லக்கினாதிபதி சூரியன் லக்கினத்தில் அமர்ந்தால் :
ஜாதகர் பாடு படு திண்டாட்டமாக அமைந்து விடும் , ஜாதகரே தனது வாழ்க்கையை கெடுத்து கொள்வார் இங்கு சூரியன் ஆட்சி பெற்று அமர்ந்தாலும் , ஜாதகருக்கு எவ்வித நன்மையையும் தர மாட்டார் , மேலும் ஜாதகர் தனது பூர்விகத்தில் வாழ முடியாத நிலை ஏற்ப்படும் , உதவி செய்ய யாரும் வர மாட்டார்கள் , மக்கள் ஆதரவும் கிடைக்காது , அவர்கள் வழயில் இருந்து ஜாதகர் 100 சதவிகிதம் தீமையான பலன்களையே அனுபவிக்க வேண்டி வரும் , ஜாதகர் சிந்தனை செய்யாமல் செய்யும் காரிங்கள் அனைத்தாலும் மனநிம்மதி இழக்க வேண்டி வரும் , தன்னம்பிக்கை குறையும் , முயற்ச்சி இன்மை , சோம்பல் ஜாதகரை முடக்கி விடும் , ஜாதகர் எந்த விதத்திலும் செயல் பட்டாலும் அதற்க்கு பல தடைகளும் , தொந்தரவுகளும் வரும் , சிறு வயது முதற்கொண்டே பாசத்திற்காக எங்கும் சூழ்நிலையும் , நல்ல இடத்தில் வளரும் சூழ்நிலையும் ஏற்ப்படாது , பல போராட்டங்களை வாழ்க்கையில் சந்திக்க வேண்டி வரும் , ஆக இந்த அமைப்பு ஜாதகருக்கு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .
லக்கினாதிபதி சூரியன் இரண்டாம் பாவகம் கன்னி ராசியில் அமர்ந்தால் :
ஜாதகரின் வாக்கில் இருந்து வரும் வார்த்தைகள் மற்றவரை அதிகம் மனம் நோக செய்யும் , போகும் இடங்களில் எல்லாம் வம்பு தும்புக்கு செல்ல நேரும் அதனால் தேவையில்லாத தொந்தரவுகளை ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும் மேலும் மன நிம்மதி என்பதை தனது வாக்கால் தொலைக்க வேண்டி வரும் , ஜாதகர் ஈட்டும் வருமானம் அனைத்தையும் மனம் போன போக்கில் செலவு செய்ய நேரும் , இதனால் குடும்பத்தில் எப்பொழுது சண்டை சச்சரவுகளை தவிர்க்க இயலாது , உறவினர்களிடமும் நல்ல பெயர் கிடைக்காது , பல இடங்களில் இருந்து துன்பங்களை அனுபவிக்க நேரும் , ஜாதகரின் தனம் குடும்பம் வாக்கு என்ற நிலையில் இருந்து லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .
லக்கினாதிபதி சூரியன் மூன்றாம் பாவகம் துலாம் ராசியில் அமர்ந்தால் :
ஜாதகரின் வாழ்க்கையில் செய்யும் முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றி பெரும் , அதன்மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவார் சூரியன் இங்கு நீச நிலையில் அமர்ந்தாலும் லக்கினத்திற்கு மிகசிறந்த நன்மைகளையே வாரி வழங்குவார் , துலாம் சர காற்று தத்துவம் என்பதால் ஜாதகர் ஒவ்வொரு விசயத்தையும் அறிவுபூர்வமாக அணுகும் தன்மை கொண்டவராக இருப்பார் , இதனால் அனைவரும் நன்மையடைவார்கள் . ஜாதகருக்கு வரும் துன்பங்கள் யாவையும் அறிவின் வழியில் தீர்வு கண்டு நன்மை பெறுவார் , ஜாதகருக்கு மக்கள் செல்வாக்கும், ஜன ரஞ்சக எழுத்தாற்றலும், மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை , பத்திரிகை உலகில் ஜாதகருக்கு நிச்சயம் மிகசிறந்த எதிர்காலம் அமையும் , அரசு துறையில் பணியாற்றும் யோகமும் கிடைக்கும் இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .
லக்கினாதிபதி சூரியன் நான்காம் பாவகம் விருச்சக ராசியில் அமர்ந்தால் :
மிக சிறந்த யோகம் லக்கினத்திற்கு ஏற்ப்படும். திடீர் அதிர்ஷ்டம் , புதையல் கிடைத்தல் , மண்ணில் கிடைக்கும் அறிய வகை பொருட்களால் நிறைய லாபம் , வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வ வளம் , புதிய கண்டுபிடிப்புகளால் ஜாதகர் திடீர் என வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் வாய்ப்பு , அறிய வகை பொருட்களை வாங்கி விற்பதால் வரும் லாபம் , உயர்கல்வியால் அமையும் தொழில் வாய்ப்புகள் அதன் வழி முன்னேற்றம் , மக்கள் தொடர்பில் ஜாதகருக்கு வரும் யோகம் , வெளிநாடுகளில் அதிர்ஷ்ட வாழ்க்கை , வெளிநாடுகளில் தொழில் முதலீடு செய்யும் யோகம் , பழைய வண்டி வாகனங்களை வாங்கி விற்பதால் வரும் அதிக லாபம் , செய்யும் தொழில் விரைவான முன்னேற்றம் , சிறப்பான குணம் மற்றவரை மதிக்கும் பெருந்தன்மை எந்த சூழ்நிலையிலும் நேர்மை மாறாத குணம் என இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .
லக்கினாதிபதி சூரியன் ஐந்தாம் பாவகம் தனுசு ராசியில் அமர்ந்தால் :
ஜாதகரை தனது பூர்வீகத்தை விட்டே ஒட்டி விடும் , உதவி செய்ய யாரும் இல்லாத சூழ்நிலைக்கு தள்ள படுவார் , குலதெய்வமும் ஜாதகருக்கு நன்மை செய்யாது , வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் , பூர்வீகத்தில் இருக்கும் வரை ஜாதகருக்கு சிறிதும் நன்மையில்லை , தனது பூர்வீக சொத்துகளை திடீர் என இழக்க வேண்டி வரும் , மன உறுதி ஜாதகருக்கு இருக்காது , மற்றவரை நம்பி நடு ஆற்றில் இறங்கியது போல தவிக்க வேண்டி வரும் , குழந்தை பாக்கியத்தில் தடை ஏற்ப்படும் , விருப்ப மனம் செய்தால் ஜாதகருக்கு பிரிவு நிச்சயம், இருதார யோகம் ஏற்ப்படும் , இல்லை எனில் மற்ற பெண்களுடன் சகவாசம் ஏற்ப்படும் அதனால் ஜாதகர் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலை ஏற்ப்படும் , அவசரபட்டு எடுக்கும் முடிவுகள் அனைத்து ஜாதகருக்கு எந்த விதத்திலும் நன்மை செய்யாது ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .
லக்கினாதிபதி சூரியன் ஆறாம் பாவகம் மகர ராசியில் அமர்ந்தால் :
ஜாதகர் மற்றவர்களிடம் சூழ்நிலை கைதியாக படாத பாடு பட வேண்டி வரும் , மனதளவில் மிகுந்த தைரியசாலியாக இருந்தாலும் ஜாதகருக்கு நடக்கும் பலன்கள் யாவும் மன உறுதியை தவிடு பொடியாக்கி விடும் ,கூண்டில் அடைக்க பெற்ற அடிபட்ட சிங்கத்தின் நிலை ஜாதகருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் , வாழ்க்கையில் சில நேரங்களில் திடீர் அதிர்ஷ்டம் வரும் ஆனால் ஜாதகர் அதை பயன்படுத்தி கொள்ள மறுப்பார் , எதிர்கள் அதிகம் இருப்பினும் அவர்களால் ஜாதகருக்கு மிக சிறந்த நன்மையே நடக்கும் , இவரை பகைத்து கொண்டவர்களின் வாழ்க்கை சர்வ நாசம் என்பதில் சந்தேகம் இல்லை , ஜாதகர் தனது எண்ண ஆற்றல்களை செழுமை படுத்தினால் நிச்சயம் இவரை போன்று யாரும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற முடியாது , அரசியலில் இந்த அமைப்பை பெற்ற ஜாதகரை ஒரு கட்சி நிற்க வைத்தால் எதிர்கட்சியை சேர்ந்தவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 50 க்கு 50 சதவிகித நன்மை தீமை பலனையே கலந்து தரும் என்பதில் சந்தேகம் இல்லை .
லக்கினாதிபதி சூரியன் ஏழாம் பாவகம் கும்ப ராசியில் அமர்ந்தால் :
ஜாதகரின் வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாக அமைந்து விடும் , நல்ல சிறப்பான கல்வி , மக்கள் செல்வாக்கு , பலதார யோகம் , மனைவி வழியில் இருந்து மிகசிறந்த நன்மைகளை பெரும் யோகம் , எங்கு சென்றாலும் அனைவராலும் விரும்பப்படும் நல்ல குணம் , பெருந்தன்மை கடமை கண்ணியம் கட்டுபாடு போன்ற உயர் குணங்கள் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் , அரசியலில் மிகசிறந்த பதவிகளை அலங்கரிக்கும் யோகம் , அதிரடியான வெற்றிகள் அதன் மூலம் வாழ்க்கையில் சகல யோகங்களையும் ஜாதகர் பெறுவார் , பெரிய மனிதர்களின் ஆதரவு , மக்கள் ஆதரவு ஜாதகரை மிக சிறந்த அரசியல் வாதியாக மாற்றி விடும் , தன்னம்பிக்கை எந்த சூழ்நிலையிலும் ஜாதகரை காப்பாற்றும் , ஆன்மீக வாதிகளின் ஆசிர்வாதமும் அருளாசியும் ஜாதகருக்கு என்றும் துணை நிற்கும் ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .
லக்கினாதிபதி சூரியன் எட்டாம் பாவகம் மீன ராசியில் அமர்ந்தால் :
ஜாதகரின் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிடும் , ஜாதகரின் மன ஆற்றல் , மன உறுதி அனைத்தும் ஒரு காலத்தில் சிதைந்து விடும் மன அழுத்த நோயினால் ஜாதகர் படாத பாடு பட வேண்டி இருக்கும் , ஜாதகரை யாரும் புரிந்துகொள்ள முன் வர மாட்டார்கள் , நாளடைவில் இதுவே ஜாதகரை அதிகம் பாதிக்கும் , இதனால் கவனக்குறைவு ஏற்ப்படும் பல விபத்துகளை சந்திக்க வேண்டி வரும் , இதனால் பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும் ஜாதகருக்கு மன அழுத்தம் அதிகமாகி விட வாய்ப்பு உண்டு , தனது வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்து அதிக இழப்புகளை ஜாதகர் சந்திக்க வேண்டி வரும் ,ஆனால் வாழ்க்கை துணை ஜாதகரை புரிதுகொள்ள சிறிதும் முன்வர மாட்டார் , இதனால் ஜாதகர் வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்கு உரிய நிலைக்கு தள்ளப்படுவார் , ஜாதகருக்கு நல்ல குணம் , உதவும் மனப்பான்மை இருந்தாலும் இதனால் மற்றவர்கள் மட்டுமே பயன் பெறுவார்கள் ஜாதகருக்கு எவ்வித நன்மையையும் இல்லை ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .
லக்கினாதிபதி சூரியன் ஒன்பதாம் பாவகம் மேஷ ராசியில் அமர்ந்தால் :
ஜாதகர் யாரிடமும் நல்ல பெயர் வாங்க முடியாது , நன்மை என்று செய்யும் காரிங்கள் அனைத்தும் ஜாதகருக்கு தீமையில் போய் முடியும் , குறிப்பாக பெண்களிடம் ஜாதகர் கவனமாக இல்லை எனில் தேவையில்லாமல் அவ பெயரை சந்திக்க வேண்டி வரும் , செய்யும் காரியங்கள் அனைத்து அவசர அவசரமாக செய்து விட்டு பின்பு புலம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும், ஜாதகருக்கு உதவிட யாரும் வர மாட்டார்கள் . இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் தன்னை விட வயதில் பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று வாழ்க்கை நடத்துவது மிகசிறந்த நன்மைகளை தரும் , அல்லது வெளியூர் , வெளிநாடு சென்று வசிப்பது நன்மையை தரும் , மேலும் ஜாதகர் அனைவரையும் அனுசரித்து செல்லும் குணத்தை கடை பிடிப்பது ஜாதகருக்கு மிக மிக அவசியம் ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .
