Sunday, July 29, 2012

ஜோதிட ஆலோசனை: !இது ஒரு போலி ஆன்மீகவாதியின்  ஜாதகம் :

1 ) இந்த ஜாதக அமைப்பில் லக்கினம் , தைரியம் , களத்திரம் ,கூட்டாளி , பெயரும் புகழையும் குறிக்கும் பாக்கியம் எனும் ஒன்பதாம் பாவகம் , ஆகியன விரைய ஸ்தானம் எனும் 12 ம் பாவகத்துடன் சம்பந்தம்.

2 )  மேலும் சொத்து சுகம் , நல்ல குணம் , ஆகியவை குறிக்கும் 4 ம் பாவகம் , எதிரி நோய் , கடன் சிறு இழப்பு ஆகியவைகளை குறிக்கும் 6 ம் பாவகம் , திடீர் இழப்பு , விபத்து , மற்றும் சட்டத்தின் பிடியில் சிக்கி கொள்ளும் துர்பாக்கியம் ,ஆகியவை குறிக்கும் 8 ம் பாவகம் , தகப்பானார் ,மற்றும் ஜீவனம் , தொழில் முடக்கம் ஆகியவற்றறை குறிக்கும் 10 ம் பாவகம் , மன நிம்மதி , ஆழ்ந்த உறக்கம் , நிறைய முதலீடு செய்வதால்  வரும் முன்னேற்றம் , வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வம் , ஆகியவற்றை குறிக்கும் 12 ம் பாவகம் ஆகியவை அனைத்தும் ஜாதகத்தில் 12 ம் வீடு எனும் விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம்.

என இந்த ஜாதக அமைப்பில் 1 ,3 ,4 ,6 ,7 ,8 , 9 ,10 ,12 எனும் வீடுகள் அனைத்தும் 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் , மேலும் இந்த வீடுகளின் பலன்களை ஜாதகருக்கு 24 /10 /2006 முதல் நடைமுறைக்கு வந்து இருக்கிறது ஜாதகருக்கு இந்த காலகட்டங்களில் இருந்து அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது , ஜாதகரும் எந்த வகையிலாவது தீர்வு கிடைக்காதா என்று அங்கும் இங்கும் அலைந்து  திரிந்து கொண்டு இருக்கிறார் , ஆனால் தீர்வு என்பது மட்டும் ஜாதகருக்கு இன்னும் கிடைக்க வில்லை , இதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் , உண்மையில் கடைசியில் ஜாதகருக்கு என்னதான் நடக்கும் என்பதை பார்ப்போம் .

முதலில் ஜாதகருக்கு இந்த அபரிவிதமான யோகம் எதனால் வந்தது என்று பார்ப்போம் , இதற்க்கு முதல் காரணம் ஜாதகருக்கு லக்கினம் கன்னியாக வந்து லாப ஸ்தானம்  கடகத்தில் அமர்ந்து 100 சதவிகிதம் நன்மையை செய்ததே இதற்க்கு காரணம் , மேலும் கடகம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் வீடாக அமைவது அளவில்லா சொத்து சுகத்தை குறுகிய கால அமைப்பில் வாரி வழங்கியது , இது சர ராசி என்பதால் வேகமான வளர்ச்சியை தந்தது, ஒரு சுக போகியாக வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் ஜாதகருக்கு கிடைத்தது , உலகமெல்லாம் சென்று வரும் யோகத்தை கொடுத்தது , செம்மறி ஆட்டு மந்தையை போன்ற மக்கள் ஆதரவை பெற்று தந்தது , மக்களின் மூட நம்பிக்கையை மூல தனமாக கொண்டு உலகில்  உள்ள சுக வாழ்க்கையை எல்லாம் அனுபவிக்கும் சூழ் நிலையை தந்தது , தனது மனம் போல் எல்லாமே நடை பெற கடக ராசி அமைப்பு வழி வகுத்து, பலனை அனுபவிக்க வைத்தது , மேலும் கடகம் ஒருவருக்கு நல்ல நிலையில் இருந்தால் மற்றவரை வசிகரிக்கும் பேச்சு திறன் ஏற்ப்படும்  இதுவும் ஜாதகருக்கு அமைந்தது , ஜாதாகருக்கு யோக பலன்கள் எல்லாம் நடை பெறுவதற்கு காரணம்  கடகராசி அமைப்பு மட்டுமே.

மேலும் வருமானம் , வாக்கு , செல்வ வளம் ஆகியவை குறிக்கும் 2 ம் வீடும் சர துலாம் ராசியாக அமைந்து மிகவும் நல்ல நிலையை பெற்றதால் ஜாதகருக்கு அபரிவிதமான பேச்சாற்றல் ஏற்ப்பட்டது , மக்களை பேச்சால் அடிமை நிலைக்கு ஆளாக்கி தனது கை பாவையாக வைத்திருந்ததிற்கு காரணம் இந்த துலாம் ராசி அமைப்பே காரணம் , மேலும் இந்த வீட்டு அதிபதி சுக்கிரன் சொல்லவும் வேண்டுமா என்ன ? ஆண் பெண் என அனைவரையும் ( அதாவது சுக்கிரனின் வலுமை குறைந்த ஜாதக அமைப்பை பெற்ற நபர்களை ) தன் வச படுத்த இந்த துலாம் ராசி அமைப்பு மிகவும் ஜாதகருக்கு உதவி செய்தது .

  ஒருவருடைய ஜாதக அமைப்பில் எந்த கிரகத்தின் சக்தி குறைந்து காணப்படுகிறதோ அவர்கள் அனைவரும் ,  அந்த கிரகசக்தி பரிபூர்ணமாக அமைய பெற்றவர்களின் பேச்சுக்கு , செயலுக்கு அடிமை ஆவது ஒன்றும் ஆச்சர்யமான விஷயம் இல்லை , அப்படி பார்க்கும் பொழுது ஜாதகருக்கு சுக்கிரன் மற்றும் சந்திரன் சனி ஆகிய கிரகங்கள் மிகவும் வலிமையாக அமைந்தது , அதன் பிரகாரம் சந்திரன் வலுகுறைந்தவர்கள் அனைவரும் , தொளிவில்லாத சிந்தனையுடன் யார் எதை சொன்னாலும் உண்மை என நம்பு தன்மையும் , மனதளவில் வலிமை இல்லாதவர்களாகவும் இருப்பார்கள் , சுக்கிரன் வலுகுறைந்தவர்கள் அனைவரும் , திருமணம் , இல்லற வாழ்க்கை , தனது வாழ்க்கை துணையுடன் ஒற்றுமை இல்லாத நிலையில் இருப்பார்கள் , களத்திர வழியில் அதிக துன்பத்தை அனுபவித்து அதனால் ஒரு வடிகாலை தேடிக்கொண்டு இருப்பார்கள் , சனி வலுகுறைந்தவர்கள் அனைவரும், தொழில் வழியில் அதிக பாதிப்புகளை சந்தித்து , கடன் பொருளாதார சிக்கல் என போராட்ட வாழ்க்கையில் சிக்கி தவித்து கொண்டு , தனக்கு ஏதாவது நல்ல வழி கிடைக்காதா என்று மன நிம்மதி இன்றி விளித்து கொண்டு இருப்பார்கள்.

சந்திரன் , சுக்கிரன் , சனி ஆகிய கிரகங்களால் பாதிப்படைந்த நபர்கள் , ஜாதகரின் வலுவான  சந்திரன் , சுக்கிரன் , சனி கிரகங்களால் ஜாதகரிடம்  முதல் பார்வை , பேச்சு , செயல் பாடுகளால்  ஈர்க்க பட்டு தனக்கு  நல்ல வழி கிடைக்கும் என்று நம்பி மனதளவில் சரணடைந்து விடுவார்கள் , இதன் பிறகு ஜாதகர் அவர்களை தனது சுய நலத்திற்க்காக மிகவும் எளிதாக பயன் படுத்தி கொள்ள ஆரம்பித்து விடுவார் , மேலும் ஜாதகர் என்ன சொல்கிறாரோ அதையே வேத வாக்காக எடுத்து கொண்டு இவர்களும் செயல் பட ஆரம்பித்து விடுவார்கள் , ஆனால் உண்மையில் இந்த நபர்களுக்கு ஜாதகரால் எவ்வித நன்மையையும் செய்ய இலாது  காரணம்.

 ஒருவர் சிறந்த ஆன்மீக வாதியாக இருக்க வேண்டும் எனில் , சுய ஜாதக அமைப்பில் லக்கினம் , மூன்றாம் பாவகம் , ஐந்தாம் பாவகம் , ஏழாம் பாவகம் , ஒன்பதாம் பாவகம் , பத்தாம் பாவகம் ,முக்கியமாக பனிரெண்டாம் பாவகம் அனைத்தும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அப்படி அமைய பெற்ற ஜாதகரே மிகசிறந்த ஆன்மீக வாதியாகவும் , இறை அருள் பரிபூரணமாக அமைய பெற்று காணப்படுவார்.  அப்படி பட்ட ஜாதக அமைப்பை பெற்றவரே  தனது சொல்லாலும் , செயலாலும்  , எண்ணத்தாலும் , மக்கள் அனைவருக்கும் உண்மை ஆன்மீகத்தை போதிக்க மட்டும் செய்வார்கள் .

ஆனால் இவருடைய ஜாதக அமைப்பில் மேற்ச்சொன்ன பாவகங்கள் அனைத்தும் கடுமையான பாதிப்பை பெற்றிருப்பது , இவருக்கும் ஆன்மீக வாழ்க்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை பறை சாற்றுகிறது , மேலும் 12 ம் வீடு 12 ம் வீட்டுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரை மிகப்பெரிய உயர்ந்த எண்ணம் கொண்ட மன நிலைக்கு தள்ளிவிடும் , ( இப்படி பட்ட நபர்கள் அனைவரும் நானே கடவுள் , எல்லாம் என்னால் தான் இயங்குகிறது என்று தானும் நம்பி , மற்றவரையும் நம்ப வைத்து விடுவார் ) எந்த ஒரு ஆன்மீக வாதியும் நான் தான் கடவுள் என்னை வணங்கி நன்மை பெறுங்கள் என்று சொன்னதாக சரித்திரமும் இல்லை பூலோகமும் இல்லை , உண்மையில் இறைநிலையை உணர்ந்தவர்கள் யாரும் அதை மற்றவருக்கு காட்டியதாக வரலாறும் இல்லை , எனவே இந்த ஜாதகரின் 12 ம் வீடு 12 ம் வீட்டுடன் சம்பந்தம் பெறுவதால் ஒருவித மன நோயால் பாதிக்க பட்டு ( அதாவது நான்தான் கடவுள் என்னை வணங்கு என்று சொல்லும் அமைப்பு இதை மன நல மருத்துவர்கள் வேறு மாதிரி சொல்வார்கள் ) மற்றவரையும் அதற்க்கு அடிமை படுத்தி மிகப்பெரிய சக்தி தன்னிடம் உள்ளதாக தனது பேச்சாற்றலால் விளம்பரம் செய்து , மற்றவர்களின் வாழ்க்கையில் பல வகையில் புகுந்து விளையாடி விட்டார் , இதற்க்கு அவர்களின் சீடர்களும் தூபம் போட போட , ஜாதகர் பேயாட்டம் ஆடி இவரை நம்பிய மக்களுக்கு தண்ணீர் தெளிக்காமல் தலையில் மிளகாய் அரைத்து விட்டார் .

24 /10 /2006 முதல் வந்த ராகு திசை சனிபுத்தி , தனது பலனை தர ஆரம்பித்தது, நேர்மைக்கு பெயர் போன சனி தனது காட்டமான பலனை தரும் பொழுது ஜாதகரால் அதை தாக்கு பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. இதில் சுய ஜாதகத்தில் சனி பகவான் வக்கராக கதி வேறு , ஜாதகரை இன்னும் வடை சட்டியில் போட்டு வறுத்து எடுத்து கொண்டு இருக்கிறது என்பதே உண்மை , இதை விட கொடுமை என்னவென்றால் 06 /04 /2013 வரை உள்ள காலகட்டம் வரை மன நிம்மதி இல்லாமல் அலையும் சூழ்நிலை ஏற்ப்படும் , இந்த கால கட்டத்தில் ஒருவேளை ஜாதகர் வெளிநாடு சென்றால் அங்கேயே ஜாதகருக்கு மிகப்பெரிய ஆபத்து வரும் வாய்ப்பு உண்டு .  இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் ஜாதகருக்கு இருந்த ஆதரவும் வெகுவாக குறைய ஆரம்பிக்கும் , இதனால் அதிக மன உளைச்சல் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் உண்டு . இதனால் ஜாதகரின் உடல் நிலை வெகுவாக பாதிக்க படும் , நம்பியவர்கள் எல்லாரும் கைவிடுவார்கள் , அரச கோபத்திற்கு ஆளாகி தண்டனைக்கு ஆடப்படும் சூழ்நிலை வரலாம் .

12 ம் வீடு 12 ம் வீட்டுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் தகப்பனார் இறந்து கிடக்கும் பொழுது , அதற்காக வருந்தாமல் தனது பாத அடிகளை அவரின் தலை மீது வைத்து நடனம் ஆட விட்டது தான் மிக பெரிய சோகம் இதை பார்த்தாவது மக்கள் திருந்தியிருக்க வேண்டாமா ? இதுவே மன நோயின் உச்சகட்டம் எனலாம் , அதற்க்கு அடுத்த சோகம் தனது தவ வலிமையால் அனைவரையும் ஆகாயத்தில் பறக்க விடுவேன் என்று சொல்லி தானும் மண்டை காய்ந்து , மற்றவர்களையும் மண்டை காய விட்டது , இதில் இருந்தே 12 ம் பாவகத்தின் வலிமையை அனைவரும் உணர முடியும் . மக்களுக்கு தவறான வழியை கட்டும் தன்மைக்கு இந்த பனிரெண்டாம் பாவகமே காரணம் , 12 ம் பாவகம் நல்ல நிலையில் இருக்கும் அனைவரும் நிச்சயம் மற்றவர்களுக்கு சரியான வழியை காட்டுவார்கள், இல்லை எனில் தனது வேலை எதுவோ அதை மட்டுமே பார்ப்பார்கள் .


மேற்கண்ட ஜாதகருக்கு 2 ,5 ,11 , ஆகிய வீடுகள் , சர ராசியாக அமைந்து இதற்க்கு அதிபதி என்ற முறையில் சுக்கிரன் , சனி , சந்திரன் கிரகங்கள் 100 சதவிகிதம் நன்றாக இருந்ததால் , ஜாதகருக்கு அபரிவிதமான யோக வாழ்க்கையை அனுபவிக்க முடிந்தது , நடந்து கொண்டு இருக்கும் ராகு திசை முதல் 9 வருடங்கள் அபரிவிதமான முன்னேற்றத்தை தந்தாலும் , அதன் பிறகு வரும் இரண்டாவது 9 வருடங்கள் நேர்மாறான பலனை தரும் என்பதே உண்மை , இது எதிர்காற்றில் எச்சில் துப்புவதற்கு சமமான பலனை தரும் என்பதே உண்மை .
 
எனவே இனி வரும் காலங்கள் இன்னும் 13 வருடங்கள் ஜாதகரை தப்பி எடுத்து காய வைத்து விடும் என்பது மட்டும் ஜாதக ரீதியாக உள்ள உண்மை .

No comments:

Post a Comment