திங்கள், 6 பிப்ரவரி, 2012

திருமண வாழ்க்கை தோல்வி ஏற்ப்பட காரணம் என்ன ?

  நட்சத்திர பொருத்தம் 10 /10 இருந்தும் பல தம்பதிகளின் திருமண வாழ்க்கை தோல்வி ஏற்ப்பட காரணம் என்ன ?

தம்பதியரின் ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் , களத்திர ஸ்தானம் எனும்  இரு பாவங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே, திருமண வாழ்க்கை தோல்வி ஏற்ப்படுகிறது. இதில் நட்சத்திர பொருத்தம் எவ்வித பலனையும் தருவதில்லை, மேற்கண்ட அமைப்பு தம்பதியர் ஒருவருக்கு இருந்தாலும் போதும் திருமண வாழ்க்கை சிறப்பதில்லை .

மேலும் இந்த இரு வீடுகள் பாதிக்கப்படும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதக அமைப்பை சேர்ந்தவர், குண இயல்பு மாறுபடுகிறது அதாவது சகிப்பு தன்மை இல்லாமை, விட்டுகொடுக்கும் மனப்பான்மை இல்லாதது ,தேவை இல்லாத விசயங்களுக்கு வாக்குவாதம் , சந்தேக புத்தி , ஒருவர் மனதை ஒருவர்  பாதிக்கும் வகையில் செயல் பாடுகள், பலி வாங்கும் மனப்பான்மை ஆகிய குணங்கள் ஜாதகரிடம் அதிகமாக காணப்படுகிறது , இதன் காரணமாக குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்ப்படுகிறது என்பது, அவர்களது ஜாதக அமைப்பில் இருந்து தெரிந்து கொண்ட உண்மை.

இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் , சரியான ஜோதிட ஆலோசனையும் , உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் பெற்று சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்பது எனது கருத்து . 

2 கருத்துகள்:

  1. அரசர் காலத்திலெல்லாம் ஜாதக பொருத்தம் பார்த்தா திருமணம் செய்தனர்?சுயம்வர முறைதானே,அப்போதிருந்த குடிமக்களும் பொருத்தம்பார்காமல் தானே திருமணம் செய்தனர்.மேலும் பல குடும்பங்களில் அத்தை,மாமன் உறவிலேயே திருமணம் செய்தனர்.அவர்களெல்லாம் நன்றாக இல்லையா?மேலும் இந்த பொருத்தம் பார்ப்பதென்பது இப்போது ஏற்பட்ட சமாசாரம் தானே,
    ஒரு ஜாதகம் பொருத்தமாக உள்ளது என்று ஜோதிடர் கூறிய பிறகே(பத்து பொருத்தம்,தோஷம்,ஸ்தான பலம் எல்லாம்தான்)திருமணம் நடக்கிறது.ஆனால் அப்படிப் பட்டவர்களுக்கே புத்திர பாக்கிய தடை,இன்ன பிற கஷ்டங்களுக்காக மீண்டும் ஜோதிடர்களிடம் செல்கின்றார்களே?எனில் திருமண பொருத்தம் பார்ப்பது தேவையற்ற ஒன்று என்றுதானே ஆகிறது.அல்லது அவ்வளவு துல்லிய மாக பார்த்தால் 100க்கு 2,3 தான் பொருந்தும்.எனவே பெற்றோர்களுக்கு அந்த அளவு பொறுமை இருக்காது என்று கருதி ஜோதிடர்கள் பொருந்தாத ஜாதகத்தையும் பொருந்தக்கூடியதாக சொல்கிறார்களா?
    மேலும் மணவாழ்வில் மகிழ்ச்சி இல்லா ஜாதகம் என ஒரு 50 ஜாதகம் இருந்தால் அவர்களை தட்டிகழித்தே வந்தால் அவர்களின் நிலை என்ன?

    பதிலளிநீக்கு
  2. நல்ல விளக்கம்... பத்து பொருத்தத்தை விட குடும்ப ஸ்தானம் , களத்திர ஸ்தானம் எனும் இரு பாவங்களை நல்ல ஆராய்ச்சி செய்து திருமணம் செய்வது நல்லது

    //மேலும் இந்த இரு வீடுகள் பாதிக்கப்படும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதக அமைப்பை சேர்ந்தவர், குண இயல்பு மாறுபடுகிறது அதாவது சகிப்பு தன்மை இல்லாமை, விட்டுகொடுக்கும் மனப்பான்மை இல்லாதது ,தேவை இல்லாத விசயங்களுக்கு வாக்குவாதம் , சந்தேக புத்தி , ஒருவர் மனதை ஒருவர் பாதிக்கும் வகையில் செயல் பாடுகள், பலி வாங்கும் மனப்பான்மை ஆகிய குணங்கள் ஜாதகரிடம் அதிகமாக காணப்படுகிறது , இதன் காரணமாக குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்ப்படுகிறது என்பது, அவர்களது ஜாதக அமைப்பில் இருந்து தெரிந்து கொண்ட உண்மை//

    மன பொருத்தம் என்பது இங்கு முக்கியம்.... யோகா கற்றால் எல்லா நல்ல குணங்கள் வரும். விட்டுகொடுக்கும் மனப்பான்மை..மனதை பாதிக்காமல் நடத்தல் சந்தேகத்தை தவிர்த்தல் இருந்தால் நல்ல வாழ்கை கிடைக்கும்

    பதிலளிநீக்கு