வியாழன், 21 ஜூன், 2018

ஜாதக பலாபலன்களை துல்லியமாக அறிவது எப்படி ? சுக்கிரன் திசை என்ன செய்யும் ? எனது ஜாதகத்திற்கு பலன் கூற இயலுமா ?


 ஒருவரது சுய ஜாதகத்திற்கு துல்லியமான பலாபலன்கள் காண நமக்கு தேவையான அடிப்படை குறிப்புகள் 1) சரியான பிறந்த தேதி 2) சரியான பிறந்த நேரம் 3) சரியான பிறந்த இடம் ஆகிவை ஆகும், இதன் அடிப்படையில் கணிதம் செய்யும் ஜாதகத்தை கொண்டே நாம் துல்லியமான பலாபலன்கள் காண இயலும், மேலும் மேற்கண்ட குறிப்புகளை கொண்டு கணிதம் செய்யப்படும் ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை தெளிவாக அறிந்துகொள்ள முடியும், தற்போழுது நடைமுறையில் உள்ள திசா புத்திகள் சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் பற்றி அறிந்துகொள்ள முடியும், கோட்சார கிரகங்கள் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு தரும் நன்மை தீமை பற்றி துல்லியமாக அறிந்துகொண்டு, சுய ஜாதகத்திற்க்கான சரியான பலாபலன்களை மிக துல்லியமாக எடுத்துரைக்க இயலும்.

சுய ஜாதக பலாபலன்கள் பற்றி  தெரிந்துகொள்ள நாம் சம்பந்தப்பட்ட ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை பற்றி தெளிவாக கணிதம் செய்து அறிந்துகொள்வது நல்லது, அதன் பிறகு நடைபெறும் திசா புத்திகள் அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகளுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமை வலிமை அற்ற தன்மையை பற்றி தெளிவாக உணர்ந்து, சம்பந்தப்பட்ட நபருக்கு ஜாதக பலன்களை கூறுவதே அவரது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், உதாரணமாக தங்களது ஜாதகத்தையே இன்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : மீனம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : ரேவதி 2ம் பாதம்.

தங்களது ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலே மிகுந்த வலிமையுள்ள பாவக தொடர்புகள் ஆகும், அது தரும் யோக பலன்களை பிறகு ஆய்வு செய்வோம்.

3,9ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்கது.

4ம் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுகபோக வாழ்க்கையை 4ம் பாவக வழியில் இருந்து தரும் .

5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான யோகங்களை தரும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜீவன ரீதியான மேன்மையை பரிபூர்ணமாக தரும்.

தங்களது ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது விரைய ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்.

தங்களது ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் 6,12ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் வலிமையுடன் காணப்படுகிறது, குறிப்பாக 1,2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் தங்களின் ஜாதகத்தில் 11ம்  பாவகம் மீன ராசியில் 259:51:54 பாகையில் ஆரம்பித்து மகர ராசியில் 298:57:55 பாகையில் நிறைவு பெறுவதும் லாப ஸ்தானம் பெரும் பகுதி சர ராசியான மகரத்திலே வியாபித்து நிற்பது தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து 100% விகித சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்கும்.

மேற்கண்ட விஷயங்கள் தற்போழுது முக்கியமல்ல, தற்போழுது நடைபெறும் திசா புத்திகள், எதிர் வரும் திசா புத்திகள் தங்களுக்கு சுய ஜாதகத்தில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது, அந்த பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும்  பலாபலன்கள் என்ன ? என்பதே தங்களின் நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை பற்றி தெளிவாக உணர்ந்து, சரியான திட்டமிடுதல்களுடன் வாழ்க்கையை மிக இலகுவாக முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல இயலும்.

தற்போழுது தங்களுக்கு சுக்கிரன் திசை( 13/02/2017 முதல் 13/02/2037 வரை )  நடைபெறுகிறது, நடைபெறும் சுக்கிரன் திசையில் சுய புத்தி ( 13/02/2017 முதல் 15/06/2020 வரை ) நடைமுறையில் உள்ளது இது தங்களுக்கு ஏக காலத்தில்  1,2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4ம் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் சுபயோக சுப வாழ்க்கையை சுக ஸ்தானம், ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ணமாக வாரி வழங்குவது மிகுந்த யோகத்தை நல்கும் அமைப்பாகும், எனவே சரியான பருவ வயதில் சுக்கிரன் திசை அமைப்பில் இருந்து முழு யோகங்களையும் சுவீகரிக்கும் வல்லமை கொண்டவராக திகழ்வது தங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும்  வாரி வழங்கும் அமைப்பாகும்.

சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பது முக்கியமல்ல ( பாவக வலிமை ) நடைமுறையில் எதிர்காலத்தில் உள்ள திசா புத்திகள் யோகம் பெற்ற பாவக தொடர்பை ஏற்று நடத்துவதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோகம் பெற்ற பாவக வழியிலான நன்மைகளை நடைமுறைக்கு கொண்டு வரும் என்பதற்கு இணங்க தங்களது ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசைசுக்கிரன் புத்தி வலிமை பெற்ற 4,10,11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு அளவிலா நன்மைகளை வாரி வழங்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, எனவே சுக்கிரன் திசை தரும் யோக பலாபலன்களை 4,10,11ம் பாவக வழியில் இருந்து சுவீகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ " ஜோதிடதீபம் " வாழ்த்துகிறது.

குறிப்பு :

 தங்களது சுய ஜாதகத்தில் 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 12ம் வீடு சர ராசியான மகரத்தில் 1பாகையையும், மீனத்தில் 3பாகைகளையும் கொண்டிருப்பது, தங்களது வாழ்க்கையில் வரும் அதிர்ஷ்டங்களை வீணடிக்கும் தன்மை பெற்றவர் என்பதை அறிவுறுத்துகிறது, மேலும் தங்களது உடல் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவில்லை எனில் வரும் பேரிழப்புகளை தவிர்க்க இயலாது, குறிப்பாக தாங்கள் எதாவது தீய பழக்க வழக்கத்திற்கு ஆர்பட்டவராக இருப்பின் சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்கள் யாவும் யோக பங்கமாகி, வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை சுவீகரிக்க இயலாத சூழ்நிலையை உருவாக்கும் என்பதை கருத்தில் கொள்க என்று "ஜோதிடதீபம்" முன் எச்சரிக்கை செய்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக