சனி, 23 ஜூன், 2018

2ல் அமர்ந்த ராகு மஹா திசை தரும் பலாபலன்கள் என்ன ? எதிர்காலம் எப்படி இருக்கும் ?

 

 சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்வது என்பது ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், அதே சமையம் தான் அமர்ந்த பாவகத்தை வலிமை இழக்க செய்வது, மிகுந்த துன்பத்தையும் இன்னல்களையும் தரும், இது சாயா கிரகங்கள் தனது திசா புத்தி அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் நடைமுறைக்கு கொண்டு வரும் என்று கருதுவது முற்றிலும் தவறான கருத்தாகும், சுய ஜாதகத்தில் ராகுகேது தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது. இது பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : பூரம் 4ம் பாதம்

ஜாதகரின் கேள்வியே தவறானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, 2ல் அமர்ந்த ராகு என்பது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானது, ஏனெனில் ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் தனுசு ராசியில் 265:42:51 பாகையில் ஆரம்பித்து, மகர ராசியில் 297:15:08 பாகை வரை வியாபித்து நிற்கிறது, ராகு பகவான் இந்த லக்கினத்திற்கு உற்ப்பட்ட 295:26:18 பாகையிலும், கேது களத்திர ஸ்தானத்திற்கு உற்ப்பட்ட 115:26:18 பாக்கையிலும் அமர்ந்து இருப்பதால் தங்களது சுய ஜாதகத்தில் ராகு கேது முறையே லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதே உண்மை நிலை, எனவே ராகு கேது அமர்வு என்பது 1,7ம் வீடுகளில் என்பதால் 1ல் அமர்ந்த ராகு மஹா திசை தரும் பலாபலன்கள் என்ன ? எதிர்காலம் எப்படி இருக்கும் ? என்று வினவுவதே மிகச்சரியானதாக அமையும்.

 தங்களது ஜாதகத்தில் ராகு பகவான் உயிர் உடலாகி லக்கினம் எனும் முதல் பாவகத்தில் 100% விகித வலிமை பெற்று அமர்ந்து இருப்பதால் , தங்கள் லக்கின பாவக வழியில் இருந்து நல்ல ஆரோக்கியம், மனவலிமை, பொறுமை, சகிப்புத்தன்மை, சிறந்த செயல்திறன், நீண்ட ஆயுள், புகழ் வெற்றி கீர்த்தி போன்ற நன்மைகளை பரிபூர்ணமாக  சுவீகரிக்கும் வல்லமை உடையவராக திகழ்வீர்கள், மேலும் லக்கினத்தில் அமர்ந்த ராகு சம்பந்தப்பட்ட பாவகத்தை 100% விகித வலிமையை தருவதால், ஆராய்ச்சி மனப்பக்குவம், நினைத்ததை சாதிக்கும் யோகம், வருமுன் காக்கும் வல்லமை, விரைவான செயல்பாடுகள் மூலம் வெற்றியை பறிக்கும் யோகம், மனதிற்கும் புலனிற்கும் எட்டாத விஷயங்களை ஆய்வு செய்து, அதன் வழியிலான நன்மைகளை பெரும் யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும், தங்களின் திட்டமிடுதல்கள் யாவும் நல்ல வெற்றியையும் லாபத்தையும் தரும். ஆக சுய ஜாதகத்தில் லக்கின பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் தங்களுக்கு தான் அமர்ந்த அமைப்பில் இருந்து சிறப்பான நன்மைகளையே வாரி வழங்குகின்றார், இனி ராகு தனது திசையில் தரும் பலன்கள் என்ன ? என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !

ராகு திசை தரும் பலன்கள் (  22/08/2017 முதல் 23/08/2035 வரை )

தங்களது ஜாதகத்தில் ராகு லக்கின பாவகத்தில் அமர்ந்து 100% விகித வலிமையுடன் இருந்த போதிலும், தனது திசையில் 2,5,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ராகு தசை 2,5,8 பாவக பலாபலன்களை  ஏற்று நடத்துவது தங்களுக்கு உகந்ததல்ல, 2ம் பாவக வழியில் இருந்து தங்களுக்கு தனவரவு அதிகரித்த போதிலும், வீண் விரையம், அதிக செலவினங்கள், வாக்கு குடும்பம் சார்ந்த அமைப்பில் இருந்து இன்னல்களையும் துன்பங்களையும் தரும், குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை தரும், 5ம் பாவக வழியில் இருந்து துயரம், தடங்கல், எதிர்த்து போராடும் வல்லமை குறைவு, குலதெய்வ சாபம், எதிர்பாரத அவமானம் மற்றும் புகழுக்கு களங்கம், சோர்வு, மனஉளைச்சல், வீண்கவலை, விபத்து, மனம் ஒரு நிலையில் இல்லாமல், முடிவுகளை தவறாக மேற்கொள்ளும் தன்மை, உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலை, நம்பிக்கை குறைவு, தனது முயற்சி வீணாகும் தன்மை என்றவையில் இன்னல்களை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளை தந்த போதிலும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது தங்களுக்கு உகந்த நன்மைகளை தரும், தேவையற்ற மருத்துவ செலவுகள், அவசியமற்ற வாக்குவாதம், உறுதியற்ற மனநிலை, எதிர்பாலின சேர்க்கை மூலம் வரும் இன்னல்கள், முரண்பாடான கருத்துக்களால் ஏற்படும் பேரிழப்பு, உடல் மற்றும் மனநலம் கடுமையாக பாதித்தல் என்ற வகையில் இன்னல்களை தரும், வண்டி வாகனங்களில் மிகுந்த பொறுமையுடன், அதிக பாதுகாப்புடன் இயக்குவது சகல நலன்களையும் தரும், பெரிய அளவிலான முதலீடுகள் கடும் பாதிப்பை தரக்கூடும், சுய ஜாதகம் வலிமை பெற்ற ஜாதகியை வாழ்க்கை துணையாக தேர்வு செய்வது அவசியமாகிறது.

எதிர்காலம் தங்களுக்கு ராகு திசை ராகு புத்திக்கு பிறகு மிகவும் சிறப்பாகவே இருக்கும், ராகு திசையில் ராகு புத்தி மற்றும் சனி புத்தி காலங்கள் மட்டும் சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட ஆயுள் மற்றும் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதால், இந்த காலகட்டங்கள் மட்டுமே தங்களுக்கு மிகுந்த நெருக்கடிகளை தரக்கூடும், வலிமையற்ற 2,3,5,8ம் பாவக வழியிலான இன்னல்களை தாங்கள் சுவீகரிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது மிகுந்த சிறப்பை தருவதுடன், முன்னேற்றகரமான நன்மைகளை தரும்.

குறிப்பு :

 ஜாதகத்தில் நவகிரகங்கள் காலபுருஷ தத்துவ அமைப்பிற்க்கு பெரும் வலிமை  ( ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ) போன்றவை சுய ஜாதகத்திற்கு யாதொரு நன்மை தீமையும் நல்காது, லக்கினத்திற்கு நவகிரகங்கள் தனது பாவக வழியில் இருந்து பெரும் வலிமை, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள்  பெரும் தொடர்பு நிலையே சுய ஜாதகத்தை ஆளுமை செய்யும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, மேலும் தங்களது ஜாதகத்தில் லக்கினத்தில் வலிமை பெற்று அமர்ந்த ராகு, தனது திசையில் வலிமையற்ற பாவக தொடர்பை ஏற்று பலாபலன்களாக வாரி வழங்குவது நன்மை தரும் அமைப்பல்ல, என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக