திங்கள், 23 ஜூலை, 2012

குரு பகவான் வழங்கும் குபேர சம்பத்து ! குரு பார்க்க கோடி நன்மை !




குருபகவன் கால புருஷ தத்துவத்திற்கு பாக்கியம் எனும்  ஒன்பதாம் வீட்டிற்கும் மோட்சம் எனும் பனிரெண்டாம் வீட்டிற்கும் அதிபதியாகிறார் , இதில் கால புருஷ தத்துவத்திற்கு பாக்கியம் எனும் ஒன்பதாம் வீடு உபய நெருப்பு தனுசு ராசியாக வருகிறது , மோட்சம் எனும் பனிரெண்டாம் வீடு உபய நீர் மீன ராசியாக வருகிறது , இது  ஜாதக அமைப்பில் எவ்வாறு செயல் படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் இன்று சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் .

குரு
என்ற சொல்லுக்கு  ஒருவரின் அஞ்ஞானம் எனும்  இருள் விலக, அறிவு எனும் தீபம் ஏற்றுபவர் என்று பொருள் . இந்த தனுசு ராசியை நாம் நன்றாக கவனித்தோம் என்றால் இது தெளிவாக நமக்கு புலப்படும் , ஒருவருக்கு வாழ்க்கையில் நல்ல குரு அமைய வேண்டும் எனில் நிச்சயம் அவர் முற்பிறவிகளில் "பாக்கியம்"  செய்து இருக்க வேண்டும் , அப்படி செய்தவர்களுக்கே இந்த பிறவியில் நல்ல குரு கிடைக்க பெறுவார் , அப்படி அமைய பெற்ற ஒரு குரு சுயநலம் அற்றவராகவும் உபய தத்துவத்திற்கு ஏற்றார் போல் உள்ளவராகவும் இருப்பது, இந்த தனசு ராசிக்கு உள்ள தனி சிறப்பு .

ராசி
அமைப்பில் சர நெருப்பு , ஸ்திர நெருப்பு , உபய நெருப்பு என  மூன்று வகையாக இறை நிலை பகிர்ந்து தந்து இருக்கிறது , இதில் சர நெருப்பு ஒரு காட்டு தீ போல் எல்லையில்லாமல் கட்டுப்பாடு இல்லாத தன்மையை குறிக்கும், இங்கே ஒருவரின் செயல் பாடுகளை நிர்ணயம் செய்யும் அமைப்பை மேஷ சர நெருப்பு பெறுகிறது , ஸ்திர நெருப்பு என்பது ஒரே நிலையில் எரிந்து கொண்டு இருக்கும் தன்மையை தரும் இங்கே ஒருவரின் உடலின் வெப்பத்தையும் , பூமியின் சீதோஷ்ண நிலையையும் ஸ்திர சிம்ம நெருப்பு நிர்ணயம் செய்கிறது . மற்றவருக்கு உபயோக படும் விதத்தில் உள்ள உபய நெருப்பு , விளக்கு தீபம் , எரிபொருள் சார்ந்த உபயோகம் என்ற அமைப்பில் என்றாலும் இங்கு ஒருவரின் அஞ்ஞானம்  எனும்  இருள் விலக, அறிவு எனும் தீபம் ஏற்றும் தன்மையையே குறிக்கும் .

தனுசு
ராசிக்கு அதிபதியான குருவின் தன்மை மேற்கண்ட அமைப்பிலேயே செயல் படுகிறது அதாவது ஒருவரின் அஞ்ஞானம் எனும்  இருள் விலக, அறிவு எனும் தீபம் ஏற்றும் அதி முக்கியமான பொறுப்பை இந்த குருபகவான் ஆளுமை செய்கிறார் , ஒரு ஜாதகருக்கு லக்கினம் எதுவென்றாலும் இந்த தனுசு ராசி அமைப்பு நன்றாக அமைய பெற்றவர்களுக்கு நிச்சயம் நல்ல குரு அமைவார், அவரின் வழிகாட்டுதலில் ஜாதகர் குருவை மிஞ்சிய சீடனாக சிறந்து விளங்கும் யோகம் பெற்றவர்கள் .

  
அறிவாற்றல் கொண்டு அனைத்தையும் சாதிக்கும் திறன் வாய்ந்தவர்கள் , பேராசிரியர் மற்றும் ஆசிரிய பணியில் சிறப்பாக செயல் படும்  தன்மை பெற்றவர்கள் , பல தலை முறைகளுக்கு பலன் தரும் அறிய படைப்புகளை உலகத்திற்கு எவ்வித பிரதி பலனும் பாராமல் தரும் உன்னதமான குணம் பெற்றவர்கள், உலக மக்களுக்கு ஏற்ப்படும் சந்தேகங்களுக்கு உண்மை விளக்கத்தை தரும் பேரறிவாளர்கள் , பொதுவாக தனுசுவில் அமரும் குருவும் , மேஷம் மற்றும்  சிம்ம ராசியில் அமரும் குரு 100 சதவிகித நன்மையை தனது பார்வையின் மூலம் வாரி வழங்குவார் , ஆனால் மிதுனத்தில் அமரும் குருவின் பார்வை பெரும் தனுசுவிற்கு 100 சதவிகிதம் பாதிப்பான பலனையே தரும் .
   

மீன ராசிக்கு அதிபதியான குருவின் ஆற்றல் ஆச்சரியமான ஒரு விஷயம், காரணம் அயன சயன மோட்ச அமைப்பிற்கு அதிபதியாவதால் , ஒருவரின் முற்பிறவியின் பதிவுகளை மனதில் பசுமை மாறாமல் பாதுகாத்து , " வினை பதிவின் " நிலையை அறிவுக்கு உணர்த்தும் அமைப்பாகும் , உபய நீர், மீன ராசிக்கு அதிபதியாகும்  குருபகவான் தனுசு மட்டும் அல்ல  மீனத்திலும்  மக்களின் வாழ்க்கையில் உபயோகம் பெரும் நிலையையே பெறுகிறார், இறை நிலையின் தன்மையை உணர நமக்கு ஒரு நல்ல குரு தேவை , அந்த தேவையை மீன குரு நமக்கு தகுந்த நேரத்தில் அறிமுகப்படுத்துகிறார் , அந்த குருவின் மூலம் நான் யார் என்ற கேள்விக்கு, தெளிவான பதில் நமக்கு நிச்சயம் கிடைக்கின்றது , இதனால் இறை நிலை உணர்தலும் அதன் விளைவாக "கருமைய  துய்மை" பெரும் யோகம் நமக்கு கிடைக்கின்றது .

நல்ல
நிம்மதியான உறக்கம்  ஒருவருக்கு நல்ல ஆரோக்கியமான உடல் நிலையும், சிறப்பான மன நிலையும் தரும் , இந்த அமைப்பை பெற்ற  ஜாதகரின் எண்ணங்கள் யாவும் நிச்சயம் செயல் வடிவம்  பெரும் , அப்படி செயல் வடிவம் பெரும் எண்ணங்கள் அனைத்தும் ஜாதகருக்கும் , ஜாதகரை சார்ந்தவருக்கும் மற்றும் சமுதாயத்திற்கும் மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும் , ஜாதகரின் மன ஆற்றல் அவரின் தன்னம்பிக்கை , எதிர்பார்ப்பு , லட்சியம்  ஆகியவற்றை நிறைவேற இந்த அமைப்பு நல்ல நிலையில் இருப்பது  அவசியம் , மேலும் திடீர் என நிகழும் யோக நிகழ்வுக்கும் இந்த அமைப்பே காரணம் , கலைகளில் ஜாதகருக்கு அபரிவிதமான அறிவாற்றல் நிச்சயம் உண்டு , ஒருவரின் எதிர்மறை எண்ணங்களையும் மாற்றும் சக்தி படைத்தவர்கள் , ஒருவரின் மனதை முழுவதுமாக ஆளும் தன்மை பெற்ற ராசி இதுவாகும் .

மீன
ராசி உபய நீர் தத்துவ அமைப்பிற்கு பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து நல்ல நீர் நிலைகளையும் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், அவரவர் சக்திக்கு ஏற்றார் போல் தமக்கு தேவையான அளவு அவரவரே எடுத்துகொள்ளலாம் , மீன ராசிக்கு கடகத்தில் அமர்ந்த குருவின் பார்வையும், விருச்சகத்தில் அமர்ந்த குருவின் பார்வையும் 100 சதவிகித நன்மைகளை வாரி வழங்கும் . ஆனால் கன்னியில் அமர்ந்த குரு மீனத்தை 100 சதவிகிதம் கெடுத்து விடும். இந்த பாவக வழியில் இருந்து ஜாதகர் எவ்வித நன்மையையும் அனுபவிக்க இயலாது , மக்களுக்காக செய்யும் காரியங்கள் ( பொது சேவை ) அனைத்தும் வெற்றி பெரும்.

 தனக்கென்று வரும் பொழுது ஜாதகர் அதிக தோல்விகளை சந்திக்க வேண்டிவருகிறது .எளிமையாக சொல்ல வேண்டும் எனில் " ஏணி படிகள் " போல் மற்றவரை உயரத்திற்கு ஏற்றிவிட்டு தான் அங்கேயே இருக்கும் சூழ்நிலை வரும் இருப்பினும் மன நிம்மதியுடன் இருப்பார்கள்.
ஒருவருடை சுய ஜாதகத்தில் மீன ராசியும் , சுய லக்கினத்திற்கு 12 ம் பாவகமும் பாதிக்கபட்டால் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது இவர்களின் வாழ்க்கை ஒரு கேள்வி குறியாக மாறிவிட வாய்ப்பு அதிகம் உண்டு, இவர்கள் சரியான ஜோதிட ஆலோசனை பெற்று வாழ்க்கையில் நலம் பெற இறை நிலை அருள் புரியட்டும் .


வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன்  
9443355696 
 

2 கருத்துகள்:

  1. குரு பகவானின் பார்வையில் இவ்வளவு நுணுக்கமா? மிகவும் அறிய தகவலாக இருக்கிறது. குரு சுப கிரகம் என்பதால் பலன்களை நல்லவிதம் அளிப்பார் என்று இருந்தேன்..

    மிக்க நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் இறை அருளின் கருணை , நான் இங்கே எழுதியிருப்பது சிறு விஷயம் மட்டுமே, எண்ணிலடங்க ஜோதிட நுட்ப்பங்கள் இன்னும் பல உண்டு என்பதே உண்மை . பிராப்தம் உள்ளவர்கள் தெரிந்து கொண்டுவாழ்க்கையில் நலம் பெறுங்கள்.

      வாழ்க வளமுடன்.

      நீக்கு