புதன், 9 மே, 2012

ராகு கேது கிரகங்களின் இரு வித தன்மைகள் !



ஒரே லக்கினத்தில் பிறக்கும் நபர்களுக்கு ராகு கேது இரண்டு வித பலன்களை வழங்குவதை பற்றி இனி நாம் காண்போம் :

ஜாதகத்தில் நன்மை தரும் அமைப்பு

கீழ்கானும் ஜாதகர் பிறந்தது 07 /02 /1983 இரவு 09 :16 மணிக்கு நாமக்கல்லில் .




 இந்த ஜாதகத்தில் லக்கினம் கன்னியாகவும் , லக்கினத்திற்கு பாகை கணித அடிப்படையில்  ராகு கேது  3 ம் பாவகத்திலும் , 9 ம் பாவகத்திலும் 
( ராசிகட்டத்தில் 4 ம் வீட்டிலும்  , 10 ம் வீட்டிலும்  அமர்ந்து இருப்பது போல் தெரியும் ) அமர்ந்து 100 சதவிகதம் நன்மையான பலன்களை மட்டுமே வழங்கி கொண்டு இருக்கிறது.  3 ம் பாவகத்தில் அமர்ந்த கேது நல்ல தொடர்புகளையும் , எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றியையும் , நல்ல எழுத்தாற்றல் திறனையும் ஜாதகருக்கு வழங்கும் . மேலும் வீர தீர செயல்களில் தனித்திறமையும் , விளையாட்டு வீரர்களாகவும் திகழ செய்யும் .  9 ம் பாவகத்தில் அமர்ந்த ராகு ஜாதகருக்கு , பெருந்தன்மையான குணத்தையும் , எங்கு சென்றாலும் நல்ல மதிப்பு வாய்ந்த பதவிகளையும் பெற்று தரும் , மேலும் ஜாதகருக்கு பட்டம் பதவி ஆகியவை தேடிவரும் அமைப்பை தரும் .





ஜாதகத்தில் தீமை  தரும் அமைப்பு
 


கீழ்கானும் ஜாதகர் பிறந்தது 07 /02 /1983 இரவு 09 :17 மணிக்கு நாமக்கல்லில் .





இந்த ஜாதகத்தில் லக்கினம் கன்னியாகவும் , லக்கினத்திற்கு பாகை கணித அடிப்படையில்  ராகு கேது  4 ம் பாவகத்திலும் , 10 ம் பாவகத்திலும்  அமர்ந்து 100 சதவிகதம் தீமையான  பலன்களை மட்டுமே வழங்கி கொண்டு இருக்கிறது.
 

4 ம் பாவகத்தில் அமர்ந்த கேது ஜாதகருக்கு தனது தாயை இளம் வயதிலேயே பிரிந்து மற்றவர் வீட்டில் வசிக்கும் நிலைக்கு தள்ளி இருக்கிறது , நான்காம் வீடு என்றாலே சிறந்த கல்வியை தரும், ஜாதகருக்கு அடிப்படை கல்விகூட சரியாக அமையவில்லை .


  4 ம் பாவகம் நல்ல இருப்பிடத்தில் வசிக்கும் தன்மையை தரும் , ஜாதகருக்கு இந்த பாவகம் கேதுவால் பாதிக்க படுவதால் , வாசியான வீட்டில் வசிப்பதற்கு உண்டான சந்தர்ப்பமே இதுவரை ஏற்ப்படவில்லை . நல்ல குணா நலன்களை தருவதும் இந்த 4 ம் பாவகம் , இதுவும் ஜாதகருக்கு சிறப்பாக அமையவில்லை , இவரும் அதற்காக கவலை படுவதாக தெரியவில்லை . எனவே இது கேதுவால் நடக்கும் தீமை .


10 ம் பாவகத்தில் அமர்ந்த ராகு இதைவிட அதிக தீமையான பலன்களையே வழங்குவது வேதனைக்கு உரிய விஷயம் , இந்த பத்தாம் பாவகத்திர்க்கு உண்டான பலனை ஜாதகர் துளிகூட பெற இயலவில்லை , இந்த  பாவகம் தரும் தீமையான  பலன்கள்,  தனது தகப்பானாரிடம் இருந்து எந்தவிதமான நன்மையையும் ஜாதகருக்கு இதுவரை கிடைக்கவில்லை .


 ஜாதகர் எந்த ஒரு வேலைக்கு சென்றாலும் , சிலநாட்களே அங்கு இருப்பார் பிறகு தனது நண்பர்களுடன் வீணாக பொழுதை போக்குவது , சினிமா , கேளிக்கைகளில் ஈடுபடுவது , வீண் செலவுகளை செய்து கொண்டு மற்றவர்களுடன் பொழுதை கழிப்பதையே தொழிலாக செய்து வருகிறார் , ஜீவன வழியில் ஜாதகருக்கு எந்த வித சிறு நன்மையையும் இதுவரை ஜாதகர் பெறவில்லை என்பது ராகு பகவானால் நடக்கும் தீமை

ஒரே நாளில் , ஒரே லக்கினத்தில் பிறந்தாலும் ,ஒரு நிமிட இடைவேளையில் ராகு கேது இரு கிரகங்களும், தனது பலனை எப்படி நடத்துகிறது என்பதை இந்த ஜாதகத்தை வைத்து, நீங்கள் புரிந்து கொள்ள இயலும்.

சரி இந்த அமைப்பில் ராகு கேதுவால் பாதிக்க பட்டவர்கள் என்ன பரிகாரம் செய்தால் இந்த பாவக அமைப்பில் இருந்து நன்மை பெற முடியும்?

அடுத்த பதிவில் காண்போம் ........

ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து:

  1. 10 ம் பாவகத்தில் அமர்ந்த ராகு இதைவிட அதிக தீமையான பலன்களையே வழங்குவது வேதனைக்கு உரிய விஷயம் , இந்த பத்தாம் பாவகத்திர்க்கு உண்டான பலனை ஜாதகர் துளிகூட பெற இயலவில்லை , இந்த பாவகம் தரும் தீமையான பலன்கள், தனது தகப்பானாரிடம் இருந்து எந்தவிதமான நன்மையையும் ஜாதகருக்கு இதுவரை கிடைக்கவில்லை . //


    அண்ணா ,
    மேற்கூறிய ஜாதகத்தில் 6,10/10 பாவ பலனை தானே நடத்துகிறது..எனவே ஜாதகர் தொழில் வழி நன்மை தானே பெற வேண்டும்...
    அது மட்டும் அல்லாமல் ராகு கேது பாகை (68.15.09,248.15.09) இரண்டு ஜாதகத்திலும் மாற வில்லை..ஆனால் பாவாகம் மட்டும் 3,9 -4,10 ஆக எப்படி மாற்றம் பெறுகிறது?
    விளக்கம் கொடுங்களேன்....

    பதிலளிநீக்கு