Friday, February 24, 2012

15 நாட்களில் செல்வ வளம் ? என்ன கொடுமை சரவணன் !ஒரு வாரத்தில் செல்வ வளம் பெறலாம்  ?

15 நாட்களில் செல்வ வளம் பெறலாம்  ?

 30  நாட்களில் செல்வ வளம் பெறலாம் !?

41  நாட்களில் செல்வ செழிப்பை உண்டாக்கும் அதிசய அதி நுட்ப அஸ்ட்ரோ 
நியுமராலஜி , கிராப்பாலாஜி, நேம்பராலாஜி,  ? மேலும் பல லாசிகள்

 மற்றும்  மந்திர வசிய முறை , கிரகங்களை அக்டிவேசன் & டியாக்டிவேசன் செய்து ஒருவனை கோடிஸ்வரனாக மற்றும் முறை .
மேலே கண்டவைகள் அனைத்தும் பல ஜோதிட புத்தகங்களில் வரும் விளம்பரங்கள் . சற்றே சிந்தனைக்கு எடுத்து கொள்ளவோம் மேல்கண்ட விளம்பரங்களில் காணப்படுவது போல் நடந்து விட்டல், அல்லது ஒருவர்  செய்துவிட்டால் அவர் சத்தியாமாக கடவுள் என்றுதான் கும்பிட வேண்டும் 

 உண்மையில் இந்த விளம்பரங்களை பார்த்து அவர்களை நாடி சென்றவர்களுக்கு கிடைத்தது  என்னவென்றால் திருவோடு மற்றும் திருநெல்வேலி அல்வா தான் என்பதை அனுபவித்தவர்களுக்கு நான்றாக தெரியும் , ஏனெனில் மற்றவனை மாற்றக்கூடிய திறன் உள்ள மனிதன் இதுவரை வரை பிறக்கவில்லை , அப்படி ஒரு மாற்றம் ஒருவருக்கு நடந்திருந்தால் நிச்சயம் அது இறையருளின்  சித்தமாக இருக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும் .

  கிரகங்களை அக்டிவேசன் & டியாக்டிவேசன் செய்து ஒருவனை கோடிஸ்வரனாக மற்றும் முறை இந்த விளம்பரத்தை நன்றாக கவனியுங்கள் நவகிரகங்கள் அனைத்தும் இந்த விளம்பரம் செய்தவரின் வீட்டில் பண்ணையத்தில் கூலி வேலை செய்பவர்கள் போல் விளம்பரம் தந்துள்ளார் என்ன கொடுமையட சாமி கலி காலத்தில் இப்படி எல்லாம நடக்கும் .

 அக்டிவேசன் & டியாக்டிவேசன் செய்ய அது என்ன சிம்கார்டா  இதில் பெருமை வேறு 650  வது தொடரை கடந்து வெற்றி பாதையில் என்று விளம்பரம், எமது நண்பர் ஒருவர் இவரிடம் சென்று ஜோதிட ஆலோசனை 

 ( ஜோதிட ஆலோசனை கட்டணம் மற்றும் இரத்தின ஆலோசனையின் பேரில் ரூபாய் 75 ,000 பெற்றுக்கொண்டுள்ளார் என்பது வேறு கதை )

பெற்று வந்து சில மாதங்களிலேயே உள்ளதும் போச்சுட நொள்ள கண்ணா என்ற நிலையில் எம்மை காண வந்தார்,( உண்மையில் இவரிடம் ஆலோசனை பெறுவதற்கு  முன் நண்பருக்கு சொந்தமாக இரண்டு லாரி இருந்தது ,ஜோதிட ஆலோசனையின்  பலனாக இரண்டு லாரியையும் விற்றுவிட்டு கடனாளியாக மாறிவிட்டார்  ) அவரை பார்த்தால் பரிதாபமாக இருந்தது, முதலில் அவருக்கு சொன்ன ஆலோசனை
( சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்
உங்களது ஜாதக அமைப்பில் எந்த ஒரு யோகமும் இல்லாமல் எதையும் பெற முடியாது ,ஆகவே ஜாதகத்தின் உண்மை நிலையை உணர்ந்து, தனம்பிக்கையுடன் உழைப்பை செய்யுங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும் என்பதாகும்.

ஜோதிடம் என்பது வாழ்வியல் வழிகாட்டி , இதில் நாம்  மூட நம்பிக்கைகளை வளர்த்துகொள்வது  அடி முட்டல் தனம், இதை பார்த்த பிறகாவது மக்கள் சிந்திப்பார்களா ? 

மேலும் இந்த ஜோதிட கலையினை முறையாக கற்றுக்கொள்ளாமல், ஜோதிடகலையில் தேர்ச்சி பெறாமல் தவறான   ஜோதிட ஆலோசனை சொல்பவர்களது வாழ்க்கை வெகு விரைவில்  மிகவும் நசிந்து விடும் என்பது உண்மையிலும் உண்மை.

இந்த தெய்வீக கலையை தவறாக பயன் படுத்துபவர்கள் அனைவரும் அவரது வாழ்நாளில் அதற்க்குண்டான பலனை அனுபவித்தே தீர வேண்டும் . 

 இறை நிலை, மற்றும்  தன்னம்பிக்கை இவைகள்  மட்டுமே மனிதனின் வாழ்க்கையை மாற்றும் தன்மை கொண்டது  ( இதுவும் கர்ம வினைக்கு உட்ப்பட்டு ) என்பதை அனைவரும் கருத்தில் கொள்வது நலம் தரும் .

மேலும் ஜோதிடம் மாந்திரீகம் மருத்துவம் போன்ற துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்கள் சிலர் மற்றுமே உள்ளனர், இவர்கள் யாரும் இந்தமாதிரி விளம்பரங்கள் கொடுப்பதில்லை,
நல்ல ஜோதிடரை கண்டு சரியான ஜோதிட ஆலோசனை பெற்று வாழ்க வளமுடன் .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 
 

4 comments:

 1. //ஒரு வாரத்தில் செல்வ வளம் பெறலாம் ?//
  //15 நாட்களில் செல்வ வளம் பெறலாம் ?//
  // 30 நாட்களில் செல்வ வளம் பெறலாம் !?//
  யாருக்கு என்று அவர்கள் சொல்லவில்லையே? உங்களுக்குன்னு சொன்னாங்களா ??? அவங்கே ஏதோ சம்பாரிக்க கட்டம் போட்ரங்கே பாஸ்....

  //41 நாட்களில் செல்வ செழிப்பை உண்டாக்கும் அதிசய அதி நுட்ப அஸ்ட்ரோ
  நியுமராலஜி , கிராப்பாலாஜி, நேம்பராலாஜி, ? //

  அதென்னே அதிநுட்பம்??? சீனா வஸ்து வை விட்டுவிட்டேர்களே??? கிரபலோகி சோனலாஜி, பயோலாஜி, ராக்கெட் டெக்நாலாஜி... ரூம் போட்டு யோசிபங்கலோ

  ReplyDelete
 2. // கிரகங்களை அக்டிவேசன் & டியாக்டிவேசன் செய்து ஒருவனை கோடிஸ்வரனாக மற்றும் முறை //

  பாஸ் விடுங்க பாஸ் ஸ்பெக்ட்ரம் மாதிரி இவரு கிரகங்களுக்கு ஏஜென்சீஸ் எடுத்துஇருப்பாரு போல..
  (இஸ் அப்பா..... தொழில் பண்ண விடமாட்டங்க போல இருக்கு .. நாமே எதோ இளிச்சவாய மக்களை வச்சு அக்டிவேசன் & டியாக்டிவேசன் சொல்லி பணம் பண்ணலாம் நெனைச்ச குண்டதூக்கி போடறன்களே )

  //கிரகங்களை அக்டிவேசன் & டியாக்டிவேசன் செய்து ஒருவனை கோடிஸ்வரனாக மற்றும் முறை இந்த விளம்பரத்தை நன்றாக கவனியுங்கள் நவகிரகங்கள் அனைத்தும் இந்த விளம்பரம் செய்தவரின் வீட்டில் பண்ணையத்தில் கூலி வேலை செய்பவர்கள் போல் விளம்பரம் தந்துள்ளார் என்ன கொடுமையட சாமி கலி காலத்தில் இப்படி எல்லாம நடக்கும் .//

  டேய் குப்பா அந்த சூரியனையும் சந்திரனையும் கட்டிட்டு புதனுக்கு புல்லு போடுன்னு சொன்னாலும் சொல்லுவாங்க...  //அக்டிவேசன் & டியாக்டிவேசன் செய்ய அது என்ன சிம்கார்டா இதில் பெருமை வேறு 650 வது தொடரை கடந்து வெற்றி பாதையில் என்று விளம்பரம், //

  ஐயோ ஐயோ ... கிரகங்களை அக்டிவேசன் & டியாக்டிவேசன் செய்தால் sms இலவசம்னு சொன்னாலும் சொல்லுவாங்க.
  எதுக்கும் சென்னை பக்கம் போகம இருக்கறது பர்சுக்கு நல்லது.... ஓவர் அக்டிவேசன் & டியாக்டிவேசன் ஒடம்புக்கு ஆகாது

  ReplyDelete
 3. நல்ல பதிவு ... விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றி... i am great escape thank you..


  நல்ல வேலை...நண்பர் ஒருவர் என்னை அந்த அக்டிவேசன் & டியாக்டிவேசன் ஜோதிடரிடம் என்னை அழைத்து செல்ல இருந்தார்..ஒரு வேலை எனக்கும் அக்டிவேசன் & டியாக்டிவேசன் பண்ணி இருந்தால் எனக்கு இன்கமிங் அவுட்கோயிங் கட் ஆயிருக்கும்

  நண்பர் ஒருவர் நம்ம அக்டிவேசன் & டியாக்டிவேசன் ஜோதிடரிடம் சென்று பார்த்து ராசி கல்லை வாங்கினர்.. விலை ஹ்ம்ம் உள்ளூர் விலையை விட அதிகம்.. எது எடுத்தாலும் பத்தாயிரம்(உண்மையில் அதன் விலை ஐநூறுதான் )...நல்ல தொழில்... நானும் அக்டிவேசன் & டியாக்டிவேசன் ஜோதிடர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறன்


  //( உண்மையில் இவரிடம் ஆலோசனை பெறுவதற்கு முன் நண்பருக்கு சொந்தமாக இரண்டு லாரி இருந்தது ,ஜோதிட ஆலோசனையின் பலனாக இரண்டு லாரியையும் விற்றுவிட்டு கடனாளியாக மாறிவிட்டார் )//

  அப்புறம் அவரு என்ன கப்பல வாங்குவாரு .... கோமணத உருவமா விட்டாரே சந்தோஷ படுங்க...

  இவரிடம் கோவையில் அப்பைமென்ட் வேண்டும் என்றால் ஆறு மாதம் ஆகுமாம்...எமெர்ஜென்சி என்றால் ரூபாய் ஐந்தாயிரம் கொடுத்தல் பார்க்கலாம்.. என்ன மருத்துவ மனையா வச்சிருக்கார் எமெர்ஜென்சியா பார்க்க...(//15 நாட்களில் செல்வ வளம் பெறலாம் ?// அவருக்கு தான் அது பொருந்தும் )


  முருகா....... பழனியில் இருக்கும் நாதன் தான் என்னை காப்பாற்று.. என் குலதெய்வம் அம்மனின் அருள் என்றும் உங்களுக்கும் எனக்கும் உண்டு

  நன்றி

  ReplyDelete
 4. // ( ஜோதிட ஆலோசனை கட்டணம் மற்றும் இரத்தின ஆலோசனையின் பேரில் ரூபாய் 75 ,000 பெற்றுக்கொண்டுள்ளார்என்பது வேறு கதை )//

  எதோ அக்டிவேசன் & டியாக்டிவேசன் பார்டி கிட்ட நம்ம ஆள் வசமா மாட்டிஇருப்பார்.. அவரு உருவிட்டறு...

  இதுல அவரு டிவியில சொல்லுவாரு அட ராம இவர மாதிரி உலகத்துல யாரும் இல்லைன்னு நெனைக்க தோணும்..

  என்னுடைய கேள்வி என்னவென்றால் ??

  எளிய மக்களுக்கு நல்லது பண்ணும் அக்டிவேசன் & டியாக்டிவேசன்ஜோதிடர் ஏன் பீஸ் 1000 to 5000 ஆக வைதுள்ளிர்
  மோதிரம் விலையை நகை கடையை விட பல மடங்குக்கு விற்பது ஏன் ???

  டிவில் நீங்கள் இலவசமா சொல்வது முழு பலனும் அல்ல ? நேரில் வர வைத்து ராசி கற்கள் விற்கும் வேலை என்பது தெரிகிறது..

  ReplyDelete