Monday, June 25, 2018

சனி மகாதிசை தரும் அவயோக பலன்களும் ! பூர்வபுண்ணியம் கெட்டதால் வரும் பாதிப்புகளும் ( 5ல் கேது ) !

   

  சனி திசை நடைபெறுவதால், கடுமையான இன்னல்களை கடந்த பல வருடங்களாக சந்தித்து வருகின்றேன், சனி திசை ஆரம்பத்தில் புதிதாக வண்டிவாகன தொழிலில் ஈடுபட்டு, பெருத்த நஷ்டமே உண்டானது  5ல் கேது நின்று பூர்வீகம் கெட்டதால் பூர்வீகத்தில் குடியிருக்க வேண்டாம், இதுவே தங்களது தொழில் நஷ்டத்திற்கு காரணம் என்ற ஜோதிடரின் அறிவுரையின் படி,  எனது பெற்றோரின் நிலபுலன்கள் யாவையும் விற்றுவிட்டு தொழில் வழியிலான கடனை நிவர்த்தி செய்துவிட்டு, வெளியூர் சென்று குடியேறினோம்,  பூர்வீக இடமும் இல்லமால், துவங்கிய தொழில் வழியிலும் நஷ்டம் அடைந்து, பெரும் கடனாளியானது மட்டுமே மிச்சம், இவையெல்லாம் பூர்வீகம் கெட்டதால் வந்த இன்னல்களா? அல்லது சனிதிசை தரும் கெடு பலன்களா? பூர்வீகத்தை விட்டு வெளியில் வந்தும் யாதொரு முன்னேற்றமும் இதுவரை இல்லை, எனது ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை என்ன ? தற்போழுது வயது 43 இதுவரை பொருளாதார வசதிகளை எதுவும் பெற இயலவில்லை, இறுதிவரை இப்படியே இருக்குமா ? புதன் திசையாவது நன்மைகளை தருமா ? 


 ஜோதிட  ஆலோசணை, நமது வாழ்க்கையில் வரும் இன்னல்களை களைந்து, சுபயோக சுக வாழ்க்கையை நல்கும் அட்ஷய பாத்திரமாகும், துல்லியமான ஜாதக கணிதம் நிச்சயம் நம் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, நமது அறிவுரையை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, தமது வாழ்க்கையை சிறப்பாக துவங்க இருக்கும் அன்பர்களுக்கு முரண்பட்ட பலாபலன்களை கூறி அவர்களை இன்னலுற செய்வது என்பது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும், தங்களது வாழ்க்கையிலும் இதுபோன்ற நிகழ்வே நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கின்றது, அடிப்படையில் தங்களது ஜாதக வலிமையை பற்றி ஏதும் அறியாமல் கூறிய ஜாதக ஆலோசணையின் பெயரில் தாங்கள் அனைத்தையும் இழந்து நிற்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்பதை அறிவுறுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது, மேலும் இதற்க்கு முன் தங்களுக்கு வழங்கிய ஜாதக ஆலோசணை முற்றிலும் தவறானது என்பதை சிறு விளக்கங்களுடன் இன்றைய பதிவில் நாம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !

5ல் கேது  :


தங்களது ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் வீடு மேஷ ராசியில் 027:58:59 பாகையில் ஆரம்பித்து ரிஷப ராசியில் 054:33:30 பாகைவரை வியாபித்து நிற்கிறது, கேது பகவான் மேஷ ராசியில் உள்ள நான்காம் பாவகத்திற்க்கு உற்ப்பட்ட  020:37:30 பாகையில் 100% விகித வலிமையுடன் அமர்ந்திருக்கிறது, எனவே அடிப்படையில் 5ல் கேது என்பதே தவறான ஜாதக கணிதமாகும், சுக ஸ்தானமான நான்காம் பாவகத்தில் கேது அமர்ந்து இருப்பதே உண்மை நிலை, தங்களது சுய ஜாதகத்தில் 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது, குறிப்பாக தங்களின் 5ம் பாவகம் மேஷ ராசியில் 2 பாகைகளும், ரிஷப ராசியில் 24 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது, பெரும்பாலும் 5ம் பாவகம் ரிஷப ராசியிலே வியாபித்து நிற்கிறது, ரிஷபம் கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு 2ம் ராசியாகவும், குடும்பம் தனம் என்ற அமைப்பில் இயங்குவதாலும், தங்களின் அறிவும், அறிவார்ந்த செயற்பாடுகளும் தங்களின் பூர்வீகத்தில் ஜீவிக்கும் பொழுதே பரிபூர்ணமாக கிடைக்கும், பூர்வீகத்தை விடுத்து வெளியில் சென்று தொழில் மேன்மை பெறுவதுஎன்பது சிறிதும் இயலாத காரியமாகும்.

  ஏனெனில் தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியில் செல்வது தங்களின் அறிவு திறன் சமயோசித புத்திசாலித்தனம் இரண்டையும் கடுமையாக பாதிக்கும், ஒருவருக்கு சுய அறிவும், புத்திசாலித்தனமும் மங்கும் பொழுது பெரியளவிலான வெற்றிகளை பெற இயலாது, என்பது கவனிக்க தக்கது, தங்களது சுய ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்பாக இதை கருதலாம் என்பதால், பூர்வீகத்தில் தங்களது ஜீவன வாழ்க்கையை இனிவரும் காலங்களிலாவது துவங்குவது சிறப்பான வெற்றிகளை தரும், அதற்க்கான வாய்ப்புகளை நடைபெறும் சனி திசையில் ராகு புத்தி 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை தருவது விழிப்புணர்வுடன் தாங்கள் கவனிக்கவேண்டிய சிறப்பு அம்சமாகும் அன்பரே ! தங்களது ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் 100% விகித வலிமையுடன் இருப்பது பூர்வீக ஜீவனத்தில் சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும்.

சனி திசையால் பாதிப்பா ?

 தங்களது ஜாதகத்தில் சனி திசை ( 17/05/2003 முதல் 17/05/2022 வரை ) நடைமுறையில் உள்ளது , நடைபெறும் சனி மஹா திசை தங்களுக்கு 2,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை நல்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் கன்னி ராசியில் 2 பாகைகளையும், துலாம் ராசியில் 28 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இது தங்களுக்கு வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி தொழில், கமிஷன் தொழில், தானிய வியாபாரம், உலோக வியாபாரம், கனிம பொருட்கள் சார்ந்த வியாபாரம் என வியாபாரம் மற்றும் பொதுமக்கள் சார்ந்த வழியிலான தொழில் விருத்தியை வாரி வழங்கும், எனவே தங்களது பிறப்பின் சாராம்சம் தாங்கள் ஓர் வியாபாரியாக பரிணமிக்க வைக்கும் என்பதால் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு, மேன்மை அடைய ஜோதிடதீபம் அறிவுரை வழங்குகிறது, சனி திசை சனி புத்தி காலத்தில் தங்களது முன்னேற்றம் என்பது 2,11ம் வீடுகள் வழியில் இருந்து 10ம் பாவக பலனை விருத்தியுடன் வழங்க ஆரம்பித்து இருக்கின்றது, சனி புத்திக்கு அடுத்து வந்த புதன் புத்தி தங்களுக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று திடீர் இழப்புகளை பெரிய அளவில் வாரி வழங்கியது தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை தந்து விட்டது என்ற போதிலும், 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடன் கொடுத்தவருக்கு  பூர்வீக இடத்தை விற்று கடனை அடைத்தது தங்களது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது ஓர் நன்மை தரும் அமைப்பாகும்.

சனி திசை தங்களுக்கு 2,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களையே வாரி வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது, இருப்பினும் தங்களது சுய ஜாதகத்தில் 1,4,6,7,10,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் இருந்து ( 1,4,6,7,10,12 ) 200% விகித இன்னல்களை தந்தது தங்களுக்கு மீள இயலாத துன்பத்தை தந்திருக்கிறது, அதாவது லக்கினம் பாதிப்பது உடல் மனம் சார்ந்த இன்னல்களையும், சரியான திட்டமிடுதல்கள் இல்லாத தன்மையையும், வருமுன் காக்கும் வல்லமை அற்ற தன்மையையும் தருகின்றது, 4ம் பாவக வழியில் இருந்து வண்டி வாகன இழப்பு, சொத்து வீடு  நிலம் போன்றவை திடீர் இழப்பு அல்லது தாமாகவே இழந்து நிற்கும் தன்மை, யாதொரு சுகபோகமும் அனுபவிக்க இயலாத நிலை, குணம் சார்ந்த பாதிப்பு என்ற வகையிலும், 6ம் பாவக வழியில் இருந்து கடன், நோய் பாதிப்பு, தேவையற்ற விஷயங்களை செய்து கடனாளியாக மாறும் தன்மை, மற்றவர் சொல்வதை செய்து கடனாளியாக மாறும் நிலை, சுய அறிவு திறன்  பாதிப்பு, எதிரி தொல்லை, போராட்டமே வாழ்க்கை, மற்றவருக்கு ஜாமீன் கொடுப்பதால் வரும் இன்னல்கள் என்ற வகையிலும்.

 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை வழியிலான பாதிப்பு, முரண்பட்ட எதிர்பாலின சேர்க்கையின் மூலம் வரும் பொருளாதர இழப்புகள், கூட்டு முயற்சியினால் வரும் பெரும் நஷ்டம், கூட்டாளியால் பாதிப்பு, அவர்கள் வழியிலான தீய பழக்க வழக்கங்களை மேற்கொண்டு இன்னலுறும் தன்மை, போதிய தெளிவில்லாத செயல்பாடுகள் என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து சுய தொழில் செய்வதற்கான அருகதையை இழத்தல், கவுரவம் அந்தஸ்து பாதிப்பு, முன்னேற்ற தடை, செய்யும் தொழில் வழியிலான கடுமையான பாதிப்பு, தொழில் முடக்கம், முதலீடு செய்த அனைத்தையும் இழந்து நிற்கும் சூழ்நிலை, சுய தொழில் வழியிலான முன்னேற்ற தடைகள் என்ற வகையிலும், 12ம் பாவக வழியில் இருந்து பெருத்த நஷ்டம், பேரிழப்பு, சொத்து சுகம் அனைத்தையும் இழந்து தவிக்கும் நிலை, போராட்ட வாழ்க்கை, தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகுதல், தெளிவில்லாத மனநிலை, மனஉளைச்சல், போராட்டம், எதிர்ப்புகளை சமாளிக்க வலிமை அற்ற தன்மை, தற்கொலை மனநிலை என்றவகையில் இன்னல்களை தரும்.

தங்களது ஜாதகத்தில் கிட்டத்தட்ட 6 பாவகங்கள் பாதக ஸ்தானத்துடனும், 1பாவகம் ஆயுள் ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், சனி திசை தங்களுக்கு வலிமை பெற்ற பாவக பனை வழங்கிய போதிலும், புதன்,கேது,சுக்கிரன்,செவ்வாய் மற்றும் குரு புத்திகள் பாதக ஸ்தான பலனையும் பாதிக்கப்பட்ட 8ம் பாவக பலனையும் ஏற்று நடத்தியது தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்கி விட்டது, எனவே பாதிக்கப்பட்ட பாவக பலன்கள் நடைமுறைக்கு வரும் பொழுது விழிப்புணர்வுடன் செயல்பட்டு இன்னல்களில் இருந்து தப்பிப்பதே தங்களுக்கான சிறந்த வழியாகும், மேலும் எதிர்வரும் புதன் திசை 8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த போதிலும், 3,9ம் பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை தருவது வரவேற்கத்தக்கது, எனவே சிறு வியாபாரம் அல்லது வியாபாரம் போன்றவற்றை செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் பெற " ஜோதிடதீபம் " வாழ்த்துகிறது.

தற்போழுது நடைபெறும் ராகு புத்தி தங்களுக்கு 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையை தருவது தங்களுக்கு மேன்மையான சிறப்புகளை தரும் என்பதால் தங்களது பூர்வீகத்திற்க்கு அருகில் வந்து சுபயோக சுக வாழ்க்கையை பெறுங்கள், மேலும் தங்களது ராகு புத்தி 5ம் பாவக வழியில் இருந்து ஓர் நிலையான வருமான வாய்ப்பை வாரி வழங்கும் என்பதால் அது சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டு பொருளாதர முன்னேற்றத்தை பெற " ஜோதிடதீபம் " அறிவுரை வழங்குகிறது, சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்றால் கடுமையான பாதிப்பை தந்து விடும், அதேபோன்று சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதிக்கப்பட்டு இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் பூர்வீகத்தில் இருந்தால் கடுமையான பாதிப்பை சந்திப்பார், தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமையுடன் இருப்பதால் பூர்வீகத்தில் குடியேறி நலம் பெறுங்கள்.

குறிப்பு :

 மேற்க்கண்ட ஜாதகருக்கு கேது 5ல் அமர்ந்து இருப்பதால் பூர்வீகம் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது முற்றிலும் தவறானது, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் வலிமையுடன் அமர்ந்து இருப்பது கவனிக்கத்தக்கது, இருப்பினும் பாவக கணிதம் சார்ந்த அமைப்பில் 4ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% இன்னல்களை தரும், 4ல் அமர்ந்த கேது ஜாதகருக்கு பரிபூர்ண சொத்து சுக சேர்க்கையை வழங்கிய போதிலும், 4ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால் அதில் ஒரு சிறு துரும்பை கூட ஜாதகரால் அனுபவிக்க இயலாத தன்மையை  தந்திருப்பது கண்கூடான உண்மையாகும், மேலும் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் ஸ்திர தன்மை அற்றவர் என்பதை கட்டியம் கூறுகிறது, ஜாதகர் விழிப்புணர்வுடன் செயல்படவில்லை எனில் உடுத்த உடைகூட இல்லமால் போய்விடும், அதற்க்கு ஜாதகரே காரணமாக இருப்பர் என்பது கூர்ந்து கவனிக்கவேண்டிய அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment