புதன், 11 ஜூலை, 2012

செவ்வாய் பகவான் தரும் மங்கள வாழ்வு !



கால புருஷ தத்துவத்திற்கு முதல் வீட்டிற்கும் , எட்டாம் வீட்டிற்கும் , அதிபதியாக வரும் செவ்வாய் பகவான்,  இயற்கையில் அனைவரின் ஜாதக அமைப்பிற்கும் உயிர் , ஆயுள், தனது வாழ்க்கை துணையின் மூலம் அதிர்ஷ்டம் பெரும் அமைப்பு , உடல் ஆரோக்கியம் , வீரம் , குடியிருக்கும் வீட்டின் தன்மை , ஜாதகரின் குண இயல்பு , ஒழுக்கம் , போராட்ட குணம்  அதனால் வரும் நன்மை , திடீர் மக்கள் செல்வாக்கு , மன உறுதி , வாழ்க்கையில் வரும் திடீர் முன்னேற்றம் , அயராத உழைப்பு திறன் , தொழில் நுட்ப ஆற்றல் , தொழில் துறையில் சிறந்து விளங்கும் ஆற்றல் , சிறந்த நிர்வாக  திறமை , மற்றவர்கள் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றத்தை தரும் அமைப்பு , போன்ற விஷயங்களை 100  சதவிகிதம் விருத்தி செய்து தரும் அமைப்பை பெற்றவர் ஆகிறார் .

செவ்வாய் பகவான் நல்ல நிலையில் ஒரு ஜாதக அமைப்பில் அமரும்பொழுது மேற்கண்ட பலன்களை விருத்தி செய்து தருவதில் செவ்வாய் பகவானுக்கு நிகர் அவரே ! இருப்பினும் அதிக நன்மையான பலன்களை, செவ்வாய் பகவானால் நன்மை  அனுபவிக்கும் சில அமைப்பை பற்றி, இந்த பதிவில் காணாலாம் , மேலும் சிலர் இந்த செவ்வாய் பகவான் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12 ம் பாவகங்களில் அமரும்பொழுது செவ்வாய் தோஷம் தரும் என்று பலனை நிர்ணயம் செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றியும் சற்றே சிந்திப்போம் .

எந்த லக்கினம் என்றாலும் , செவ்வாய் பகவான் தனது வீடுகளான மேஷம் , விருச்சக பாவகங்களுக்கு , 2 , 5 , 6 , 8 , 9 , 12 வீடுகளில் அமர்ந்தால் மட்டுமே , மேஷம், விருச்சக ராசிகள் எந்த பாவக அமைப்பை பெறுகிறதோ அந்த பாவக வழயில் இருந்து ஜாதகர் தீமையான பலனை அனுபவிக்க வேண்டி வருகிறது , மேலும் அந்த பாவகங்கள் சர ராசியாகவோ , பாதக அமைப்பை பெரும் பொழுது மட்டுமே ஜாதகர் அந்த வகையில் இருந்து தீமையான பலனை அனுபவிக்க வேண்டி வருகிறது .

எடுத்து காட்டாக :
                               
ஒரு மேஷ இலக்கின ஜாதகருக்கு , செவ்வாய் லக்கினத்தில் இருந்து 2 ல் அமரும்பொழுது தனம் ,குடும்பம் ,வாக்கு என்ற அமைப்பில் தீமையான பலனையும் , 5 ல் அமரும்பொழுது பூர்விகம் , குழந்தை பாக்கியம் ,பரதேஷ ஜீவனம் என்ற அமைப்பில் தீமையான பலனையும் , 6 ல் கடன் , உடல் நோய்,மன நோய் , உடல் உபாதை, சிறு இழப்பு என்ற அமைப்பில் தீமையான பலனையும், 8 ல் திடீர் பேரிழப்பு , விபத்து , எதிர்பாராத இழப்புகள் , தற்கொலை செய்துகொள்ளும் மன நிலை, என்ற அமைப்பில் தீமையான பலனையும் . 


9 ல் பொதுகாரியங்களில் கெட்ட பெயர் , மரியாதை இன்மை , பொது மக்களால் பாதிப்பு , சமுதாயத்தில் பெயருக்கு களங்கம் என்ற அமைப்பில் தீமையான பலனையும், 12 விரக்தி மன நிலை , மன போராட்டம் , உணர்ச்சி வசப்படுவதால் இழப்பு , தூக்கம் இன்மை , சரியான வயதில் எவற்றையும் அனுபவிக்கும் யோகம் அற்ற நிலை அனைத்திலும் தாமதம் என்ற அமைப்பில் தீமையான பலனையும் ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும் , அதிலும் குறிப்பாக இந்த லக்கினத்திற்கு 5 ம் பாவகத்திலும் , 8 ம் பாவகத்திலும் செவ்வாய் அமரும்  பொழுது பலன்கள் கொஞ்சம் கடுமையானாதாகவே இருக்கிறது , லக்கினாதிபதி என்றாலும் ஜாதகருக்கு இந்த பாவக அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் தீமையான பலன்களை தருகிறார் . மற்ற பாவகங்களில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு மிக சிறப்பான யோக பலன்களை தருவதில் தவறுவதில்லை .

மேற்கண்ட முறையில்  மற்ற இலக்கின அமைப்பில் செவ்வாய் பகவானால் பாதிக்கப்படும் ஜாதக அமைப்பை பெற்றவர்கள் , வளர்பிறை செவ்வாய் கிழமை அன்று மாலை 4  மணிக்கு பழனி மலைக்கு சென்று பால தண்டாயுதபாணிக்கு பால் அபிஷேகம் செய்து , 6  மணிக்கு மேல் ராஜ அலங்கார தரிசனம் செய்து வரும் அனைவருக்கும் செவ்வாய் பகவானால் வரும் கடுமையான பாதிப்புகள் நிச்சயம் குறையும் , மேலும் போகர் ஜீவ சன்னதியில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது ஜாதகருக்கு , செவ்வாய் பகவான் சகல வளங்களையும் நலன்களையும் நிச்சயம் வாரி வழங்குவார் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை . மேலும் எவ்வித செவ்வாய் பாதிப்புகளில் இருந்து ஜாதகரை விரைவில் மீட்டெடுத்து பரிபூரண நல வாழ்க்கையை ஜாதகருக்கு வழங்குகிறது இந்த திருத்தலம் .

எனவே செவ்வாய் பகவானால் தோஷம் என்ற அமைப்பு ஒரு மாயையே, மேலும் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12 ம் பாவகங்களில் அமரும்பொழுது செவ்வாய் தோஷம் என்று நிர்ணயம் செய்வதும் தவறான விஷயமே , இந்த அமைப்பை பெற்ற ஜாதகத்தை கொண்டவர்களுக்கு செவ்வாய் மிகசிறந்த நிர்வாக திறனையே வாரி வழங்குகிறார் என்பதே உண்மை , மேலும் தனது பாவகத்திர்க்கு எட்டில் சர ராசியில் செவ்வாய் அமர்ந்தால் மட்டுமே , ஜாதகர் விபத்தில் சிக்க வேண்டி வருகிறது , அதுவும் சம்பந்த பட்ட எட்டாம் வீட்டின் பலனை , நடப்பு  திசை, புத்தி, அந்தரம் ,சூட்சமம் நடத்தினால் மட்டுமே .
 
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696



 

4 கருத்துகள்:

  1. ஐயா
    துலா இலக்கின பெண் ஜாதகருக்கு 8 ல் செவ்வாய். 7 ஆம் பார்வையாக 2 ஆம் (குடும்ப) ஸ்தானத்தை பார்ப்பதால் தீமை விளையுமா? அம்சத்தில் (வக்கிர) நீசம். கடக குரு 5 ஆம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்கிறார்.
    தங்கள் விளக்கம் தேவை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. DOB : 26.10.1990
      time : 7.05 am
      place : Chennai

      தங்கள் மேலான கவனத்திற்கு ஐயா.

      நீக்கு
    2. தாங்கள் குறிப்பிட்டது போல் இந்த ஜாதக அமைப்பில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் உள்ள 7 ம் பாவகத்தில் இருக்கிறார் என்பதே உண்மை , லக்கினத்திற்கு 8 ல் அல்ல என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் , ஏனெனில் லக்கினம் துலாம் ராசியில் 202 பாகையில் தொடங்குகிறது , எட்டாம் பாவகம் ரிஷப ராசியில் 52 பாகையில் தொடங்குகிறது , செவ்வாய் பகவான் ரிஷபத்தில் 50 பாகையிலே இருப்பதால் அவர் லக்கினத்திற்கு ரிஷபத்தில் உள்ள 7 ம் பாவகத்தில் இருக்கிறார் என்பதே முற்றிலும் உண்மை, எனவே நீங்கள் சொல்வதை போல் ஜோதிட பலன் பார்த்தால் பலனே மாறிவிடும் அன்பரே , ஜோதிடம் தெரியாதவர்கள் வேண்டுமானால் செவ்வாய் 8 ல் இருக்கிறார் என்று சொல்வார்கள் , நமது ஜோதிட முறை மிகவும் தெளிவான பலனையே தரும் .

      இருப்பினும் தங்களது கேள்வி குடும்பம் பாதிக்குமா ? என்பதாகவே இருப்பதால் அதன் பதில் :

      குடும்ப அமைப்பில் 33 சதவிகித பாதிப்பை மட்டுமே தரும் , அதுவும் அந்த பெண்ணுக்கு உடல் ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் மட்டுமே எனவே கவலை கொள்ள தேவையில்லை , மேலும் அதனால் மன நிம்மதி இழப்பு ஏற்ப்பட வாய்ப்பு உண்டு . இது இந்த வீட்டின் பலன் நடை பெரும் பொழுது மட்டுமே நடைமுறைக்கு வரும், இல்லை எனில் எவ்வித பாதிப்பும் இல்லை . கிரகத்தை வைத்து பலன் நிர்ணயம் செய்ய முடியாது பாவக அமைப்பை வைத்தே ஒரு ஜாதகருக்கு சரியான பலன் சொல்ல முடியும் என்பதை கவனத்தில் கொள்க . மேலும் விபரம் பெற மின் அஞ்சல் மூலம் ஜோதிட ஆலோசனை பெறுங்கள் , ஆலோசனை கட்டண விபரத்தை அலைபேசியில் அறிந்து கொள்ளுங்கள் .

      நீக்கு
    3. மிக்க நன்றி ஐயா. எங்கள் பகுதியில் உள்ள ஒரு ஜோதிடர் இந்த பெண்ணிற்கு திருமணம் நடக்காது என்றும் அப்படி நடந்தால் மணவாழ்க்கை நன்றாக இருக்காது என்றும் சொன்னார். மிகுந்த கவலையில் இருந்தோம். தங்கள் விளக்கம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
      தாங்கள் கூறியபடி பெரியார்களிடம் சொல்லி விரைவில் தங்களிடம் ஆலோசனை பெறுவோம் ஐயா.

      நீக்கு