Monday, February 6, 2012

வேதங்களின் துணை கொண்டு எப்படி நல்லாட்சி செய்வது?

அரசர் காலத்திலெல்லாம் ஜாதக பொருத்தம் பார்த்தா திருமணம் செய்தனர்?சுயம்வர முறைதானே,அப்போதிருந்த குடிமக்களும் பொருத்தம்பார்காமல் தானே திருமணம் செய்தனர்.மேலும் பல குடும்பங்களில் அத்தை,மாமன் உறவிலேயே திருமணம் செய்தனர்.அவர்களெல்லாம் நன்றாக இல்லையா?மேலும் இந்த பொருத்தம் பார்ப்பதென்பது இப்போது ஏற்பட்ட சமாசாரம் தானே,
ஒரு ஜாதகம் பொருத்தமாக உள்ளது என்று ஜோதிடர் கூறிய பிறகே(பத்து பொருத்தம்,தோஷம்,ஸ்தான பலம் எல்லாம்தான்)திருமணம் நடக்கிறது.ஆனால் அப்படிப் பட்டவர்களுக்கே புத்திர பாக்கிய தடை,இன்ன பிற கஷ்டங்களுக்காக மீண்டும் ஜோதிடர்களிடம் செல்கின்றார்களே?எனில் திருமண பொருத்தம் பார்ப்பது தேவையற்ற ஒன்று என்றுதானே ஆகிறது.அல்லது அவ்வளவு துல்லிய மாக பார்த்தால் 100க்கு 2,3 தான் பொருந்தும்.எனவே பெற்றோர்களுக்கு அந்த அளவு பொறுமை இருக்காது என்று கருதி ஜோதிடர்கள் பொருந்தாத ஜாதகத்தையும் பொருந்தக்கூடியதாக சொல்கிறார்களா?
மேலும் மணவாழ்வில் மகிழ்ச்சி இல்லா ஜாதகம் என ஒரு 50 ஜாதகம் இருந்தால் அவர்களை தட்டிகழித்தே வந்தால் அவர்களின் நிலை என்ன?

மன்னர் காலங்களில் அரசவை ஜோதிடர் என்று தனி பிரிவே செயல் பட்டுள்ளது, இவர்களுடைய  வேலை என்னவென்றால், ஒரு கரு எப்பொழுது உருவாகினால் அரச குலத்துக்கு ஏற்ற அமைப்பில் இருக்கும் என கணித்து சொல்லுவது ஜோதிடர்களின் முக்கி பணியாக இருந்தது.

எனவே அந்த காலங்களில் மன்னர் இளவரசர் என்று  தொடர்ச்சியாக அரசாட்சி செய்து வந்தனர், மேலும் இந்து தர்மப்படி , வேதங்களின் துணை கொண்டு எப்படி  நல்லாட்சி செய்வது , என்று மந்திரி மார்களும் இருந்தனர்.

மேலும் நான்கு வர்ணங்கள் உண்டு அதாவது :

உடல் வலிமை மனோவேகமும் நிறைந்த இராணுவவீரர்கள், தீயணைப்பு துறையினர், அரசியல்வாதி ஆகியோர் சத்ரிய குலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தேச நன்மைக்காக தங்களது இன்னுயிரையும், குடும்பத்தையும் தியாகம் செய்ய தயங்காதவர்கள்.

மனோ வேகம் குறைந்து, உடல் வலிமையை மட்டுமே கொண்டு வாழ்க்கை வளங்களைத் தேடி கொள்பவர்கள் சூத்திரர்கள், உழைப்பாளிகள் , விவசாயிகள், தொழிலாளர்கள், இவர்களிடம் பொது நலம் குறைவாகவும், சுயநலம் அதிகமாகவும் இருக்கும்.

உடல் வலிமையை விட மனோபலம் அதிகமாக உடையவர்கள் வைசியர்கள். இவர்கள் தங்களின் மனோபலமான அறிவைக்கொண்டு பிறருக்கு யோசனை  சொல்லுதல், வியாபாரம், கடிதம் போன்ற தொழில்களை செய்பவர், இவர்களிடம் சுயநலமும், பொது நலமும் கலந்து இருக்கும்.

இறுதியாக பிராமணர்கள். இவர்களிடம் உடல் வலிமை குறைந்து, மனோபலமான அறிவு விஞ்சி இருக்கும். எனவே ஆசிரியார்கள், குருமார்கள் , நிதிபதிகள், மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர் என இருப்பார்கள். இவர்களிடம் பொது நலமே அதிகமாக இருக்கும் .

எனவே சத்திரியரும் , பிராமணரும் பொதுநலம் கொண்டவர்களாக உள்ளனர் . இதில் சத்திரியர் உடல் வலிமையிலும் , பிராமணர் அறிவொளியிலும் சிறந்து விளங்குகின்றனர், பொது நலம் மிகுந்த சத்திரியர் தன் அதிகாரத்தில் ஒரு சிக்கலை தீர்க்கும் பொழுது, பொதுநலம் நிறைந்த ஒரு பிராமணர் தன் அறநெறியால், அச்சிக்கலை தீர்ப்பார்.
இந்த நான்கு வர்ணமும் சமுதாயத்தில் அவர் அவர் வழியில் முன்னேற்றம் பெறுகின்றனர். மேலும் இது பற்றிய விளக்கம் பின்னாளில் வரும் .

மேலும் திருமண வாழ்வில் மகிழ்ச்சியில்லாத ஜாதகம் என ஒரு 5 சதவீத ஜாதகம் மட்டுமே உண்டு , இந்த ஐந்து சதவிகித ஜாதகர்கள், தமது கர்ம வினைபதிவின் காரணமாகவே இந்த நிலை ஏற்ப்படுகிறது. கர்ம வினைபதிவினை கழித்துகொள்ள நாம் இந்த பிறவியை கொண்டுள்ளோம் என்ற மன நிலைக்கு வந்து, மறுமணம் அல்லது வாழ்வை இழந்தவர்க்கு வாழ்க்கை தருவது என , தமது கர்ம வினை பதிவினை கழித்துக்கொள்ள வேண்டும், அப்பொழுது அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும், 
ஒருவருக்கு இந்த இரண்டு , ஏழு ஆகிய ஸ்தான பலன் கெட்டால், இவர் இந்த காரக பலன் சம்பந்தப்பட்ட கர்ம வினை பதிவினை கடந்த பிறவியில்  செய்து இருப்பார் எனவேதான், இந்த ஸ்தான பலன் கெட்டு இருக்க வாய்ப்பு உண்டு, மேலும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தமது துணை எவ்வித துன்பத்தை தந்தாலும் ஏற்றுக்கொண்டு கர்ம வினை பதிவினை கழித்துகொள்வது சால சிறந்தது.

ஜோதிடன்வர்ஷன் 
9842421435 
9443355696 

No comments:

Post a Comment