Monday, February 20, 2012

மங்களங்களை வழங்கும் மங்களன் எனும் செவ்வாய் !


மங்களகரமான வாழ்க்கைக்கு செவ்வாய் பகவானின் அருள் நிச்சயம் ஒவ்வொரு ஜாதகருக்கும் கண்டிப்பாக தேவை , செவ்வாய் பகவானின் பலம் ஒரு ஜாதகருக்கு நன்றாக அமையவில்லை என்றால் அந்த ஜாதகர் படும் பாடு  ஒரு அளவே கிடையாது. 

சிறு உதாரணம், உடம்பில் ரத்தத்தை முழுமையாக ஆட்சி செய்பவர் இந்த செவ்வாய் பகவான் இவரது செயல்பாடுகள் நன்றாக அமைந்தால் ஜாதகருக்கு அனைத்து உறுப்புகளும் நல்ல நிலையில் இயங்கும் , இதற்க்கு மாறாக ரத்த ஓட்டம் சீராக அமையாவில்லை என்றால் உடலின் அனைத்து பாகங்களும் பாதிக்கப்படுவது உறுதி.

இது போல் ஒவ்வொரு ஜாதக அமைப்பினருக்கும் சுய ஜாதக அமைப்பில் செவ்வாய் பகவானின் அமைப்பு நன்றாக அமைந்தால் ஜாதகத்தின் தன்மை சிறப்பாக இருக்கும் இதுவே மாறி அமைந்தால் ஜாதகம் பாதிக்கப்படுவது 
உறுதி,  மேலும் இவரது இயக்கம் மற்ற கிரக அமைப்பை போல் அல்லாமல் முற்றிலும் மாறுபடுகிறது, செவ்வாய் பகவானின் இந்த முரண்பாடு ஜாதக அமைப்பை நன்றாக ஆய்வுக்கு செய்து பலன்களை சொல்லுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.

மேலும் செவ்வாய் பகவான் கால புருஷ தத்துவ அமைப்பின் படி ஒன்றாம் வீட்டிற்கும் எட்டாம் வீட்டிற்கும் தொடர்புகொள்கிறார் , ராசி அமைப்பில் நெருப்பு, நிலம், காற்று, நீர்  ராசிகளுடன் சம்பந்தம் பெரும் பொழுது,
 நெருப்பு மற்றும் காற்று  தத்துவ ராசிகளில் மட்டும் நன்மையான பலன்களை அதிகம் செயல் படுத்துகிறார் மற்ற ராசி அமைப்பில் இவரது செயல் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

ஜாதக முறைப்படி செவ்வாயின் பலன் நன்றாக அமையாத ஜாதகங்கலையே பழங்காலத்தில் செவ்வாய் தோஷம் என்று குறிப்பிட்டனர் இந்த அமைப்பு பழைய ஜோதிட நூல்களில் , லக்கினத்திற்கு 2 , 4  ,7 , 8 ,  12   வீடுகளில் செவ்வாய் அமர்ந்தால் செவ்வாய் தோஷம் என்றும் இதற்க்கு பல விதி விளக்குகளும் கூறப்படுகின்றன .

சுய ஜாதக அமைப்பில்  லக்கினத்திற்கு 2 , 4  ,7 , 8 ,  12   வீடுகளில் செவ்வாய் அமர்ந்தால் செவ்வாய் தோஷம் என்று கணிப்பது பல விதங்களில் தவறாகி விடுகிறது என்பது மட்டுமே உண்மை, மேற்கண்ட அமைப்பில் செவ்வாய் பகவான் இருந்தாலும் அவர் நல்ல நிலையில் இருந்தால் நன்மையே செய்வார்.

 சுய ஜாதக அமைப்பில்  லக்கினத்திற்கு 1 ,3 ,5 ,6 ,9 ,10 ,11   வீடுகளில் செவ்வாய் அமர்ந்து செவ்வாய் பகவான் கெட்டு விட்டால், ஜாதகத்திற்கு அவர் அளிக்கும் பலன் ஜாதகரால் தாக்கு பிடிக்க முடிவதில்லை .

நன்றாக இருக்கும் செவ்வாய் பகவானால் ஜாதகருக்கு ஏற்ப்படும் நன்மைகள் :

1 , நல்ல உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். கவர்ச்சியான      தோற்றப்பொலிவு, உடல் வலியை தாங்கும் தன்மை.  

2 ,  சுய முயற்ச்சியால் வாழ்க்கையில் முன்னேற்றம் , எதையும் தாங்கும் மன வலிமை.

3 , நீதி நேர்மை நியாம் , இவற்றுக்காக போராடும் குணம் இயற்கையாகவே அமைந்து விடும். சட்ட வல்லுநர் சிறந்த நீதிபதி , காவல் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு , ராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் தன்மை.

4 , மக்களை பாதுகாக்கும் மிக முக்கிய பொறுப்புகள், சிறந்த அரசியல்வாதிகள் , சமுகவழ்க்கையில் மாற்றத்தை ஏற்ப்படுத்தும் சிறந்த எழுத்தாளர்கள் , மற்றும் சமூக புரச்சியாளர்கள்,  சுய சிந்தனையால் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுபவர்கள் , மக்கள் சக்தியை வழி நடத்தும் வாய்ப்பை பெற்றவர்கள், தொழில் முறையில் சிறப்பான நிர்வாக திறன் கொண்டவர்கள் என செவ்வாய் பகவானின் அருள் பெற்றவர்களாக   அதிகம் காணப்படுகின்றனர் .

 5 , மேலும் கடின உடல் உழைப்பாளிகள் , விவசாயிகள் , வாகன ஓட்டுனர்கள் , தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், விண்வெளி வீரர்கள் , விளையாட்டு  வீரர்கள் என இவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.

 செவ்வாய் பகவான் பலம் குறைந்தால் :

1 , முதலில் பாதிக்கப்படுவது ஜாதகரின் உடல், அமைப்பு வாழ்நாள் முழுவது உடல் ரீதியான பாதிப்பு . ரத்த சம்பந்தப்பட்ட குறைபாடுகள் , இறுதியாக தொழு நோயால் அதிகம் பாதிக்கபடுவது செவ்வாய் பகவான் பலம் குறைந்தவர்களே .

2 , மேலும் திருமண வாழ்க்கை பாதிப்பு , பல தார அமைப்பு , வயது அதிகம் உள்ள பெண்களுடன் தொடர்பு , சமுதாயத்தில் முறையற்ற வாழ்க்கை முறை , மண் மனை வாகனம் யோகம் இல்லாத நிலை, பரத்தையர் சிநேகம் .

3 , மற்றவர்களை சார்ந்து வாழும் முறை , தன்னம்பிக்கை அற்ற நிலை , சுய முயற்ச்சி அற்றவர்கள் , நேர்மையான குணம் இல்லாத தன்மை , இடத்துக்கு தகுந்தார்ப்போல் மாறிவிடும் தன்மை , பணத்துக்கு விலை போய்விடுதல் , கோப  உணர்வால் அனைவரையும் பகைத்துகொல்லுதல்.

4 , முரட்டு சுபாவம், கல் மனது ,மனசாட்ச்சி இல்லாம, செயல் படுதல், பல வகையில் மற்றவர்க்கு துன்பம் தருவது , சுய நலத்தால் மற்றவர்க்கு தீங்கு இளைத்தல், மற்றவர் சொத்துகளை அகபரித்தல் , ஏமாற்றுதல் என தீமையின் மொத்த வடிவமாக மாறி விடுகின்றனர் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களை சிறு வயது முதற்கொண்டே கவனமுடன் வளர்க்க வேண்டும்.

5 ,   இந்த அமைப்பை பெற்ற  அனைவரும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஒரு முறை வளர் பிறை செவ்வாய் கிழமை அன்று பழனி சென்று குழந்தை வேலவர் சன்னதியில் வழிபடு செய்வது சிறப்பான வாழ்கையை தரும், பிறகு பழனி மலையேறி முருகனை ராஜ அலங்கார தரிசனம் மாலை 6  முதல் 9 மணிக்குள் தரிசனம் செய்து , போகர் சன்னதியில் தியானம் செய்து வழிபட்டால், செவ்வாய் பகவான் ஜதாகத்தில் வழுவான அமைப்பை பெற்று விடுவார். மேற்சொன்ன நல்ல பலன்களை விருத்தி செய்து பழனி முருகன் அருள் புரிவார் என்பது நிச்சயம் .

வெகு விரைவில் செவ்வாயின் கிரக சக்த்தியை பெற அதிர்ஷ்ட ரத்தினங்களில் பத்ம பொன் புஷ்பரகத்தை  சுத்தி செய்து அணிவது சகல நலன்களையும் வாரி வழங்கும்.

பொதுவாக புஷ்பராகம் மஞ்சள் நிறம் உடையதாக இருக்கும் இந்த   பத்ம பொன் புஷ்பராகம் ரோஸ் கலரில் நல்ல நீரோட்டத்துடன் காணப்படும், பார்ப்பதற்கு செந்தாமரை இதழ் போல் இருக்கும்.

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  
  

No comments:

Post a Comment