செவ்வாய், 29 மே, 2012

நாகதோஷம்,சர்பதோஷம் பற்றிய உண்மை விளக்கம் ! பகுதி 3

 

ராகு கேது எனும் இரு கிரகங்களும் லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12வது இடங்களில், இருந்தாலே அவை பாதிப்பை மட்டும் செய்யும் என்று கணிப்பது முற்றிலும் தவறு. ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது எனும் இரு கிரகங்கள் முறையே ஏதாவது ஒன்று லக்கினத்திற்கு 2,4,5,7,8,12 ம் வீடுகளில்  அமர்ந்தால் நன்மை செய்யுமா  தீமை செய்யுமா என்பதை பற்றி பார்ப்போம்.



துலா லக்கினத்திற்கு


2 ம் வீடு விருச்சகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் திடீர் என வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பை பெறுவார் , மேலும் குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும், தனது இல்லத்தரசி மூலம் சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் திடீர் என வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெரும் நிலை ஜாதகருக்கு கிடைக்கும், ஜாதகரின் மனம் எப்பொழுதும் சந்தோசம் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்துவார் , இல்லத்தரசியின் சொல்படி கேட்டு நடந்தால் ஜாதகர் விரைவில் வாழ்க்கையில் வெற்றி பெறுவார் . 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தனம் , குடும்பம் , வாக்கு என்ற அமைப்பில் .


4 ம் வீடு மகரத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் தனது ஜீவன வழியில் இருந்து அனைத்து வசதி வாய்ப்புகளையும் அடைவார் , தன அயராத உழைப்பால் உலகில் உள்ள அனைத்து சுக போகங்களையும் அனுபவிக்கும் தன்மை ஜாதகருக்கு கிடைக்கும் , நல்ல வசதியான கலை நயம் மிக்க சொகுசு வீடு , உயர்ந்த சொகுசு கார் , சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் நட்பு , அரசியலில் வெற்றி பெரும் தன்மை , நீண்ட காலமாக பரம்பரை பரம்பரையாக பல தொழில்களை செய்யும் யோகம் , வீடு , நிலம் , வண்டி வாகனம் மூலம் அதிக லாபம் பெரும் வாய்ப்பு என 100 சதவிகித நன்மையான பலனையே தரும்.

5 ம் வீடு கும்பத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவிக்க இயலாது , மீறி இருப்பாரே ஆயின் ஜாதகருக்கு எந்தவித முன்னேற்றமும் இருக்காது, மேலும் புத்திர சந்தான பாக்கியம் கிடைப்பது அரிது , ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் வர மாட்டார்கள் , மன நிம்மதி கிடைக்காது , நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைக்கவே கிடைக்காது , எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் தோல்வியிலே முடியும், இந்த அமைப்பை பெற்றவர்கள் தனது பூர்வீகம் எதுவோ அந்த இடத்தை விட்டு வெகு தொலைவில் சென்றுவிடுவது நல்லது  100 சதவிகித தீமையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம், பரம்பரை சொத்து என்ற அமைப்பில்.

7 ம் வீடு மேஷத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் பரிபூரண அதிர்ஷ்டம் பெற்றவர் , கூட்டு தொழிலால் மிகப்பெரிய வெற்றிகளை ஜாதகருக்கு வாரி வழங்கி விடும் , மனைவி வழி அதிக சொத்துகள் நிறைய கிடைக்கும் வாய்ப்பு ஜாதகருக்கு உண்டு , கூட்டு தொழில் செய்வதால் ஜாதகர் அதிக லாபம் கிடைக்கும். முக்கியமாக தொழினுட்பம் , மருத்துவம் , 64 கலைகள், போன்ற துறைகளில் மிகசிறந்து விளங்கும் ஆற்றல் ஜாதகருக்கு இயற்கையாகவே அமையும். களத்திர வழியிலும் , பொதுமக்கள் , நண்பர்கள் கூட்டு என்ற அமைப்பிலும், ஜாதகருக்கு இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும்.

8 ம் வீடு ரிஷபத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு வரும் வருவாய் அனைத்தையும் திடீர் என இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும் அல்லது உடல் நிலை பாதிப்பை தரும் , ஜாதகர் முக்கியமாக பண விஷயத்திலும் , வாக்கு , வார்த்தை , பேச்சு ஆகிய அமைப்புகளில் கட்டுப்பாடுகளை கவனமாக கடைபிடிக்க வேண்டும், இல்லை எனில் ஜாதகர் படாத பாடு பட வேண்டி வரும் , மன தைரியம்  ஜாதகருக்கு அதிகம் தேவை தன்னம்பிக்கை அதிகம் தேவை இல்லை எனில் ஜாதகர் பாடு திண்டாட்டம்தான். இது 100 சதவிகித தீமையான பலனையே தரும்.

12 ம் வீடு கன்னியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் முதலீடுகளால் லாபம் அற்ற நிலை , எதிரிகள் தொந்தரவு , நோய் நொடி , கடன் பெறுவதாலும் , கடன் கொடுப்பதாலும் தொல்லை மற்றவர்களுடன் பகைமை பாராட்டுவதால் ஏற்ப்படும் துன்பம், என்ற அமைப்பில் தீமையான பலனே நடக்கும்.

சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் புதன் எனில்  ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் முதலீடுகளால் லாபம், கடன் பெறுவதாலும் , கடன் கொடுப்பதாலும்அதிக நன்மை , வட்டி தொழில் நல்ல முன்னேற்றம் , எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக ஜாதகர் விளங்குவார் , எடுக்கும் முயற்ச்சிகளில் எல்லாம் வெற்றி என்ற நிலையே ஜாதகருக்கு தரும்.



விருச்சக லக்கினத்திற்கு


2 ம் வீடு தனுசு ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு நல்ல குடும்பம் அமைவதில்லை , இதனால் சமுதாயத்தில் ஜாதகருக்கு நல்ல பெயர் கிடைப்பதில்லை, மேலும் வரும் வருவாய் அனைத்தையும் மற்றவர்களுக்கே செலவு செய்யும் நிலைக்கு ஆளாக்கும் , மேலும் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும், ஜாதகரின் நடவடிக்கையும் பேச்சும் நன்றாக அமைவதில்லை , தீயவர் சகவாசம் பணத்திற்காக எதையும் செய்யும் குணம் மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலை என இந்த அமைப்பு 100 சதவிகித தீமையான பலனையே தரும் .

4 ம் வீடு கும்ப ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு மிகசிறந்த அதிர்ஷ்ட வாழ்க்கை அமையும் , அதன் மூலம் சொத்து சுகம் , வீடு வண்டி வாகனம் என சகல யோகங்களையும் அனுபவிக்கும் தன்மை பெற்றவராக காணப்படுவார் , வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் அதிர்ஷ்டகரமாக  இயற்கையாக அமையும் , நல்ல வீடு நல்ல வாகனம் என்று மிகசிறந்த வாழ்க்கையை பெறுவார் , ஜாதகர் தொடும் அனைத்தும் பொன்னாகும், 4 ம் பாவக வழியில் ஜாதகர் 100 சதவிகித அதிர்ஷ்டங்கலையே பெறுவார் .

5 ம் வீடு மீன ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் பரந்த மனப்பான்மை பெற்றவராகவும் , நல்ல ஒழுக்கங்களை கடைபிடிக்கும் தன்மை கொண்டவராகவும் , மற்றவர்கள் மதிக்கும் செயல்களை உடையவராகவும் காணப்படுவார் , ஆன்மீக வாழ்க்கை 100 சதவிகித வெற்றியை தரும் , எளிமையான தோற்றம் , போதும் என்ற மனம் , மற்றவர்களை தம்மை போல் கருதும் ஆற்றல் என ஜாதகர் பல நன்மையான பலன்களையே அனுபவிக்கும் யோகத்தை பெறுவார், நல்ல குழந்தை ஜாதகருக்கு கிடைக்க பெறுவார் , தனது குழந்தைகளால் சகல யோகங்களையும் மகிழ்ச்சிகளை அடையும் தன்மை ஜாதகருக்கு உண்டு இது பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு 100 சதவிகித நன்மையை தரும் அமைப்பு .

7 ம் வீடு ரிஷப ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் களத்திர வழியில் அதிக கெடுதல்களை அனுபவிக்கு சூழ்நிலை ஏற்ப்படும், நண்பர்களாலும், கூட்டாளிகளாலும் நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்ப்படும். வருமானத்தை நல்ல முறையில் பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்ப்படும் , பொதுமக்களால் பொருள் இழப்பு ஜாதகருக்கு ஏற்ப்பட வாய்ப்பு இருப்பதால் , பொதுநல சேவைகளுக்கு செல்வதை தவிர்ப்பது நலம் தரும். களத்திரம் , கூட்டு , நட்பு , வருமானம் என்ற வகையில் இது 100 சதவிகித தீமையான பலனை  தரும் அமைப்பு .

8 ம் வீடு மிதுன ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும், ஜாதகர் முயற்ச்சி இல்லாதவராகவும் , தனம்பிக்கை அற்றவராகவும் , மற்றவரை சார்ந்து வாழும் நிலைக்கு ஜாதகர் தள்ள படுவார்.

சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் புதன் எனில்  ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் முதலீடுகளால் லாபம், எழுத்து துறையில் நல்ல முன்னேற்றம் , கலைத்துறையில் வெற்றி திடீர் என்று செல்வ சேர்க்கை , மக்கள் ஆதரவு , எவ்வித பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லும் ஆற்றல் என நன்மையான பலன்களையே தரும் அமைப்பு .

12 ம் வீடு துலாம் ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் மனைவி வழியில் 100 சதவிகிதம் கெடுதலையே அனுபவிக்கும் சூழ்நிலை ஏற்படும், மேலும் நண்பர்களாலும், கூட்டாளிகளாலும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்ப்படும் , மக்கள் செல்வாக்கு என்பதே கிடைக்காது பொது காரியங்களுக்கு செல்வதால் மன நிம்மதி இழக்கக வேண்டி வரும் , அவசரப்பட்டு எடுக்கும் அனைத்து முடிவுகளும் ஜாதகரை படாத பாடு படுத்தி எடுத்துவிடும்.




தனுசு லக்கினத்திற்கு


2 ம் வீடு மகரத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், குடும்பம் ,தொழில் அல்லது வருமானம் ஆகிய அமைப்புகளில் இருந்து சகல முன்னேற்றத்தையும் ஜாதகர் விரைவில் பெறுவார் , சுய தொழில் செய்வதால் ஜாதகர் மிகசிறந்த வெற்றிகளை பெறுவார் அதன் மூலம் நிறை வருவாயினை பெரும் யோகம் கிடைக்கும் , வட்டி தொழில் , நிதி நிறுவனம் , மக்களை முன்னிறுத்தி செய்யும் தொழில்களில் அதிக வருமானத்தை தரும் இந்த அமைப்பு 100 சதவிகிதம் நன்மையை தரும்.

4 ம் வீடு மீன  ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு வசிப்பதற்கு நல்ல வீடு கிடைக்காது, ஜாதகர் வீட்டிற்கு வந்தவுடன் மன நிம்மதி இழக்கும் சூழ்நிலை ஏற்ப்படும் , நல்ல சுக போகங்களை அனுபவிக்க இயலாது, அனைவராலும் மன நிம்மதி இழப்பு ஏற்ப்படும் , நல்ல ஆன்மீக பெரியவர்களிடம் ஆசி பெறுவது நன்மை தரும்.  இது 100 சதவிகித தீமையான பலனை  தரும் அமைப்பு .

5 ம் வீடு மேஷ ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவிக்க இயலாது , மீறி இருப்பாரே ஆயின் ஜாதகருக்கு எந்தவித முன்னேற்றமும் இருக்காது, மேலும் புத்திர சந்தான பாக்கியம் கிடைப்பது அரிது , ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் வர மாட்டார்கள் , அவசர கதியில் எடுக்கும் சில முடிவுகளால் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டி வரும் . இது 100 சதவிகித தீமையான பலனை  தரும் அமைப்பு .

7 ம் வீடு மிதுன  ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகர் களத்திர வழியில் அதிக கெடுதல்களை அனுபவிக்கு சூழ்நிலை ஏற்ப்படும், சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் புதன் எனில்  ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் களத்திரம் , கூட்டு தொழில் , நண்பர்கள் , என்ற வகையில் , பொதுமக்களின் ஆதரவு, எழுத்தாற்றல் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வு என்ற அமைப்புகளில் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்ப்படும் , அரசியல் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்ப்படும் .

8 ம் வீடு கடக ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், வளர்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் திடீர் என மனநிலை பாதிக்கும், மன நோயாலும் , மன போராட்டாத்தாலும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் தன்மை ஏற்ப்படும் , போதை பழக்கத்திற்கு ஆர்ற்படும் நிலை வரும்  மற்ற நபர்களாலும் தன்னாலும் திடீர் என பல இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் . இது தீமையை தரும் நிலை

தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் மிகசிறந்த மனோத்தத்துவ நிபுனாராக விளங்கும் தன்மை ஏற்ப்படும் , மன ஆற்றலை கொண்டு அனைத்து விஷயங்களையும் சாதிக்கும் தன்மை பெற்றவராக இருப்பார் , மனம் எனும் சக்தியினை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் இது நன்மையை தரும் நிலை .

12 ம் வீடு விருச்சக  ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர்  திடீர் என  வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றத்தை பெறுவார் , வெளிநாடுகளில் இருந்து அதிக வருமானத்தை பெரும் யோகம் பெற்றவர் , தனது மனோ சக்தியால் அனைத்தையும் பெரும் தன்மை பெற்றவர் , மனதிற்கு எட்டாத விஷயங்களை பற்றி ஆராய்ச்சி செய்து வெற்றி காண்பவர் , அரசு துறையில் இருந்து சகல சலுகைகளையும் பெரும் ஜாதக அமைப்பை கொண்டவர் , இது 100 சதவிகித  நன்மையை தரும் நிலை .

குறிப்பு :

சுய ஜாதகத்தில் நடப்பு  திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவைகள்  2,4,5,7,8,12 வீடுகளின் பலன்களை நடத்தினால் மட்டுமே, மேற்கண்ட பலன்கள் நடக்கும் இல்லை எனில் மேற்கண்ட பலன்கள் ஜாதகரை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதை கவனத்தில் கொள்க. 


மேலும் மற்ற கிரகங்களின் பார்வை ராகு கேது அமரும் வீட்டிற்கு இருந்தால் பலன்கள் வேறுபடுமா என்ற சந்தேகம் ஏற்ப்படலாம் , உண்மையில் ராகு கேது எந்த வீடுகளில் அமருகிறர்களோ அந்த வீடுகளின் பலன்களை தான் மட்டுமே முழுவதும் உரிமையுடன் எடுத்துகொண்டு, செய்ய ஆராம்பிப்பார்கள் அது நன்மையாகவும் இருக்கலாம் , தீமையாகவும் இருக்கலாம் , இதில் மற்ற கிரகங்களின் பார்வை ஒன்றும் செய்ய இயலாது , உதாரணமாக பொம்மை முதல்வர் என்ற அமைப்பில்சம் பந்தபட்ட  வீட்டுக்கு அதிபதி மற்றும் சம்பந்தபட்ட பாவகம் ஆகியன பொம்மை முதல்வர் , அங்கு அமரும் ராகு கேதுவே முழுவதும் ஆட்சி செய்யும் .

மேலும் இது 
2,4,5,7,8,12 ஆகிய வீடுகளுக்கு மட்டும் தான் பலன் பொருந்தும் என்றில்லை லக்கினம் முதல் அனைத்து பாவகங்களுக்கும் பொருந்தும் என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்வது அவசியம். உண்மையில் மாற்ற கிரகங்களை விட ராகு கேதுவுக்கே ஜாதகத்தில் பலன் நடத்துவதில் அதிக பங்கு உண்டு , ஒருவருக்கு ஏற்ப்படும் தொடர்புகளை ( நல்லவர் சேர்க்கை, தீயவர் சேர்க்கை ) நிர்ணயக்கும் தன்மை இந்த சாயா கிரகங்களுக்கு மட்டும் உண்டு என்பதை இந்த இடத்தில் குறிப்பிட
விரும்புகிறேன் . 


பலன்களை தருவதிலும் நன்மையோ தீமையோ எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை இந்த சாயா கிரகங்கள் . இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பி வையுங்கள் . நமது வலை பூவை காண்பவர்களுக்கு நிச்சயம் ராகு கேது நன்மையை தந்து கொண்டு இருக்கும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து, காரணம் நல்ல விஷயங்களை தொடர்பு படுத்துவதில் ராகு கேதுவை மீற ஆளில்லை .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக