பின்தொடர...

Friday, June 15, 2018

தொழிலில் ஏற்படும் பேரிழப்பை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுவது எப்படி? இதை ஜாதக ரீதியாக அறிந்துகொள்ள இயலுமா ?  இன்னும் நமது கிராமங்களில் " வல்லவனையும் தட்டுமாம் வழுக்குப்பாறை " என்று சிலேடையாக சொல்வதுடன், மிகுந்த தொழில் நுணுக்கம் கொண்டுள்ள ஒருவரை கூட மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி ஆரம்பித்த இடத்துக்கே கொண்டுவந்துவிடும் தன்மை பெற்றது "விதி" இதை மதியறிவு கொண்டு வெல்வது என்பது அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள 1,5,9ம் பாவகங்களின் வலிமை நிலையே என்றால் அது மிகையில்லை, ஒருவருக்கு வரும் யோக அவயோக நிலையை பற்றி வருமுன் தெளிவாக கட்டியம் கூற சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்களின் வலிமை நிலை அவசியமாகிறது, மேற்கண்ட பாவகங்களின் வலிமை, ஜாதகருக்கு எதிர்வர இருக்கின்ற நன்மை தீமையை பற்றி சுய அறிவுபூர்வமாகவோ, குல தெய்வ ஆசியின் மூலமாகவோ, ஆன்மீக பெரியவர்களின் அறிவுறுத்தல் மூலமாகவோ தெள்ள தெளிவாக எடுத்துரைத்து காக்கும், ஜாதகருக்கு வரும் இழப்பில் இருந்து பாதுகாப்பும், யோக அமைப்பில் இருந்து விழிப்புணர்வும் தந்து அருள் புரியும், ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : துலாம் 
ராசி : கடகம் 
நட்ஷத்திரம் : ஆயில்யம் 

 மேற்கண்ட துலா லக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தான அதிபதியான சுக்கிரன் திசை 20/05/1998 முதல் 20/05/2018 தற்போழுது நடைமுறையில் உள்ளது, இந்த சுக்கிரன் திசை ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான யோக பலனை பாக்கிய ஸ்தான வழியில் இருந்து தந்து கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க தக்க நன்மைகளை தருவதாகும், குறிப்பாக சுக்கிரன் திசையில் சனி புத்தி 20/03/2011 முதல் 20/05/2014 வரை ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சிறப்பான ராஜ யோக பலனை 2,4,10 பாவக வழியில் இருந்து வாரி வழங்கி இருக்கிறது சுக்கிரன் திசை ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து எதிலும் வெற்றி, புத்தி கூர்மை மூலம் ஆதாயம், சகல சௌபாக்கியம், போக்குவரத்து, ஏஜென்சி துறை லாபம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான நன்மைகள், வியாபார விருத்தி, நல்ல  சிந்தனைகள் தரும் வெற்றி, கனிம சுரங்க பொருட்கள் மூலம் லாபம், நுண்ணறிவு திறன்  மூலம் பெரும் அதிர்ஷ்டங்கள் என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து மிகுந்த மனவலிமை, விரைவாக சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும் வல்லமை அதன் வழியிலான முன்னேற்றங்கள், சமயோசித புத்தி சாலித்தனம், ஆய்வு திறன், நல்ல பழக்கங்கள் மூலம் நன்மைகளை பெறுதல் என்ற வகையிலும், 9ம் பாவக வழியில் இருந்து நிறைவான அறிவு திறன், பயணங்கள் மூலம் லாபம், இடமாற்றம் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம் மற்றும் சிறப்பான வளர்ச்சி பித்ருக்களின் ஆசி மூலம் வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுதல் என்ற வகையில் யோக பலனை வாரி வழங்கியது.

சுக்கிரன் திசையில் கடந்த சனி புத்தி சனி புத்தி 20/03/2011 முதல் 20/05/2014 வரை ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியில் இருந்து தொழில் வழியிலான அபரிவித வருமானம், பேச்சு திறன் மூலம் வரும் வியாபர விருத்தி, லட்சியங்களை அடையும் வல்லமை, அதீத தனசேர்க்கையை சொந்த உழைப்பில் பெரும் வல்லமை, கவுரவம், அந்தஸ்து, புகழ், பரிசு அனைத்திலும் வெற்றி என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றம், பெயரும் புகழும் உண்டாகும் தன்மை, மண் மணை வண்டி வாகன யோகம், ஆள் வசதி, பெரிய சொத்து சுக சேர்க்கை, அரசு மரியாதை மற்றும் கவுரவம், சமூக வாழ்க்கையில் வெற்றி, அரசியலில் ஆதாயம் என்ற வகையில் சிற்பபுகளை தரும், 10ம் பாவக வழியில் இருந்து தொழில் வழியிலான அபரிவித முன்னேற்றம், கம்பீரமான செயல்பாடுகள், தீர்க்கமான முடிவுகள் வழியில் பெரும் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, செய்தொழில் வழியிலான ராஜ யோகம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கி இருக்கிறது.

சுக்கிரன் திசையில் சனி புத்திக்கு அடுத்து வந்த புதன் புத்தி ( 20/05/2014 முதல் 20/03/2017 வரை ) ஜாதகருக்கு மிகுந்த சோதனை காலமாக மாறியது விதி செய்த கொடுமையாகவே கருதலாம், புதன் புத்தி ஜாதகருக்கு 6,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் ஜாதகரை படு குழியில் தள்ளியது, 6ம் பாவக வழியில் இருந்து வரம்பு மீறிய கடன், மிதமிஞ்சிய செலவுகள், வேலையாட்கள் வழியிலான இழப்புகள், பொருளாதர பின்னடைவு, எதிரிகள் தொந்தரவு, அனைத்து இடங்களில் இருந்து வரும் எதிர்ப்புகள், எதிர்பாராத கடன்கள், ஜாமீன் கொடுப்பதால் வரும் இன்னல்கள், வாங்கும் கடன் அனைத்தும் திடீர் இழப்பை சந்திக்கும் நிலை, நிலையற்ற பொருளாதரம், எதிர்பார்ப்புகள் யாவும் பொய்த்து போகும் தன்மை, எதிர்பாலின சேர்க்கையின் மூலம் திடீர் இன்னல்கள், நிம்மதி இன்மை, அனைத்திலும் தோல்வி, வழக்குகளில் சிக்கல்கள், சட்ட சிக்கல்கள், பொருள் இழப்பு என்ற வகையில் ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தர ஆரம்பித்தது.

8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளை நல்கிய போதிலும், பேரிழப்பு, விபத்து, துயரம், மற்றவர்களால் வரும் துன்பங்கள், தீயநண்பர்கள் சகவாச தோஷம், திட்டமிட்டு செயல்பட முடியாத நிலை, எதிர்த்து போராட வலிமையற்ற சூழல், உதவி செய்ய யாருமற்ற தன்மை, வாழ்க்கை துணை வழியிலான இழப்புகள் மற்றும் துன்பங்கள், தெய்வீக அனுகிரகம் இன்மை, முரண்பட்ட செயல்பாடுகள், தாங்க இயலாத துன்பம், சொத்துக்களை இழக்கும் சூழ்நிலை, சொத்துக்கள் அனைத்தும் வீண் விரயமாகும் தன்மை, திருப்தி இல்லாத மனநிலை, ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபத்தில் அமைவதால், ஜாதகருக்கு வரும் வருமானம் மற்றும் கடன் யாவும் திடீர் இழப்பை சந்திக்கும் சூழ்நிலை, எதிரியின் பிடியில் இழப்பை சந்திக்கும் சூழல், அனைத்தையும் இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகுதல் என்ற வகையில் ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை பாக்கியம் மற்றும் விரைய ஸ்தான அதிபதியான புதன் புத்தி தர ஆரம்பித்தது, மேலும் ஆயுள் பாவகம் ஸ்திர ராசி என்பதால் ஜாதகருக்கு வந்த இன்னல்கள் யாவும் வெகு காலம் ஆறாத ரணம், மறையாத சுவடை ஏற்படுத்தி ஜாதகருக்கு "நித்ய கண்டம் பூர்ண ஆயுசு" என்பதற்கு இணையான சூழலை உருவாக்கியது.

சுக்கிரன் திசை முடிவில் நடைபெற்ற கேது புத்தி ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை தந்தது, ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சிறிய அளவில் மீண்டு வரும் வாய்ப்பை நல்கியது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாதிப்பை ஜாதகர் 5,9ம் பாவக வழியில் இருந்து உணர்ந்த போதிலும் லக்கினம் எனும் முதல் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது போதிய நிதி மேலாண்மை திறன் அற்றவர் என்பதனையும், திட்டமிட்டு செயல்படும் தன்மை அற்றவர் என்பதனையும் தெளிவுபடுத்துகிறது, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள், வாழ்க்கை துணை வழியிலான பேரிழப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆர்ப்பட்டவர் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகருக்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் வல்லமை கொண்டது, இருப்பினும் சூரியன் திசையில் எதிர் வரும் சந்திரன் புத்தி 1,7,11ம் பாவக வழியில் இருந்து கடும் நெருக்கடிகளை தரும், மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டதை போன்ற உணர்வை ஜாதகர் பெறுவார், சுக்கிரன் திசையில் நடைபெற்ற சுபயோக பலன்கள் சூரியன் திசையில் நடைமுறைக்கு வந்த போதிலும், யோக காலம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கும், ஜாதகர் சூரியன் திசையில் சந்திரன் புத்தியை எதிர்கொள்வது என்பது சற்று சவாலான விஷயமாகவே படுகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் யோக பலன்கள் பாவக வழியில் இருந்து வழங்கிய போதிலும், லக்கினம் வலிமையுடன் இருந்தால் மட்டுமே ஜாதகர் அதை முழுவதுமாக சுவீகரிக்க இயலும், லக்கினம் வலிமை இழப்பது அல்லது 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அனைத்தும் ஜாதகருக்கு மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை, கிரகிக்கும் வல்லமையை தாராது என்பதுடன் ஜாதகராலே அது விரயமாகும், மேற்கண்ட ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிதமிஞ்சிய யோக பலனை தரும் என்ற போதிலும், 1,7,11ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர், அவரது வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் ஜாதகரின் அதிர்ஷ்டமின்மை ஆகியவை ஜாதகருக்கு வரும் யோக பலனை கபளீகரம் செய்யும் என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment