புதன், 2 மே, 2012

நீச்சம் பெரும் கிரகங்கள் ஜாதகருக்கு நன்மை செய்வதில்லையா ?



 சூரியன் :

சிம்ம இலக்கின ஜாதகருக்கு துலாம் ராசியில், சூரியன் நீசம் பெறுவது  ஜாதகருக்கு நன்மையான பலனையே வாரி வழங்கும் , 
காரணம் லக்கினத்திற்கு
சூரியன் எங்களது ஜோதிட முறையில் நலம் தரும் அமைப்பை பெறுவதே ,
துலாம் ராசியில் நீச்சம் பெரும் சூரியன் செய்யும் நன்மைகள் :

எதிர்ப்புகளை சர்வ சாதரணமாக எதிர் கொள்ளும் தன்மை , 
ஜாதகரின் செயல் 
பாடுகளில் காணப்படும் வேகம் , மனதில் உள்ள தன்னம்பிக்கை , வெற்றி பெரும் தன்மை ,
 எந்த பிரச்சனைகளையும் அறிவை கொண்டு தீர்வு 
காணுதல், மற்றவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும் தொழில் 
அமைப்புகளில் வெற்றி காணுதல் , மக்கள் செல்வாக்கு , அரசியல் ஆதாயம் ,
தனது வாழ்நாளில்  அனைவருக்கும் பயனுள்ள வாழ்க்கையை வாழும் தன்மை என நன்மையான பலனே நடை பெரும் .

சந்திரன் :

கடக இலக்கின ஜாதகருக்கு ( வளர்பிறை சந்திரன் ) விருச்சிக ராசியில் நீச்சம் 
பெரும் சந்திரனால் 100 சதவிகித நன்மையே ஏற்ப்படும், முக்கியமாக 
சந்திரனால் லக்கினத்திற்கு கிடைக்கும் யோகம் :

மனோ ஆற்றலால் அனைத்தையும் சாதிக்கு தன்மை , நல்ல கற்பனை வளம் ,
திரை துறையில் நல்ல முன்னேற்றம் , நல்ல மனம் , எல்லோறோம் 
எல்லாமும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர் , 
பரோபகாரி ,மக்களுக்கு சேவை செய்யும் உயர்ந்த உள்ளம் , சுயலாபத்தை 
முன்னிறுத்தாமல் பொது வாழ்வில் சிறப்பாக செயல்படும் யோகம் பெற்றவர்கள்,
பல புதுமையான விசயங்களை மக்களுக்கு சொல்லும் அமைப்பு என 
அனைத்திலும் சிறந்து விளங்கும் யோக அமைப்பை பெறுவார் இந்த நீச்ச 
சந்திரனால்  கடக லக்கினத்தை சேர்ந்தவர்கள் .

புதன் :

மிதுன , கன்னி இலக்கின ஜாதகுக்கு சூரியனுடன் சேர்ந்த புதனாக வந்து 
(சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்த புதன் ) மீனத்தில் நீச்சம் பெற்று 
அமர்ந்தால் புதன்  வழங்கும் யோகம் :

மிக சிறந்த நிர்வாக திறமை கொண்டவர்கள் , மற்றும்  மக்களின் செல்வாக்கள் 
 உயர்ந்த நிலையை பெரும் யோக நிலை, மனதில் நினைக்கும்  அனைத்து 
காரியங்களையும் நடத்தி காட்டும் திறன் , ஜீவன நிலையில் மிக சிறந்த 
இடத்தை பெரும் தன்மை , இவர்கள்  செய்யும் காரியங்களில் அனைத்தும் 
மக்களுக்கு நீண்ட காலம் நல்ல பலன்களை தந்து கொண்டு இருக்கும் தன்மை,
என்று மிகவும் சிறப்பான யோகங்கலையே தரும் .

சுக்கிரன் :

ரிஷபம் , துலாம்  இலக்கின ஜாதகுக்கு சுக்கிரன் நீச்சம் பெற்று கன்னி ராசியில் 
அமரரும் பொழுது ரிஷப லக்கினத்திற்கு மட்டும் 100 சதவிகித நன்மையை 
செய்வார் அதன் பலன் :

 பூவுலக வாழ்க்கையில் ஜாதகர் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் 
யோகம் , நல்ல வண்டி வாகனம் , மிக சிறந்த வசதி வாய்ப்புகள் , உலகத்தில் 
கிடைக்கும் புதுமையான பொருட்களையும் , விஷயங்களையும் 
அனுபவிக்கும் யோகம் , உயர்ந்த அமைப்பில் உள்ளவர்களுடன் நட்பு ,
மனதில் நினைப்பவைகளை செயல் வடிவமாக காணும் தன்மை , 
வெளிநாடுகளில் பொழுது போக்கு , மற்றும் விடுமுறையை அனுபவிக்கும் ,
யோகம் , புதுமையான பொருட்களை அனைத்தையும் நுகரும் யோகம் ,
தனது குல தெய்வத்தின் பரிபூரண அருளாசி ஜாதகருக்கு எப்பொழுதும் 
கிடைக்கும் யோகம் , தனது குழந்தைகளால் பெருமை , புத்திர சந்தானம் ,
தங்க நகை சேமிப்பு ,முதலீடுகளில் அதிக லாபம் என ஜாதகருக்கு மிகுந்த 
நன்மையான பலன்களையே தந்து கொண்டு இருப்பார் இந்த ரிஷப இலக்கின 
அமைப்பிற்கு நீச்ச சுக்கிரன் .

செவ்வாய் :

மேஷம் , விருச்சிகம் லக்கினமாக கொண்டவர்களுக்கு கடக ராசியில் செவ்வாய் நீச்சம் பெற்று அமரும்பொழுது மேஷ லக்கினத்திற்கு மட்டும் 100 சதவிகித  நன்மையை செய்வார்  அதன் பலன்கள் :

அரசு துறையில் பணியாற்றும் வாய்ப்பு , வங்கியில் உயர்ந்த பதவிகளில் 
பணியாற்றும் யோகம் , நல்ல அரசியல் வாதி , சிறந்த ஆன்மீக வாதி , 
மத தலைவர்கள் , சிறந்த நடிகர்கள் என அனைத்து துறையிலும் சிறந்து 
விளங்கும் அமைப்பு , சிறந்த வாகன ஒட்டி , விமான ஒட்டி , கப்பல் ஒட்டி  என்று சிறந்து விளங்கவும் , 
நல்ல விளையாட்டு வீரர்களாக வலம் வரவும் 
இந்த நீச்ச செவ்வாய் அருள் நிச்சயம் உண்டு .

குரு :

தனுசு , மீனம் லக்கினமாக கொண்டவர்களுக்கு மகரத்தில் 
நீச்சம் பெரும் குரு பகவான், மீன லக்கினத்திற்கு மட்டும் யோகங்களை 
வாரி வழங்குவார் அதன் பலன் :

நிறைய விவசாய நிலங்களை கொண்ட அமைப்பு , விவசாயம் செய்வதால் 
வரும் செல்வ வளம், ரியல் எஸ்டேட் தொழிலில் நிரந்த லாபம் , விவசாய 
உபகரணங்கள் வாங்கி வியாபாரம் செய்வதால் லாபம் , சிமென்ட் , 
ஜல்லி , மணல் எனும் கட்டுமான பொருட்களால் வரும் லாபம் , ஆசிரியர் பணியில்
சிறந்து விளங்குபவர்கள் , கல்வி நிறுவனம் நடத்துவதால் வரும் செல்வ 
வளம், ஜோதிட துறையில் சிறந்து விளங்கும் அமைப்பு , அதனால் வரும் 
செல்வ வளம், வண்டி வாகன யோகம் என இந்த நீச்ச குரு பகவான் மீன 
லக்கினத்திற்கு யோக வாழ்க்கையை மட்டுமே தருவார் .

சனி :

மகரம் , கும்பம் லக்கினமாக அமைந்தவர்களுக்கு சனி பகவான் மேஷத்தில் 
நீச்சம் பெற்று அமர்ந்தால்,  மகரம் , கும்பம் என இரண்டு லக்கினத்திற்கும் 
100 சதவிகித நன்மையை மட்டுமே செய்வார் அதன் பலன் :

மிகசிறந்த யோகங்களை எல்லாம் வாரி வழங்கும் தன்மை இந்த நீச்ச சனி 
பகவானால் மகரம் , கும்பம் லக்கினத்தார் அனுபவிக்கும் தன்மை ஏற்ப்படும் ,
விரைவான முன்னேற்றம் , தொழில் ரீதியான வெற்றிகள் , அதிக லாபம் , 
அதிக பண வரவு , நிறைய கிளை தொழில்கள் 
செய்வதின் மூலம் யோகம் ,
பெரிய நிறுவனத்துடன் தொடர்பு அதனால் வரும் வருமானம் , சிறந்த 
பணியாளர்கள் அமையும் யோகம் . வெளிநாடுகளில் இருந்து வரும் அந்நிய 
செலவாணி , வெளிநாடுகளில் செய்யும் தொழிலால் வரும்  
அதிக லாபம் , ஏற்றுமதி , இறக்குமதி தொழிலால் வரும் அதிக லாபம் என இந்த நீசம் பெற்ற 
சனி பகவானால், கரம் , கும்பம் என இரண்டு லக்கினத்திற்கும் 100 சதவிகித 
நன்மையை மட்டுமே அணிபவிப்பார்கள் .

ஜோதிடன் வர்ஷன் 
9443355696            

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக