செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

திருமணப் பொருத்தம் பற்றி ?




திருமணப் பொருத்தம் பற்றி எமது குருவின் கருத்து :

திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது, ஆண் பெண் இருவர் நட்ச்சத்திரங்களுக்கும் கணம் , ரச்சு, நாடி, யோணி, ராசி, ராசி அதிபதி , வசியம் , வேதை, தினம் , மாகேந்திரம் , ஸ்திரி திரக்கம் , எனும் 11 பொருத்தங்களில் எத்தனை பொருத்தங்கள் உள்ளதென பார்த்து, அதன் படி முடிவு செய்கின்றனர். இன்னும் சிலர், இதற்கும் ஒரு படி மேலே சென்று பட்சி, மரம், என்றும் பொருத்தம் பார்ப்பார், ஆனால் இவ்வாறு பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதில், எவ்வித நன்மையையும் இல்லை .

ரச்சு பொருத்தம் இல்லையென்றால் தம்பதிகள் யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்ப்படும். யோணிப் பொருத்தம் இல்லையென்றால், தாம்பத்தியத்தில் திருப்பதி கிடைக்காது. மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் குழந்தை பிறக்காது, போன்ற ஏராளமான தவறான கருத்டுக்களால், ஜோதிடக்கலை மேலும் மேலும் பாதிப்படைகிறது.

ஆயுள், தாம்பத்திய திருப்பதி, குழந்தை பிறப்பு போன்றவை ஒருவரின் ஜாதகத்தை வைத்தே முடிவு செய்ய முடியும். நட்சத்திரத்தை வைத்து முடிவு செய்யவே முடியாது. மேலும் , பெண்ணின் நட்சத்திரம் ஆயில்யம், விசாகம், கேட்டை,மூலம் போன்ற நட்சதிரன்களாக இருந்தால் 'தோஷமான ஜாதகம்" என முத்திரை குத்தி விடுகின்றனர் .

அனேகமாக அனைத்து பஞ்சாங்கங்களிலும் குறிப்பிட்ட பெண் நட்சத்திரத்துக்கு, பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்களென பட்டியலே கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களும் ஆண், பெண் இருவரின் ஜாதகத்தை வைத்தே முடிவு செய்ய வேண்டுமென சொல்லுகின்றனர்.

ஏனெனில் நட்சத்திரம் என்பது குறிப்பிட்ட நேரத்தில், உலகில் எந்த மூலையிலும் பிறந்த அனைவருக்கும் பொதுவானது. ஆனால் இலக்கணமும், இலக்கின பாகையும் மாவட்டத்திற்கு மாவட்டம் மாறும்தன்மை உடையது. 

உதாரணமாக 

இப்பொழுது 30 .06 .2006  மாலை மணி 5 .32   ஐ எஸ் டி கு உலகில் எங்கு பிறந்த குழந்தைக்கும், மகம் நட்சத்திரம் என்றும்; கேது திசை இருப்பு 1  வருடம் ; 8  மாதம் ; 29  நாள் இருக்கும். ( அயனாம்சம் 23 -51 -26  )

ஆனால் இதே நேரம் கன்னியாகுமரியில் பிறந்த குழந்தைக்கு விருச்சிக லக்கினமும் ; சென்னையில் பிறந்த குழந்தைக்கு தனுசு லக்கினமுமாக அமையும். இன்னும் மாநிலமும், தேசமும் மாற மாற ஏராளமான இலக்கின வித்தியாசம் ஏற்ப்படும். 

எனவே திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இருவரின் சுய ஜாதகத்தை தனி தனியாக கணிதம் செய்து அவர்களது எதிர்காலம், குடும்ப ஒற்றுமை என அனைத்தையும் சரி பார்த்து, திருப்பதி இருந்தால் மட்டும் திருமணம் செய்ய வேண்டும் .

மேலும் ஒருவரது ஜாதகத்தில் அந்த தோஷம் உள்ளது இந்த தோஷம் உள்ளது என ஜாதகம் பார்க்க வந்தவரிடம் சொல்லி அவர்களை பயமுறுத்தக்கூடாது . 

மேலும் ஆண் பெண் ஜாதகங்களில் யார் ஜாதகங்களில் குறை என்பதையும், என்ன மாதிரியான குறை என்பதையும் ஜாதகம் பார்க்க வந்தவரிடம் சொல்லகூடாது, ஜாதக பொருத்தம் இல்லை; வேறு ஜாதகம்  பார்ப்போம், என மட்டும் சொல்லிவிடுவது  சிறந்த ஜோதிடனுக்கு அழகு .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  

2 கருத்துகள்: