ஜாதக ரீதியாக ஒருவருக்கு சுய தொழில் அமையுமா ? அல்லது மற்றவரிடம் அடிமை பணி செய்ய வேண்டி வருமா ? என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம் , ஒருவர் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற வேண்டும் எனில் , அவருடைய ஜாதகத்தில் பத்தாம் இடம் ( ஜீவன ஸ்தானம் ) மிகவும் சிறப்பான நிலையில் இருக்க வேண்டும், குறிப்பாக , ஜீவன ஸ்தானம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது மிகப்பெரிய இன்னல்களை ஜீவன ஸ்தான அமைப்பில் இருந்து அனுபவிக்க வேண்டி வரும், மேலும் ஜீவன ஸ்தானம் , 8 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகருக்கு நல்ல பலனை தருவதில்லை , ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் உள்ள ஜாதகத்தை பெற்ற நபர்களுக்கு சரியான வயதில் நல்ல தொழில் சுயமாகவோ , அடிமை சேவகமோ நிச்சயம் அமைந்து விடுகிறது .
சுய தொழில் செய்யும் யோகம் கொண்டவர்கள் :
ஒருவருடைய லக்கினத்திற்கு பத்தாம் இடம் எனப்படும் ஜீவன ஸ்தானம் , லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று , லாப ஸ்தானம் சர ராசியாக இருந்தால் அந்த ஜாதகர் நிச்சயம் சுய தொழில் மூலம் மிகப்பெரிய வெற்றிகளை பெறுவார் , ஆனால் லக்கினமும் சர ராசியாக இருக்க கூடாது . காரணம் சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானமே லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் வீடுதான் , கால புருஷ தத்துவ அமைப்பில் நான்கு ராசிகள் சர ராசியாக அமையும் , அவையாவன மேஷம் , கடகம் , துலாம் , மகரம் ஒருவருடைய ஜாதக அமைப்பில் ஜீவன ஸ்தானம் இந்த வீடுகளுடன் சம்பந்தம் பெற்றால் அந்த ஜாதகர் சுய தொழில் மூலம் மிகப்பெரிய வெற்றிகளை பெறுவார் ( ஆனால் லக்கினத்திற்கு பாதக ஸ்தானமாகவோ, 8 ம் பாவகமாகவோ இந்த ராசிகள் அமைய கூடாது ) .
மேஷம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகருக்கு , மின்சாரம் , மின்சார உபகரணங்கள் , கட்டிடம் மற்றும் கட்டுமானம் , தொழில்நுட்ப்ப துறைகள் , கணினி உபகரணங்கள் , இயந்திர உதிரி பாகங்கள் , அனைத்து தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள், இரும்பு கம்பி உற்பத்தி , உலோகம் அலோகம் சார்ந்த தொழில்கள் , மோட்டார் வாகனம் விற்பனை, ஆகிய வற்றில் ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றிகளை அள்ளித்தரும் .
கடகம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகருக்கு , உணவு பொருட்கள் , மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் , பண்ணை தொழில்கள் , துணி மணிகள் , ஆடை அழகு சாதனா பொருட்கள் , சொகுசு வாகனங்கள் விற்பனை நிலையம் , மக்களால் அதிகம் விரும்பப்படும் பொருட்கள் , நீர்ம பொருட்கள் சார்ந்த தொழில்கள், ஆசிரிய பணி , ஆகிய வற்றில் ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றிகளை அள்ளித்தரும் .
துலாம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகருக்கு , அனைத்து வகை தரகு தொழில்கள் , பெரிய அளவில் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் , வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை விற்பனை செய்யும் தொழில்கள் , இரத்தின கற்கள் சார்ந்த தொழில்கள் , கட்டிட அலங்கார தொழில் , திருமண அமைப்பகம் சார்ந்த தொழில்கள் , கல்வி நிறுவனங்கள், ஆகிய வற்றில் ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றிகளை அள்ளித்தரும் .
மகரம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகருக்கு , மண், மனை, விவசாயம் சார்ந்த தொழில்கள் , கனரக வாகன தொழில்கள் , எரிபொருள் சார்ந்த தொழில்கள் , மருத்துவ தொழில்கள் , மருந்து சம்பந்தம் பெற்ற தொழில்கள் , கனரக வாகன உதிரி பாகங்கள் விற்பனை சார்ந்த தொழில்கள் , குண்டூசி முதல் விமானம் வரை இயக்கத்தில் உள்ள பொருட்கள் தொழில்கள் ஆகிய வற்றில் ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றிகளை அள்ளித்தரும் .
மேற்கண்ட அமைப்பில் ஜீவன ஸ்தானம் சர ராசிகளுடன் சம்பந்தம் பெற்றால், ஜாதகருக்கு சுய தொழில் மூலம் அபரிவிதமான வெற்றிகளையும் தொழில் துறையில் நிரந்தர இடமும் ஜாதகருக்கு நிச்சயம் உண்டு , இந்த அமைப்பை பெற்றவர்கள் சுய தொழில் செய்யாமல், வேறு இடத்திற்கு வேலைக்கு சென்றால் அந்த நிறுவனமும் , நிறுவனத்தை நடத்திற் வரும் உரிமையாளரும் மிகப்பெரிய நன்மைகளை பெறுவார்கள் , ஜாதகருக்கு வெறும் கூலி மட்டும்தான் கிடைக்கும் . ஜாதகரின் யோகம் முழுவதும் பணியாற்றும் நிறுவனத்திற்கு போய் சேரும், தொழில் முடக்கம் பெற்ற சில நிறுவனங்கள் திடீர் என அதிரடியாக முன்னேற்றம் பெறுவதற்கு இது போன்ற ஜாதக அமைப்பே காரணம் , எனவே மேற்கண்ட யோகம் கொண்டவர்கள் சிறிய முதலீடு செய்து ஒரு சிறிய தொழிலை துவங்கினால் கூட வெகு விரைவில் முன்னேற்றம் காண்பார்கள் ( சூரிய வம்சம் சரத்குமார் மாதிரி ) . மேலும் இவர்களது ஜாதகத்தில் 7 ம் பாவகம் மிகவும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே கூட்டு தொழில் செய்யலாம் இல்லை எனில் தனித்து செயல் படுவதே சிறப்பு.
சுய தொழில் மற்றும் அடிமை தொழிலுக்கு ஏற்ற அமைப்பு :
ஒருவருடைய லக்கினத்திற்கு பத்தாம் இடம்
எனப்படும் ஜீவன
ஸ்தானம் ஸ்திர ராசிகளுடன் தொடர்பு பெரும் ஜாதக
அமைப்பை பெற்றவர்களுக்கு ஜீவனம்
நிலையாக அமைந்து , முன்னேற்றம் என்பது
படி
படியானதாக
வந்து சேரும் , மேலும் அதிக உழைப்பு இல்லாமல் இருந்த இடத்தில் வருமானம்
செய்யும் யோகம் பெற்றவர்கள், குறிப்பாக அனைத்து வகையான வியாபாரங்களும் இந்த
அமைப்பை பெற்றவர்களுக்கு மிகவும் சிறப்பாக வரும் . குறிப்பாக வியாபாரம்
சம்பந்த பட்ட விஷயங்களில் இந்த நிலையில் உள்ள ஜாதகர்களுக்கு மிகவும் எளிதாக
அமையும் , அதிலும் தராசு பிடிக்கும் தொழில்களில் 100 சதவிகிதம் வெற்றி
பெறுவார்கள் .
அடிமை தொழிலுக்கு ஏற்ற அமைப்பு :
ஒருவருடைய லக்கினத்திற்கு பத்தாம் இடம்
எனப்படும் ஜீவன
ஸ்தானம் உபய ராசிகளுடன் தொடர்பு பெரும் ஜாதக
அமைப்பை பெற்றவர்களுக்கு
, மத்திய,மாநில அரசு துறை பணியாற்றும் யோகம் , பொது நிறுவனங்களில்
பணியாற்றும் யோகம் , தனியார் துறையில் பணியாற்றும் யோகம் , சிறு தொழில்கள்
மற்றும் குடிசை தொழில்கள் , சிறு வியாபாரிகள் போன்ற அமைப்பை தருகிறது ,
மேலும் அடிமை தொழில் புரிவதற்கு ஏற்ற ஜாதக அமைப்பை பெற்றவர்கள், மற்றவரிடம்
பணிபுரிவதால் ஜீவனம் நடத்தும் யோகம் பெற்றவர்கள், இந்த அமைப்பை
பெற்றவர்கள் சுய தொழில் செய்வதை விட மற்றவரிடம் பணிபுரிவதே சால சிறந்தது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக