வியாழன், 7 ஜூன், 2018

பாதக ஸ்தான தொடர்பை பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் என்ன ?

 

 லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த ஓர் பாவகமும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது நல்லதல்ல, குறிப்பாக லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகரை வெகுவாக படுத்தி எடுக்கும், நடைபெறும் திசா புத்தி அல்லது எதிர்வரும் திசா புத்திகள் பாதக ஸ்தான தொடர்பை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோ கதிதான், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்பை பெரும் பாவக பலனை நவகிரகங்களின் திசாபுத்திகள் ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சில அன்பர்களுக்கு மேற்கண்ட அமைப்பு இருப்பது வரவேற்கத்தக்கது, சில அன்பர்களுக்கு பாதக ஸ்தான தொடர்பை பெற்ற பாவக பலனை நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஏற்று நடத்துவது ஜாதகருக்கு போராட்டம் மிகுந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்துவிடுகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !



லக்கினம் : கன்னி
ராசி : தனசு
நட்சத்திரம் : பூராடம் 4ம் பாதம்

1,3ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிக்கல்கள், உடல் மனம் சார்ந்த இன்னல்கள், தெளிவில்லாத முடிவுகள், மனோ பயம், வீரியம் குறையும் தன்மை, தானாகவே இன்னல்களை தேடிக்கொள்ளும் நிலை, நோய் எதிர்ப்பு திறன் குறைவு, வீண் கற்பனைகள், திட்டமிடுதல்கள் யாவும் செயல் வடிவம் பெற இயலாத நிலை, கற்பனையில் ஜீவிக்கும் தன்மை, ஜாதகரால் மற்றவர்களும், மற்றவர்களால் ஜாதகருக்கும் இன்னல்கள் ஏற்படும் நிலை, மன உறுதி, தன்னம்பிக்கை குறையும் தன்மை, தனக்கு வரும் நன்மைகளை ஜாதகரே உதறித்தள்ளும் நிலை, நிலையற்ற மனம், அலைபாயும் சிந்தனைகள், நல்லோர் சேர்க்கையை தவிர்க்கும் நிலை, பெரியோர் ஆசியை பெற முடியாமல் தவிக்கும் நிலை, உறுதியற்ற மனநிலை, செய்யும் காரியங்களில் நேர்த்தியை கடைபிடிக்காத தன்மை, சுய கட்டுப்பாடு இழக்கும் நிலை, சிந்தனையும் செயலும் முழு வடிவம் பெற இயலாத சூழ்நிலை என்ற வகையில் இன்னல்களை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு எடுக்கும் முயற்சிகள் யாவும் முழுமை பெற முடியாத சூழ்நிலை, மனதைரியம் இழந்து இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை, முழு முயற்சி இன்றி பின்வாங்கும் குணம், எதிர்ப்பு திறன் குறைவு, வீரியமிக்க காரியங்களில் ஆர்வம் இன்மை, எதிர்பாராத வாய்ப்புகளை முறையாக பயன்படுத்த முடியாமல் வீண் விரையம் செய்யும் நிலை, எதையும் எதிர்கொள்ள வலிமை இன்றி தவிக்கும் நிலை, சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்துவரும் நன்மைகளை முழு அளவில் சுவீகரிக்க இயலாமல் போராடும் தன்மை, எதிர்ப்புகளை கண்டு பின்வாங்கும் குணம், லாபம் அதிர்ஷ்டம் இரண்டையும் தவறவிடும் சூழ்நிலை, சீரிய முயற்சி இன்மை, சுய கட்டுப்பாடு இழத்தல், சபல குணம், எதிலும் ஆர்வம் இன்றி தவிக்கும் நிலை, சரியானவற்றை தவிர்த்து, இன்னல்களை தேடி சென்று அனுபவிக்கும் நிலை என்ற வகையில் இன்னல்களை தரும், கூட்டு தொழில் வழியிலான நஷ்டங்கள், வியாபார முடக்கம், சரியான தொழில் தேர்வை செய்வதில் குழப்பம் மற்றும் தாமதம் என்ற வகையில் பெரும் சிரமங்களை ஜாதகருக்கு தர கூடும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தந்த போதிலும், தற்போழுது நடைபெறும் ராகு திசை 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த சுபயோகத்தை நல்குவது ஜாதகருக்கு முழு வீச்சில் 5ம் பாவக வழியிலான சுபயோகங்களை வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகருக்கு 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு தொழில் ஸ்தானமாக வருவது வரவேற்கத்தக்கது, ஜாதகர் தனது சமயோசித அறிவு திறன் கொண்டு தனது தொழிலை மிக சிறப்பாக வளர்த்து எடுக்கும் வல்லமையை தரும், ஜாதகருக்கு தொழில் நுட்பம் சார்ந்த நல்லறிவு எதிர்பாரத ஜீவன மேன்மையை வாரி வழங்கும், மண் தத்துவம் சார்ந்த நுண்ணறிவும், வண்டி வாகனம் சொத்து சுக சேர்க்கை, சுய மரியாதை கவுரவம், அந்தஸ்து போன்றவை ஜாதகரை தேடிவரும், பல தொழில் புரியும் யோகமும், அதன் வழியிலான விருத்தியும் மென்மேலும் சுபயோகங்களை வாரி  வழங்கும்.

சுய ஜாதகத்தில் 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்ற போதிலும், நடைமுறையில் உள்ள ராகு திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பூர்வ புண்ணிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ராகு திசைக்கு அடுத்து வரும் குரு திசையும் வலிமை பெற்ற பாக்கிய ஸ்தான பலனை தருவது தொடர் நன்மைகளை தரும் அமைப்பாகும், பாதக ஸ்தான தொடர்பை பெற்றாலும் நவகிரகங்களின் திசா புத்தி பாதக ஸ்தான தொடர்பை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது ஜாதகருக்கு சிறப்பான சுபயோகங்களை தருவதற்கு நிகரானது, மேற்கண்ட இரண்டு ஜாதகத்திலும் பாதக ஸ்தான தொடர்பு இருந்த போதிலும், முதலாவது ஜாதகர் பாதக ஸ்தான பலனை சந்திரன் திசையில் சுவீகரிக்கும் நிலையையும், இரண்டாவது ஜாதகர் ராகு திசையில் பாதக ஸ்தான பலனை சுவீகரிக்காத நிலையையும் தருவது கவனிக்கத்தக்கதாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக