயரில் ஓட்டையை போட்டு விடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை , மேலும் ஜாதகர் உடலில் தழும்பு இல்லாமல் ஜீவிக்கவே முடியாது .


இதுவே நெருப்பு தத்துவ ராசியாக இருப்பின் , ஜாதகர் அதி வேகமாக வாகனம் ஒட்டுவதாலும் , அவசரப்பட்டு செய்யும் காரியங்களிளாலும் , தனது உடல் நிலையை தானே கெடுத்துகொல்லுவார்கள், ஜாதகர்  வேகத்தை கட்டு படுத்தவில்லை என்றால் மூக்கு வாய் , கண்ணு காது , கை கால் என ஒரு இடம் பாக்கி  இல்லாமல் பேண்டேஜ் கட்ட வேண்டிய சூழ்நிலையை  தானே ஏற்ப்படுத்திகொல்வார்  , அதிக அறுவை சிகிச்சை பெறவேண்டி வரும் , சுய கட்டுப்பாடு அதிகம் தேவை .


இல்லை எனில் நம்ம கவுண்டர் போல்

என்ன ? ரத்த காவெள்லாம் வாங்குது ?, 
வடக்கு  பட்டி ராமசாமி போய்ட்டான ?
என்காசு ஊ ஊ ஊ ஊ என்று புலம்ப வேண்டி வரும்.

ஆறாம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று அந்த வீடு காற்று தத்துவமாக இருந்தால் , மேதாவி தனமாக எதையாவது செய்துகொண்டு வம்பில் மாட்டி கொள்ள வேண்டி வரும் , இந்த காலங்களில் வீட்டில் உள்ள  பெரியவர்களின் ஆலோசனைகளை பெற்று நடந்து கொள்வது நன்மை தரும் , ஜாதகர் செய்யும் சுய சிந்தனைகள் அனைத்தும் பல சட்ட சிக்கல்களையும், மற்றவர்களுக்கு துன்பத்தையும் மட்டுமே தரும் , மற்றவர்களுக்கு  ஆலோசனை சொல்வதை விட சொல்லாமலே இருப்பது அதிக நலம் தரும் இல்லை எனில், ஜாதகர் சங்கி மங்கி மாதிரி நான் என்ன சொன்னேன் !  என்று தன்னை கண்ணாடியில் பார்த்து சொல்ல வேண்டி இருக்கும் .

 ஆறாம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று அந்த வீடு நீர்  தத்துவமாக இருந்தால் , நம்பர் ஒன் தண்ணி வண்டியாக இருப்பார் , நன்றாக சோமபானத்தை வயிற்றில் இறக்கி கொண்டு சாலை ஓரங்களில் சுடு மண்ணில் சொர்கத்தை காண்பவர்களாக இருப்பார்கள் , மேலும் போதை  மயக்கத்தில் ராகம், தாளம், பல்லவி, என சகல விதங்களிலும் ஏற்ற இறக்கத்துடன்  சங்கீத, ஆலாபனையை கேக்க வேண்டிய நிர்பந்தம்,  பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஏற்ப்படும் .

மேலும் போதையில்  நடிகர் வடிவேலு கணக்காக,   நாங்க எல்லாம் சத்தமே இல்லாம பல கொலைகளை செய்ததெல்லாம் வேறு விஷயம்!  என்று பக்கத்தில் இருப்பவர்களை பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட வைக்கும் திறமை, ஜாதகருக்கு ஏற்ப்படும் .அதிகம் தனது உடல் நிலை தானே கெடுத்து கொள்பவர்கள் இவர்களே , சில நிமிட முடிவுகளால் தற்கொலைக்கு ஆர்ப்படுபவர்களும் இந்த அமைப்பை சார்ந்தவர்களே .


ஆக ஆறாம் வீடு பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் நபர்களுக்கு , நல்ல நண்பர்கள் , உறவினர்கள் அருகில் இருப்பது ஓரளவு நன்மை தரும் . இல்லை எனில் இவர்களது வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிடும் .


ஜோதிடன் வர்ஷன்

9443355696

1 comment:

  1. என்னுடையது ஒருவேளை மண் தத்துவமாக இருக்கும் என்று இருக்கிறேன் ... தழும்பு முகத்திலும் காலிலும் உள்ளது

    ReplyDelete