குல தெய்வ வழிபாடு :
இந்த ஆடி, புரட்டாசி, தை அமாவாசை திருநாளில் , தமது இரண்டாவது தாயான குல தெய்வத்தை ஒருவர் முறையாக அண்ண தானம் செய்து வழிபடும் பொழுது ஜாதகருக்கு , அறிவில் தெளிவு , நல்லவர் சேர்க்கை , செய்யும் தொழில் முன்னேற்றம் , வருவாய் உயர்வு , பதவி உயர்வு , மக்கள் செல்வாக்கு , பூர்விகத்தில் ஜீவிக்கும் தன்மை அதனால் ஜாதகர் அடையும் நன்மை , தமது குளம் விளங்க நல்ல வாரிசு , பெரிய மனிதர்களின் நட்பு , ஜாதக ரீதியான பாதிப்புகளில் இருந்து நன்மை பெரும் யோகம் , வண்டி வாகனங்களில் இருந்து எவ்வித பாதிப்பும் விபத்தும் ஏற்ப்படாத அமைப்பு , தனது சொந்த பந்தங்களுடன் நல்ல முறையில் உறவை வளர்த்துகொண்டு நன்மை பெரும் தன்மை .
கணவன் மனைவி அன்பு ஒற்றுமை , பிரிந்த கணவன் மனைவி சேர்ந்து தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம் பெரும் யோகம் , உடல் நிலை பாதிப்புகளில் இருந்து விரைவில் நலம் பெரும் அமைப்பு , செய்யும் தொழில் அபரிவிதமான முன்னேற்றம் , புதிய சொத்து , வண்டி வாகனம் வாங்கும் யோகம் , வருடம் முழுவதும் எவ்வித சிக்கல்களும் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை , குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் யோக அமைப்பு , மன கவலைகளில் இருந்து ஜாதகரை மீட்டு எடுத்து நலம் பெற செய்யும் யோகம் , மண் மனை வண்டி வாகன யோகம் , புதிதாக தொழில் துவங்கும் யோகம் , புதிய வீடு கட்டும் யோகம் என அனைத்து நன்மைகளையும் ஒருவருக்கு இந்த ஆடி, புரட்டாசி, தை அமாவாசை குலதெய்வ வழிபாடு செய்வதால் கிடைக்க பெறுவார் .
இதற்க்கு ஜாதகர் தனது குல தெய்வம் எதுவோ அங்கு சென்று , அவர்களது முறைப்படி வழிபாடு செய்து, அங்கு உள்ள முன் பின் அறியாத நபர்களுக்கு ஒரு 20 பேருக்காவது அண்ணதானம் செய்து வழிபடுவது மிக பெரிய நன்மைகளை நிச்சயம் தரும் . குல தெய்வத்தை அறியாதவர்கள் தனது இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்து நலம் பெறலாம் .
பித்ரு தர்ப்பணம் :
ஒருவருடைய ஜாதக அமைப்பில் பித்ரு தோஷங்களால் , வறுமை , நோய் , கடன் , விபத்து , ஏமாற்றம் , திருமண தாமதம், கணவன் மனைவி பிரிவு , விவாகரத்து ,குழந்தை இன்மை , விஷ ஜந்துக்களால் பாதிப்பு , மன நிம்மதி இழப்பு , விரக்தி, வேலை இன்மை , தொழில் முன்னேற்றம் இன்மை , மற்றவர்களால் ஏமாற்ற படுதல் , திடீர் இழப்பு ,எதிரிகள் தொந்தரவு , யோகம் அற்ற நிலை , யோக பங்கம் ஏற்படுதல் , அவ பெயர் , தீய பெண்களின் சகவாசம் இதனால் பொருள் இழப்பு , கெட்ட நண்பர்களால் துன்பம் , மற்றவருக்காக தான் பாதிக்க படுதல் என ஜாதகரை படுத்தி எடுத்து விடும் இந்த பித்ரு தோஷம் .
இதுமாதிரியான பாதிப்புகளால் அதிகம் துன்புறுவோர் அனைவரும் , முறை படி நதிக்கரை , மீன் உள்ள நீர் நிலைகளுக்கு ஆடி, புரட்டாசி, தை அமாவாசை திருநாளில் சென்று தமது சக்திக்கு ஏற்றார் போல் தாமாகவோ , அல்லது வேதம் அறிந்த பிராமணர் வழிகாட்டுதலின் பேரிலோ ஸ்வேதா தேவியின் மூலம் தர்ப்பணம் செய்வோருக்கு மேற்கண்ட பாதிப்புகளில் இருந்து 100 சதவிகிதம் நன்மை நடைபெற ஆரம்பிக்கும் சில நாட்களிலேயே இது கண்கூடாக கண்ட உண்மை . மேலும் இந்த ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வோருக்கு கடந்த 54 வருடமாக பித்ரு கடமையை செய்யாதவருக்கு பித்ருக்கள் ஏற்றுக்கொண்டு நன்மைகளையும் , யோகங்களையும் வழங்குவார்கள் இந்த பதிவை காண்பவர்கள் இதை கடை பிடித்து நலம் பெறுவார்களாக .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக