வியாழன், 13 நவம்பர், 2014

எண்கணிதம் ஒருவரின் வாழ்க்கையில் நடத்தும் மாயாஜாலங்கள் !



அன்பர்களே !

இந்த பதிவில் எண்கணிதம் பற்றியும், எண்களின் வலிமையை பற்றியும் சற்றே சிந்தனைக்கு எடுத்துகொள்வோம், ஒருவரின் வாழ்க்கையில் நன்மை தீமையை வாரி வழங்கும் தன்மை 0-9 வரை உள்ள எண்களுக்கு நிச்சயம் உண்டு, இதில் சுய ஜாதகத்தில் ராசி மற்றும் லக்கினத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை, சுய ஜாதகத்தில் உள்ள நவகிரகங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை ஜோதிடதீபம் அடிப்படையிலேயே தெளிவுபட தெரிவிக்கிறது, ஒருவரின் பிறந்த தேதியை மட்டும் அடிப்படையாக வைத்து எண்கணிதம் என்பதை சிந்தனைக்கு எடுத்துகொள்ளுங்கள், எண்கணிதம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் பிறந்த தேதி, மாதம், வருடம் மற்றும் கூட்டு எண் ஆகிய எண்களின் அடிப்படையிலேயே இங்கே விவாதிக்க படுகிறது, ஜாதகத்திற்கும் எண் கணிதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை முதலிலேயே ஜோதிடதீபம் தங்களுக்கு அறிவுறுத்துகிறது, இனி வரும் விஷயங்கள் யாவும் ( 0 முதல் 9 வரையிலான ) எண்களின் அடிப்படையிலேயே இருக்கும் அன்பர்களே ! 

அடிப்படையில் ஒருவரின் பிறந்த தேதியில் 2,7,8 ம் எண்கள் இருப்பின் குறிப்பிட்ட நபர் மேற்கண்ட எண்களின் ஆதிக்கத்தின் கிழ் பயணிக்கும் குறிப்பிட்ட காலம் வரை மிகுந்த இன்னல்களுக்கும் தொந்தரவுகளுக்கும் ஆட்படும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட எண்களுக்கு அருகில் இருக்கும் எண்கள் இந்த எண்களுக்கு நட்பு நிலையில் இருப்பின், இந்த எண்களின் பாதிப்பு குறையும், ஒரு வேலை இந்த எங்களுக்கு பகை நிலையில் இருப்பின் பாதிப்பின் தன்மை மிக அதிகமாக இருக்கும். எனவே ஒருவரின் பிறந்த தேதியில் ( தேதி,மாதம்,வருடம் மற்றும் இவற்றின் கூட்டு எண் ) ஆகியவற்றில் மேற்கண்ட எண்கள் இல்லாமல் இருப்பின் சம்பந்தபட்டவர் வாழ்க்கையில் பெரிய அளவில் சிரமங்களை எதிர்கொள்ளாமல் சிறப்பான முன்னேற்றங்களை தனது வாழ்க்கையில் பெறுவார் என்பதுமட்டும் நிதர்சனமான உண்மை அன்பர்களே !

இனி உதாரண பிறந்த தேதியை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே :

தமிழகத்தை முதல்வரகளாக ஆட்சி செய்த மூன்று தலைவர்களின் பிறந்த தேதியை எடுத்து கொள்வோம் 

1) கலைஞர் கருணாநிதி 
2) புரட்சி தலைவர் எம்ஜிஆர் 
3) புரட்சி தலைவி ஜெயலலிதா 

கலைஞர் கருணாநிதி பிறந்த தேதி ( 03/06/1924 ) 
நமது எண்கணித முறைப்படி    3-6-7-7

புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்த தேதி ( 17/01/1917 )
நமது எண்கணித முறைப்படி    8-1-9-9

புரட்சி தலைவி ஜெயலலிதா பிறந்த தேதி ( 24/02/1948 )
நமது எண்கணித முறைப்படி   6-2-4-3


கலைஞர் கருணாநிதி பிறந்த தேதி ( 03/09/1924 ) 
நமது எண்கணித முறைப்படி    3-6-7-7



பிறந்த தேதியில் 3ம் எண் வந்தது அதிபுத்திசாலிதனமான செய்கையினால் வெற்றிவாய்ப்புகளை  பெரும் யோகத்தை தந்தது, பிடிவாத குணத்தால் சில விஷயங்களை  சாதிக்கும் வல்லமையை தந்து, தனது பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் மக்களிடம் பிரபலம் ஆகும் வாய்ப்பை 3ம் எண்ணே வாரி வழங்கியது , இவர் சொல்லும் வார்த்தைக்கும், எழுத்து நடைக்கும் தனி ரசிகர் பட்டாளமே  இருந்தது, மொழி புலமையும் வாக்கு வன்மையும் எழுத்து நடையும் தனிப்பட்ட அடையாளத்தை தமிழகத்தில் பெற்று தந்து, 3ம் எண் இவரின் பிறப்பில் இருந்து முதல் 15 வருடங்களை தனது ஆளுமைக்கு கொண்டு வந்து அடித்தளத்தை அமைத்து தந்து .

பிறந்த தேதியில் மாதத்தில் 6ம் எண் வந்தது சில எதிர்பாராத வெற்றிவாய்ப்புகளை வாரி  வழங்கியது, பெரிய மனிதர்களின் ஆதரவும் ஆசிகளும் சிறப்பாக அமைந்து வெளி உலகத்திற்கு இவரின் செயல்கள் மற்றும் சேவைகள்  தெரிய ஆரம்பித்தது, இந்த நேரத்தில் தான் ஏற்றுகொண்ட துறையில்  பிரகாசிக்கும் வெற்றி வாய்ப்பை வாரி வழங்கியது, கற்பனை  வளமும் எழுத்தின் வல்லமையும் தமிழக மக்களுக்கு இடையே நல்ல வரவேற்ப்பை  பெற்று தந்தது, வெற்றிகரமான முன்னேற்ற வாழ்க்கையை இவரின் 15 வது வயது முதல் 30 வது வயது வரை 9ம் எண் ஸ்திரமாக நிர்ணயம் செய்து  வெற்றிகளை வாரி குவித்தது சிறந்த அறிமுகம் கிடைத்தது.

பிறந்த தேதியில் வருடத்தில் 7ம் எண் வந்தது பொதுமக்களிடம் பிரபலமாக்கியது ,  பொதுமக்களின் நன்மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நபராக வலம் வர செய்தது, இந்த காலகட்டத்தில் அரசியல் ரீதியான செல்வாக்கும் அரசியல் ஆதாயமும் எதிர்பாராத வகையில் அமைந்த போதிலும், சுய வாழ்க்கையில் பல முரண்பட்ட விஷயங்களில் ஈடுபட வைத்தது இவரின் எதிர்மறையான செய்கைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது, பொது வாழ்க்கையில் பிரகாசித்த அளவிற்கு தனிப்பட்ட வாழ்க்கை  சிறப்பாக அமையவில்லை, எதிர்மறையான கருத்துக்களும் இவருக்கு பிரபலமான அரசியல் வாழ்க்கையை தந்தது, இவரின் 30 வது வயது முதல் 45 வது வயது வரை 7ம் எண் பிரபலமான மனிதர் என்ற பெயரையும், பொருளாதார ரீதியான அபரிவிதமான் வளர்ச்சியின் ஆரம்பத்தையும் தந்து.

பிறந்த தேதியில் வரும் கூட்டு எண் 7ம் எண்  வந்தது நீண்ட ஆயுளை வாரி வழங்கியது, முதுமை வயதிலும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மிக சிறப்பாக அமைந்தது, தமிழகத்தில் மட்டும் பிரபலமாக இருந்த இவருக்கு இந்தியா முழுவதும் செல்வாக்கு கிடைத்த காலம் இதுவே எனலாம், 8ம் எண்ணுடன் மோதி தனது வலிமையை இழந்த காலம் இதுவே என்றால் அது  மிகையில்லை, இவரது பிறந்த தேதியில் உள்ள 3ம் எண்  இவரது கட்சியில் இருந்த 8ம் எண் கொண்ட அன்பருடன் மோதல் போக்கை கடைபிடிதததால், அவர்  வழியில் இருந்து மிகப்பெரிய இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, இருப்பினும் தொடர்ந்து வல்லமையுடன் போராடும் குணத்தை தந்தது, இந்த போராட்ட குணம் பின்னாளில் நல்ல பலனை தந்தது எனலாம், இவரின் 45 வது வயது முதல் தற்பொழுது உள்ள காலம் வரை 7ம் எண் தனது ஆளுமைக்கு  கிழ் கொண்டு வந்து வெற்றி தோல்வி பலன்களை மாறி மாறி தந்துகொண்டே இருக்கிறது, பல சாதனைகளுக்கு சொந்தக்காராக இன்னும் மக்கள் சேவை செய்யும் யோகத்தை தந்துகொண்டு இருப்பது 7ம் எண்ணின் வலிமையே என்றால் அது மிகையில்லை .

தொடரும்........

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக