சனி, 21 ஜூலை, 2012

துலாம் லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால் தரும் பலன் !



காலபுருஷ தத்துவத்திற்கு துலாம் ராசி ஏழாம் வீடாக அமைகிறது , ஒருவருக்கு இந்த துலாம் ராசி லக்கினமாக அமைந்து லக்கினத்தில் ராகு அல்லது கேது அமரும் பொழுது ஜாதகருக்கு தரும் பலன் என்ன வென்பதை இந்த பதிவில் காண்போம் , இந்த துலாம் ராசி சர காற்று தத்துவ ராசியாக இருப்பதால் , இந்த லக்கினத்தில் அல்லது ராசியில் பிறப்பவர்கள் அனைவரும் மிகசிறந்த அறிவாற்றல் இயற்கையாக அமைந்திருக்கும் , ஜாதகரின் சிந்தனையும் செயலும் சமுதாயத்திற்கு நிச்சயம் நன்மைகளை வாரி வழங்கும்.
   

துலாம் ராசியை பிறப்பு லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு லக்கினத்திற்கு உட்பட்ட பாகை அமைப்பில் ராகு அல்லது கேது அமரும் பொழுது தரும் பலன்கள் :
   

ஜாதகருக்கு அடிப்படையில் வளரும் சூழ்நிலை மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் , சிறுவயது முதலே ஜாதகருக்கு கலைகளில் அதிக ஆர்வம் இருக்கும் , மேலும் கலைத்துறையில் சிறுவயதிலேயே பிரகாசிக்கும் தன்மை கொண்டாவர்கள், இயற்கையாக மக்களை தனது கவர்ச்சியால் கட்டிபோடும் ஆற்றல் கொண்டவர்கள் , பன்முக திறமை படைத்தவர்கள் மேலும் ஜாதகர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் கலைநயம் மிகுந்து காணப்படும் , அடிப்படை கல்வி ஜாதகருக்கு நல்ல நிலையில் அமையும் , வகுப்பில் சிறந்து விளங்கும் தன்மையுள்ளவராக காணப்படுவார் , வளரும் இளம் பருவத்தில் நல்ல பண்பாடுகளுடனும் , ஒழுக்கத்துடனும் , உயரிய குண அமைப்பையும் ஜாதகர் பெற்று இருப்பார், கல்வி காலங்களில் சிறப்பு தகுதிகள் கொண்ட பன்முக திறமைகளை ஜாதகர் பெற்றிருப்பது ஒரு சிறப்பான விஷயம், தான் நினைக்கும் லட்சிய வாழ்க்கையை நிச்சயம் அடையும் தன்மை பெற்றவர்கள் , சிறு வயதிலேயே நல்ல புகழ் மிக்க வாழ்க்கை ஜாதகருக்கு அமைந்திருக்கும் .
   

ஜாதகருக்கு நல்ல நண்பர்கள் , நல்ல கூட்டாளிகள் நிச்சயம் அமைவார்கள் , அவர்கள் மூலம் 100 சதவிகிதம் நன்மையை மட்டும் பெரும் யோகம் கொண்டவர்கள் இந்த துலாம் இலக்கின அமைப்பினர் , இங்கு அமரும் ராகு ஜாதகருக்கு ஆராய்ச்சி மனப்பான்மையை சிறு வயதிலேயே ஆரம்பித்து வைத்துவிடும் , இதனால் ஜாதகர் புதுமையான விஷயங்களை கண்டு பிடிப்பதிலும் , புதுமையான பொருட்களை கையாளுவதிலும் , பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளர் ஆவதற்கும் இந்த ராகு பகவான் நிச்சயம் அருள் பாலிப்பார் , ராகு + சரம் + காற்று = அறிவு சார்ந்த விரைவான புதிய கண்டுபிடிப்புகள் எனலாம் , இந்த அமைப்பு நன்றாக செயல் படும் தன்மை கொண்டவர்கள் நிச்சயம் உலக மக்களுக்கு நன்மையை வழங்கும் பல புதிய கண்டுபிடிப்புகளை நிச்சயம் தரும் யோகம் பெற்றவர்கள் .
   

அறிவு சார்ந்த தொழில்களில் சிறப்பாக செயல் படும் யோகம் பெற்றவர்கள் , குறிப்பாக மருத்துவர் , பொறியாளர் , சட்ட வல்லுநர், புதிய கண்டுபிடிப்பாளர் , இயற்க்கை விவசாயம் சார்ந்த தொழில்களில் சிறந்து விளங்கும் தன்மை பெற்றோர் , மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வாழ்க்கையில் மாறுபட்டு முன்னேற்றம் காண்போர் , முக்கியமாக தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களில் கோடி கட்டி பறக்கும் அனைவருக்கும் இந்த அமைப்பு மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கும் , மேலும் அரசு  துப்பறியும் துறையில் மிக சிறப்பாக செயல் படும் தன்மை பெற்றவர்கள் , பல சதி வேலைகளை முறியடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் , இவர்களில் அறிவாற்றல் வருமுன் உணர்த்தும் தன்மை பெற்றது எனவே இந்த சிறப்பு தகுதிகள் ஜாதகருக்கு சிறு வயது முதற்கொண்டே கிடைக்க பெறுவார்கள் .
   

எனவே துலாம் லக்கினம் பெற்ற ஜாதகருக்கு லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்வது மிக பெரிய நன்மைகளையும் , மக்கள் ஆதரவும் , நல்ல உடல் ஆரோக்கியமும், அளவில்லா அறிவாற்றலையும், உலகில் உள்ள சுக போகங்களை எல்லாம் அனுபவிக்கும் யோகத்தையும் நிச்சயம் தரும் , இதற்க்கு நேர் எதிராக மேஷத்தில் அமரும் ராகு அல்லது கேது ஜாதகருக்கு நிச்சயம் நல்ல வாழ்க்கை துணையையும் , நல்ல நண்பர்களையும் , சிறந்த கூட்டாளிகளையும் வாழ்க்கையில் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை , மேலும் மக்கள் ஆதரவு பெற்ற அரசியல்வாதிகள் அனைவரின் ஜாதக அமைப்பிலும் , இந்த துலாம் ராசி மிகவும் சிறப்பாக நல்ல நிலையில் இருக்கும் , பொதுவாக உலகம் புகழும் பல நல்ல விஷயங்களை ஜாதகர் உலகத்திற்கு வழங்கி விட்டு , இறந்தும் இறவாமல் இருக்கும் யோகம் பெற்றவர்கள் என்பது இவர்களின் சிறப்பு .

 
ஒருவர் துலாம் லக்கினத்தை பிறப்பு லக்கினமாக கொண்டிருந்தாலும் சரி , துலாம் ராசியை பெற்றிருந்தாலும் சரி வாழ்க்கையை தனது அறிவு வழியில் செழுமை படுத்தி கொள்ள நிச்சயம் முடியும் , ஜாதகத்தில் பாதிப்பான பலன்களை தரும் திசை புத்தியிலும் கூட தனது அறிவாற்றலால் தீமையான பலன்களில் இருந்து விடுபட்டு, நன்மை பெற ஜாதகருக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு,  தனது அறிவாற்றல் கொண்டு ஜாதகர்  நலம் பெறலாம் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

5 கருத்துகள்: