செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

8 ம் எண் மற்றும் சனி என்ன செய்யும் ?

கேள்வி :

8 , 17 , 26  தேதிகளில் பிறந்தவர்கள் , கூட்டு எண்ணாக 8 ம் எண்  பெற்றவர்களுக்கு வாழ்க்கையில்  மிகவும் சிரம பட வேண்டும் என்றும். குறிப்பாக திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவதில்லை எனும் கருத்து பொதுவாக உள்ளது இது உண்மையா ? சனிபகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள் வாழ்க்கையில் மிகவும் சிரம பட வேண்டும் என்றும் சொல்லுகின்றனர் இது உண்மையா ?



பதில் :

உண்மையில் ஒரு கிரகத்தை பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்யாமல் பதில் சொன்னால் இது போன்ற தவறான கருத்தே மிஞ்சி நிற்கும்.

8 , 17 , 26  தேதிகளில் பிறந்தவர்கள் , கூட்டு எண்ணாக 8 ம் எண்  கொண்டவர்கள் எல்லோருக்கும் இந்த பலன் நடைபெறுவதில்லை, இந்த என்னை பெற்றவர்கள் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளவர்களை நான் கண்டு இருக்கிறேன் .

குறிப்பாக சொல்ல வேண்டும் எனில் சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றவர்களில் இந்த எண் அமைப்பை கொண்டவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

தொழில் துறையில் மிகவும் சிறந்து செயல்படக் கூடியவர்கள் இந்த எண்ணை கொண்டவர்கள் அதிகம் உள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் விட்டுகொடுக்கும் மனப்பான்மை அதிகம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர், நிர்வாக திறமை அதிகம் இவர்களிடம் மறைந்து உள்ளது வாய்ப்பு கிடைக்கும் பொழுது மிகவும் சிறப்பாக செயல் படுகின்றனர்.  

கடுமையான உடல் உழைப்பு , நேர்மை , பணிவு , ஜீவ காருண்யா அன்பு மனித நேயம் , சகிப்புத்தன்மை போதும் என்ற மனம் , மற்றவருக்காக தியாகம் செய்யும் தியாக மனப்பான்மை, போன்ற குணங்கள் இவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்து விடுவது மிகப்பெரிய ஆச்சர்யமான விஷயம்.

அதிகமாக இவர்கள் மருத்துவ துறையில் பணியாற்றும் வாய்ப்பினை அதிகம் பெறுகின்றனர். இந்த துறையில் இவர்களது செயல்பாடுகள் பாராட்டுதலுக்கு உரியவை ஏனெனில், இரவு பகல் பாராமல் உழைக்கும் குணம் இவர்களது அடிப்படியிலேயே அமைந்து விடுகிறது.

 இந்த 8 ம் எண்ணை பற்றி பார்க்கும் பொழுது இவர்களால் மற்றவர்களுக்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை, ஆனால் மற்றவர்களுக்கு ஏற்ப்படும் துன்பத்தைக்கூட தாம் முன்வந்து ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை தருகின்றனர் என்பது முற்றிலும் உண்மை.



இதற்க்கெல்லாம் காரணம் என்ன ஒரு சிறு ஆய்வு :
கால புருஷ தத்துவத்தின் அமைப்பின் படி சனிபகவான் வீடு என்பது 10 ம் வீடாகவும், 11 ம் வீடாகவும் வருகின்றது , இந்தவீடுகள் முறையே சர தத்துவமும்  , நில ராசியாகவும் . ஸ்திர தத்துவமும் காற்று ராசியாகவும் வருகின்றது .


கால புருஷ தத்துவத்தின் அமைப்பின் படி 10 ம் வீடு சனிபகவானின் வீடாக வருவதால் அவர்களை தொழில் துறையில் சிறப்பாக செயல் பட முடிகிறது , மேலும் நில ராசியாகையால் இந்த ராசி அமைப்பை பெற்றவர்கள் அனைவரும் இறக்க சுபாவமும் சேவை மனப்பான்மையும் அமைவதில் ஆச்சர்யம் இல்லை .

மேலும் கால புருஷ தத்துவத்தின் அமைப்பின் படி 11  ம் வீடும்  சனிபகவானின் வீடாக வருவதால் மற்றவர்களுக்காக செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறுகிறது, ஸ்திர தத்துவ அமைப்பை இந்த ராசி பெறுவதால் இவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் நீண்ட நெடுங்காலம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது, மேலும் காற்று ராசி அமைப்பை இந்த ராசி பெறுவதால் இவர்களின் அறிவு பூர்வமான செயல் பாடுகளால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைகின்றனர், எனவே சனிபகவானின் பரிபூரண அருள் பெற்ற இவர்கள் அனைவரும் போற்றுதலுக்கு  உரியவர்கள் என்பதே உண்மை .
மேலும் ஒருவரது ஜாதகத்தில் சனிபகவான் பாதிக்கப்பட்டுவிட்டல் தான், அவர்கள் முன்னேற்றம் தடை படுகிறது என்பது, சாதாக ரீதியாக ஆய்வு செய்ததில் கண்ட உண்மையும் கூட , சனிபகவான் நன்றாக அமையாதவர்களுக்கு நல்ல வேலையாட்கள் அமைவதில்லை என்பது ஆய்வில் கண்ட உண்மை .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 


2 கருத்துகள்:

  1. ஜாதகருக்கு சனி.ராகு,கேது,செவ்வாய்...போன்ற தீய கிரகங்கள் லக்னாதிபதியாக வந்தால் அவர்கள் லக்னாதிபதி என்ற முறையில் ஜாதகருக்கு நன்மைதானே செய்வர்?
    (அல்லது)
    லக்னம்,லக்னாதிபதி அந்த ஜாதகருக்கு எப்போதும் நன்மைதானே செய்யும்?(அது தீய கிரகமாக இருந்தாலும்)

    பதிலளிநீக்கு
  2. நல்ல விளக்கம்... நீங்கள் சொல்வது மட்டும் இல்லாமல் அதற்கான காரணத்தையும் சொல்வது சிறப்பு.....ஏன் எதனால் எப்படி என்ற கேள்விக்கு வேலை இல்லாமல் நீங்களே பதில் சொல்லிவிட்டேர்கள்

    //ஒருவரது ஜாதகத்தில் சனிபகவான் பாதிக்கப்பட்டுவிட்டல் தான், அவர்கள் முன்னேற்றம் தடை படுகிறது என்பது, சாதாக ரீதியாக ஆய்வு செய்ததில் கண்ட உண்மையும் கூட , சனிபகவான் நன்றாக அமையாதவர்களுக்கு நல்ல வேலையாட்கள் அமைவதில்லை என்பது ஆய்வில் கண்ட உண்மை .//

    சனி பதிகபடாமல் இருந்தால் நல்லதே நடக்கும்

    பதிலளிநீக்கு