சனி, 30 ஜூன், 2018

வாழ்க்கை துணையை ( மனைவி ) தேர்வு செய்வதில் தவறு இழைத்தால், வாழ்க்கை என்னவாகும்?


வாழ்க்கை துணையை ( மனைவி ) தேர்வு செய்வதில் தவறு இழைத்தால், வாழ்க்கை என்னவாகும்?

நிச்சயம் பேரிழப்பும், தாங்க இயலாத துன்பமுமே மிஞ்சும், " மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " என்பது முற்றிலும் உண்மையானதே, ஓர் உடல் ஈருயிர் என்ற தத்துவத்தின் படி கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் சுபயோகங்களையும், அவயோகங்களையும் பெரும் நிலை இருவரது சுய ஜாதகத்திலும் உண்டாகும், தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமையுடன் இருப்பதும், நடைமுறையில் உள்ள திசாபுத்தியும், எதிர்வரும் திசா புத்தியும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் நல்கும், மாறாக வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமை அற்றும், நடைமுறையில் உள்ள திசாபுத்தியும், எதிர்வரும் திசாபுத்தியும் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்களையும், பாதிப்பு கடுமையாக இருப்பின் மணவாழ்க்கையில் பிரிவும், நிம்மதியற்ற சூழ்நிலையையும் உருவாக்கிவிடும், இதை கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம்.

ஜாதகிக்கு பெரும்பாலா வீடுகள் சத்ரு,ஆயுள் மற்றும் விரைய ஸ்தானத்துடனும், 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகிக்கு சிறப்பான நன்மைகளை  தரும் அமைப்பல்ல, குறிப்பாக  2,4,6,10ம் வீடுகளை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஜாதகுக்கு மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், ஜாதகி தனது விருப்பப்படி இல்லற வாழ்க்கையை புதன் திசை கேது  புத்தியில் தேர்வு செய்கிறார், புதன் தனது திசையில் ஜாதகிக்கு 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை தருவது, ஜாதகி சிந்திக்கும் திறனற்று செய்யும் காரியங்கள் வழியிலான இன்னல்களை புதன் திசையில் எதிர்கொள்ள தயார் நிலையில் நின்றிருப்பதை உறுதி செய்கிறது, கேது புத்தி ஜாதகிக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று திடீர் இழப்புகளையும், வாழ்க்கை துணை வழியிலான திடீர் பொருள் இழப்புகளையும், வாழ்க்கை துணைக்கு எதிர்பாராமல் வரும் பொருளாதர நெருக்கடிகளையும் பாரபட்சம் இன்றி வழங்குவதுடன், 12ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கும் ஜாதகரின் கணவரின் பேரில் இருந்த பூர்வீக சொத்துக்களை அனைத்தையும் மொத்தமாக இழந்து, பரதேச ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்குகிறது.

இவையெல்லாம் திருமணம் ஆனா 5 வருடங்களுக்குள் நடைமுறைக்கு வருகின்றது, தனது பூர்வீகத்தை விட்டு வெளியே வெகு தொலைவு சென்று ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலையை, ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 200% விகிதம் பாதிக்கப்பட்ட 5ம் பாவக வழியில் இருந்தும், ஜாதகியின் கணவருக்கு சுய ஜாதகத்தில் 100% விகிதம் பாதிக்கப்பட்ட 5ம் பாவக வழியில் இருந்தும் பலாபலனாக நடைமுறைக்கு வருகின்றது, மேலும் ஜாதகிக்கு நடைபெறும் புதன் திசை 12ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தருவது, ஜாதகியின் அறிவற்ற செயல்பாடுகளினால் அனைத்தையும் இழந்து தவிக்கும் சூழ்நிலையை தருகின்றது, அடிப்படையிலேயே ஜாதகிக்கு நிறைவான அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் 5ம் பாவக பாதிப்பினால் வலுவிழந்து நிற்பதால், ஆற்றில் அடித்து செல்லும் ஆலிலை போல் வாழ்க்கையில் தன்வசமும், கணவர் வசமும் இருந்த சொத்துக்கள், இடம், நிலம் போன்றவற்றை இழந்து தவிக்கும் சூழ்நிலையை தந்தது. அடிப்படையில் ஜாதகிக்கும், ஜாதகியின் கணவருக்கும் நடைபெற்ற திசாபுத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக பலனை ஏக காலத்தில் ஏற்று நடத்தியது ஜாதகிக்கும், ஜாதகியின் கணவருக்கும் குறுகிய காலத்தில் இல்லற வாழ்க்கையில் மனக்கசப்பையும், கடும் துன்பத்தையும் வாரி வழங்க ஆரம்பித்தது, தம்பதியர் இருவரும் எதிர்பாராத விஷயமாகும்.

பொருளாதார  சீர்குலைவு ஏற்பட்டால் இல்லற  வாழ்க்கையில் மகிழ்ச்சி எது ? அதுவே இவர்களது வாழ்க்கையிலும் நடைமுறைக்கு வந்தது, புதன் திசையில் சந்திரன் புத்தியில் இருவரும் ஆளுக்கொரு இடமாக பிரிந்து சென்றனர், ஜாதகி 5மாத கர்ப்பிணி என்ற சூழ்நிலையிலும் பிரிவை தவிர்க்க இயலவில்லை, இது  குழந்தை பிறப்பிற்கு பிறகும் 5 வருடங்கள் நீடித்தது என்பது கவனிக்கத்தக்கது, பிறந்த குழந்தையின் ஜாதகமும், பெற்றோருக்கு சாதகமான நன்மைகளை  தரவில்லை, பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்யும்  பொழுது பிறக்கும் குழந்தையும் யோகமற்றதாக பிறக்க கூடும் என்பதற்கு மேற்கண்ட ஜாதகியே நல்ல உதாரணம், ஜாதகியின் குழந்தையின் ஜாதகத்திலும் பெற்றோரை குறிக்கும் 4,10ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெற்று இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

ஜாதகிக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள கேது திசை 12ம் வீடு பூர்வ புண்ணிய  ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 8ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12,8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தருவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையை வெகுவாக பாதித்து இருக்கிறது என்பது வருத்தத்திற்கு உரியது, இருப்பினும் எதிர்வரும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 4ம் பாவகம் விருச்சிக ராசியில் முழுவதும் வியாபித்து நிற்பது திடீர் அதிர்ஷ்டம் என்ற வகையில் சுபயோக சுக வாழ்க்கையை வாரி வழங்கும், எனவே ஜாதகி சுக்கிரன் திசை தரும் சுபயோக பலன்களை தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நலம் பெறுக, " வாழ்த்துகள் "

குறிப்பு :

எந்த காரணத்தை கொண்டும் சுய ஜாதகம் வலிமையற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்வது என்பது, இல்லற வாழ்க்கையில் சிறப்பை தாராது, பெரும்பாலும் விருப்ப திருமணங்கள் சுய ஜாதக வலிமையற்று அமைவதாலே பிரிவு என்ற நிலைக்கு ஆர்ப்படுகின்றனர், மேலும் தனது சந்ததிகளுக்கும் பெரும் துன்பத்தை தருகின்றனர், நமது வாழ்க்கை எப்படி இருப்பினும், நமது சந்ததியின் வாழ்க்கை சிறப்பாக அமைவது அவசியமாகிறது இதை கருத்தில் கொண்டாவது, விருப்ப திருணம் செய்வோர் சரியான தீர்வுகளை தேடுவது நன்மையை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக