கேள்வி :
கிழ்கண்ட குறிப்பு திருமண பொருத்தம் பார்த்த பொழுது வழங்கியது, நட்சத்திர பொருத்தம் சிறப்பாக உள்ளதாலும், தோஷ நிர்ணயம் சிறப்பாக உள்ளதாலும் திருமணம் செய்யலாம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறினார், இதைமட்டும் கருத்தில் கொண்டு திருமணம் செய்யலாமா, தம்பதியர் திருமணத்திற்கு பிறகு சிறப்பான இல்லற வாழ்க்கையை பெறுவார்களா ? கூட்டு திசை பாதிப்பை தருமா ? நட்சத்திர பொருத்தம் மட்டுமே திருமண வாழ்க்கையில் வெற்றியை தருமா ? சரியான பதில் எதிர்பார்க்கிறேன் .
பதில் :
மேற்கண்ட திருமண பொறுத்த குறிப்பை வைத்துகொண்டு, திருமணம் செய்வதுதென்பது கல்லை கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதற்கு நிகரான பலாபலன்களை தந்துவிடும், மேலும் நட்சத்திர பொருத்தம் என்பது திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தருவதுதென்பது " காகம் அமர பனம்பழம் விழுந்த கதைதான் " திருமண வாழ்க்கையின் வெற்றியை நட்சத்திர பொருத்தமோ, கூட்டு திசையோ, கிரக தோஷ நிலையோ நிர்ணயம் செய்வதில்லை சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே நிர்ணயம் செய்கிறது என்பதனை உணருவது அவசியமாகிறது, தாங்கள் வழங்கியுள்ள பிறந்த குறிப்பை கொண்டு நமது உயர் கணித ஜோதிட முறைபடி பாவக வழிமையிலான பொருத்தத்தை தெளிவாக இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பரே !
பெண் ஜாதகம்
லக்கினம் : தனுசு
ராசி : விருச்சிகம்
நட்சத்திரம் : கேட்டை 2ம் பாதம்
ஆண் ஜாதகம்
லக்கினம் : தனசு
ராசி : கடகம்
நட்சத்திரம் : பூசம் 4ம் பாதம்
திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் 2,5,7,8,12ம் வீடுகளாகும், மேற்கண்ட வது வரன் இருவரின் ஜாதகத்திலும் 2,5,7,8,12ம் வீடுகள் பெரும் தொடர்பு அது தரும் நன்மை தீமையை பற்றி சிந்திப்போம் அன்பர்களே !
பெண் ஜாதகத்தில்
2,5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது, இது ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் திருமண தாமதம், குடும்ப வாழ்க்கையில் இன்னல்கள், போதிய வருமானம் இன்மை, ஸ்திர தன்மையற்ற வார்த்தைகள் என்ற விதத்திலும், 5ம் பாவக வழியில் இருந்து புத்திர பாக்கிய தடை, சமயோசித அறிவு திறனில் பாதிப்பு, கற்ற கல்வி வழியிலான யோக பலனை அனுபவிக்க இயலாத தன்மை, குலதெய்வ சாபம் என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள் என்ற போதிலும், திடீர் இழப்புகள், விபத்து, மருத்துவ செலவினங்கள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார இன்னல்கள் என்ற வகையில் பாதிப்பை தரும்.
12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது இது ஜாதகிக்கு 12ம் பாவக வழியில் இருந்து கடுமையான மனஅழுத்தம், மன போராட்டம், அனைவராலும் தொல்லை, தாம்பத்திய வாழ்க்கையில் பாதிப்பு என்ற வகையில் இன்னல்களை தரும்
7ம் வீடு மட்டும் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் காணப்படுகிறது. இது ஜாதகிக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தரும், வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு மற்றும் யோக வாழ்க்கையை பெற்று தரும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து சிறப்பான நன்மைகளை ஜாதகிக்கு பரிபூர்ணமாக வாரி வழங்கும்.
ஆண் ஜாதகத்தில்
2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் காணப்படுகிறது. இது ஜாதகருக்கு நன்மையை தரும் அமைப்பாகும், 2ம் பாவக வழியில் இருந்து சிறந்த குடும்ப வாழ்க்கை, நிறைவான வருமானம், இனிமையான பேச்சு திறன், பொருளாதார தன்னிறைவு என்ற வகையில் சிறப்புகளை தரும், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறந்த புத்திர பாக்கியம், சமயோசித அறிவு திறன், தெய்வீக அனுக்கிரகம், கல்வி வழியிலான முன்னேற்றம் மற்றும் புத்திசாலித்தனத்தால் ஆதாயம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும்.
8ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் காணப்படுகிறது, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார உதவிகள், வாழ்க்கை துணையின் சொத்துக்கள் கிடைத்தால், நீண்ட ஆயுள், திடீர் அதிர்ஷ்டம் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை சுவீகரிக்கும் வல்லமையை தரும்.
12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது. இது ஜாதகருக்கு 12ம் பாவக வழியில் இருந்து கடுமையான மனஅழுத்தம், மன போராட்டம், அனைவராலும் தொல்லை, தாம்பத்திய வாழ்க்கையில் பாதிப்பு என்ற வகையில் இன்னல்களை தரும், மேலும் இல்லற வாழ்க்கையில் அதிக அளவிலான மன உளைச்சலை தரும்.
7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகிதம் வலிமை அற்று காணப்படுகிறது, நல்ல வாழ்க்கை துணை அமைவது என்பது ஜாதகருக்கு குதிரை கொம்பாக அமையும், கூட்டாளிகள், நண்பர்கள், கூட்டு முயற்சி யாவும் ஜாதகருக்கு கடுமையான இழப்புகளையே ஏற்படுத்தும், வெளியூர் அல்லது வெளிவட்டார பழக்க வழக்கங்கள் ஜாதகருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை தரும், வலிமை அற்ற ஜாதகியை வாழ்க்கை துணையாக ஜாதகர் தேர்வு செய்தால், ஜாதகரின் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிவிடும் என்பது கவனிக்கத்தக்கது.
கூட்டு திசை தரும் பலன்கள் :
ஜாதகிக்கு நடக்கும் சுக்கிரன் திசை 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்த பெற்று யோக பலனையும், 2ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனையும் தருகின்றது.
ஜாதகருக்கு நடக்கும் சுக்கிரன் திசை 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை தருவது சிறப்பான நன்மைகளை தரும்.
கூட்டு திசை தோஷம் என்பது நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக பலன் பற்றி தெரியாத நிலையில் குத்துமதிப்பாக சொல்லப்படுவதாகும், கூட்டு திசை தோஷம் என்பது முற்றிலும் தவறான கருத்து, இதுபோன்ற அமைப்பு எந்த ஓர் ஜோதிட மூல நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை என்பதே உண்மை.
குறிப்பு :
ஜாதகருக்கு வயது 32, ஜாதகிக்கு வயது 26 இருவருக்கும் திருமணம் தாமதமாக அடிப்படை காரணமே சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் ( ஆண் ) குடும்ப ஸ்தானம் ( பெண் ) வலிமை அற்று இருப்பதே, மேலும் இருவரது ஜாதகமும் பாவக வழியில் பொருத்தம் இன்றி முற்றிலும் முரண் பட்ட தன்மையில் இருப்பதால், இல்லற வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து, மன வாழ்க்கை முறிவு என்ற இறுதி நிலைக்கு கொண்டு செல்லும் எனவே திருமணத்தை தவிர்த்து, இருவரும் வலிமை பெற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்வதே சரியான தீர்வாக அமையும், தாங்கள் அனுப்பிய திருமண பொருத்தம் சார்ந்த குறிப்பை வைத்துகொண்டு திருமண வாழ்க்கையில் நுழைவது தம்பதியருக்கு இல்லற வாழ்க்கையில் பிரிவு என்ற நிலைக்கே அழைத்து செல்லும் என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுக்கவும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக