Friday, May 11, 2012

ஜோதிட ஆலோசனை !

 கேள்வி  : 

அய்யா வணக்கம் தங்களின் மேலான ஜோதிட ஆலோசனை தேவை,  எனது ஜாதக நகலை அனுப்பி வைத்து உள்ளேன் , எனக்கு அடுத்ததாக கேது திசை வர இருக்கிறது , எனது ஜாதகத்தை இதற்க்கு முன் பார்த்த ஜோதிடர்கள் அனைவரும் கேது திசை கெடுதல் தான் செய்யும் , நன்மை செய்ய வாய்ப்பு இல்லை என்று பலன் சொல்லியுள்ளனர் , மேலும் பல ஜோதிட புத்தகங்களில் கேது திசை தீமையான பலன்களை வழங்கும் என்றே குறிப்பிட பட்டுள்ளது தயவு செய்து எனக்கு வழிகாட்டுங்கள் .
திருச்செங்கோடு
செங்கோட்டுவேல்
08/05/2012

 பதில் :

ஆமாம் தம்பி உனது ஜாதகத்தை பார்க்கும் பொழுது கேது பகவான் உன்னை சும்மா  விட மாட்டார் போல தெரிகிறது , எனவே அடுத்து வரும் கேது திசை முழுவதும், அண்ண ஆகாரம் இன்றி திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் மலை மீது உள்ள வரடிகல் மீது அமர்ந்து கேது பகவனை வழிபட வேண்டும் , யார் வந்து அழைத்தாலும் கேது திசை முழுவதும் அந்த கல்லின் மீதே இருக்க வேண்டும் சரியா !?
 
என்ன தம்பி அப்படியே ப்ரீஸ் ஆகிவிட்டாயா ?

உனது ஜாதக அமைப்பை கிழே கொடுத்துள்ளோம் சந்தேகம் இருப்பின் அலை பேசியில் தொடர்பு கொள் : 


சரி உனது ஜாதகரீதியாக அடுத்து நடக்கும் கேது திசை என்ன செய்யும் என்று உண்மையான பலனை பார்ப்போம் :

அடுத்து நடக்கும் கேது திசை 11 ம் வீடு, 11 ம் வீட்டு பலனை மட்டுமே உனக்கு நடத்துகிறது , எனவே சிறு சிரமங்கள் கூட உனக்கு ஏற்ப்பட வாய்ப்பு இல்லை , மேலும் 11 ம் வீடு கால புருஷ தத்துவத்திற்கு நான்காம் வீடாகவும் , சர நீர் ராசியாகவும் வருகிறது இது ஜாதகத்தில் மிக சிறந்த அமைப்பு .
 இந்த காலங்களில் உயர் கல்வி, சொத்து சுக சேர்க்கை , மண் மனை , வண்டி வாகனம் யோகம் , சரியான வயதில் திருமண அமைப்பு , திருமண வாழ்க்கையில் அதிர்ஷ்ட அமைப்பு , பரந்த மனோ பாவம் நல்லவர் சேர்க்கை , விவசாய தொழில் நல்ல முன்னேற்றம் , சுய தொழில் செய்வதால் அதிக லாபம் , புத்திர சந்தானம் நண்பர்கள் உதவி என சகல விதங்களிலும் நன்மையையே கேது திசை வழங்க காத்து கொண்டு இருக்கிறது .
 நீ எங்கு சென்றாலும் இந்த பலன் தவறாமல் நடக்கும் எனவே கேது திசை பற்றி கேட்டதையும் , படித்ததையும் விட்டு விட்டு , தற்பொழுது படித்து கொண்டு இருக்கும் பட்ட படிப்பில் கவனம் செலுத்து , உனக்கு கேது திசை 100 சதவிகித நன்மையை மட்டுமே செய்யும் பயம் கொள்ள தேவையில்லை.

கேது திசை அனைவருக்கும் கெடுதல் செய்யும் என்று சொல்வதெல்லாம் உண்மையில்லை , மேலும் பொது பலன் எல்லாம் சுய ஜாதகத்தை கட்டுபடுத்தாது , சுய ஜாதகத்தில் நடக்கும் எந்த திசை ஆனாலும் லக்கினத்திற்கும் , அதன் வீட்டிற்கும் நன்மை தரும் அமைப்பில் அமர்ந்து , சிறப்பாக உள்ள பாவக பலனை நடத்தினால் ராகு  கேது , செவ்வாய் , சனி , சூரியன் திசைகளும் யோக பலனை நிச்சயம் வழங்கும் .


சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கும் , அதன் வீட்டிற்கும் தீமை தரும் அமைப்பில் அமர்ந்து பாதிப்படைந்த பாவக பலனை நடத்தினால் , குரு , சுக்கிரன் , சந்திரன், புதன் திசைகள் கூட ஜாதகரை தப்பி எடுத்து காய வைத்து விடும் என்பதே உண்மை ,


இப்படி பொதுவான ஜோதிட கருத்துகள் சுய ஜாதகத்தை நன்றாக கணிதம் செய்து பலன் காணாத முறையினாலேயே தவறுகள் ஏற்ப்படுகிறது , எனவே சிறந்த ஜோதிட ஆலோசனை பெற வேண்டுமெனில் உங்களின் குல தெய்வத்தை நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள், அந்த தெய்வத்தின் அருள் உங்களுக்கு நல்ல ஜோதிடனையும் , சரியான ஜாதக பலனையும் தெரிவித்து அருள் புரியும் .

 
வாழ்க  வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696 

2 comments:

 1. //பதில் :

  ஆமாம் தம்பி உனது ஜாதகத்தை பார்க்கும் பொழுது கேது பகவான் உன்னை சும்மா விட மாட்டார் போல தெரிகிறது , எனவே அடுத்து வரும் கேது திசை முழுவதும், அண்ண ஆகாரம் இன்றி திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் மலை மீது உள்ள வரடிகல் மீது அமர்ந்து கேது பகவனை வழிபட வேண்டும் , யார் வந்து அழைத்தாலும் கேது திசை முழுவதும் அந்த கல்லின் மீதே இருக்க வேண்டும் சரியா !?

  என்ன தம்பி அப்படியே ப்ரீஸ் ஆகிவிட்டாயா ?//


  நல்ல பதில் ஹ ஹ ஹ

  பிரீஸ் ஆகம என்ன பண்ணுவாரு ... தம்பி கேது பகவான பாத்து பயந்தாரா இல்ல கேது பத்தி சொன்ன சோதிடர பாத்து பயந்தாரனு தெரியல

  ஆனா நல்ல பரிகாரம்
  //கேது பகவான் உன்னை சும்மா விட மாட்டார் போல தெரிகிறது//

  கண்டிப்பா கேது அவர விடமாட்டார் ..

  //யார் வந்து அழைத்தாலும் கேது திசை முழுவதும் அந்த கல்லின் மீதே இருக்க வேண்டும் சரியா !?//

  ஹ ஹ ஹ அப்படியே கல்வெட்டில் கேதுவை பத்தி பயபடுதுன ஜோதிடரின் பெயரை எழுதி வைத்து விடு தம்பி ...
  வருங்கால சந்ததியினர் பார்த்து அந்தமாதிரி ஜோதிடரிடம் செல்லாமல் இருக்கலாம் ..உனக்கும் புண்ணியமாக போகும்

  ReplyDelete
 2. //இப்படி பொதுவான ஜோதிட கருத்துகள் சுய ஜாதகத்தை நன்றாக கணிதம் செய்து பலன் காணாத முறையினாலேயே தவறுகள் ஏற்ப்படுகிறது , எனவே சிறந்த ஜோதிட ஆலோசனை பெற வேண்டுமெனில் உங்களின் குல தெய்வத்தை நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள், அந்த தெய்வத்தின் அருள் உங்களுக்கு நல்ல ஜோதிடனையும் , சரியான ஜாதக பலனையும் தெரிவித்து அருள் புரியும் . //

  குல தெய்வம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது ஒவ்வரு பதிவில் நீங்கள் வலியுறுத்துவது அருமை.. நம் மக்கள் பல ஜோதிட புத்தகங்களில் உள்ள பொது பலனை படித்து குழப்பி கொள்கின்றனர்.. என்ன செய்வது??? ...

  ReplyDelete