கால புருஷ தத்துவ அமைப்பிற்கு புதனின் வீடுகளாக மிதுனமும் , கன்னியும் அமைகிறது , இதில் புதன் ஒருவருக்கு இரண்டு விதமான பலனை தருகிறார் , ஒன்று சூரியனுடன் 14 பாகைக்குள் சேரும்பொழுது பாவியாகவும் , சூரியனுடன் சேராமல் 14 பாகைக்கு மேல் இருப்பின் சுபராகவும் இருக்கிறார் என்றும் பாரம்பரிய முறையில் பலன் காணுவார்கள் , நமது ஜோதிட முறை படி , சூரியனுடன் 14 பாகைக்குள் சேரும்பொழுது கேந்திர அதிபதியாகவும் , சூரியனுடன் சேராமல் 14 பாகைக்கு மேல் இருப்பின் கோண அதிபதியாகவும் எடுத்து கொள்வோம் , இந்த முறை படி பார்க்கும் பொழுது, கால புருஷ தத்துவ அமைப்பில் மூன்றாம் வீட்டுக்கு அதிபதியாகவும் , ஆறாம் வீட்டுக்கு அதிபதியாகவும் வரும் புதன் ஒருவருடைய ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு கிடைக்கும் யோக பலன்களை பற்றி இந்த பதிவில் காண்போம் .
புதன் மிதுனத்தில் தரும் யோகம் :
கால புருஷ தத்துவ அமைப்பில் மூன்றாம் வீட்டுக்கு புதன் அதிபதியாக அமர்ந்து மிதுனத்தில் , உபய ராசி , காற்று தத்துவ அமைப்பை பெறுகிறார் , உபயம் என்றால் மற்றவர்கள் வாழ்க்கையில் பயன்படும் விதத்தில் செயல் படுவது , காற்று என்றால் ஜாதகரின் அறிவாற்றலை குறிக்கும் , எனவே ஜாதகரின் அறிவாற்றல் எந்த வகையிலாவது மக்களுக்கு நிச்சயம் பயன்படும் என்பதையே இந்த மிதுன ராசி குறிப்பிடுகிறது.
பொதுவாக நவ கிரகங்களால் ஏற்ப்படும் பாதிப்பான பலன்களை தடுத்து , ஜாதகருக்கு நன்மை தரும் அமைப்பு புதனுக்கு உண்டு என்று பல ஜோதிட நூல்களில் நாம் படித்திருக்க கூடும் , அதற்க்கு காரணம் என்ன என்று இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் , ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் மூன்றாம் வீட்டை வைத்து நாம் மனம் , எண்ணம் , ஜாதகரின் நண்பர்களால் வரும் நன்மை , சுய அறிவு , எழுத்தாற்றல் , பயணங்களால் வரும் நன்மை , தொலை தொடர்புகளால் ஜாதகருக்கு வரும் நன்மை, புலனுக்கு அப்பாற்ப்பட்ட அறிவு , வருமுன் உணரும் தெய்வீக ஆற்றல் , நல்லவர்கள் தொடர்பு , எழுத்தாற்றல் மூலம் மக்களிடம் ஏற்ப்படும் ஆதரவு, முயற்ச்சியால் கிடைக்கும் வெற்றி ஆகியவற்றை குறிக்கும் .
இதன் படி பார்க்கும் பொழுது மனம் மற்றும் எண்ணம் ஆகியவற்றை முழுமையாக ஆளுமை செய்கின்ற பாவகம் மூன்றாம் வீடு என்றால் அது மிகையாகாது , ஒரு ஜாதகர் மன நிலை சிறப்பாக செயல் பட சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும் மூன்றாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பது அவசியமாகிறது , மேலும் இந்த மூன்றாம் பாவகத்தை வைத்து ஜாதகரின் மன நிலையையும் , எண்ணத்தின் நிலையையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் , கிராமத்தில் ஒரு செலவாடை ஒன்று உண்டு அது " தம்பி உடையான் படைக்கு அஞ்சான் " என்பது , தைரியம் என்ற சொல்லுக்கும் , உடன் பிறப்பு என்ற அமைப்பிற்கும் இந்த மூன்றாம் பாவகம் முழுமையாக பொருந்துவதை நாம் இங்கே சற்றே கவனிக்க வேண்டுகிறோம் , தனது உடன் பிறப்பு இருப்பின், ஒருவருக்கு இயற்கையாகவே தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் நிச்சயம் வந்துவிடும் , எந்த ஒரு பிரச்சனைகளையும் தனது உடன் பிறப்பு உதவியுடன், மன உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்பதையே இந்த பாவக வழி நமக்கு உணர்த்துகிறது , பொதுவாகவே நமக்கு ஒரு உடன் பிறப்பு உள்ளது என்றாலே மனதில் ஒரு வித தைரியம் வரும் என்பதை எவராலும் மறுக்க இயலாது , எனவே ஒருவருடைய ஜாதக அமைப்பில் மூன்றாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் தனது உடன் பிறப்பு வழியில் இருந்து 100 சதவிகித நன்மை , ஆதரவு , தைரியம் , வெற்றி ஆகியவை கிடைக்க பெரும் என்பது நிச்சயம் .
ஒருவருடைய வாழ்க்கையில் இறுதிவரையிலும் , சிறு சிரமங்கள் வந்தாலும் அதற்காக வருத்தமும் , ஆதரவும் , ஓடிவந்து உதவி செய்யும் குணமும் தனது உடன் பிறப்பை தவிர வேறு யாரும் அல்ல என்பதே முற்றிலும் உண்மை , அப்படி பட்ட உடன் பிறப்பை பெற்ற அனைவரின் ஜாதக அமைப்பிலும் இந்த மூன்றாம் வீடு மிகவும் வலுமையாக அமைந்திருக்கும் , என்பதே உண்மை . எத்தனை அண்ணன் தம்பிகள் , அக்கா தங்கைகள் பாசமிகு வாழ்க்கை நாம் பார்த்திரிக்கிறோம் , தனது உடன் பிறப்புக்கு ஒன்று என்றால் துடித்து போகும் எத்தனையோ சகோதர அமைப்புகள் நமது மண்ணில் இன்னும் உள்ளனர் , இதுவே ரத்த பாசத்திற்கு அடையாளம் . கால புருஷ தத்துவ அமைப்பிற்கு புதன் இந்த வீட்டிற்கு அதிபதியாக வந்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை , ஏனெனில் அதி புத்திசாலித்தனத்தால் மற்றவரை நல்ல நிலைக்கு எடுத்து செல்லும் ஆற்றல் கொண்டவராக புதன் விளங்குவதே இதற்க்கு காரணம் . இந்த புதன் மாதிரி உடன் பிறப்புகளும் நல்ல ஆலோசனைகளை நமக்கு தந்து, நல்வழி படுத்தும் பண்பு கொண்டவர்கள் என்பது சரியாக பொருந்தும் .
ஒருவருக்கு நல்ல எண்ணங்களும் , மன தைரியமும் , செய்யும் காரியங்களில் வெற்றிகளை பெற வேண்டும் எனில் நிச்சயம் இந்த மூன்றாம் பாவகமும் , மிதுன ராசியும் , புதனும் சிறப்பான நிலையில் சுய ஜாதகத்தில் அமைந்து இருக்க வேண்டும் .
புதன் கன்னியில் தரும் யோகம் :
கால புருஷ தத்துவத்திற்கு ஆறாம் வீட்டிற்கு புதன் அதிபதியாக அமர்ந்து , உபய ராசியாகவும் , மண் தத்துவ அமைப்பை பெறுகிறார் , உபயம் என்றால் மற்றவர்கள் வாழ்க்கையில் பயன்படும் விதத்தில் செயல் படுவது ,மண் தத்துவம் எனும்பொழுது இந்த இடத்தில் , ஜாதகரின் உடல் , பொருள் , சொத்து , வண்டி வாகன , அமைப்பு , வியாபாரம் , ஆகிய வற்றை குறிப்பிடுகிறது .
மிதுன அமைப்பை சார்ந்தவர்கள் மக்களுக்கு தனது அறிவு வழியில் உதவும் அமைப்பை பெறுவார்கள், கன்னி அமைப்பில் ஜாதகர் உடல் வழியில் மக்களுக்கு உதவும் அமைப்பை பெறுவார்கள் , தனது உடல் நிலையை பற்றி எவ்வித கவலையும் கொள்ளாமல் மக்கள் பணியாற்றும், அமைப்பை பெற்றவர்கள் யாவரும் இந்த கன்னி ராசி மற்றும் புதன் நல்ல நிலையில் அமைய பெற்றவர்களே , குறிப்பாக மக்களை பாதுகாப்பாக ஒரு இடத்துக்கு அழைத்து செல்லும் வாகன ஓட்டுனர்கள் , மக்களை இரவு பகல் பாராமல் காவல் காக்கும் , காவல் துறையினர் , ராணுவ வீரர்கள் , தனது தேசத்திற்கு புகழையும் , வெற்றியையும் பெற்று தரும் விளையாட்டு வீரார்கள் , மக்கள் நலனுக்காக பாடு படும் அரசியல் தலைவர்கள் , மக்கள் நல சேவகர்கள் போன்றோர்கள் இதற்க்கு உதராணமாக நாம் எடுத்து கொள்ளலாம்.
மேலும் நாட்டிற்கு வரும் தீமைகளை கண்டறிந்து , அவற்றை தடுத்து நிறுத்தும் பேராற்றல் கொண்டவர்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு ( கன்னி புதன் ) மிகவும் சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருக்கும் , ரகசிய போலீஸ் , துப்பறியும் இலாகா , துதுவர்கள் போன்ற பணிகளில் சிறப்பாக செயல்படும் அனைவர்க்கும் இந்த கன்னி புதன் சிறப்பாக அமைய பெற்றிருப்பார் , பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ள பன்முக திறமை, மற்றும் வருமுன் தெரிந்து கொள்ளும் அதீத சக்தியுள்ள திறமையை பெற்றிருப்பது புதன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே முடியும் . மேலும் இவர்கள் எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இதற்க்கு காராணம் கன்னி புதனே , ஒருவருடைய ஜாதகத்தில் கன்னி புதன் நல்ல நிலையில் இருந்தால் எதிரியின் சொத்து ஜாதகருக்கு கிடைக்கும் , எதிரி செய்யும் அனைத்து காரியங்களும் ஜாதகருக்கு உபகாரமாகவே அமைந்து விடும் , மேலும் ஜாதகரை விழ்த்த எதிரிகள் செய்யும் அணைத்து வேலைகளும் ஜாதகருக்கு சாதகமாகவே அமைந்துவிடும் , அதனால் ஜாதகர் நன்மையே பெறுவார் , இவர்களிடம் நேரடியாக எதிர்த்து நிச்சயம் ஜெயிக்க முடியவே முடியாது .
கன்னி புதன் நல்ல நிலையில் உள்ள ஜாதக அமைப்பை பெற்றவர்கள் அதிகம் வழக்கறிஞர் தொழில் கொடிகட்டி பறக்கிறார்கள், என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை, மேலும் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை பெரும் அமைப்பை பெற்றவர்கள் அனைவருக்கும் சுய ஜாதகத்தில் கன்னி புதன் நிச்சயம் சிறப்பாக அமைய பெற்றிருக்கும், சட்டத்துறையில் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களுக்கு சிறப்பான இடம் நிச்சயம் உண்டு . மேலும் ஜாதகரின் உடல் நிலை பாதிப்புகள் எவ்விதத்திலும் கெடுதல் செய்யாது , விபத்துகளில் ஜாதகருக்கு எவ்வித பாதிப்பையும் நிச்சயம் தராது , மனம் உடல் இரண்டும் எப்பொழுதும் ஜாதகருக்கு ஒத்துழைக்கும் , கடன் கொடுக்கல் வாங்கல்களில் , சூதாட்டத்தில் அபரிவிதமான சொத்துகளை பெற இந்த கன்னி புதன் நல்ல நிலையில் இருக்க வேண்டும் , முக்கியமாக பங்கு வர்த்தகம் , யூக வணிகத்தில் சிறப்பான வெற்றிகளை பெற வேண்டும் எனில் நிச்சயம் சுய ஜாதகத்தில் ஆறாம் பாவகம் , கன்னி ராசி , புதன் ஆகிய அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தால் மட்டுமே முடியும் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக