வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

களத்திர தோஷம் என்றால் என்ன ?


கேள்வி :

களத்திர தோஷம் என்றால் என்ன ?

களத்திர ஸ்தான அதிபதியான சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்தால், களத்திர தோஷம் ஏற்படுமா ? சுக்கிரன் 6 , 7 , 8 , வீடுகளில் இருந்தால்,களத்திர தோஷம் ஏற்படுமா ? ராகு கேது மற்றும் செவ்வாய்  6 , 7 , 8 , வீடுகளில் இருந்தால்,களத்திர தோஷம் ஏற்படுமா ?  இயற்க்கை பாவிகள் 6 , 7 , 8 , வீடுகளில் இருந்தால்,களத்திர தோஷம் ஏற்படுமா ? இதனால் ஏற்ப்படும்  தீமைகள் என்ன ?

பதில் :

சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்தால், களத்திர தோஷம் என்று கணிப்பது  குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கதைதான். மேலும் சுக்கிரன் 6 , 7 , 8 , வீடுகளில் இருந்தால், களத்திர தோஷம் என்று கணிப்பது முற்றிலும் தவறான கணிதம் ஆகும். 

எந்த ஒரு பாவமும் ( களத்திர ஸ்தானம் உட்பட )  100  சதவிகிதம் பாதிக்கப்பட்டால் மட்டுமே, அந்த பாவத்திற்கு உண்டான பலனை தருவதில்லை  என்பது உண்மை. மேலும் ஒரு கிரகம் ( அது எதுவாக இருப்பினும் ) ஒரு பாவத்தில் அமரும் பொழுது 100  சதவிகிதம் கெடுப்பதில்லை( ராகு கேதுவை தவிர ) .

களத்திர தோஷம் என்பது ஒரு ஜாதகத்தில் 7 ம் வீடு 100  சதவிகிதம் பாதிப்படைந்தால் மட்டுமே,  களத்திர தோஷம் ஏற்ப்படுகிறது. இந்த அமைப்பை பெற்றவர்கள் ஜாதகங்களில் 2  ம் வீடும் சேர்ந்து  கெட்டு விட்டால் தான், ஜாதகருக்கு அதிகமான பதிப்பை களத்திர சம்பந்தமாக அனுபவிக்க நேருகிறது .

உதாரணமாக :

ஒருவருடைய சுய ஜெனன ஜாதக அமைப்பில் 2  மற்றும் 7   ம் பாவங்கள் முறையே 100  சதவிகிதம் பாதிப்படைந்து விட்டால், அந்த ஜாதகருக்கு திருமணம் என்பதே இல்லை, காலம் முழுவதும் திருமணம் இல்லாமல் குடும்பம் அமையாமல் கஷ்டப்பட நேருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் விதவை , கணவனால் கைவிடப்பட்டவர்கள், மற்றும் வாழ்விளந்தவர்கள் போன்ற பெண்களை திருமணம் செய்து கொல்வது சாலச்சிறந்தது .


இந்த அமைப்பை சேர்ந்த பெண்களை களத்திர தோஷம்,  உள்ள ஆண்கள் 
( அதாவது 2  மற்றும் 7   ம் பாவங்கள் முறையே 100  சதவிகிதம் பாதிப்படைந்த ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள்)   திருமணம் செய்து கொள்ளும் பொழுது வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் இந்த களத்திர தோஷம் எந்த விதமான பாதிப்பையும் தருவதில்லை.

மேலோட்டமாக சுக்கிரன் மற்றும் ராகு கேது செவ்வாய், சனி மற்றும் இயற்க்கை பாவிகள் 7  ம் இல்லத்தில்  இருந்தாலே களத்திர தோஷம் என்று சொல்லுவது முற்றிலும் தவறான கருத்து ஆகும் .

இந்த மாதிரி ஜோதிடர்களிடம் ஜாதகர் ஆலோசனை கேட்டு நடப்பாரே ஆயின் வெகு விரைவில் காசி ராமேஸ்வரம் என காவிகட்டி அலைய வேண்டியதுதான் . ஜாதகத்தின் உண்மை நிலையை கண்டறிந்து , உண்மையை 
உணர்ந்து கொண்டு வாழ்க்கையினை பயனுள்ளதாக வாழுங்கள்.

ஜோதிடன் வர்ஷன் 
 9842421435 
9443355696  

3 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா ஏன் இந்த கொலவெறி?? பிரசாந்த் உங்களை என்ன பண்ணினார் ???

    //இந்த மாதிரி ஜோதிடர்களிடம் ஜாதகர் ஆலோசனை கேட்டு நடப்பாரே ஆயின் வெகு விரைவில் காசி ராமேஸ்வரம் என காவிகட்டி அலைய வேண்டியதுதான் //

    காசிக்கு ரயில் டிக்கெட் ரொம்ப அதிகம்... இப்ப யார் அவ்வளவு தூரம் போகிறர்கள்.... உள்ளுருலேய அப்படி அலையை வேண்டியது தான்???

    //சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்தால், களத்திர தோஷம் என்று கணிப்பது குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கதைதான்.//

    ஹா ஹா ஹா நல்ல விளக்கம்.. ரொம்ப நாள் ஆச்சு வெண்கல கிண்ணம் கெடைத்து... (கெட்டவன் கெட்டால் கிட்டிடுமா ராஜ யோகம் ?
    ஒரு சின்ன வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது)

    பதிலளிநீக்கு
  2. sir,
    already i publish horoscope. i tried to settled in kasi. but i don't know Hindi .so only 10 days i can manage in kasi. if husband face problem by wife and her family fare for train is not problem to spent. he needs remedy to fulfill his life. so he can travel anywhere if he gets peace. for me Hindi language is problem to settle in kasi.

    பதிலளிநீக்கு
  3. களத்திர சாப தோஷம் நு ஒன்னு இருக்கா

    பதிலளிநீக்கு