வியாழன், 26 ஜூலை, 2012

சூரிய பகவான் வழங்கும் சுபயோக பலன்கள் !



கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சிம்மம் ஐந்தாம் வீடாகவும் , ஸ்திர நெருப்பு ராசியாகவும் அமைகிறது , இந்த ராசிக்கு அதிபதியாக சூரியன் பொறுப்பேற்கிறார் , மேலும் ஒருவருடைய ஜாதக அமைப்பில் சூரியன் மற்றும் , சிம்ம ராசி ஆகியன நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் அனுபவிக்கும் நன்மைகள் என்னவென்பதை இந்த பதிவில் நாம் காணலாம் , நவகிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருத படும் கிரகம் சூரிய பகவானே , கரணம் அனைத்து கிரகங்களையும் ஆளுமை செய்யும் தன்மை இந்த சூரியனுக்கே உண்டு மேலும் , மற்ற கிரகங்களை வக்கரகம் செய்யும் சக்தியும் அஸ்தமனம் பெற செய்யும் சக்தியும் சூரிய பகவானுக்கு உள்ள சிறப்பு அம்சங்கள் அப்படிபட்ட சூரிய பகவான் , ஒருவருடைய ஜாதக அமைப்பில் எந்த நிலையிலும் பாதிப்பு அடையாமல் இருப்பது, ஜாதகருக்கு அதிக நன்மையான பலன்களை வாரிவழங்க எதுவாக அமையும் .

 

மேலும் கால புருஷ தத்துவத்திற்கு ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாக வரும் காரணத்தால் , ஒருவருக்கு குல தெய்வம் எதுவென்று தெரியாத சூழ்நிலை ஏற்ப்படும் பொழுது அவருக்கு உண்டான குல தேவதை எதுவென்று உணர்த்தும் தன்மை இந்த சூரிய பகவானுக்கு உண்டு , அதாவது தொடர்ந்து ஒரு ஜாதகார் அதிகாலையில் முறைப்படி சூரிய நமஸ்காரம் செய்துவருவாரே ஆயின் , சூரிய பகவானின் அருளால் அவருடைய குல தேவதை ஒரு மண்டல காலத்தில் நிச்சயம் தெரிய  வரும் , மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் ராஜாங்கத்தில் பரிபாலனம் செய்ய வேண்டுமெனில்  சூரிய பகவானின் அருளாசியில்லாமல் நிச்சயம் நடக்க வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை , குறிப்பாக மக்கள் ஆதரவு பெறவேண்டும் எனில் சுய ஜாதகத்தில் சிம்ம வீடும் , சூரிய பகவானும் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் , அரசியலில் உயர்பதவிகளை வகிக்க நிச்சயம் சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக இருந்தால் மட்டுமே  தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று மிகசிறந்த அரசியல் வாதியாக திகழ முடியும் .

 

சிம்ம ராசி கால புருஷ தத்துவத்திற்கு பூர்வ புண்ணிய அமைப்பை பெறுகிறது , மிகசிறந்த ஆன்மீக வாதிகளின் சுய ஜாதக அமைப்பில் இந்த சிம்ம வீடு 100 சதவிகிதம் நல்ல நிலையில் , இருப்பதை பார்க்கலாம், மிகசிறந்த அரசியல்வாதி , தனி திறன் பொருந்திய மருத்துவர்கள் , மக்களை காக்கும் பொறுப்பில் உள்ள நேர்மை மாறாத காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் , சட்ட நிபுணர்கள் , கல்வியாளர்கள், பொது நல மக்கள் சேவகர்கள் , நாட்டின் மிகப்பெரிய பதவிகளில் சிறப்பாக செயல்படும் ஆட்சியாளர்கள் என இவர்களின் பட்டியல் மிகவும் அதிகமே , பிறப்பில் அதிக வசதி வாய்ப்பு அற்ற நிலையில் இருந்தாலும் ஜாதகரின் வயது கூட கூட அதிக யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை பெற்றவர்களின் ஜாதகங்களில் எல்லாம்  சிம்ம வீடும் , சூரிய பகவானும் மிக சிறப்பான நிலைகளில் நிச்சயம் அமைந்து இருக்கும் .

 

சில குழந்தைகள் கல்விகாலங்களில் படிப்பு மற்றும் சிறப்பு திறன் போன்றவற்றில் சிறந்து விளங்குவதற்கு சூரிய பகவானும் , சிம்ம வீடுமே காரணமாக அமைகிறது , அதிலும் மிகமுக்கியமாக மருத்துவ துறைசார்ந்த படிப்புகளில் சிறந்து விளங்க மேற்கண்ட அமைப்பு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே முடியும் , இல்லையெனில் யாரும் மருத்துவ துறைக்குள்  அடியெடுத்து வைக்க கூட இயலாது , ஒரு குழந்தை சிறு வயது முதல் சிறப்பான திறமை , கல்வி , புதுமையான சிந்தனை , படைப்பாற்றல் ஆகியவை அமைய வேண்டும் எனில் தினமும் அதிகாலையில் எழுந்து சூரியன் வருமுன் சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நிச்சயம் வாழ்க்கையில் சகல நலன்களும் கிடைக்க பெறுவார் இது கண்கூடாக கண்ட உண்மை , கல்வி கேள்விகளிலும் , கலைகளிலும் சிறந்து விளங்க சூரியனின் அருள் இருந்தால் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தை தரும் .

 

எனவே தனது குழந்தை சிறப்பான திறமைகளுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்து பெற்றோர்களும் , குழந்தைகளுக்கு சிறு வயது முதல் சூரிய வழிபாட்டினை கற்றுகொடுக்க வேண்டியது அவசியமாகிறது , இதை பின்பற்றும் குழந்தைகள் அனைத்தும் எந்த சூழ்நிலையையும் சமாளித்து , தனது லட்ச்சியம் மற்றும் குறிக்கோள்களை நிச்சயம் அடைவார்கள் , இதில் ஒரு சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால் அடிப்படையில் இருந்து சூரிய வழிபாடு செய்து வரும் அனைவரும் , நல்ல குணங்களும் , சிறந்த ஒழுக்கமான நடவடிக்கையும் , அனைவரிடமும் அன்பு செலுத்தும் குணமும் , பெருந்தன்மையான குண அமைப்பையும் பெறுகின்றனர் .

 

சூரியன் உலகத்திர்க்கெல்லாம் ஒளி தரும் தன்மை போல் சுய ஜாதகத்தில் சூரியன் மற்றும் சிம்ம வீடு நன்றாக அமைய பெற்றவர்கள் , 100 சதவிகித வெற்றிகரமான வாழ்க்கையை பெற்று மற்றவருக்கு உபயோகமான வாழ்க்கையை வாழ்ந்து விட்டு செல்லும் யோகம் பெற்றவர்களாகவே இருப்பது ஒரு சிறப்பான விஷயம் . நவகிரகங்களில் சூரியனுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு மற்ற கிரகங்களால் ஏற்ப்படும் துன்பங்களில் இருந்து ஒரு ஜாதகர் விடுபட சூரிய நமஸ்காரம் தினமும் செய்து வந்தால்  நிச்சயம் நன்மை கிடைக்கும் , இந்த நன்மையை வழங்கும் அதிகாரம் சூரியனுக்கு மட்டுமே உண்டு . மேலும் பல சிவ ஸ்தலங்களுக்கு சென்று வழிபடும் யோகம், ஒருவருக்கு சுய ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே கிடைக்கிறது , மேலும் பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக செய்பவர்கள் அனைவருக்கு சுய ஜாதகத்தில் சூரியன் மற்றும் சிம்ம வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே கிடக்கிறது , பஞ்சபூதங்கள் பற்றிய ஆய்விற்கு சூரியன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே விளக்கம் பெற முடியும் .

