Saturday, February 4, 2012

குண்டலினி

அய்யா அருமை

என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இது யோகா பற்றி பதிவா ? இல்லை ஜோதிடம் பற்றிய ??
//இதன் மூலம் ஒருவருக்கு எந்த ஆதார சக்கரம் சரியாக அமையவில்லையோ//
எப்படி கண்டு பிடிப்பது? அதற்கு சிலவகை கேமரா பயன்படுத்தவேண்டுமே ?

//அந்த ஆதார சக்கரத்தினை முறையான யோகா பயிற்ச்சியின் மூலம் சரிவிகித நிலைக்கு கொண்டுவந்து கர்மவினை பதிவினை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்,//

என்ன மாதிரியான பயிற்சிகள் ? பயிற்சி என்றல் இடைவிடாது நாம் முயற்சி செய்யும் போது முன்று சக்கரம் activated ஆவதற்குள் நாம் பாதி வயது கடந்துவிடுமே?
 சந்தேகமே இல்லை இரண்டும் சம்பந்தப்பட்ட பதிவுதான் :

 மேலே பார்த்தவற்றில் குண்டலினி  பற்றி அராய்ச்சி உள்ளவர்களுக்கு நிச்சயம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
முதலில் குண்டலினி பற்றிய ஒரு சிறு விளக்கம் :

 ஒவ்வொரு மனிதருக்கும் இந்த குண்டலினி சக்தியாகப்பட்டது கருமைய்யம் எனும் மூலதாரத்தில் ஒடுங்கி இருக்கும், இதன் இயக்கம் என்பது மிகவும் ரகசியமானது அதாவது உயிருடன் சம்பதபட்டது, மனிதனின் ஆறாவது அறிவு தெளிவாகவும் , விழிப்புடன் செயல்பட வைக்கும் தன்மை இதற்க்கு உண்டு , இந்த சக்தியை நாம் சுயமாக இயக்க முடியாது, அப்படி சுயமாக இயக்க வேண்டும் என்றால் அய்யா வேலு சொன்னது போல், பாதி வயது மட்டும் அல்ல ஆயுள் முழுவதையும் நாம் இதற்க்கு அர்ப்பணிக்க வேண்டும்.

இது நடை முறைக்கு சாத்தியம் இல்லை, இதற்க்காத்தான் பல ரிஷிகளும் , சித்தர்களும் தேடி அலைந்து தனிமையாக காடுகளுக்கு சென்று இந்த குண்டலினி சக்தியை இயக்க தலை கீழாக தவம் புரிந்தனர்.
இதைப்பற்றிய விளக்கம் பிறகு காண்போம், குண்டலினி சக்தியை மூலதாரத்தில் இருந்து, தண்டு வடத்தின் வழியே கொண்டு சென்று ஆக்னையில் வைத்து தவம் இயற்றும் பொழுது , மற்ற ஆதாரங்கள் அனைத்தும், நன்றாக இயங்க ஆரம்பித்து விடும் , இதற்க்கு நாம் செய்ய வேண்டியது இதில் சிறந்தவராக விளங்கும் குரு முகமாக நின்று பயிற்ச்சி செய்வது மட்டும்தான்.

குரு என்பவர் காந்தம் போன்ற அமைப்பை பெற்றவர், நாம் இரும்பு துகள் மாதிரி அமைப்பை பெற்றவர்கள், காந்தத்துடன் இரும்புதுகள்  சேரும்பொழுது இரும்புதுகள் எப்படி காந்தமாக மாறுகின்றதோ அது போல் நாமும் இந்த குண்டலினி சக்தியை, செயல் பட வைக்க இயலும். இதற்க்கு ஒரு வருடம் போதும்.

கரு மைய்ய துய்மை பெற இது ஒரு சிறந்த வழி, இதனால் என்ன பயன் :

மனிதன் பூமியில் வாழுவதற்கு தேவையான, அனைத்து வகை செல்வங்களையும் நேர்மையாக  பெறுவதற்கு, சரியான வழிகாட்டுதல் கிடைக்கும், உங்களது சுய அறிவு சிறப்பாக செயல்படும், விழிப்புணர்வு உங்களக்கு எப்பொழுது உதவி புரியும். 
 இதை பற்றி தெளிவான  விளக்கம் வரும் காலங்களில் தருகிறோம் !
 
ஜோதிடன் வர்ஷன்
9842421435 
9443355696 


1 comment:

 1. அய்யா அருமை
  என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நல்ல விளக்கம். நீங்கள் ஒரு சகல கல வல்லவர் என்பது தெரிகிறது. ஆன்மிகத்தில் யோகா கலையும் ஒரு பகுதியே. நாம் திறம்பட யோகா கலையை கற்றால் தெய்விக தன்மையை உணரலாம்.

  நல்ல ஒரு அறிவியல் மற்றும் ஆன்மிகம் சார்ந்த பதிவு. இதுபோல் நிறைய பதிவு இடவும்.

  இவரை தெரியாமலா? யோகி பரஞ்சோதி குரு அவர்கள். ஆசிரமம் திருமூர்த்தி அணை அருகில் உள்ளது.

  //இதை பற்றி தெளிவான விளக்கம் வரும் காலங்களில் தருகிறோம் !//


  எதிர்பார்கின்றோம்

  வேலு
  கோயம்புத்தூர்

  ReplyDelete