லக்கினாதிபதி சூரியன் பத்தாம் பாவகம் ரிஷப ராசியில் அமர்ந்தால் :
ஜாதகருக்கு நல்ல வருமானத்தை தந்துவிடும் , மிகசிறந்த வியாபார அறிவை சிறு வயதிலேயே ஜாதகர் பெற்றுவிடுவார் , குறிப்பாக அடிப்படையில் வியாபாரம் செய்யும் வணிகர்கள் குடும்பத்தில் ஜாதகர் பிறந்திருக்கும் யோகம் உண்டு. அமர்ந்த இடத்திலிருந்து அனைத்து செல்வங்களையும் ஜாதகர் பெறுவார் . சிறந்த வியாபாரிகள் , நிர்வாக திறமை பெற்றவர்கள் , ஆளுமை திறன் கொண்ட அரசியல்வாதிகள் , மக்கள் நலம் போற்றும் ஆன்மீகவாதிகள் , மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் கைராசி மருத்துவர்கள் , மன நல மருத்துவர்கள் , சிறந்த ஆற்ருபடுத்துதல் திறன் கொண்டவர்கள் , மக்களுக்கு சிறப்பாக பணியாற்றும் அரசு உழியர்கள் , என சகல துறைகளிலும் சிறந்து விளங்கும் தன்மை கொண்டவர்கள் , இவர்களிடம் உள்ள சுய நலத்தில் பொது நலம் கலந்தே இருக்கும் .ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .
லக்கினாதிபதி சூரியன் பதினொன்றாம் பாவகம் மிதுன ராசியில் அமர்ந்தால் :
அதிர்ஷ்ட தேவதையின் அருட் கடாட்சம் பெற்றவர்கள் , நீண்ட நிறைவான அதிர்ஷ்டம் கொண்டவர்கள் . இவர்களுக்கு வரும் அதிர்ஷ்டங்கள் அனைத்தும் தனது அறிவை மூலதனாமாக கொண்டு பெற்றதாகவே இருக்கும் , குறிப்பாக பத்ரிக்கை உலகில் கோடி கட்டி பறக்கும் நபர்கள் பலர் இந்த அமைப்பை பெற்றவர்களே , குறிப்பாக எழுத்து மற்றும் எழுது பொருட்கள் , அச்சு துறை , விளம்பர துறை , தகவல் தொழில் நுட்ப பிரிவு , வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்கு மதி தொழில்களில் சிறப்பாக விளங்கும் யோகம் , மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களில் சிறந்து விளங்குபவர்கள் என இவர்களது பட்டியல் நீலம் அதிகம் , சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் இங்கு அமர்வது லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
லக்கினாதிபதி சூரியன் பனிரெண்டாம் பாவகம் கடக ராசியில் அமர்ந்தால் :
மன நிம்மதி என்ன விலை என்று கேட்பவர்கள் , எந்த விதத்திலாவது ஜாதகருக்கு மனக்குறை இருந்து கொண்டே இருக்கும் , சரியான காலத்தில் ஜாதகருக்கு எதுவும் அமையாது , இதனால் அதிக மன உளைச்சலுடன் வாழும் சூழ்நிலைக்கு தள்ள படுவார் , இவர்கள் எந்த வகையிலாவது குடி பழக்கத்திற்கு , தீய பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் ஜாதகார் அதிலிருந்து விடுபடுவது என்பது நிச்சயம் நடக்காது , இவர்கள் அனைவரும் நல்ல ஆன்மீக வாதிகளிடம் ஆசி பெறுவதும் , தீட்சை பெறுவது ஜாதகருக்கு தான் யார் என்ற உண்மையை புரிய வைக்கும் , அதன்வழி ஆன்மிக வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம் அமைய பெறுவார்கள் , இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் சிறுவயதில் இருந்தே அதிக கவனம் எடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும் அப்பொழுதுதான் ஜாதகரின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் , ஆக இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .
குறிப்பு :
பொதுவாக சிம்மலக்கின அமைப்பை பெற்ற ஜாதகர்களுக்கு நல்ல பாசம், அன்பு கிடைப்பதில்லை , இதனால் சிறு வயதிலேயே பாதை மாறி போய்விடும் நிலை ஜாதகருக்கு ஏற்ப்படுவதர்க்கு முக்கிய காரணம் அவர்களது பெற்றோர்களே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் , இந்த இலக்கின அமைப்பை பெற்ற குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர்கள் அதிக பாசத்தை காட்டி வளர்ப்பது ஜாதகரை சமுதாயத்தில் மிகசிறந்த மனிதனாக மாற்றி விடும் . இவர்கள் அனைவரும் மலை நீரை போன்றவர்கள் நல்ல முறையில் பயன் படுத்தினால் இவர்காளால் சமுதாயத்திற்கு மிகசிறப்பாக பயன்படுவார்கள் , இல்லை எனில் அவர்கள் வாழ்க்கை ஒரு கேள்வி குறியாக மாறியதற்கு அவர்களின் பெற்றோரே காரணம் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக