சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7ம் வீடாகிய களத்திர ஸ்தானமும், 10ம் வீடாகிய ஜீவன ஸ்தானமும், 11ம் வீடாகிய லாப ஸ்தானமும் வலிமை பெறுவது ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வெளியூர், வெளிநாடு மற்றும் வியாபாரம் சார்ந்த வெற்றிகளை வாரி வழங்கும், குறிப்பாக சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் மிகவும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு வெளிநாடு யோகம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் என்ற வகையில் சிறப்புகளை தரும், தன்னிறைவான சுபயோகங்களை ஜாதகர் தங்கு தடையின்றி அனுபவிக்கும் வல்லமை உண்டாகும், மேலும் லக்கினம் வலிமை பெற்று இருப்பது ஜாதகர் வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கையை சுயமாக சுவீகரிக்கும் தன்மையை தரும், பிரபல்ய யோகம், சமூக அந்தஸ்து, மதிப்பு மரியாதை, வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் ஜாதகருக்கு கிடைக்கும் சுபயோக வாழ்க்கை என்ற வகையில் பரிபூர்ண நன்மைகளை தரும்.
மேலும் சுய ஜாதகத்தில் 5,12ம் வீடுகள் வலிமை பெறுவது , 5ம் பாவக வழியில் இருந்து தனது அறிவு திறன் சமயோசித புத்திசாலித்தனம் மூலம் வெளிநாடுகளில் சிறப்பான யோக வாழ்க்கை பெறுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி தரும், ஜாதகரின் அறிவார்ந்த முயற்சிகள் மூலம் பொருளாதார ரீதியான வெற்றிகளை மிக எளிதாக பெறுவதற்கும், குடியுரிமை சார்ந்த நன்மைகளை பெறுவதற்கும் ஜாதகருக்கு ஓர் அங்கீகாரத்தை நல்கும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெளிநாடுகளில் பெரும் பொருளாதர தன்னிறைவை குறிப்பதுடன், திருப்தியுடன் கூடிய நிம்மதிகாரமான யோக வாழ்க்கையை நல்கும், தெளிவான சிந்தனை நல்ல உறக்கம், மற்ற நாடுகளில் உள்ள சீதோஷன நிலையை ஏற்றுக்கொள்ளும் திரேகம், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினருடன் இணக்கமான உறவை கையாளும் வல்லமையை தருவதும் அயன சயன ஸ்தானத்தின் வலிமையே என்றால் அது மிகையில்லை.
லக்கினம் : விருச்சிகம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : பூரட்டாதி 2 பாதம்
ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :
1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள், சிறந்த உடல் மற்றும் மனநலம், வளரும் சூழ்நிலையில் சிறப்பு, கல்வியில் மேன்மை, பொதுமக்கள் தொடர்பில் யோகம், சிறந்த நிர்வாக திறமை, தனித்தன்மையான ஆளுமை திறன், எதிர்ப்புகளை சந்தித்து வெற்றிகொள்ளும் யோகம், அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், வசீகரிக்கும் செயல்பாடுகள், எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து பெரும் நன்மைகள் என்ற வகையில் ஜாதகருக்கு சிறப்பை தரும்.
7ம் பாவக வழியில் இருந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் முன்னேற்றத்தை ஜாதகர் பரிபூர்ணமாக சுவீகரிக்கும் யோகம், பிரபல்ய யோகம், நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், வலிமை மிக்க கூட்டுத்தொழில், அதன் வழியிலான ஜீவன மேன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும், ஜாதகருக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் ரிஷப ராசியில் 5 பாகைகளையும், மிதுன ராசியில் 23 பாகைகளையும் கொண்டு இருப்பது சிறப்பானது, ஜாதகரின் அறிவு திறன் வெளிநாடுகளில் சிறப்பான வரவேற்பை கொண்டுள்ளதாக அமைவதும், ஜாதகரின் சிறந்த மேலாண்மை திறன் வெளிநாடுகளிலேயே மிகவும் பிரகாசமாக அமைவதையும், ஜாதகர் தெளிவாக உணர்ந்துகொண்டு, அதன் வழியிலான வெற்றிநடை போடுவது வரவேற்கத்தக்கது, ஜாதகரின் உழைப்பு மிக குறைவாக அமைந்த போதிலும் பெரும் நன்மைகள் அபரிவிதமானதாக இருப்பதற்கு காரணம் என்ன ? என்பதை அடுத்த வரிகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!
ஜாதகரின் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் சிம்ம ராசியில் 3 பாகைகளையும், கன்னி ராசியில் 28 பாகைகளையும் கொண்டு இருப்பது சிறப்பான ஓர் விஷயமாக கருதலாம், இது ஜாதகருக்கு தொழில் நுட்பம் மற்றும் கைதேர்ந்த தொழில் மேலாண்மை திறனை வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது, பெரும்பாலும் கைதேர்ந்த, திறமை வாய்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த அறிவுத்திறன் மிக்க அனைவரும் பெரிய அளவிலான வெற்றிகளை பெற்று விடுகின்றனரா ? என்றால் இல்லை என்பதே பதில், ஆனால் இவர் அபரிவிதமான வெற்றிகளை குவிக்க மேற்கண்ட விஷயங்கள் மட்டுமே கைகொடுக்கவில்லை, ஆம் அதிர்ஷ்டம் என்பதே ஜாதகருக்கு மிதந்தமிஞ்சிய யோக வாழ்க்கையை வாரி வழங்கிக்கொண்ட இருக்கின்றது என்பதே உண்மை, திறமை மட்டும் இருப்பது ஜாதகருக்கு வெற்றிகளை தருவதில்லை, அதிர்ஷ்டம் எனும் 11ம் பாவக வலிமையே திறமைக்கான அங்கீகாரத்தை உலகிற்கு எடுத்துரைத்து, திறைமைக்கான அதிர்ஷ்ட வாழ்க்கையை நிலைநிறுத்துகிறது என்பதை அடுத்த வரிகளில் தெளிவாக காண்போம்.
ஜாதகருக்கு மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்றது, 30 % விகித நன்மைகளை தந்த போதிலும் 2,4,5,8,11,12ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 100% விகித நன்மைகளை தருவதே ஜாதகரின் வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்துடன் 1,7ம் வீடுகள் சம்பந்தம் பெறுவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசி வலிமை பெறுவதும் ஜாதகரின் வெளிநாடு சார்ந்த அமைப்பில் இருந்து அதிர்ஷ்டத்துடன் கூடிய யோக வாழ்க்கையை வாரி வழங்குகிறது, 2,4,5,8,11,12ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 11ம் பாவகம் ஜாதகருக்கு கன்னி ராசியில் 1 பாகையில் ஆரம்பித்து 28 பாகைகள் துலாம் ராசியில் வியாபித்து நிற்பது கவனிக்கத்தக்கது, மேலும் லாப ஸ்தானத்துடன் பொருளாதர மேன்மை மற்றும் சுகபோகத்தை குறிக்கும் வீடுகள் யாவும் ( 2,4,5,8,11,12ம் வீடுகள் ) சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை மிக பெரிய அளவில் வாரி வழங்குவது கவனிக்கத்தக்கது.
ஒரு ஜாதகருக்கு மிதம் மிஞ்சிய செல்வவளத்தை தாறுமாறாக வாரி வழங்கும் வல்லமை பெற்றது மறைவு ஸ்தானம் என்று உணரப்பட்ட 6,8,12ம் வீடுகளே, ஜாதகருக்கு வரும் பொருளாதார வளர்ச்சி எப்படி வந்தது என்று மற்றவர்கள் கண்டுஅறிய இயலாவண்ணம், ஜாதகருக்கு தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தை வாரி வழங்கும் வல்லமை பெற்றது மேற்கண்ட 6,8,12ம் வீடுகள், அப்படிப்பட்ட வீடுகள் எல்லாம் ஜாதகருக்கு அதிர்ஷ்ட ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கான பொருளாதார வெற்றியை எதிர்பாரா அளவில் நிர்ணயம் செய்துள்ளது என்பதே உண்மை, இதற்குஎல்லாம் சிகரம் வைத்தார் போல் அமைவதுதான் அடுத்து வரும் பத்திகளில் நமக்கு ஆச்சரியங்களை வழங்க இருக்கின்றது.
ஆம் ஜாதகருக்கு கடந்த சனி திசை 19 வருடமும், 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் , 4,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக சுப பலனை வாரி வழங்கியது இளமையில் சகல யோகத்தையும், திறமைக்கான வெற்றிகளையும் அங்கீகாரம் செய்தது, தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் திசை ஒருபடி மேலே சென்று 2,5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அதிர்ஷ்டங்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு நன்மையை தருகின்றது என்ற போதிலும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது, செல்வம், சுகபோகம் உண்டு ஆனால் வாரிசு இல்லை என்ற நிலையை தந்துள்ளது, 9ம் பாவகம் ஜாதகருக்கு கடக ராசியில் ஆரம்பித்த போதிலும் அதில் 5 பாகைகளையே கொண்டுள்ளது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணியமான சிம்மராசியில் 27 பாகைகளை கொண்டு 9ம் பாவகம் பாதக ஸ்தானமாக அமைவது ஜாதகருக்கு புத்திர பாக்கிய தடைக்கு அடிப்படை காரணமாக அமைகிறது என்பது இது தெளிவுபடுத்துகிறது.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் அயல் தேச யோக வாழ்க்கையை குறிக்கும், 1,7,10,12ம் பாவகங்களுடன் அதிர்ஷ்டத்தை தரும் 11ம் பாவகமும் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு துலாம் ராசி மற்றும் மீன ராசி வலிமையையும் நாம் கருத்தில் கொண்டு " திரைகடல் ஓடி திரவியம் தேடுவது " சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக