சனி, 25 பிப்ரவரி, 2012

உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான் என்று சொல்லுவது உண்மைய ?





பொதுவாகவே ஒருவருடைய   சுய ஜாதகத்தில் நவகிரகங்கள், ஆட்சி , உச்சம் , நட்பு என்ற நிலைகளில் இருந்தால் அந்த கிரகங்கள்  ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கும் என்று கணிப்பது முற்றிலும் 
தவறானது , 

உதராணமாக சிம்ம இலக்கின ஜாதகருக்கு சூரியன் சிம்மத்தில் ஆட்சி பலம் பெறுவதும் மேஷத்தில் உச்ச பலன் பெறுவதும் ஜாதகருக்கு அவ்வளவு நன்மை தருவதில்லை, என்பது சிம்ம இலக்கின அமைப்பை சேர்ந்தவர்களை கேட்டு பார்த்தால் தெரியும்.

 இதே சிம்ம இலக்கான ஜாதகருக்கு சூரியன்  கும்பத்தில் அமர்ந்து பகை பெற்றாலும் லக்கினத்துக்கு 100  சதவிகித நன்மையை வாரி வழங்குவதை அனுபவத்தில் பார்க்கலாம்.

இதே போல் கும்ப இலக்கின ஜாதகருக்கு சனிபகவான் துலாம் ராசியில் அமர்ந்தால் நன்மையான பலன்களை சிறிது கூட கொடுப்பதில்லை , மேலும் துலாம் இலக்கின ஜாதகருக்கு மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் ஜாதகரை கடனாளியாகவும் மன ரீதியான பிரச்சனைக்குள் தள்ளிவிடுகிறார் என்பது முற்றிலும் உண்மை. 

ஜாதக கணிதம் செய்யும் பொழுது   சுய ஜாதகத்தில் நவகிரகங்கள், ஆட்சி , உச்சம் , நட்பு என்ற நிலைகளில் இருந்தால் அந்த கிரகங்கள்  ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கும் என்று கணிதம் செய்வது, நுனி புல் மேய்ந்த கதை ஆகும் .

ஒரு ஜாதகத்தில் எந்தவொரு கிரகமும் ஆட்சி , உச்சம் , நட்பு , சமம் , நீச்சம், பகை என்ற அமைப்பை வைத்து கொண்டு ,  

 ஆட்சி , உச்சம் , நட்பு என்ற அமைப்பை பெற்றால், நன்மை செய்யும் என்றும் . 

 நீச்சம், பகை என்ற அமைப்பை பெற்றால் தீமை செய்யும் என்றும். கணிதம் செய்வது முற்றிலும் தவறான அணுகு முறை .

 மேலும் ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் தனது வீடுகளுக்கு ( அதாவது ஸ்தான பலன் ) என்ன வகையான பலன்களை பெறுகின்றது என்று கணிதம் செய்வதே சரியான ஜோதிட ஆலோசனை வழங்க ஏதுவாக இருக்கும். இந்த அமைப்பில் கணிதம் செய்யும் பொழுது பலன்கள் துல்லியமாக வந்து விடும் என்பது உண்மை .

இந்த அமைப்பில் கணிதத்தின் மூலம் நடக்கும் திசை மற்றும் புத்தி , அந்தரம் , சூட்சமம் ஜாதகருக்கு எந்த வீடுகளின் பலன்களை தருகிறது, அது நன்மையா ,தீமையா என எளிதில் கணிதம்  செய்து ஜாதகரின் நிலையை துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும் என்பது நிச்சயம் .
 
 மேலும் கோட்சார அமைப்பில் நவகிரகங்கள்  ஜாதகருக்கு நடக்கும் திசை மற்றும் புத்தி , அந்தரம் , சூட்சமம் அமைப்பில் நடத்தும் எந்த  வீடுகளுடன் எவ்விதம் சம்பந்தம் பெறுகிறது என்று கணிதம் செய்து விட்டால், ஜாதக பலன்கள் 100  சதவிகிதம் சரியாக சொல்லிவிட முடியும் .

 ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696   

3 கருத்துகள்:

  1. நன்று..

    //இந்த அமைப்பில் கணிதத்தின் மூலம் நடக்கும் திசை மற்றும் புத்தி , அந்தரம் , சூட்சமம் ஜாதகருக்கு எந்த வீடுகளின் பலன்களை தருகிறது, அது நன்மையா ,தீமையா என எளிதில் கணிதம் செய்து ஜாதகரின் நிலையை துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும் என்பது நிச்சயம் .//

    இது தான் உங்களின் நம்பிக்கை...


    //கண்டுபிடித்துவிட முடியும் என்பது நிச்சயம் //

    நிச்சயம் என்று கூறுவது நீங்கள் உங்களின் மீதும் உங்கள் ஜோதிட கலையின்மிதும் உள்ள நம்பிக்கையை காட்டுகிறது

    பதிலளிநீக்கு
  2. உங்களின் பதிவுகளில் உள்ள ஜோதிட நுட்பங்கள் அனைத்தும் அனுபவத்தில் மிகச்சரியாக ஒத்து போகின்றது. படிக்க படிக்க மிகவும் பரவசமாக இருக்கிறது. நீங்கள் கூறும் விதிகளுக்கு விளக்கங்களையும் எழுதினால் மிகவும் உபயோகமாகவும் நினைவில் நிறுத்திக்கொள்ள ஏதுவாகவும் இருக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய வேலுப்பிள்ளை பிரபாகரன் கும்ப லக்னம் ,சனி உச்சம் இதற்க்கு என்ன சொல்கின்றீர்கள் ???

    பதிலளிநீக்கு