வியாழன், 14 ஜூன், 2018

" களத்திர தோஷமும் " " சனி திசை நடப்பும் " திருமண தடைக்கு காரணமா? திருமணம் கைகூடி வருமா ?


கேள்வி :

 திருமணத்திற்க்கான முயற்சிகள் யாவும் இதுவரை பெரும் பின்னடைவையே தந்து இருக்கின்றது, கடந்த இருபது வருடங்களாக திருமணம் கைகூடி வரவில்லை, சுய ஜாதகத்தில் களத்திர தோஷம் என்கின்றனர், சனி திசை திருமண தடையை தருகிறது என்கின்றனர், உண்மை நிலை என்ன ? திருமண தடை நீங்கி, திருமணம் கைகூடி வருவதற்க்கு பரிகாரம் உண்டா ? எனது ஜாதகத்தில் உள்ள குறைகள் மற்றும் தோஷம் பற்றி விளக்கம் தர வேண்டுகின்றேன்.

பதில் :

ஒருவருக்கு திருமணம் தாமதமாக அடிப்படை காரணம் சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் ( 2,5,7,8,12ம் ) வீடுகள் வலிமை அற்று காணப்படுவதும், பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், பாதக ஸ்தான தொடர்பை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்துவதும் காரணமாக அமையும், குறிப்பாக சுய ஜாதகத்தில் பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகருக்கு இல்லற வாழ்க்கை அமைவதில் யாதொரு தடைகளும் தாமதமும் ஏற்படுவதில்லை, சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள், திருமணத்தை நடத்தி வைக்கும் பருவ வயதில் நடைமுறைக்கு வரும் பொழுதே மேற்கண்ட தங்களின் கேள்விக்கு உரித்தான விதத்தில், அதிக அளவிலான தடைகளும், திருமணத்தில் வெகு தாமதத்தையும் தருகின்றது, தங்களின் ஜாதகத்தில் உள்ள நிலையை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : மிதுனம்
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : திருவாதிரை 2ம் பதம்

திருமணம் தாமதமாக காரணம் : 1

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் அடிப்படை வீடுகளான 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது முழு முதற்காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் எந்த ஓர் வீடும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, மேற்கண்ட தங்களின் ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு தனுசு ராசியில் அமைவதும் தங்களுக்கு, பித்ரு தோஷ வழியில் திருமணம் அமையாமல் வெகு தாமதங்களை வழங்கிய கொண்டு இருக்கின்றது, 2ம் பாவகம் தங்களுக்கு மிதுனத்திலேயே ஆரம்பித்த போதிலும் அதிக  அளவில் கடக ராசியிலே வியாபித்து நிற்பது குடும்ப வாழ்க்கையில் இன்பத்தை தராமல் தடை செய்கிறது, மேலும் இல்லற வாழ்க்கையில் ஜாதகர் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தருகின்றது.

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் கூட்டு முயற்சி வழியிலான இன்னல்களை வெகுவாக தருகின்றது, திருமணம் வெகு தாமதமாக சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் 200% விகித பாதிப்பை பெறுவதும், அது சார்ந்த இன்னல்களை ஏக காலத்தில் அனுபவிப்பதும் காரணமாக அமைகிறது, குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவக வழியில் 200% விகித இன்னல்களை சந்திப்பதால் தங்களின் திருமண வாழ்விற்க்கான முயற்சிகள் யாவும் கடும் தோல்வியை சந்திக்கிறது, இதற்கான தீர்வை பதிவின் இறுதியில் காண்போம்.

திருமணம் தாமதமாக காரணம் : 2

 தங்களுக்கு 19/04/2002 முதல் 19/04/2021 வரை நடைபெறுகின்ற சனி மஹா திசையானது தங்களுக்கு 3,9,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 3,9,12ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்ற போதிலும், 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2,7ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தருவது தங்களுக்கு சனி மகா திசையில் சிறப்புகளை தரும் அம்சமல்ல, மேலும் 2ம் பாவக வழியில் இருந்து போதிய வருமானம் இன்மை, வாக்கு வழியிலான இன்னல்கள், குடும்பத்தில் சிரமம், தனம் சார்ந்த சிக்கல்கள், பொருளாதார முன்னேற்ற தடைகள், வரும் வருமானம் வீண் விரையமாகுதல் என்ற வகையில் சிரமங்களை தரும், 7ம் பாவாக வழியில் இருந்து திருமண தடை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியிலான தொந்தரவுகள், வியாபாரம் கடுமையாக பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை, எதிர்ப்புகள் அனைத்து இடங்களில் இருந்தும் வரும், சட்ட சிக்கல்கள், பொது வாழ்க்கை பாதிப்பு, எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து வரும் தொல்லைகள் என்ற வகையில் மிகுந்த சிரமங்களை தரும், சனி மகா திசை லாப ஸ்தான வழியில் அதிர்ஷ்டத்தை வழங்கிய போதிலும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்கள் தங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

சனி மஹா திசையில் தற்போழுது நடைபெறும் ராகு புத்தியும் தங்களுக்கு கடுமையான திடீர் இழப்புகளை ஆயுள் பாவக வழியில் இருந்து வாரி வழங்கி கொண்டு இருப்பது சிறப்பானது அல்ல, இது மேலும் மேலும் கடுமையான இன்னல்களையே தரும், ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக அமைவது தொழில் ரீதியான திடீர் இழப்புகளை குறிக்கிறது என்பதால் ராகு புத்தியில் தொழில் ரீதியாக மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய தருணமாகும்.

சனி மகா திசையில் எதிர்வரும் குரு புத்தி தங்களுக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5,11ம் பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சனி திசை குரு புத்தி காலத்தில் தங்களின் திருமண முயற்சி நல்ல வெற்றியை தரும், சிறந்த புத்திர பாக்கியம் அமையும், இவையெல்லாம் மிகுந்த அதிர்ஷ்டத்துடன் அமையும் என்பது கவனிக்கத்தக்கது, குரு புத்தி காலத்தை தாங்கள் பயனுள்ள வகையில் அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது அவசியமாகிறது.

குறிப்பு :

1) திருவக்கரை சென்று புதனுக்கு வக்கிரக நிவர்த்தியும், சர்ப்ப சாந்தி பரிகாரமும் செய்து யோக வாழ்க்கையை பெறுவது ஜாதகருக்கு சிறப்புகளை தரும்.
2) திருவெண்காடு சென்று முக்குண நீராடுவது களத்திர தோஷ நிவர்த்தியை தரும், திருமண வாழ்க்கையிலான தடைகளை தகர்க்கும்.
3) திருப்பதி வருடம் ஒரு முறை சென்று வருவதும், ஸ்ரீ வாரி தீர்த்தத்தில் நீராடுவதும் தங்களின் வாழ்க்கையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

எதிர் வரும் புதன் திசை தங்களுக்கு ஜீவன ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும் என்பது வரவேற்கத்தக்கது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக