Wednesday, November 19, 2014

எண்கணிதம் ஒருவரின் வாழ்க்கையில் நடத்தும் மாயாஜாலங்கள் ! தொடர்ச்சி.....


இனி 2 வது உதாரண பிறந்த தேதியை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே :

தமிழகத்தை முதல்வரகளாக ஆட்சி செய்த மூன்று தலைவர்களின் பிறந்த தேதியை எடுத்து கொள்வோம், அதில் இரண்டாவதாக புரச்சி தலைவர் MGR அவர்களின் பிறந்த தேதி மற்றும் பலன்கள்  புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்த தேதி ( 17/01/1917 )
நமது எண்கணித முறைப்படி    8-1-9-9

பிறந்த தேதியில் 8ம் எண் வந்தது ஜாதகரை சிறு வயதிலேயே பல சிரமங்களுக்கு ஆளாக்கியது, வறுமையின் கோர பிடியில் சிக்கி ஜாதகர் சிறு வயது முதல் தனது 15வது வயது வரை பல சிரமங்களை எதிர்கொள்ளும் தன்மையை தந்தது, அடிப்படையில் ஜாதகரின் கல்வி வாழ்க்கையை கேள்விக்குறியானது, ஜாதகர் தனது பெற்றோர் வழியில் இருந்து பெரும் நன்மையில் சிறிதேனும் அனுபவிக்க இயலாத தன்மையை தந்தது, அவரது பெற்றோருக்கும் பல சிரமங்களை வாரி வழங்கியது, ஜாதகரின் முயற்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்விகளையே வழங்கியது, பால்ய பருவத்திலே பசியின் கொடுமையை உணர்ந்தவர் என்பதால் பின்னாளில் தனது வீட்டுக்கு வரும் எவரும் வெறும் வயிற்றுடன் செல்லக்கூடாது என்ற கொள்கையை வைத்திருந்தார், பொதுவாக 8ம் எண் ஒரு மனிதருக்கு உலக பிரபலத்தை தந்த போதிலும் சுய வாழ்க்கையில் பிரகாசிக்காத தன்மையை தந்துவிடுகிறது, ஊருக்கு உத்தமன் வீட்டிற்கு ஊதாரி என்ற பழமொழியை நினைவுகூர வைத்துவிடுகிறது, 8ம் எண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் உழைப்பும் மற்றவருக்கே பலன் தருகிறது சம்பந்தபட்டவருக்கு பெரிய நன்மைகளை தருவதில்லை, தலைவர் இறுதி வரை தனக்காக எதையும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நினைவு கூர்வது அவசியம், 8ம் எண்ணை சார்ந்தவர்கள் பல சிரமங்களை அனுபவித்த போதிலும் நேர்மை மாறாத குணம் அவர்களை புகழின் உச்சிக்கே எடுத்து செல்கிறது என்பதை மறுக்க இயலாது.

பிறந்த தேதியில் மாதத்தில் 1ம் எண் வந்தது ஜாதகரை இளம் வயதிலேயே சோர்வு அறியாத கடின உழைப்பாளியாக நிலைநிறுத்தியது, தான் எடுத்துக்கொண்ட கொள்கையிலும், லச்சியத்திலும் குறிக்கோளாக இருந்து வெற்றி கனியை பறிப்பதற்கு உண்டான ஆளுமையை தந்தது, இளம் வயதில் சிரமபட்ட போதிலும், 15 வருடங்களுக்கு பிறகு ஜாதகர் தனது 30வது வயது வரை சகல விஷயங்களிலும் தேர்ச்சியும், நுண்ணறிவையும் பெரும் யோகத்தை தந்தது, சூரியனுக்கு உரிய 1ம் எண் ஜாதகருக்கு 15 முதல் 30 வயது வரை தனி திறன்களை வளர்த்துகொள்ளும் வாய்ப்பையும், தடை பட்ட கல்வியை தனது சுய முயற்ச்சியின் மூலமே கற்றுகொள்ளும் யோகத்தை தந்து, ஜாதகருக்கு அரசியில், கலைத்துறை, பொதுமக்களின் ஆதரவு இதற்குண்டான அறிமுகங்களை வழங்கிய காலம் இதுவென்றால் அது மிகையில்லை, ஒரு சிறந்த புகழ் பெற்ற மனிதராக பரிணமிக்க அடிப்படை அடித்தளம் அமைந்த காலம் இதுவே, எனவே ஜாதகர் சகல விஷயங்களையும் கற்று தேர்ந்த காலம் இதுவென்றால் அது மிகையில்லை.

பிறந்த தேதியில் வருடத்தில் 9ம் எண் வந்தது ஜாதகரை படி படியாக வெற்றிபடிகளில் கால் வைக்கும் யோகத்தை தந்தது எனலாம், ஜாதகர் தனது 30 வது வயது முதல் 45 வது வயது வரை வெற்றி படிகட்டுகளில் ஏற ஆரம்பித்த காலம் என்றால் அது மிகையில், தொடர் வெற்றிகளை கொடுக்கும் எண்ணான 9ம் எண்ணில் பயணம் செய்த புரட்சி தலைவர் தனது தனிப்பட்ட திறன்களையும், நல்ல குணங்களையும் பொதுமக்களுக்கு கலை துறை மூலம்  பிரதிபலித்தார், மேலும் மக்களின் பேர்அன்பிற்கும், பெரும் மதிப்பிற்கும் உரியவர் என்ற நிலையான நம்பிக்கையை மக்கள் மனதில் பசுமரத்தில் பதித்த ஆணி போல் மக்களின் மனதில் உயர்ந்து நின்றார், 9ம் எண்ணான செவ்வாயின் ஆதிக்கம் மக்கள் மனதில் நிலையான கதாநாயகன் அந்தஸ்தை பெற்று தந்து, இவரின் முகம் பார்க்க மக்கள் ஏங்கி கிடந்தனர், இவரின் வார்த்தைக்கு தமிழகமே கட்டுபட்டது, இவர் பயணம் செய்த 9ம் எண் ( 30 முதல் 45 வயது வரை ) தனது துறையிலும் தனிப்பட்ட வாழ்கையிலும்  பிரகாசிக்க வைத்த காலம் இதுவென்றால் அது மிகையில்லை.

பிறந்த தேதியில் கூட்டு எண்ணாக மீண்டும் 9ம் எண் வந்ததே ஜாதகரின் அபரிவிதமான வெற்றிக்கும், பொருளாதார ரீதியான உச்சத்திற்கும் கொண்டு சென்றது, ஜாதகரின் 45 வயது முதல் வாழ்வின் இறுதி வரை தொடர் வெற்றிகளையே வாரி வழங்கியது, ஜாதகருக்கு பிறந்த எண்களில் வெற்றிகளை குவிக்கும்  9ம் எண் மீண்டும் வந்தது, கலைத்துறை, அரசியல், பொதுவாழ்க்கை ஆகிய அமைப்பில் உச்ச நிலையை பெற வைத்தது, ஜாதகருக்கு பிறந்த தேதியில் வந்த 8ம் எண் வறுமையின் உச்சத்தை பார்க்க வைத்தது, வருடம் மற்றும் கூட்டு எண்ணில் வந்த 9ம் எண்கள் ஜாதகரை வசதி வாய்ப்பு மற்றும் புகழின் உச்சத்தை பார்க்க வைத்தது, ஜாதகருடன் மோதிய பலரது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியது, வெற்றி தேவதையின் பரிபூரண பிடியில் ஜாதகர் உலா வந்த காலம் இதுவென்றால் அது மிகையில்லை, ஜாதகரை புகழின் உச்சிக்கும் உலக அளவில் பிரபலம் பெரும் யோகத்தையும் தந்த காலம் இதுவே, ஜாதகர் கலை துறையில் பல வெற்றிகளை குவிக்கவும், அரசியலில் கொடிகட்டி பறக்கவும் மேற்கண்ட செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற 9ம் எண்ணே வழிவகுத்தது எனலாம், ஒருவரின் பிறந்த தேதியில் 9ம் எண் வருவது வெற்றிகரமான வாழ்க்கையை உறுதி செய்யும், பெயரும் 9ம் எண்ணில் அமைந்தது  ( MGR ) வெற்றியின் சதவிகிதத்தை 200% வாரி வழங்கியது என்பதை நாம் இதன் மூலம் தெளிவாக உணரலாம்.

அன்பர்களே ! எண்களின் வலிமை பலன் தருவது, அதன் ஆதிக்கத்தின் கிழ் பயணம் செய்யும் பொழுது மட்டுமே என்பதை உணர்வது அவசியம் ஒருவரின் பிறந்த தேதியில் இருக்கும் எண் மற்றும் கூட்டு எண் ஆகியவை மற்றுமே ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்து விடாது நமது எண்கணித முறைப்படி பிறந்த தேதி, மாதம், வருடம் மற்றும் கூட்டு எண் ஆகியவை அனைத்தும் ஒருவரின் வாழ்க்கையில் அதன் ஆதிக்கத்தின் கிழ் பயணம் செய்யும் வயதுகளில் யோக அவயோக பலன்களை எண்களின் தன்மைக்கு ஏற்றார் போல் பலன் தரும், பொதுவாக இவரது பிறந்த தேதியை வைத்து பலன்களை நிர்ணயம் செய்யும் எண் கணித நிபுணர்கள் இவரது வெற்றிக்கு காரணம் 8ம் எண்ணாக வர்ணிப்பது உண்டு, உண்மை அதுவல்ல இவரது பிறந்த தேதியில் வருடம் மற்றும் கூட்டு எண்ணில் இருக்கும் 9ம் எண்ணுக்கே அந்த பெருமையெல்லாம் சாரும் என்பதை எண்கணித ஆர்வலர்கள் புரிந்துகொள்வது சிறப்பு, 8ம் எண் ஜாதகருக்கு கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டுடன் நேர்மையையும் வழங்கியது என்பதை மறுக்க இயலாத போதிலும், இவரது புகழ் மிக்க வெற்றிகரமான வாழ்க்கையை நிர்ணயம் செய்தது நிலையான வெற்றிகளை வாரி வழங்கும் 9ம் எண் என்றால் அது மிகையில்ல அனபர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment