திங்கள், 20 பிப்ரவரி, 2012

இயற்கையாக பிறக்கும் குழந்தைக்கும், அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைக்கும், ஜாதக வேறுபாடு வருமா ?



எனது நெருங்கிய நண்பரின் கேள்வி :

இயற்கையாக பிறக்கும் குழந்தைக்கும், அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைக்கும், ஜாதக வேறுபாடு வருமா ?

மேலும் நாம் நமது வசதிக்கு ஏற்றார் போல் நல்ல நேரங்களில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றுக் கொள்வதால் யோகமான வாழ்க்கையை பெற முடியுமா ?

பதில் :

நிச்சயம் ஜாதக வேறுபாடு வருவதற்கு வாய்ப்பு இல்லை,

சில ஜோதிடர்கள் செல்லுவது கேட்டு அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும், யோகமான குழந்தைகளாக மாறி விட்டால் இந்திய வெகு விரைவில் வல்லரசு மற்றும் நல்லரசு நாடக மாறிவிடும் ,

அப்படி நடக்க கண்டிப்பாக வாய்ப்பு இல்லை என்பதே எனது கருத்து , மேலும்  அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும், நிச்சயமாக அந்த குறிப்பிட்ட நேரத்தில்  அறுவை சிகிச்சை மூலம் பிறக்க வேண்டும், என்ற விதியமைப்பு , அந்த குழந்தைக்கு இருக்கும். அந்த குழந்தை பிறந்த சரியான  நேரத்திற்கு உட்ப்பட்டு தனது கர்மவினை பதிவுக்கு ஏற்றார் போல் யோக அவயோக பலன்களை அனுபவிக்கும் என்பதே முற்றிலும் உண்மை.

இயற்கையா பிறக்கும் குழந்தை ஒவ்வொன்றும் மனதளவில் மிகவும் ஆரோக்கியமாக இருக்கின்றது என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்லுகிறது . 

ஜாதக ரீதியான உண்மை என்னவென்றால் இயற்கையாகவோ அல்லது அறுவைச்சிகிச்சை மூலமாகவோ பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அதன் அதன் விதிப்படியே பிறக்கின்றது இதில் மனிதனின் பங்கு ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும் .

" நீ விதியை மதியால் வெல்வாய் ஆனால் 
அப்படி ஒரு விதி உன் ஜாதகத்தில் இருக்கும் "

என்ற அமைப்பின் படி எல்லா இயக்கங்களும் ஒரு விதிக்கு உட்பட்டே அனைத்தும் இயங்குகின்றன . இதை மனித சக்தியால் மாற்றி அமைக்க முடியவே முடியாது பரிமாற்றம் செய்யவும் முடியாது , இயற்க்கை சக்தியுடன் இணைந்து செயல்பட மட்டும் மனிதனால் முடியுமே தவிர வேறெதுவும் மனிதனால் முடியாது .

நன்மை தீமை அனைத்தும் இதற்குள் அடக்கம் மேலும் இயற்க்கை , இறைநிலை, புதிய கண்டு பிடிப்பு , அதிசயத்தக்க நிகழ்வுகள் , உலக ஆக்கம் உலக அழிவு ,  ஆத்திகம் , நாத்திகம் என அனைத்தும் இதற்குள் அடக்கம் இதுவே காலம் தேவனின் படைப்பு .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக