வியாழன், 23 பிப்ரவரி, 2012

புதிதாக ஒரு ஊர் அல்லது நகரத்தில் குடியேருபவர், பார்க்க வேண்டியவைகள் !





மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிர்தம் எனும் சாஸ்திர நூலில் புதிதாக  ஒரு ஊர் அல்லது நகரத்தில் குடியேருபவர், பார்க்க வேண்டியவைகள் ! எனும் தலைப்பில், சுலோகம் 38 , 39 நான் கண்டு பலன் பெற்றதை உங்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

ஒரு ஊர் அல்லது நகரம் மற்றும் நாட்டிலோ புதிதாக குடியேற விரும்புபவன் அதற்க்குண்டான தகுந்த நல்ல நேரத்தை கீழ்க்கண்ட முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யின் சந்தான பாக்கியம், செல்வம், செழிப்பு முதலியன உண்டாகும். இந்த சக்கரமானது மனித வடிவில் உடையதாகும்.

குடியேற விரும்பும்  ஊர் அல்லது நகரம் மற்றும் நாட்டின் நட்சத்திரம் முதல் அந்த நபரின் ஜென்ம நட்சத்திரம் வரை எண்ணவும்,. இந்த என்னானது முதல்  5க்குள் இருப்பின் இது தலையில் இருப்பதாகவும் இதன் பலன் பணச்செர்க்கை என்றும் கொள்ளவேண்டும். இதற்கடுத்து 3  க்குள்  இருப்பின் இது முகத்தில் இருந்து நாசத்தை சொல்லும்,  இதற்கடுத்து 5க்குள் இருப்பின் மார்பில் அமர்ந்து அது செல்வத்துக்கு உத்தரவாதம் தரும். 

அடுத்த 6 க்குள் இருப்பின் இது இரு பாதங்களில் தல 3 வீதம் அமர்ந்து தான நாசத்தை முன்கூட்டியே அறிவிக்கும். அடுத்த 1 ல் இருந்தால் இது முதுகில் அமர்ந்து உயிருக்கு கண்டத்தை தரும். அடுத்த 4  க்குள் இருப்பின் இது இடுப்பில் அமர்ந்து நல்ல அதிர்ஷ்டத்தை சுட்டிக்காட்டும் .

அடுத்த 2 நட்சத்திரங்கள் குதத்தில் அமர்ந்து அவை உபத்திரவத்தையும் பயத்தையும் முன்கூட்டியே அறிவிக்கும், கடைசி 2  ம் இரண்டு கைகளில் பொருந்தியிருந்து அதாவது வலது, இடது கைகளில் இருந்து முறையே லாபம், வறுமை ஆகியவற்றை காட்டும் .

இது கிழ்கண்டவாறு அமையும் :


நட்சத்திர தொகை
மனிதனின் பகுதி
பலன்
1 முதல் 5 வரை
தலை
பணச் சேர்க்கை
6 முதல் 8 வரை
முகம்
நாசம்
9 முதல் 13 வரை
மார்பு
செல்வம்
14 முதல் 19 வரை
இரு பாதம்
தன நாசம்
20
முதுகு
உயிர்கண்டம்
21 முதல் 24 வரை
இடுப்பு
அதிர்ஷ்டம்
25 மற்றும் 26
குதம்
உபத்திரவம், பயம்
27 மற்றும் 28  
கைகள்
லாபம், வறுமை

 இது நான் அனுபவரீதியாக கண்ட உண்மை, சிறிதுகூட இதில் மாற்றம் வருவதில்லை என்பது வியப்புக்கூரியது

 மகாகவி காளிதாசர் அருளிய இந்த முறையினை பின்பற்றினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் .

ஜோதிடன்  வர்ஷன் 
  9842421435 
 9443355696  

2 கருத்துகள்:

  1. சற்று குழப்பமாக இருக்கிறது ? கோவையின் நட்சத்திரம் எப்படி கண்டு பிடிப்பது

    பதிலளிநீக்கு
  2. என்னுடைய உறவிர்னர் ஒருவரின் பிறந்த நேரம் கொடுத்துள்ளேன்.. அவர் செல்லாத கோயில் இல்லை மற்றும் பரிஹர்ரம் இல்லை.செல்லாத ஜோதிடர் இல்லை ??? நான் சொல்வதற்குமுன் அந்த கோயிலிலை பற்றி கூறுவார்..ஏறாத மலை இல்லை ??அவருக்க தொழில் அவ்வளவு சிறப்பு இல்லை மற்றும் திருமணம் தள்ளி செல்கின்றது.... விளக்கம் தேவை


    9-3-1975 6.00pm vellakoil

    வேலு
    கோயம்புத்தூர்

    பதிலளிநீக்கு