Thursday, May 17, 2012

கர்ம வினை பதிவுக்கு சரியான பரிகாரம் !
ஐயா வணக்கம்,

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.திடீரெண்று தொழில் நெருக்கடியில்
உள்ளதாலும் கையில் பணம் இல்லாததாலும் என்ன பேசுகிறோம் என்பது கூட
நிதானமில்லை.மிகுந்த விரக்தியில் உள்ளேன்.பரிகாரம் தேவையில்லை என்பது என்
நோக்கம் அல்ல.ஏதோ ஒரு ஜோதிடர் எழுதிய கட்டுரையை படித்தேன்.அவர்தான்
பரிகாரங்கள் பலன்தராது.விதியை அனுபவித்தே தீரவேண்டும் என்று
கூறியிருந்தார்.அதனால்தான் நானும் அப்படி கூறினேன்.
தயவுசெய்து என் தொழில் நெறுக்கடி எப்போது சரியாகும்?
எனக்கு போதுமான பண வரவு(குடும்ப நடத்தவாவது) எப்போது கிடைக்கும்?
வர இருக்கும் கேது தசை,புத்தி  என் பிரச்சனையை சரி செய்யுமா?அல்லது என்
பிரச்சனையை அதிகமாக்குமா?
கடுமையான மன உளைச்சலில் உள்ளேன்.பிறந்ததிலிருந்து இப்படி ஒரு
நெருக்கடியான நிலையை நான் சந்தித்ததில்லை.
அஷ்டம சனி,3மிட குரு என்னை பிச்சை எடுக்கவைத்துவிடுவார்களா?பிச்சை
எடுக்கும் நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக செத்துவிடுவேன்.

17.4.1985  11.30 P.M, NEYVELI அருகில் சிறு கிராமம்.தற்போது சென்னையில் உள்ளேன்.

வேண்டுமானால் சொந்த ஊருக்கே சென்றுவிடலாமா?அல்லது மேலுலகம் சென்றுவிடலாமா?


தம்பி பரிகாரம் என்பது தானும் , தனது முன்னோர்களும் தெரிந்தும் , தெரியாமலும் செய்த பாவ கர்மாவை இந்த மானுட பிறவியில் , அறிவு வழியில் பெரியோரின் வார்த்தைகளை மதித்து நடப்பது  , தமது  செயல் மூலம் மற்றவர்க்கு நன்மை  , தம்மை நாடி வந்து இரப்போர்க்கு  தர்மம் , எளியவர்க்கு  உதவி ,  ஐந்து ஒழுக்க பண்பாடு கடை பிடித்து ஜாதகர் மட்டும்  கர்மாவை கழிப்பதே பரிகாரம் என்று கூற முடியும் .

 ஜோதிடர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு  அதிர்ஷ்ட ரத்தினம் அணிவதாலேயோ , பெயர் மற்றம் செய்வதாலோ, வேறு ஏதாவது பரிகாரம் செய்வதாலோ, ஜாதகர்  கர்மாவை கழிக்க இயலாது , ரத்தினம் அணிவதும் , பெயர் மாற்றம் செய்வதும் தனது ஜாதகத்தில் உள்ள யோக நிலை, எந்த விதத்திலாவது பாதிக்கப்படும் பொழுது அதை மீட்டெடுக்க உதவும் ஒரு வழிமுறை ஆகும் .

மேலும் தனது முன்னோர்களும் தானும் முன் பிறவியில் செய்த கர்ம வினை பதிவினை, இந்த பிறவியில்  தான் செய்யும் நல்வினைகளால்,  கர்மவினை பதிவை களித்துகொள்ள நிச்சயம் ஒவ்வொரு மனிதருக்கும் இறையருள் வழிகாட்டுகிறது, எனவே நீங்கள் 100 சதவிகிதம்  பயப்பட தேவையில்லை என்பது எமது அறிவுரை.

கர்ம வினை பதிவை கழிப்பதற்கு ஜாதகரே பரிகாரம் செய்வது எப்படி ?

ஒருவருடை ஜாதகத்தில் பாதிக்க படும் பாவகம் எது என்று சரியாக ஜோதிட கணிதம் மூலம் தெளிவாக அறிந்துகொண்டு , அந்த பாவக அமைப்பை சார்ந்தவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்து  கர்மாவை கழித்துகொள்ள அவர்களாலே நிச்சயம் முடியும்.

உதாரணமாக :
 
சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு , லக்கினம்  பாதிக்க படுமாயின் ஜாதகர் , சுய கட்டுப்பாடு , தன்னம்பிக்கை , மற்றவர்க்கு எவ்வித பிரதி பலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்யும் குணம் , போதுமென்ற மனம் , சிறந்த ஆன்மிக வாதியிடம் தீட்சை எடுத்துகொண்டு, தியானம் செய்து மனைதை ஒருநிலை படுத்துதல் , அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து சூரியனை
வழிபடுவது ,

வருடம் தவறாமல் குல தெய்வ கோவிலுக்கு சென்று , முன்பின் தெரியாத ஒரு 20 பது நபருக்கு , தன்னால் இயன்ற அளவு அண்ண தானம் செய்வது , ஆடி , புரட்டாசி , தை அமாவாசைகளில் எதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து , தமது முன்னோர்க்கு தர்ப்பணம் தாமே செய்வது ஆகியன இலக்கின வழி கர்ம வினை பதிவை தீர்த்துக்கொள்ள நிச்சயம் முடியும் .

மற்றொரு உதாரணம் :

சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு , 2 ம் வீடு எனும் குடும்ப ஸ்தானம் 100 சதவிகிதம் பாதிக்க படுமாயின் , ஜாதகர் தான் பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் செலுத்தி மற்றவரிடம் பேச வேண்டும் , மேலும் இடம், பொருள், ஏவல் தெரிந்து பேசுவது நலம் , முடிந்த வரை  நிறை கேட்பதும் , அதிகம் பேசாமலும் இருப்பது நல்லது . தனது வாழ்க்கை துணையிடம் எவ்வித கோபமும் , சச்சரவும் வைத்துகொள்வது ஆகவே ஆகாது , அவர்கள் உங்கள் மனதை பாதிக்கும்படி செய்தாலும் அந்த விஷயங்களை ஜாதகர் மனம் உவந்து ஏற்றுகொள்வது 2 ம் பாவக வழி கர்மாவை கழித்துகொள்ள நிச்சயம் முடியும் .

ஆக சுய ஜாதக ரீதியாக ஜாதகருக்கு எந்த பாவக அமைப்பு பாதிக்க பட்டாலோ , அல்லது கெட்டு விட்டாலோ , ஜாதகர் அதன் வழியில் கர்மாவை கழித்துகொள்ள இறைவன் மானிதர்கள் அனைவருக்கும் வாய்ப்பை வழங்கி இருக்கிறார் , இதை உணராமல் , எந்த கோவிலுக்கு சென்றாலும் , என்ன பரிகாரம் செய்தாலும் எவ்வித மாற்றமும் நிகழ்ந்துவிட போவதில்லை , அப்படியே நாம் கோவிலுக்கு சென்றாலும் இறைவன் நமக்கு இதையே சிலை வடிவிலும் , வழிபாடு முறை அமைப்பிலும் மறைமுகமாக நமக்கு உணர்த்துகிறார் , இதை நாம் தான் புரிந்து கொள்ள அறிவுக்கு விழிப்புணர்வு இல்லை .

 

இனி தங்களின் ஜாதக நிலை பற்றி காண்போம் :


 


நடக்கும் புதன் திசை , குரு புத்தி ( 02 /11 /2010 முதல் 07 /02 /2013 வரை ) 2 ,5 , 11 , வீடுகள் 8 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை நடத்துகிறது .

இந்த 8 ம் வீடு உனக்கு தற்பொழுது வரை எவ்வித நன்மையையும் தரவில்லை என்பது உறுதி , மேலும் 2 வீடு 100 சதவிகிதம் பாதிக்க படுவதால் , வருமான தடையும் 5 ம் வீடு100 சதவிகிதம் பாதிக்க படுவதால் பூர்வீகத்தை விட்டு பரதேச ஜீவனத்தையும், 11 ம் வீடு100 சதவிகிதம் பாதிக்க படுவது அதிர்ஷ்டமில்லா நிலையையும் தற்பொழுது நடத்தி கொண்டு இருக்கிறது கோட்சார கிரக நிலையம் உனக்கு இன்னும் இரண்டு நாட்க்களுக்கு மட்டும்  நன்றாக இல்லை, இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு தங்களுக்கு படி படியான முன்னேற்றத்தை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை ஆகவே இனிவரும் காலம் பல சிரமங்களில் இருந்து விடுபட்டு இறையருளின் கருணையினால் நல்ல முன்னேற்றம் பெறுவாய் , இது உறுதி .

மேலும் 8 ம் வீடு கடகமாக வந்து கால புருஷ தத்துவத்திற்கு நான்காம் வீடாக வருவதால், ஜாதகர் மாற்று திறனாளிகளுக்கும் , பசுவிற்கும் ஆகாரம் திங்கள் கிழமைகளில் தொடர்ந்து 9 வாரங்கள் செய்து வரவும் நிச்சயம் வாழ்க்கை சந்தோஷமாக அமையும். கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள் , யாரையும் பகைத்துகொள்ள வேண்டாம் , சேமிப்பை கற்றுக்கொள்ளுங்கள் .

ஐந்தாம் வீடு 100 சதவிகிதம் பாதிப்படைந்து உள்ள காரணத்தினால் சொந்த ஊர்பக்கம் தலை வைத்துக்கூட படுத்து விடாதே . இனி வரும் காலங்களில் சென்னையிலேயே அதிக வருமானமும் , வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் கிடைக்க பெறுவாய் .


தங்களின் ஜாதக அமைப்பில் 6 ம் வீடு மற்றும் 8 ம் வீடு மட்டுமே பாதிக்க பட்டுள்ளது  இந்த பாவக வழியில் ஜாதகர் அனைவருக்கும் நன்மை செய்து கர்மவினை பதிவை கழித்துகொள்ள ஜோதிட தீபம் அறிவுறுத்துகிறது .


வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்
9443355696

 

No comments:

Post a Comment