வியாழன், 23 பிப்ரவரி, 2012

தவ பலன்கள் !




தவத்தின்போது மன அலைச்சுழல் குறைவதால் மனம் அமைதி பெறுகிறது .

தவத்தினால் மனத்திற்கு ஓர்மை , கூர்மை, நேர்மை , சீர்மை, ஆகிய தன்மைகள் கிடைக்கின்றன. ஓர்மை என்பது ஒரே பொருளை அசைவில்லாமல் பார்ப்பது. அதனால் அறிவுக்கூர்மை உண்டாகிறது. மேலும், இப்படித்தான் செயல் ஆற்ற வேண்டும், மாறுதலாக  செயல் பட கூடது. என்ற நேர்மை உண்டாகிறது . எல்லா ஒழுக்கங்களும் அமைந்து இருப்பது சீர்மை .

தவத்தின்போது புலன்களின் இயக்கம் வெகுவாக குறைந்து விடுவதாலும். எப்போதும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை ஒருமுகப்படுத்துவதாலும், நமது உயிர் ஆற்றலின் செலவு தவிர்க்கப்படுகிறது . ஆற்றல் சேமிக்கப்படுகிறது .

உதாரணமாக தண்ணீரை காய்ச்சும் பொழுது நீராவி மேலே வெளியேறும் , நான்குமணி நேரம் கழித்து பார்த்தால் முக்கால் பகுதி  நீர் ஆவியாக மறைந்திருக்கும் . பாத்திரத்தில் கால் பகுதி நீர் மட்டும் இருக்கும்.

இதற்க்கு பதிலாக அந்த பத்திரத்தின் மேல் ஒரு மூடி போட்டு, அந்த நீராவியை குழாய் வழியாக கொண்டு சென்று குளிரவைத்து அந்த நீரை மறுபடியும் அந்த பாத்திரதிற்குல்லேயே விட்டால், பாத்திரத்தில் நீரின் அளவு அவ்வளவு விரைவாக செலவு ஆகாது 1 /4  பங்கு அல்லது 1 /8  பங்கு   செலவாகலாம். மிச்சம் எல்லாம் சேமிக்கப்படும். அது போன்று ஐம்புலன்கள் மூலமும் சிந்தனையின் முலமும் ஓடிக்கொண்டு இருக்கும் நமது  மன ஆற்றலை உள்ளே இருக்கின்ற உயிரின் மீது செலுத்தி தவம் செய்யும் பொழுது, மன ஆற்றல் மீண்டும் மீண்டும் சேமிக்கபடுகிறது. இது நாளடைவில் நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு  வெகுவாக பயன் படுகிறது .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக