கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இறை நிலை சந்திர பகவானை கடக ராசி 4 ம் வீட்டுக்கு அதிபதியாக அமர்த்தி தாய் , மண் , மனை , வாகனம் , சுகம் போன்ற அமைப்புகளில் இருந்து நன்மைகளை செய்ய பணித்திருக்கிறார், கடக சர ராசி நீர் தத்துவ அமைப்பிற்கு சந்திரன் தரும் யோக பலன்களை பற்றி சற்றே பார்ப்போம் , " எண்ணம் போல் வாழ்க்கை " என்று நமது கிராமங்களில் ஒரு செலவாடை உண்டு , ஒருவர் நன்மை , தீமை பலன்களை அனுபவிக்கும் பொழுது , வயதான பெரியோர்கள் உதிர்க்கும் வார்த்தை இதுவாகும் , இதற்க்கு 100 சதவிகிதம் பொருத்தமானவர் சத்திர பகவானே ஒருவரது சுய ஜாதக அமைப்பில் இவர் நல்ல நிலையில் இருக்கும் பொழுதும் , கடக ராசி வலுப்பெறும் பொழுதும் ஜாதகருக்கு குறுகிய காலத்தில் சகல யோகத்தையும் வாரி வழங்கிவிடும் தன்மை கொண்டவர் இந்த சந்திர பகவான் , இவரின் அனுமதின்றி ஒருவருக்கு எவ்வித எண்ணங்களும் பலிதம் பெறுவதில்லை .
ஒருவருக்கு தாய் வழியிலும் , குடியிருக்கும் வீடு அமைப்பிலும் , சொகுசான வாகன யோகமும் , சுகமான வாழ்க்கை அமைய , சுய ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையிலும் , கடகம் நல்ல பலமும் பெறவேண்டும் , ஒருவருக்கு எந்த லக்கினம் என்றாலும் சரி கடகம் நல்ல வீடுகளுடன் தொடர்பு பெற்றால் அந்த ஜாதகருக்கு மேற்கல்வி , தாய் வழி உதவி , சொகுசான வீடு வாகனம் , போன்ற யோக அமைப்புகள் நிச்சயம் கிடைக்கும் , மேலும் ஜாதகர் நல்ல குண நலன்களுடன் , பெருந்தன்மையான அமைப்பை இயற்கையாகவே பெற்று இருப்பார் , சொத்து சுகம் நிறைய அமைந்து இருக்கும் , மக்கள் செல்வாக்கு , கலை துறையில் இறந்து விளங்கும் யோகம் , மன நிம்மதி , மன உறுதியான செயல் பாடுகள் , தன்னம்பிக்கை , வாழ்க்கையில் மற்றவர்களுக்கு முன் உதரணாமாக வாழும் யோகம் , மனதளவில் நல்ல எண்ணங்கள் கொண்டவராகவும் , அனைவருக்கும் நன்மை செய்யும் தன்மை உள்ளவராகவும் ஜாதகர் காணப்படுவார் .
வளர் பிறை சந்திரனாக அமரும் பொழுது ஜாதகருக்கு வழங்கும் யோகம் :
ஒருவருக்கு ரிஷபம் , கடகம் , துலாம் , தனுசு , மீன ராசியில் வளர் பிறை சந்திரன் நல்ல நிலையில் , அமரும் பொழுது ஜாதகருக்கு , நல்ல வசதி மிக்க வீடு , வண்டி வாகன யோகம் , பொருளாதார முன்னேற்றம் , சமுக வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் , மக்கள் செல்வாக்கு , ஜாதகருக்கு திடீர் அதிர்ஷ்டம் , மன வாழ்க்கையில் நிம்மதி , சந்தோசம் , யோகம் , உறவினர் ஆதரவு, சொந்த பந்தங்கள் ஜாதகருக்கு ஓடிவந்து உதவி செய்யும் யோகம் , நல்ல குழந்தைகள் , அவர்களால் அதிர்ஷ்டம் என மிகவும் சிறப்பான யோக பலன்களையே வாரி வழங்குகிறார் , இதனால் ஜாதகரின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்து விடுகிறது .மேலும் தாய் மூலம் வரும் யோகம் , தாய் மூலம் நல்ல வளர்ப்பு, அவர்களின் அன்பும் ஆதரவு எல்லா காலங்களிலும் கிடைக்க பெரும் யோகம் என ஜாதகருக்கு அடிப்படை வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் .
தேய்பிறை சந்திரனாக அமரும் பொழுது ஜாதகருக்கு வழங்கும் யோகம் :
ஒருவருக்கு மேஷம் , மிதுனம் , கடகம் , சிம்மம் ,கன்னி ,விருச்சகம் ராசிகளில் தேய்பிறை சந்திரனாக நல்ல நிலையில் , அமரும் பொழுது ஜாதகருக்கு வியாபார துறையில் சிறந்து விளங்கும் யோகமும் , கற்ற கல்வியினால் மேன்மை பெரும் அமைப்பும் , அரசு துறையில் பணியாற்றும் யோகமும் , மக்கள் செல்வாக்கால் அரசியல் பதவிகளில் முன்னேற்றம் பெரும் யோகமும் , வெளிநாடுகளில் இருந்து அதிக வருமானமும் , யோக வாழ்க்கையையும் , தொழில் முறை யோகமும் ஜாதகருக்கு நிறை கிடைக்கின்றது, மேலும் விவசாயம் , பண்ணை தொழில் , நான்கு கால் ஜீவன் வளர்ப்பு , குடிநீர் விற்பனை செய்யும் தொழில்களில் சிறந்து விளங்கும் நிலையை ஜாதகருக்கு மிக விரைவாக தந்து விடுகிறார் . ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினம் எதுவென்றாலும் , கடகம் எந்த எந்த பாவகமாக வந்தாலும் நல்ல நிலையில் இருக்கும் பொழுது ஜாதகருக்கு மேற்கண்ட நல்ல பலன்கள் நிச்சயம் கிடைக்க பெறுகின்றது ,
சந்திர பகவான் ஒருவரின் மனதையும் , எண்ண ஆற்றலையும் , யோகமான வாழ்க்கை நிலையையும் , நிர்ணயம் செய்கிறார் , கடக ராசி சர ராசியாக வருவதால் இந்த அமைப்பு நல்ல நிலையில் அமர்ந்தால் மிக குறுகிய காலத்தில் சகல யோகங்களையும் வாரி வழங்குகிறார் , இதுவே மாறி அமைந்தால் இதற்க்கு நேர்மாறாக பலனை வாரி வழங்கி விடுகிறார் , அதிகம் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகும் சூழ்நிலைக்கு ஆட்படுபவர்களுக்கு இந்த சந்திர பகவானும் , கடக ராசியும் நல்ல நிலையில் இருப்பதில்லை , இதன் காரணமாக ஜாதகரே தனது உடல் நிலையை கெடுத்துக்கொண்டு வாழ்க்கையையும் கெடுத்து கொள்கிறார் .
சந்திரனால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்க படும் ஜாதக அமைப்பை பெற்றவர்கள் மன போராட்டம் , மன நிம்மதி இழப்பு , தன்னம்பிக்கை அற்ற நிலை , தனிமையில் மன வேதனை படும் நிலை , செல்வ நிலையில் விருத்தி அற்றவர்கள் , குடியிருக்க நல்ல வீடு அமையாதவர்கள் , சிறப்பான வண்டி வாகன யோகம் இல்லாத நிலையில் இருப்போர் , வண்டிவாகன தொழில்களில் பல சிரமங்களை அனுபவித்து கொண்டு இருப்போர்கள் , மணவாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் , என அனைவரும் வளர் பிறையில் வரும் , திங்கள் அன்று திருப்பதி சென்று ஸ்ரீ வாரி தீர்த்தத்தில் நீராடி , வெங்கடாசலபதியை தரிசனம் செய்து வருவோர்க்கு நிச்சயம் சந்திரனால் முழு யோகம் கிடைக்க பெறுவார்கள் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
Dear Sir
பதிலளிநீக்குmy doubt is For Mesha Lagnam, Fourth Place Chandran(Valar pirai) will give the above mentioned good result.
100 சதவிகிதம் தீமையான பலனை ஜாதகர் இந்த பாவக வழியில் இருந்து அனுபவிக்க வேண்டி வரும் !?
நீக்கு// ஒருவருக்கு ரிஷபம் , கடகம் , துலாம் , தனுசு , மீன ராசியில் வளர் பிறை சந்திரன் அமரும் பொழுது ஜாதகருக்கு , நல்ல வசதி மிக்க வீடு , வண்டி வாகன யோகம் , பொருளாதார முன்னேற்றம் , சமுக வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் , மக்கள் செல்வாக்கு , ஜாதகருக்கு திடீர் அதிர்ஷ்டம் , மன வாழ்க்கையில் நிம்மதி , சந்தோசம் , யோகம் , உறவினர் ஆதரவு, சொந்த பந்தங்கள் ஜாதகருக்கு ஓடிவந்து உதவி செய்யும் யோகம் , நல்ல குழந்தைகள் , அவர்களால் அதிர்ஷ்டம் என மிகவும் சிறப்பான யோக பலன்களையே வாரி வழங்குகிறார்
பதிலளிநீக்கு//
Ravichandran's question is valarpirai chandran is in 4th house from Mesha lagnam. So it is in kadagam. You have quoted good results for this position of moon in your article. But you are saying bad results in your answer. Why this contradiction?
ஜாதகருக்கு லக்கினம் மேஷம் , இதற்க்கு நான்காம் வீட்டுக்கு அதிபதி சந்திரன் , இங்கு அமருவது ஜாதகருக்கு நான்காம் வீட்டுக்கு 100 சதவிகித தீமையும் , லக்கினத்திற்கு நன்மையையும் செய்யும் அமைப்பை பெறுகிறார் , எனவே ஜாதகர் நான்காம் வீடு அமைப்பில் இருந்து தீமையான பலனை அனுபவிக்க வேண்டி வருகிறது , பொதுவாக கேள்வி கேட்க்கும் பொழுது பதில் இதுவே , ஒருவேளை ஜாதகருக்கு லக்கினம் மேஷமாக அமைந்து , கடக ராசியில் உள்ள மூன்றாம் பாவகத்தில் சந்திரன் அமர்ந்தால் ஜாதகருக்கு நாங்கள் சொல்லியது போல் யோக பலன்கள் 100 சதவிகிதம் நடைபெறும் . எனவே சுய ஜாதக அமைப்பை வைத்து ( பிறந்த நாள் ,நேரம் ,இடம் ) பலன் சொல்லும் பொழுது மிகவும் தெளிவாக வரும் , அன்பரின் கேள்வி என்ன ? மேஷ லக்கினத்திற்கு சந்திரன் கடகத்தில் அமர்ந்தால் என்ன பலன் என்பதே , இந்த லக்கினத்திற்கு சந்திரன் வளர் பிறையாக அமர்ந்தாலும் , தேய் பிறையாக அமர்ந்தாலும் 100 சதவிகிதம் தீமையான பலனே நடக்கும் நான்காம் பாவக அமைப்பிற்கு . கேள்வி சரியாக இருந்தால் ! பதில் சரியாக இருக்கும் ! எனவே கேள்வியை தெளிவாக கேட்பது அவசியம் .
நீக்கு