 

எனவே ஒவ்வொருவருடை வாழ்க்கையிலும் சூரிய பகவான் மிகப்பெரிய மாற்றங்களை தர வேண்டும் எனில் , சூரிய வழிபாடு அல்லது பிரதோஷ வழிபாடு செய்வது மிகசிறந்த நன்மைகளை தரும் , முடியாதவர்கள் வருடத்தில் இரண்டு முறை வரும் சனி பிரதோஷ வழிபாட்டினையாவது மேற்கொள்ளுவது மிக பெரிய நன்மைகளை வாரி வழங்கும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

5 கருத்துகள்:

  1. சூரிய பகவானுடைய சிறப்புகள் இவ்வளவு உண்டா..இத்தனை நாட்கள் சூரிய நமஸ்காரம் செய்வது குறித்து அறிந்திருந்தாலும்..அதிகாலையில் எழுந்தாலும் செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றியதே இல்லை..தங்களின் பதிவு செய்ய தூண்டுகிறது..மிகவும் சிறப்பு மிக்க பதிவு..தொடருங்கள்.

    ஐயா, ஜாதகத்தில் சூரியன் பகை பெற்றிருப்பின் சூரிய நமஸ்க்காரம் செய்வதால் பாதிப்புகள் குறையுமா ? இது நீண்ட நாள் சந்தேகம்.
    தவறா கேட்டிருப்பின் மன்னிச்சிருங்க..மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய லக்கினத்தை பொறுத்து பலன் சொல்ல முடியும் இருப்பினும் , சிம்ம லக்கினத்திற்கு கும்பத்தில் சூரியன் பகை பெறுவது 100 சதவிகித நன்மையே செய்யும் லக்கினத்திற்கு , மேலும் துலாம் ராசியில் நீச்சம் பெறுவது சிம்மலக்கினத்திர்க்கு மிகப்பெரிய யோகத்தையே தரும் , சிம்ம லக்கினத்திற்கு சூரியன் விருச்சகம், ரிஷபம் ,மிதுனம் ஆகிய ராசிகளில் இருந்தாலும் மிகப்பெரிய யோகமே !

      மகரத்தில் சூரியன் பகை பெறுவது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக ஜாதகர் விளங்குவார் , எதிரி சொத்து ஜாதகருக்கு கிடைக்கும் , ஆனால் எதிரியிடம் வழிய சென்று மாட்டிக்கொண்டு சில நேரங்களில் விழிக்க வேண்டி வரும் .

      நீக்கு
    2. ஐயா தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
      ஐயா, சமீபத்தில் ஒரு ஜாதகரிடம் போயிருந்தேன்..அவர் ஜாதகம் பார்த்து நான் சிம்ம லக்கினம் என்றுதான் சொன்னார்..ஆனால் அப்பா அம்மா நான் பிறந்த போது கணித்த ஜாதகத்தில் கன்னி லக்கினம் என்று உள்ளது..எதை நம்புவது என்று பெரிய குழப்பமாகவே இருக்கிறேன்.இருந்தாலும் இரண்டு ஜாதகத்திலும் சூரியன் கும்பம் ராசியில்தான் இருக்கிறார்.அங்கு பகை பெற்று சனி மற்றும் புதனுடன் சேர்ந்து இருப்பது நல்லதல்ல என்றும் சொன்னார்கள்.எதை நம்புவது என்பதே பிரச்சனையாக உள்ளது.
      நன்றி..

      நீக்கு
    3. தங்களுடைய பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த இடம் ஆகியவற்றை துல்லியமாக எங்களது மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள் , முன் அனுமதி பெற்று ஆலோசனை பெறலாம், ஆலோசனை கட்டண விபரம் மின் அஞ்சலில் அனுப்பி வைக்க படும் .

      நீக்கு
  2. ஐயா, விருச்சிக லக்னம்,சிம்ம ராசிக்கு சூரியன் கும்பத்தில் பகை பெற்றுள்ளார்.இது நன்மையா,தீமையா?

    பதிலளிநீக்கு