வியாழன், 28 ஜூன், 2018

ராகுகேது தோஷம் என்ன செய்யும் ? திருமணம் தாமதமாக ராகுகேது தோஷம் காரணமாக இருக்கின்றதா ?


 கேள்வி :

 ஐயா வணக்கம்.என் மகனின் ஜாதகம் அனுப்பி உள்ளேன். 6 வருடமாக பெண் பார்த்து வருகிறேன் எதுவும் அமையவில்லை. 2ல் கேதுவும், 8ல் ராகுவும் இருப்பதல் திருமணம் நடக்க வாய்ப்பு குறைவு என்று கூறுகிறார்கள். அவர்கள் சொன்ன எல்லா பரிகாரங்களும் செய்து விட்டேன். தங்கள் என்ன காரணம் என்று பார்த்து கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில் :

2ல் கேதுவும், 8ல் ராகுவும் இருப்பதல் திருமணம் நடக்க வாய்ப்பு குறைவு என்பது தவறான கருத்தாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஏனெனில் தங்களது மகனின் ஜாதகத்தில் பாவக அமைப்பின் படி லக்கினம் எனும் முதல் பாவகம் கன்னி ராசியில் 167:04:58 பாகையில் ஆரம்பித்து, துலாம் ராசியில் 197:29:04 பாகைவரை வியாபித்து நிற்கிறது, கேது பகவான் லக்கினத்திற்கு உற்ப்பட்ட 195:14:48 பாகையில் அமர்ந்து இருப்பதே சரியானது, மேலும் ராகு பகவானும் களத்திர ஸ்தானத்திற்கு உற்ப்பட்ட 15:14:48 பாகையில் அமர்ந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது, மேலும் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவாக அமைப்பிற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பது வரவேற்கத்தக்கது, எனவே ஜாதகருக்கு ராகு கேது யாதொரு இன்னல்களும்  தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து தரவில்லை என்பதை கருத்தில் கொள்க, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினத்தில் கேது, களத்திர ஸ்தானத்தில் ராகு என்பதே சரியான நிலை, அடுத்து தங்களது மகனுக்கு திருமணம் தாமதமாக காரணம் என்ன ? என்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பரே !



லக்கினம் : கன்னி
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : புனர்பூசம் 2ம் பாதம்

தங்களது மகனின் ஜாதகத்தில் 7ல் அமர்ந்த ராகு சம்பந்தப்பட்ட பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் இருந்தாலும், பாவக தொடர்பு வழியில் கடுமையாக பாதிக்கப்படுவது ஜாதகருக்கு உகந்ததல்ல, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் வரும் தடை தாமதத்திற்கு அடிப்படை காரணமாக விளங்குகிறது, ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த காரணத்தை கொண்டும் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் பாதிக்கப்படுவது நல்லதல்ல, அதுவும் தங்களது ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 8ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களுக்கு கடுமையான நெருக்கடிகளை தரும் அமைப்பாகும்.

கடந்த சனி திசை தங்களது மகனுக்கு 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை வாரி வழங்கியது திருமண வாழ்க்கை சார்ந்த முயற்சிகள் யாவிலும் பெரும் தோல்வியை தந்து இருக்க கூடும், தற்போழுது நடைமுறையில் உள்ள கேது புதன்  திசை 12ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முதலீடு செய்வதால் வரும் அதிர்ஷ்டத்தை மட்டுமே வழங்குகிறது, புதன் திசை கேது புத்தி 6.10ம் வீடுகள் ஆயுள் ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 1,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் வழங்கி இருக்கின்றது, தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது தாங்கள் எடுக்கும் திருமண முயற்சிகளை வெகுவாக பாதிப்பதுடன், ஜாதகருக்கு எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து இன்னல்களையும் தரும்.

தங்களது மகனுக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளும் முன் முறையாக ஜாதக ஆலோசனை பெற்று, அதன் பிறகு முயற்சி செய்து நலம் பெறுங்கள்.

குறிப்பு :

 ஜாதகருக்கு களத்திர ஸ்தான பாதிப்பு என்பது மிகுந்த இன்னல்களை ( 200% விகிதம் ) தரும் அமைப்பில் உள்ளதால், சரியான தீர்வை தேடுவதே தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், மேலும் ஜாதகருக்கு 6 பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதும், எதிர்வரும் சந்திரன் செவ்வாய் புத்திகள் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது மிகுந்த இன்னல்களை தரும் என்பதால், முறையாக  ஜாதக ஆலோசணை பெற்று நலம் பெறுக.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக