ஒருவர் ஜாதக ரீதியாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கும் வீழ்ச்சி அடைவதற்கும் நிச்சயம் அவருடைய ஜாதக அமைப்பே காரணமாக அமைகிறது , மேலும் சில அன்பர்களின் ஜாதக அமைப்பில் யோக நிலைகள் இருந்தாலும் , அந்த ஸ்தான பலன்கள் சரியான வயதில் நடை பெற்றால் மட்டுமே யோக வாழ்க்கையினை தருகிறது , காலம் கடந்து நடக்கும் யோக நிலையை , ஜாதகர் அனுபவிக்க இயலாது , ஜாதகரை சார்ந்தவர்கள் மட்டுமே அனுபவிக்க இயலும் , உதராணமாக சக்கரை வியாதி வந்தவருக்கு பக்கத்தில் ஜிலேபி இருப்பது போல் , அதை பார்க்க மட்டுமே முடியும், சாப்பிட இயலாது . இதையே பெரியோர் " கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் " என்றனர் , எனவே ஒருவருடைய ஜாதக அமைப்பில் யோக நிலைகள் இருந்தாலும் அதை அனுபவிக்க இயாலாததிர்க்கு மூன்று காரணங்கள் மட்டுமே உண்டு , அவற்றை பற்றி சற்றே இந்த பதிவில் சிந்திப்போம் .
முதலில் லக்கினம் :
ஒருவருடை ஜாதக அமைப்பில் எவ்வித ராஜ யோகங்கள் இருந்தாலும் ,அதன் முழு பலனையும் ஜாதகர் அனுபவிக்க வேண்டும் எனில் நிச்சயம் லக்கினம் எனும் முதல் பாவகம் மிகவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் , ஏனெனில் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் , அதாவது ஒருவருடைய லக்கினம் எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானம் , 2 ம் வீடு , 6 ம் வீடு , 8 ம் வீடு , 12 ம் வீடு ஆகிய பாவகங்களுடன் தொடர்பு பெறுவது , ஜாதகருக்கு நன்மையை நிச்சயம் தருவதில்லை , குறிப்பாக லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரை மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடும் , மேலும் ஜாதகத்தில் ராஜ யோக அமைப்புகள் சரியான வயதில் நடைமுறைக்கு வந்தாலும் அதை அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஜாதகருக்கு ஏற்ப்படும் , தன்னை சார்ந்தவர்கள் அனுபவிக்க கூடும் , அல்லது தொழில் கூட்டாளிகள் , வாழ்க்கை துணைக்கு அந்த யோக பலன்களை அனுபவிக்க வைத்து விடும், ஜாதகருக்கு எந்தபாவாக வழி சிறப்பாக அமைகிறதோ அந்த உறவு வகையை சார்ந்தவர்கள் நன்மை பெறுவார்கள் , ஜாதகர் தனக்கு வரும் யோக பலன்களை எனக்கு தேவையில்லை என்று உதறும் சூழ்நிலைக்கு சென்று விடுவார் .
மேலும் ஜாதகத்தில் லக்கினம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே தனக்கு வரும் வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவார் , எவ்வித தீய பழக்க வழக்கங்களும் இல்லாமல் , தெளிவான சிந்தனையுடன் எப்பொழுதும் இருப்பார் , வருமுன் அறியும் அறிவாற்றல் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்திருக்கும் , நல்ல நடத்தை கொண்டவராக இருப்பார் , ஜாதகத்தில் உள்ள யோகம் முழுவதையும் அனுபவிக்கும் புத்தி சாலித்தனம் உள்ளவராக எப்பொழுதும் விழிப்புணர்வுடன் எப்பொழுதும் காணப்படுவார், ஆக யோக பலனை அனுபவிக்க லக்கினம் எனும் சுவர் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் சிறப்பான சித்தரங்களை வரைய முடியும் .
இரண்டாவது நான்காம் பாவகம் :
தாய் , சுகம் , வீடு , வண்டி வாகனம், சொத்து ஆகியவற்றை குறிக்கும் நான்காம் பாவகம் ஒருவருடைய ஜாதகத்தில் மிகவும் நல்ல நிலையில் இருப்பது அவசியமாகிறது , ஜாதகத்தில் உள்ள யோக அமைப்புகளால் வரும் அனைத்து பொருள், தனம் , சொத்து , ஆகியவற்றை காப்பாற்றி வைக்க ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பில் இந்த நான்காம் பாவகம் வலுத்து நிற்பது அவசியமாகிறது , தனது பெயரில் சொத்து சுகங்களை வைத்திருக்க யோகம் உண்டா? இல்லையா ? என தெரிவிப்பது இந்த நான்காம் பாவகமே , இந்த பாவகம் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகரின் பெயரில் உள்ள சொத்து ,வண்டி ,வாகனம் ,வீடு ,பணம் , சுகம் ஆகியவைகள் நிலைத்து நிற்கும் இல்லை எனில் ஜாதகருக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையை தரும் என்பதில் ஆச்சரியம் இல்லை .
மேலும் ஒருவருக்கு சுய ஜாதக அமைப்பின் படி குடியிருக்கும் வீடு நல்ல சிறப்பான முன்னேற்றத்தை தர வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் , அப்படி அமைய பெற்ற ஜாதக அமைப்பை கொண்டவர்களுக்கு , நிச்சயம் வெற்றிமேல் வெற்றியே கிட்டும் , குறிப்பாக நான்காம் பாவகம் தொடர்பு பெரும் வீட்டின் திசை அமைப்பில் ஜாதகர் குடியிருந்தால் நிச்சயம் ஜாதகத்தில் உள்ள யோக அமைப்புகள் முழுமையாக கிடைக்க பெரும் , அதன் முலம் ஜாதகருக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டு , குறிப்பாக ஜாதக அமைப்பில் யோக நிலை இல்லாதவர்கள் கூட தனக்கு உகந்த திசை அமைப்பை சார்ந்த வாயிர்ப்படி உள்ள வீடுகளில் குடியிருந்தால் , நிச்சயம் மிக சிறப்பான முன்னேற்றகரமான வாழ்க்கையை பெறுவார் என்பதில் சந்தேகமே இல்லை , இது கண்கூடாக கண்ட உண்மை .
மூன்றாவது பூர்வ புண்ணியம் :
ஒருவர் ஜாதக ரீதியாக யோக பலன்களை அனுபவிக்கிறார? இல்லையா ? என்பதை இந்த பாவக அமைப்பை வைத்து தெளிவாக சொல்லிவிட முடியும் , மேலும் ராஜ யோக பலன்களை நடைமுறைக்கு கொண்டுவந்து அதை அனுபவிக்க வைக்கும் ஆற்றல் இந்த பாவகத்திர்க்கே நிச்சயம் உண்டு ,
1 ) அதாவது ஒருவருடைய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் சம்பந்த பட்ட ஜாதகர் தனது பூர்விகம் எதுவோ அந்த இடத்தில் இருந்து 100 km தொலைவிற்கு அப்பால் சென்று விட்டால் ஜாதகத்தில் உள்ள ராஜ யோகங்கள் எதுவும் நடைமுறைக்கு பலன் நிச்சயம் தராது.
2 ) ஒருவருடைய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பாதிப்படைந்த நிலையில் இருந்தால் சம்பந்த பட்ட ஜாதகர் தனது பூர்விகம் எதுவோ அந்த இடத்தில் இருந்து 100 km க்கு உட்ப்பட்ட பகுதியில் குடியிருந்தால் ஜாதகருக்கு ஜாதகத்தில் உள்ள ராஜ யோகங்கள் எதுவும் நடைமுறைக்கு பலன் நிச்சயம் தராது.
எனவே ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும்பாவகம் ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் பெற மிகப்பெரிய பங்களிப்பை செய்கிறது என்பதே உண்மை .
இந்த பூர்வ புண்ணியம் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து , சுய ஜாதக அமைப்பில் யோக நிலைகள் இருப்பின், ஜாதகர் தனது பூர்விகத்தில் அமர்ந்து கொண்டே அனைத்து நன்மைகளையும் நிச்சயம் பெறுவார் , சில அரசியல் தலைவர்கள் வீட்டில் படுத்து கொண்டே ஜெயிப்பதற்கு காரணம் இந்த பாவகமே , மேலும் தனக்கு வரும் சொத்து சுகங்களை தனது வாரிசுகளுக்கும் பல தலை முறைகளுக்கு சேர்த்து வைத்துவிட்டு செல்லும் யோக அமைப்பை பெற்றவர்கள், மேலும் தான தர்மம் செய்யும் குணமும் , மற்றவருக்கு உதவும் மனப்பான்மையும் இயற்கையாக அமைய பெற்றவர்கள் , எந்த ஒரு சிக்கல்களையும் தனது அறிவாற்றலால் தீர்த்து வைக்கும் சிறப்பு தகுதியை பெற்றவர்கள் .
எனவே ஒருவர் ஜாதகரீதியாக யோக அமைப்பை பெற்றிருந்தாலும் ,யோக அமைப்பை பெற்று இருக்கா விடினும் வாழ்க்கையில் சிறப்பாக அமைத்து கொள்ள இந்த மூன்று பாவகங்கள் நமக்கு நிச்சயம் உதவி புரிகிறது , சுய ஜாதக ரீதியாக யோக நிலை அற்றவர்களும் , பூர்வ புண்ணிய நிலைக்கு ஏற்ப , தனக்கு உகந்த திக்கு வாயிர்ப்படி கொண்ட வீடுகளில் குடியிருந்தும் , இலக்கின அமைப்பில் நன்மையை தேடியும் வாழ்க்கையில் நலம் பெறலாம் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
அரிய தகவல் ஒன்றைத் தெரிந்துகொண்ட மனமகிழ்வைப் பெற்றுக்கொண்டேன் மிக்க நன்றி பகிர்வுக்கு .தொடர வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்கு