செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

லக்னாதிபதி என்ற முறையில் ஜாதகருக்கு நன்மைதானே செய்வர்?

ஜாதகருக்கு சனி.ராகு,கேது,செவ்வாய்...போன்ற தீய கிரகங்கள் லக்னாதிபதியாக வந்தால் அவர்கள் லக்னாதிபதி என்ற முறையில் ஜாதகருக்கு நன்மைதானே செய்வர்?
(அல்லது)
லக்னம்,லக்னாதிபதி அந்த ஜாதகருக்கு எப்போதும் நன்மைதானே செய்யும்?(அது தீய கிரகமாக இருந்தாலும்)



ஒரு ஜாதகருக்கு லக்கினாதிபதி என்ற முறையில் தீய கிரகமானாலும் , நல்ல கிரகமனாலும் நன்மையே செய்வார் என்று கொள்வோமானால், சில ஜாதகர்கள், தன் வாழ்வை தானே கெடுத்து கொள்கின்றனர் இது ஏன் ?
 மேலும் இவர்களது ஜாதக அமைப்பை பார்க்கும் பொழுது லக்கினாதிபதி பாதிப்படைந்து, தனது வீட்டை தானே கெடுத்துக்கொண்டு இருப்பார், 

உதாரணமாக தனுசு இலக்கண ஜாதகருக்கு, குரு பகவான் மிதுனத்தில் நின்று நேரெதிர் பார்வையாக லக்கினத்தை பார்த்தால்.
உண்மையில் எந்த ஒரு ஜாதகருக்கும் லக்கினம் மற்றும் லக்கினாதிபதி,
சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு நல்ல அமைப்பில் நின்றால் மட்டுமே நன்மையை செய்கின்றனர் , மாறாக பாதிப்படைந்தால் தனது வீட்டை தானே கெடுப்பவராக மாறி விடுகிறார் .

இந்த அமைப்பை பெற்றவர்களுக்கு, ராகு அல்லது   கேது இரு கிரகங்கள்  லக்கனத்தில் உற்காரும் பொழுது மட்டும் , லக்கினாதிபதி கெட்டாலும்,  ராகு கேது கிரகங்கள் லக்கினத்தை வலு சேர்த்து லக்கினம் சிறப்பாக செயல்பட காரணமாக அமைந்து விடுகின்றனர். எனவேதான் ராகு கேது லக்கினத்தில் உள்ளவர்கள் சிலர் அபரிவிதமான முன்னேற்றமான வாழ்க்கையினை பெற்றுவிடுகின்றனர் .

லக்கினத்தில் ராகுவோ அல்லது  கேதுவோ அமர்ந்த ஜாதகங்களை சிலவற்றை ஆராய்ச்சிக்கு எடுத்து கொண்டு பார்த்ததில் கிடைத்த உண்மை இது .
 
எந்த ஒரு லக்கினமானாலும், சுய ஜாதகத்தில் லக்கினத்தில்  ராகுவோ அல்லது  கேதுவோ அமர்ந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் 100  சதவிகித நன்மையை பெறுவார்  அந்த இலக்கின  ராசி தத்துவத்திற்கு உட்ப்பட்டு .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  

2 கருத்துகள்: