Monday, May 7, 2012

ஜோதிட ஆலோசனை !



வணக்கம் திருமதி விஜி அவர்களுக்கு

இறை நிலை உங்களுக்கு அனைத்து நலன்களும் வழங்கட்டும்


தங்களின் ஜாதக அமைப்பில் நடக்கும் சனி திசை அவ்வளவு நன்மை தருவதாக காணப்படவில்லை , மேலும்
சனி திசை 4 , மற்றும் 10 ஆகிய வீடுகளின் பலனை 12 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று நடத்துகிறது,

 12 ம் வீடு காலபுருஷ தத்துவத்திற்கு வாக்கு , தனம் , குடும்பம் என்ற அமைப்பிலும் , சுயலக்கினத்திர்க்கு ஸ்திர , மண் தத்துவமாகவும் வருவதால் வருவாய் அனைத்தும் விரையம் என்ற நிலைக்கும் , தனது வாக்கின் மூலம் சில பிரச்சனைகளை வேலை செய்யும் இடங்களில் சந்திக்க வேண்டிவரும் , உடல் நிலையில் கவனம் செலுத்த வில்லை எனில் மருத்துவ செலவினங்களை தவிர்க்க  இயலாது .

மேலும் வருவாயினை தடை செய்யும் அமைப்பையும் தரும் , கோட்சார ரீதியாக ராகு பகவான் சில நன்மைகளையும் , கேது பகவான் 100 சதவிகிதம் கெடுதலான பலனையும் 12 ம் வீட்டுக்கு செய்வதால் 
கோட்சார ரீதியாகவும்  கடந்த 14  மாதமாக ஜீவன வழியில் அதிக நன்மையை பெற உங்களுக்கு வாய்ப்பு இல்லாத நிலையையே காட்டுகிறது .

சில மாதங்களில் ராகு கேது பெயர்ச்சி ஏற்ப்பட இருக்கிறது இந்த காலங்களில் ,வேலை வாய்ப்பில் நல்ல முன்னேற்றம் , நல்ல வருமானம் அமைய வாய்ப்பு அதிகம் உள்ளது, எனவே ராகு கேது பெயர்ச்சி வரை காத்திருப்பதே சால சிறந்தது .

தங்களின் ஜாதக அமைப்பில் லக்கினமும் களத்திர பாவமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம், எனவே தங்கள் எந்த ஒரு காரியத்தையும் பலமுறை யோசனை செய்து , சிறந்த விஷயங்களை  மட்டும் தேர்ந்தெடுத்து வாழ்க்கையை நடத்துவது நலம் தரும் .

தங்களின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பதால் , வெளிநாடுகளில் வசிப்பதோ அல்லது வேலை விசயமாக அங்கு இருப்பதோ 100 சதவிகித வெற்றியை தர வாய்ப்பு சிறிதும் இல்லை .

சிறந்த ஆன்மிக பெரியோர்களிடம் ஆசியும் , தீட்சையும் , பிராமண தர்மமும் முறையாக  செய்வது தங்களின் ஜாதகத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி, செய்து யோக பலன்களை நிச்சயம் வழங்கும் .

ஜோதிட ஆலோசனை பெற நேரில் வருவது சகல நலன்களையும் தரும், முடியவில்லை எனில் அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment