சனி, 25 பிப்ரவரி, 2012

சனி பார்க்கும் இடம் பாழாகி விடுமா ?







 சனி பார்க்கும்  இடம் பாழாகி விடுமா ?

அந்த காலத்தில் ஒரு செலவாடை உண்டு, மஞ்சள் காமாலை வந்தவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்று, அதுபோல் இருக்கிறது இது ?!

சிறு உதாரணம் :

கும்பலக்கான ஜாதகருக்கு சனிபகவான் சிமத்தில் நின்று பார்வை முறையே, மகரம், கும்பம் , ரிசப ராசியினை பார்வை செய்கிறார் என்று வைத்து கொள்வோம் ஜாதகரின் நிலை எப்படி இருக்கும் ?

நிச்சயமாக சனி  பார்க்கும் பாவங்கள் ஆனா ( 6  ம் பார்வை ) 12  ம் பாவம் , 
(7  ம் பார்வை ) லக்கினம் , ( 10  ம் பார்வை )  4  ம் பாவங்கள் முறையே சனிபகவான்  தனது பார்வையினால் அந்த காரக தத்துவத்திற்கு ஏற்ற படி யோக பலன்களை 100  சதவிகிதம் கொடுப்பவர் ஆகிறார்.

 எனவே சனிபகவான் பார்க்கும் இடங்கள் எல்லாம் பாழ்படும் என்று செல்லுவது கண் தெரியாதவன் கயிலாயத்தை கண்டேன் என்று சொல்லுவதற்கு சமம் .

குறிப்பு :
  

சனிபகவானுக்கு  6 , 7 , 10   இடப்பார்வைகளே உண்டு என்று பழமையான ஜோதிட நூல்கள் சொல்லுகின்றன மேலும் சமஷ்கிருததில் 6  என்ற எண்ணை 3  போல் எழுதுவார்கள், இதுவே சனிபகவானுக்கு 3  ம் இட பார்வையுண்டு என்று மறுத்தல் அடைந்திருக்கலாம் . 

உண்மையில் சனிபகவானுக்கு,   6 , 7 , 10   இடப்பார்வைகளே உண்டு என்பதை அனைத்து பழமையான ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.


சனிபகவானின் மீது ஜோதிடர்களுக்கு என்ன பகையோ தெரியவில்லை, தொடர்ந்து நடக்கும் அனைத்து தீமைகளுக்கும் அவரே காரணம் என்று பலி போடுகிறார்கள், சனிபகவான் ஜோதிடர்களிடம் மாட்டிக்கொண்டு கண்விழி பிதுங்கி விடுகிறார், சனிபகவான் அதிக  தீமை செய்பவராக இருந்தால் அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் லாப ஸ்தானம் என மிக சிறந்த இடங்களை கொடுப்பார ?

சனிபகவானின் தத்துவமே ஒருவர் நன்மையை செய்தால் அவருக்கு நன்மையையும் , தீமையை செய்தால் அவருக்கு தீமையும் வழங்கும் பதவியை மட்டும் வகிக்கிறார் என்பதை மக்கள் அனைவரும் உணர வேண்டும் .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435  
9443355696  

2 கருத்துகள்:

  1. //சனிபகவான்ஜோதிடர்களிடம் மாட்டிக்கொண்டு கண்விழி பிதுங்கி விடுகிறார்//


    அது என்னமோ உண்மை ... நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  2. நானும் படித்திருக்கிறேன் சனிக்கு 6ம் பார்வை உண்டு என்று. சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் போது 6 என்ற என்ணை 3 போல் எழுதுவதால் 3ம் பார்வையாக மாறிவிட்டது என்ற கருத்து எனக்கு சிறிது ஐயத்தை உண்டாக்குகிறது. அப்படியானால் ஜோதிடம் தோன்றியது சமஸ்கிருதத்திலிருந்தா? அவர்கள் கண்டறிந்ததை வைத்து தான் தமிழில் மொழிபெயர்த்து நமது சித்தர்களும், முனிவர்களும் பலன்களை எழுதியிருக்கின்றனரா? விளக்கம் தேவை.

    பதிலளிநீக்கு